Wednesday, May 20, 2015

சிறுகதை : "ஒரு ரயில்பயணம் இரு கல்லறைகள்"

விடியலை வரவேற்று வியப்பில்ஆழ்த்திக்கொண்டிருந்த கானப்பறவைகளின் கூச்சலோடு தன்
முகத்தை மெல்ல மெல்லக் காட்டி
செங்காலை பொழுதினை பரப்பிக் கொண்டிருந்தது இளஞ்சூரியன் .
அவன் அப்போதுதான் சோம்பலை முறித்துக்கொண்டு
எழுந்திருந்தான் . எழுந்தவுடன் சூரிய வணக்கமொன்றையும்
வாசலுக்கு வெளியே நின்று சமர்பித்துக் கொண்டிருந்தான்.கடிகாரம் தன்கடமை தவறாத நகர்தலின் மூலம் மணி ஆறென்று
காட்டிக்கொண்டிருக்க செயலியில் பதிந்து வைத்த ஆறாவது
மணியோசையை கிழித்துக்கொண்டு கேட்டது அந்த குரல்.
ராஜியின் அம்மா அழைக்கிறாள் " ராஜி சீக்கிரம் குளிச்சிட்டு
கெளம்பு உனக்கு இன்னைக்கு இன்ட்டர்வியூடா,,, அவசரப்படவில்லை
ராஜி இதோ வந்துட்டேம்மா!! என்னு மட்டும் பதில்குரல் கொடுத்தான்.
ஒருவழியாக குளித்துவிட்டு காலைக்கடனையெல்லாம்
முடித்துவிட்டு புது அலுவலக இன்ட்டர்வியூவிற்கு கிளம்பத்
தயாராக ஓட்டை நாற்காலியொன்றின் மீதமர்ந்து
இன்ட்டர்வியூவிற்குத் தேவையான கேள்விகளுக்கு எவ்வாறு
பதிலுரைப்பதென தனக்குள்ளே மனப்பாடமும், மணகணக்கும்
போட்டுக்கொண்டிருந்தான். உன் அப்பா இருந்திருந்தா மத்த பசங்க
மாதிரி உன்னையும் கூட்டிட்டு போய் ஆபிஸ் வாசல்ல
விட்டுட்டுவருவாரு! சரி சாப்டியா? பசியோட போகாதே
அப்புரம் இன்ட்டர்வியூல செரமாமா போய்டும்,, இந்தா "பழையது"
குடிச்சிட்டு போ!! ராஜியின் தாயான குமரிவள்ளியின் மகன்
மீதான பற்றுதலை பறைசாற்றிக்கொண்டிருந­­்தது .இல்லம்மா! எனக்கு பசியில்ல ஒடம்பு மட்டும் ஏதோ செய்யுது,,
ஒரே பதட்டமா இருக்கும்மா,,,ராஜீ தன்
உடற்தன்மையை எடுத்துரைக்க , அப்படி சொல்லாத ராஜீ பசியால
வந்த மயக்கமும் இன்ட்டர்வியூ பயமும்
சேர்ந்து ஒடம்ப குலுக்கிப் போடுது, காலையிலே வெறும்
வயித்தோட போனா இப்படிதா ஆகும் . கொஞ்சம் பசியாறிட்டுபோ
ராஜீ. குமரிவள்ளி விடுவதாக இல்லை ஆருதலோடு பசிக்கான
உணவையும், பாசத்தையும் ஊட்டுபவள்தானே தாயாக இருக்க
முடியும் . அவள் கடமையிலிருந்து
ஒருபோதும் தவறியதில்லை,ராஜீ ஒரு அரசுக் கலை கல்லூரியில் இளங்கலை வேதியியல் இரண்டாமண்டு படித்துக்கொண்டிருக்கையில்
ராஜீயின் அப்பா இறந்துபோனார். அவளுக்கு வேதனைகள்
ஒருபுறமிருந்தாலும் பிள்ளையின் எதிர்காலம் கருத்தில்
கொண்டு தன்துக்கத்தை தனக்குள்ளேயே புதைத்து
வைத்துக்கொண்டிருந்தாள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒரு
வருஷம் தானேயா படிச்சிட்டு வந்துடு அதுக்கப்புரம் நீ வேலதேடி
எனக்கு கஞ்சி ஊத்தினா போதும் . அதுவர ஒனக்கு நாஞ்செய்யாம
வேறயாரு செய்வா? காலேஜுக்கு போடா ராஜீ,, என்று இயலாத
காரணத்தால் கல்லூரிக்குப் போக மறுத்த ராஜுக்கு
அப்போதப்போதைக்கு ஆறுதல் படுத்தி அவனை படிக்கவும்
வைத்துவிட்டாள் குமரிவள்ளி. வறுமை மாறாத அந்த கிராமத்தில்
ராஜீ மூன்றாவது பட்டதாரி. முதல் இரண்டு பட்டதாரிகளும் அக்கிராமத்
தலைவரின் பிள்ளைகள். படிப்பு முடித்து வேலைக்கு
எழுதிப்போடுவதில் கவனமாயிருந்தான் ராஜீ.ஒரே
பிள்ளைக்கு ஆன பணிவிடைகளையும் பாசப்பிணைப்பினையும் ஒருசேர
கொடுத்துக்கொண்டிருந்தாள் குமரிவள்ளி . உலகமுழுக்க தன்
அக்கினியால் மஞ்சள் மாலையிடாமல் மிதமானச் சூழலை தரும் வெயிலை தூற்றும் உதடுகளை அவ்வெய்யிலே கண்டு
கொள்ளாமல் தனக்கான கடமையைச் செய்துவிட்டு மாலையில்
மலைக்காட்டு மஞ்சளில் கரைந்து சிவப்புத் தாமரையாக தன்
வீடுதிரும்புதல் போல அவளும் அவனுக்காகவே உயிரைத் தன்வசம்
பிடித்து தேகத்துச் சோர்வினை கொஞ்சம் கூட மதியாமல்
உழைத்துக்கொண்டிருந்தாள். அப்படியான உழைப்பின் பலனாக
ராஜுயின் எதிர்ப்புக்களோடு வந்த நேர்முக அழைப்புக் கடிதமானது
இருவருக்குமே ஆறுதல் தந்ததென்றேச் சொல்லலாம்.ராஜீ
ட்ரெயின்ல போறியா இல்ல பஸ்ல போறியா? இன்ட்டர்வியூ மதியம்
இரண்டு மணிக்குத்தானே அரைமணிநேரத்துக்கு
முன்னாடியே போனாதா சரியா இருக்கும், அப்பதா
பதட்டப்படாத நம்மளால பதில் சொல்ல முடியும். அதனால் நீ
ட்ரெயின்லேயே போய்டு அதான் சரியா இருக்கும். அறிவுரை
வழங்குவதிலும் அவனுக்குத் துணையாக இருப்பதிலும் எழுந்தச்
சொல்லாடல்களில் பாசம் மிஞ்சி குமரிவள்ளியே கொஞ்சம்
பதட்டமாகத்தான் பேசினாள். சரிம்மா நா ட்ரெயின்லேயே போரேன்
நானும் ட்ரெயின்ல போவதுதான்
சரின்னு நெனச்சிட்டிருந்தேன் நீயே சொல்லிட்டே, நா கெளம்பரம்மா
என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க,, கீழே காலைத் தொட்டுக் கும்மிட்டவனை
கண்ணீரோடு தூக்கி கட்டியணைத்து வழியனுப்பி
வைத்தாள் குமரியம்மாள். அவன் தலை மறைந்தாலும் இவள்
தலைமட்டும் வாசலுக்கு வெளியே மகன் சென்றப் பாதையையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததில் பல்வேறு
எதிர்பார்ப்புகள் அவளுக்கு உள்ளதென அளவிட்டுச் சொல்லிவிடலாம்.எதிர்பார்ப்புகளை ஏற்காத  மனிதர்கள்தான் இம்மண்ணில்
இருக்கிறார்களா? ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒவ்வொரு
எதிர்பார்ப்புகள் உறங்கிக் கொண்டிருக்கத்தான் செய்கிறது.
வாழும் காலத்தில் ஏமாற்றமே மிஞ்சிய எத்தனையோ உயிர்களிடம்
உறவாடிக்கொண்டிருக்கிறதே இயற்கையின் செயல்திட்டம்
இதுதானென்று உணர்கையில் ஒரு சிலர் வென்றுவிடுகிறார்கள் ஒரு
சிலர் எதிர்பார்ப்புகளை சுமந்தபடியே வாழ்க்கையின்
ஓட்டத்தில் நகர்ந்தும் போகிறார்கள். அதிர்ஷ்டம் என்பது அப்படித்தானே
உறுவாகியது. என்றோச் செய்த உதவிக்கோ,உழைப்பிற்கோ, வேறு
ஏதேனும் செயல்பாட்டிலிருந்து இன்று நமக்கு கிடைக்கும்
எதிர்பார்த்து நிற்கும் ஒன்றை
பெற்றுவிட்டப்பின்னாலே அதற்கு அதிஷ்டமென்றால் அனைத்தும்
பொய்யாகத்தானே போய்விடுகிறது இப்படி அதிர்ஷ்டம்
மேல் எதிர்பார்ப்பினை குமரிவள்ளி
கொண்டிருக்க வில்லை என்பதற்கு அவள்விடும் கண்ணீரே சாட்சியாக
தெரிகிறது.இந்த இன்ட்டர்வியூ
இல்லையென்றால் வேறோரு இன்ட்டர்வியூ மகனின் மேலே முழு நம்பிக்கை இருக்கையில் அதிர்ஷடம்
தேவைபடாதொன்றாக குமரிவள்ளி
திடமாக நம்பிக்கை அவள் கொண்டிருந்தாள். மணி சரியாக எட்டென்று
ராஜுயின் கடிகாரம்
காட்டிக்கொண்டிருந்தது. குக்கிராமமான கொம்பூர் என்கிற அவனது ஊரிலிருந்து பத்து மைல்தூரம் விழுப்புரம் ரயில்
நிலையம் அங்கிருந்து செங்கல்பட்டுக்குச் செல்ல வேண்டும்
அவன் . நேரத்தைச் சரியாக கணித்து
இத்தனை மணிக்கெல்லாம் இன்ட்ர்வீயூவிற்குச்
சென்றுவிடலாமென்று கணக்குப் போட்டு வைத்திருந்தான்
ராஜு.அவன் ஊருக்கு இரண்டுமுறை மட்டுமே விஜயம்
செய்யும் பேருந்து காலைபொழுதில் ஆடியசைந்துக்
கொண்டு வந்து நின்றது அவனின்ற பேருந்து நிறுத்தத்தில்,,பேருந்தில்
ஏறிய ராஜு உடல் அலுப்பு
தெரியாமலிருக்க தன்கூடவே எடுத்துவந்த இன்ட்ர்வீயூவிற்குத்
தேவையான கேள்விபதில் புத்தகத்தை புரட்டியபடியே
பயணிக்கலானான். சரியாக ஒருமணிநேரம் உருண்டோடி
விழுப்புரம் ரயில்நிலையம் வந்தடைந்தது பேருந்து.
அவசரப்படாமல் நிதானமாகவே இறங்கி ரயில்நிலையம் நோக்கி
நடந்தான் ராஜு. அவன் வருவதற்கும் ரயில்நிலைய அறிவிப்புச்
செய்வதற்கும் சரியாக இருந்தது. தான் இந்த வண்டியில்தான் பயணப்பட
வேண்டுமென்று ராஜு ஏற்கனவே
முடிவுசெய்திருந்தது போல் நிகழ்வுகள்
நடந்துக்கொண்டிருந்தமையால் அவனுக்குள்ளே ஒரு ஆத்ம
திருப்தியும், நிம்மதியும் சூழ்ந்துக் கொண்டிருக்க . ஒரு
வழியாக ஒன்பதரை மணிக்கு ரயில்நிலையத்தில் தஞ்சம்
புகுந்தது பல்லவன் எக்ஸ்பிரஸ். ரயில் வந்தவுடன் யாரும்
இறங்குவதாகத் தெரியவில்லை,ஒருசிலர் மட்டும்
குடிநீருக்கும்,அப்போதைய நொறுக்குத் தீனிக்கும் இறங்கிய
வண்ணமிருந்தனர்.
பதிவுசெய்யப்படாத பெட்டியில் இவன் ஏற வேண்டும்.
அதற்கேற்றவாரே முதல்நிலையில் அவன் காத்திருந்ததால் அங்குகூட
அவனுக்கு அனுகூலமாகவே இருந்தது. ரயில்பெட்டியில்
ஏறியவுடன் நால்வர் அமரக்கூடிய இடத்தில் மூவர் அமர்ந்திருக்கும்
இருக்கையினருகே சென்றான் அங்கு அவனுக்கு இடமில்லை
என்றேத் தோன்றியது. அகங்காரமாய் இருநபர்கள் மூவர் இருக்கையினை
ஆட்கொண்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தான் ராஜு எங்கும்
இடமில்லை என்கிற முடிவுக்கு வந்தான் தனதருகே இருக்கையில்
அமர்ந்திருக்கும் முகம்தெரியா நபரிடம், சார்! கொஞ்சம் நகர்ந்து
உட்காந்தீங்கனா நா ஓரமா உட்காந்துக்குவேன் சார்,, என்றான்.
எதோ சலிப்பாக அதே ஆணவத்தோடு
வெறும் உடலசைவினை மட்டும் செய்தார்கள் அவர்கள்.
ஒண்டிக்கொள்ள கொஞ்சம் இடம் கிடைத்தது அவனுக்கு,,
ரயில் வண்டியானது நான் பயணப்படுகிறேன் விரைவில்
எல்லோரும் ஏறிக்கொள்ளுங்கள்
என்று தனக்கே உரித்தான மிகப்பெரும் சத்தத்தை
எழுப்பிவிட்டு ஐந்து நிமிடத்திற்குப் பிறகு புறப்படத்
தயாரானது. மெதுவாக அது விழுப்புரம்
ரயில்நிலையத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புறப்பட்டு
சென்னையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.ராஜு
கிடைத்த இடத்தில் ஒட்டிக்கொண்டவுடன் மீண்டும்
பேருந்தில் பயணிக்கையில் வாசித்த புத்தகத்தின் விட்ட
இடத்திலிருந்து மீண்டும் படிக்கத் தொடங்கினான். ரயில் வண்டியும்
தன்பாதை விலகாமல்
வேகத்தையும் விடாமல் தொடர்ந்து அதிவேகத்தில் பயணித்துக்
கொண்டிருக்கையில் இருபது
கிலோமீட்டர் தாண்டியிருக்கும், அப்போதுதான் அந்தச் சம்பவம்
நிகழ்ந்தது.


தன்பிள்ளையின் எதிர்காலத்தை நோக்கி
அவன் கால்படுமிடமெல்லாம் கற்பனைக்கெட்டாத வெற்றியை
மீட்டெடுப்பான் என்கிற எதிர்பார்ப்பினை மனதில்
சுமந்துகொண்டு அவன் வீடுதிரும்புகையில்
பசியெடுக்கிறது எனக்கம்மா,, என்று தோய்ந்த குரலில்
கேட்டுவிடக்கூடாதென்பதற்காக அவசர அவசரமாக வீட்டிலிருந்த
அன்றைய சிறு காய்கறிகளை சேர்த்து அன்றைக்கு மட்டும்
கடையரிசி வாங்கி வந்து
சோறுவடித்து தன்மகன் வந்தபின்னாலே அவனோடு
சேர்ந்துண்ண காத்துக்கொண்டிருந்தாள்
குமரிவள்ளி. தாய்ப்பாசத்தின் மெய்ப்பொருளை
கண்டுபிடிப்பதென்பது இயற்கையன்னைக்கு மட்டுமே
தெரிந்திருப்பதில்
வியப்பேதுமில்லையே! அரவணைப்பதில் இயற்கைக்கு
அடுத்தபடியாக அன்னையவள்தானே இடம்பிடித்திருக்கிறாள்.
அதனால்தான் தன்பிள்ளை ராஜுவின் வரவிற்காக அவளும்
பசியோடு காத்திருக்கிறாள்.இரு­
பது கிலோமீட்டரைத் தாண்டி
அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் தீடீரென்று
ஒரு கோர விபத்தில்
சிக்கிக்கொண்டது. ஏதோவொரு கிராமத்தின் வயல்வெளி காட்டை
ரயில்வண்டியானது கடந்து
போக,யாரோ விஷமிகளால் ஏற்படுத்தப்பட்ட ஆறடி தண்டவாள
உடைப்பின் காரணமாக அதில் சிக்கி
தடம்புரண்டு முதல் மூன்று பெட்டிகளும் தடாலென தரையில்
விழுந்து வந்த வேகத்திற்கே இழுத்துக்கொண்டு போனது. எதிர்பாரா தாக்குதலை எப்படி சமாளிப்பது எதுவும் நன்மைக்கே
என்று இதனையும் கடந்துபோக முடியுமானால் மனிதகுலம்
மிருகமனம் கொண்டதாகத்தானே இருக்கும். முதல்பெட்டியில் ராஜு
இருந்தமையால் அவனுக்கேதும் நிகழாதென்றுச் சொல்ல
ஜோசிக்காரனாலும் முடியாதல்லவா,,தடம்புரண்ட முதல்
பெட்டியில் சிக்கிய ராஜு சம்பவ
இடத்திலேயே உயிரிழந்து கிடக்கிறான். உடல்பாகங்கள்
சிதறிக்கிடக்கின்றன. அவன்
உடலெங்கும் ரத்தம் வழிந்தோட ஒரு கை மட்டும் புத்தகப்பையை
இறுக்கமாக பிடித்திருக்கிறது.
மற்றொரு கையும் இரு கால்களும் துண்டுபட்டு துடிதுடித்துச்
செத்துக் கிடக்கிறான். அவன் மீதும் பயணிகளின் சிதறிய உடற்பாகங்கள்
விழுந்து கிடக்கின்றன.விபத்து
குறித்து தகவலறிந்த ஊடகங்களும் பெருகூட்ட மக்கள் திரளும்
மேயத்தொடங்கினார்கள்
அவ்விபத்துப் பகுதியை,,, பெருங்கூட்டத்தில் யாருடையது
உதவும் கரங்கள்,யாருடையது திருடும் கரங்களென கணக்குப்
போடமுடியவில்லை இருந்தும்
உதவுதலே அங்கே பெரும்பான்மை பெற்றிருந்தமையால் உலகில்
இன்னும் மனிதாபிமானம் உயிர்ப்போடு உள்ளதென ஒரு
கணிப்பிங்கே காணமுடிகிறது. நிச்சயம் மனிதர்களின் மனங்களிங்கே
பேசத்தொடங்கும் கடவுள் எதற்கென்றும் கற்பிக்காதே
கடவுளை என்றும்,,,இவற்றையும்
மீறி நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளே காப்பாற்றென்றும்,,,ஒலிக்கத்தான் செய்யும்
அழுகுரலோடு அனுதாபலைகளும் காதுகளை
ஊடுருவி வானத்தை நோக்கி மேலெழுவது முறைதானல்லவா,,,,
கோர விபத்துச் செய்தி வேகமாக பரவினாலும் கொம்பூர்
கிராமத்தையின்னும் எட்டிவிட
வில்லை . இரு பட்டதாரிகளின் தகப்பனான ஊர்த்தலைவரின் வீட்டில்
மட்டுமே தொலைக்காட்சி பெட்டியுள்ளது. விரையில் மகன் வருவானெனும் எதிர்பார்ப்பில் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்த குமரிவள்ளிக்கு
ஒரே ஆச்சர்யம் கூடவே பதற்றமும் ஒட்டிக்கொண்டது. ஊர்த்தலைவர்
குமரிவள்ளியின் வீட்டை நோக்கி நெருங்கி வந்துவிட்டார். அவர்
வாசலை நெருங்குவதற்கு
முன்னதாகவே ஓடோடிச் சென்று வரவேற்றாள் குமரிவள்ளி. சோகம் சூழ்ந்த முகத்தோடு வாசலின் திண்ணையில் வந்தமர்ந்த
ஊர்த்தலைவர் பேச முற்படுகையில் , ஐயா வீட்டு விருந்தாளி
வந்திருக்கிக இருங்கய்யா கொஞ்சம்
மோர் கொண்டாந்து தாரேன்,,,
நில்லுபுள்ள! இதநான் எப்படி
உங்கிட்ட சொல்ரதுனே தெரில மனச தெடப்படுத்திக்கோ ! இந்த பாவி
மனுச துக்கசேதி
கொண்டாந்திருக்கேன் புள்ள ,, டிவிபொட்டில போட்டானுவோ
விழுப்புத்த தாண்டி ரயில்வண்டி கவுந்துபுடுச்சான். ஒரே
அல்லோலகல்லோலமா இருக்காம் அந்த இடம் அப்புரம் கவுந்த ரயில்ல
மாட்டினவங்க பட்டிலு போட்டானுக வள்ளி அதுல ஒம்புள்ள,,,ஒம்புள்ள,,,,,
ஐயா!! எம்புள்ளைக்கு என்னாச்சி,, எம்புள்ளைக்கு என்னாச்சி,,,ஐயோ!
சொல்லுங்கவே எம்புள்ளைக்கு
என்னாச்சி,,,,, அதிர்ச்சியின் உச்சத்தில் பித்துபிடித்துபோய்
தலையிலும் மார்பிலும்
வயித்திலும் அடித்துக்கொண்டு தரையில் விழுந்து கத்திக்
கதறினாள் குமரிவள்ளி. ஊர்த்தலைவரின் இழுப்புலிருந்தே
தெரிந்துவிட்டது இழந்தோம் பிள்ளையை என்று,,, அவளது
கதறலையும் அழுகுரலையும்
கேட்டு கொம்பூர் கிராமமே ஒன்று கூடிவிட்டார்கள் அவளது வீட்டில்,,,
கூடி நின்றவர்களும்
அழத்தொடங்கினார்கள் இழந்துவிட்டோம் ஊரில் ஒரு
மனிதனையென்று,,, அதற்குள் இரண்டாவது அதிர்ச்சியையும்
வார்த்தைகளை மென்று விழுங்கி சொல்லத் தொடங்கினார்
ஊர்த்தலைவர். புள்ள! "பாடி"ய
தரமாட்டாங்களாம் மொத்தமா செதஞ்சி போனதால அங்கேய பக்கத்தில எங்கேயோ மொத்தமா பொதைச்சுடுவாங்களாம்,,,,, அவ்வளவுதான் அடிவயிற்று சிறுகுடல் வெளியில் வந்து
விழுவது நிச்சயமென்பதுபோல செய்தி கேட்ட அடுத்த நொடியே
கதறியழுதாள் குமரவள்ளி. தாங்கமுடியவில்லை அவளால்,,,
காலையில் பார்த்த முகத்தை காலமுழுக்க பார்க்காத படி செய்த
கும்மிட்ட கடவுளையெல்லாம் தன் அழுகுரலாளால் உடைத்துப்
போட்டாள். இரவு நகர்ந்துக்கொண்டிருந்து ஒருகையில் தீப்பந்தமேந்தி
மறுகையில் மூட்டையொன்றேந்தி
உருவமொன்று ஊர்ச்சுடுகாட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தது.
ஊரானது துக்கத்தில் கலந்து கொண்ட அசதியினால் சீக்கிரமே
தூங்கியும் போனது. சுடுகாட்டை நெருங்கியதும் அவ்வுருவம்
மண்ணைத்தோண்டி எடுத்துவந்த மூட்டையை குழியில் போட்டு மூடிவிட்டு அக்குழியருகிலேயே தீக்குளித்துக்கொண்டது.
விடிந்ததும் ஊர்மக்கள் ஒரு குழி தோண்டினார்கள். அதேயிடித்தில்
இப்போது இருகல்லறைகள். ரயில்விபத்து விசாரணையின்
இறுதி அறிவிப்பு அன்று மாலை வெளியானது. சம்பவம் நடந்த
இடத்திற்கு அருகிலிருக்கும் ஊரில் சாதிக் கலவரமாம், கலவரக்காரர்கள்தான் தண்டவாளத்தை உடைத்தார்களாம் ,,மாறாத மனிதர்களிடம் மாற்றத்தின் எதிர்பார்ப்பும் குமரிவள்ளியின் எதிர்பார்ப்பும் ஒன்றாகக் கலந்து கல்லறைகளாக காட்சியளிக்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...