Friday, August 29, 2014

-சிறைப்பறவை-

ஆடைக்கும் உணவுக்கும் அவசியப் பணமாதலால் ஆடையின்றி படுத்திருந்தேன்! கட்டில் முழுக்க மல்லிகையும் மணம் வீசும் வாசனைத் திரவியங்களும் தெரியவில்லை மூக்கிற்கு அந்த மணம்! மதுவும் சிகரெட் மணமும் கலந்த கலவை மட்டுமே கடித்துக்கொண்டே கொன்றழிக்கிறது என்னிதழை! கால்களுக்கிடையில் அவணுறுப்பு அழுத்துகையில்! பசியுடனும்! வலியுடனும்! சாகும் என்வயிற்றுத் தசையெழுப்பிய அவ்வொலியை முனகலென முடித்துவிட்டான்! முடிவு அறியா கண்ணீர்த்துளி மட்டும் கட்டிலை நனைக்கிறது! பசிக்கழுகும்...

-என்னிரவு நிலவுத்தோழி-

கருப்புடை அணிந்து நட்சத்திரங்களின் நாடக வெளிச்சத்தில் வெட்கப்படும் முகமணிந்தவளே! நீயெனைக் கவர கவசமிட்டாயோ! ஐய்யோ! உனது இழுவிசையால் இலைவிழும் மரங்களுக்கிடையில் சிக்கித் தவிக்கிறேனோ நான்! காதலை உணர்ந்து கண்ணீரில் நனைந்து கரைந்து போகாத சுயவலியைச் சுமந்து அதுவும் இனிதெனக் கண்டு இணைசேரா இம்சையுடனே! எனைப்போலத் தவித்தவனும் எத்தனை பேரோ! தனிமையை தனதாக்கி தனிமரமே சுகமெனக் கிடந்த இச்சுகவாசிக்கு சுமையாக வந்தாயா? இல்லை! சுவையாக வந்தாயா? சட்டென கூறாமல் சாரலில்...

Sunday, August 24, 2014

பைசாவில் பணமுதலைகள்

பைசாவில் பணம் பறிக்கும் பணமுதலைகள்: பொதுவாக நம்முடைய அத்யாவசிய நுகர்விலிருந்து ஆடம்பர பொருட்கள் வரையிலும் வாங்கப்படும் பொருட்களின் விலை நிர்ணய பட்டயலை பார்த்தோமானால் வரி நீங்களாக மற்றும் உள்வரியுடன் நிர்ணயிக்கப்படும் தொகுப்பு விலையானது பைசாவில் முடியும் வகையில் நிர்ணயிக்கப்பட்டிருக­ ்கும் சிறு உதாரணமாக நாம் காலணி வாங்கச்சென்றால் அக்காலணி விலைப்பட்டியலை பார்த்தோமானால் Rs.99.99 என்று இருக்கும் நாம் நூறு ரூபாய் கொடுத்து வாங்கினால் 1பைசா சில்லரையை வாங்கமுடியாது...

ஒரு தாயின் அழுகை

நான் பெத்த மகளே! காலையில் பூத்த மலர் கூட இன்னும் வாடலியே! நீ! வாடிவிட்டாயே என் மகளே! நான் வளர்த்த கன்றுக்குட்டி துள்ளிகுதிக்குதடி! துக்கத்தை நீ தந்து சென்றாயே என் மகளே! அடி மனசு கலங்குதடி! அக்கினி பிழம்பாய் எரியுதடி! விறகு பொறுக்கச் சென்றவளை விரட்டிப் பிடித்தான் எமனென்று! நீ செத்த சேதி கேட்டு! பத்து மாசம் சுமந்த வயிறு பத்தி எரியுதடி! இன்றோடு பத்து ஆண்டுகளாய்! கண்ணீரில் கலங்கியபடி காலம் சென்றதடி! கண்ணாடி பக்கத்தில் கண்ணே உன் பிம்பமடி! நான் பெத்த மகளே...

Thursday, August 21, 2014

--ஹைக்கூ--மேனகைகள்

சத்தான தழைகளை தேடியது ஆடு கத்தியுடன் கசாப்பு -கடைக்காரர் *****+***+***+**** பலநாளாய் தேடிய பறவை இறந்து கிடந்தது -விமானம் *****+***+***+**** அம்மி எங்கென தேடியது குழவி பிறந்தது -ஆடி *****+***+***+**** பசியில் குழந்தை குடிகார தந்தை -எழுந்தான் எமன் *****+***+***+**** இம்சையில் பஞ்சுமெத்தை அனல் பரப்பியது -காமம் *****+***+***+**** ஏவாளுக்கு திகட்டியது நியூட்டனின் கரங்களில் -ஆப்பிள் *****+***+***+**** மலரை தழுவி தரையில் அழுக்கானது -மழைநீர் *****+***+***+****...

புன்னகையை பூக்கவிடு!

உனக்காக ஓர் குடிலை அமைத்து ஊசி முனையில் ஒற்றைக் காலுடனே நான்! ஓராயிரம் ஓவியங்களை ஒரு நொடியில் சிதைத்தால் ஒடிந்து போவானே அக்கலைஞன்! அவ்வலியை ஒருபோதும் கொடுத்து விடாதே! நம் குடிலை எக்கணமும் சிதைத்து விடாதே! சரியெனச் சம்மதம் சொல்லிவிடு! உன் முகத்திலே புன்னகை பூக்கவிடு! நம் குடில் ஒளிரட்டும் அன்பே கழுத்தில் மாலையி...

--ஹைக்கூ--தேசிய குப்பைத்தொட்டி

ஏணிக்கு தெரியவில்லை எட்டி உதைப்பது நம்பி வீழ்ந்தான் -அவன் *************** மழலையும் கணவனும் மேடையில் மங்கையின் கையில் தாய்மை விருது *************** காட்சியில் பசிக்கான உணவு விடிந்ததும் விடியாத ஏழையின் கனவு *************** ஊனமான உடற்பயிற்சி சாதகமாக்கியது -சிசேரியன் *************** அரைகூவலிட்ட பிச்சைக்காரன் தேசியமயமானது -குப்பைத்தொட்டி *************** ************...

அம்மாவின் "முத்தம்"

தத்தி நடக்கையில் தவறிய காலுக்கொரு முத்தம்! அடம்பிடிக்கையில் அழுகைக்கொரு முத்தம்! அம்மா! என்றழைக்கையில் இதழுக்கொரு முத்தம்! குறும்பு செய்கையில் கைகளுக்கொரு முத்தம்! பொம்மை உடைக்கையில் பொய்யழுகைக்கொரு முத்தம்! உறங்கும் வேளையில் சிறு புன்னகைக்கொரு முத்தம்! பாலுக்கு அழுகையில் பசிவயிற்றுக்கொரு முத்தம்! அப்பாவை விரல் காட்டியதில் உடலெடுங்கும் முழு முத்தம்! முழுதாய் நானும் வளர்ந்தேன் முடியவில்லை முத்தமழை! உணர்ந்தேன்! உயிர்துடித்தேன்! உலகை ரசித்தேன்! உறவில்...

"கைநாட்டு"

நீங்கதான் எங்களை எல்லாரையும் படிக்க வச்சுட்டீங்க நாங்களும் படிச்சிட்டு நல்ல உத்யோகத்தில தான் இருக்கோம் அப்புறம் ஏம்மா எங்கள அசிங்கப்படுத்துர, நாங்க தான் கையெழுத்து போடவும் கத்துக்கொடுத்துட்டோம் படிச்ச புள்ளைங்களோட அம்மானு சொல்ரதுக்கே வெட்கமா இருக்கும்மா எப்போ பார்த்தாலும் யார் நீட்டினாலும் "கைநாட்டு" தானா? பேனாவ புடுச்சி அப்டி ஸ்டைலா போட்ரது நல்லா இருக்கா அந்த மையை அப்படியே கட்டவிரல்ல அப்பி அழுக்கா அங்கங்க பூசி அந்த மையை தலைல வேற தேச்சி போம்ம்மா...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...