Showing posts with label online rummy. Show all posts
Showing posts with label online rummy. Show all posts

Thursday, April 06, 2023

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விழிப்புணர்வு

 



எக்காரணத்தை முன்னிட்டும் ஒன்றிய அரசும் , அதன் கைக்கூலியான தமிழ்நாடு ஆளுநர் ரவியும் " ஆன்லைன்" ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வாய்ப்பே இல்லை ... ஏனெனில் இதன்மூலம் பாஜக  அரசுக்கு ஏகபோக கமிஷன் மற்றும் பணப்பட்டுவாடா, இன்னபிற வசதிகள் கிடைக்கின்றன ... முக்கியமாக பாஜக பெருந்தலைகளின் வாரிசுகளே ஆன்லைன் ரம்மி சூதாட்ட கம்பெனிகளின் ஓனர்களாகவும் பினாமிகளாகவும் இருக்கிறார்கள் . ஆகவே இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்ட மோசடிகளை குறித்து மக்களிடையேயும் , இளைஞர்களிடேயும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியத் தேவையாக இருக்கிறது ...

இன்றைய தேதியில் தோராயமாக 200+ ஆன்லைன் ரம்மி சூதாட்ட கம்பெனிகள் இந்தியாவில் இருக்கினது ... இது ஒன்றிய அரசின் வரி விதிப்பு , மற்றும் தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பின் கீழ் அனுமதி பெற்றே இயங்குகிறது ...

ஆன்லைன் ரம்மி சூதாட்ட மோசடியில் முக்கியமாக பார்க்க வேண்டியது RNG எனப்படும் Random Number Generator என்பதைத்தான் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும் ...

முதலில் எனக்கு ரம்மி விளையாடவே தெரியாது ... பிறகான சூழலில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றியும் அந்த APK கள் எவ்வாறு இயங்குகிறது என்பதை பற்றியும் தெரிந்துகொள்ள ரம்மி விளையாட கற்றுக்கொண்டேன் ( அதுவும் ஓரளவுக்குத்தான் )

இதில் முக்கியமாக சிக்கியது இவர்கள் வைத்திருக்கும் RNG Certificate  தான் ... மனிதர்கள் குழுவாக மரத்தடியிலோ அல்லது மறைவான இடங்களிலோ சூது விளையாடும் போது கூட ஏகப்பட்ட மோசடிகள் நடக்கும் , இந்த கதைகளை அடிப்படையாக வைத்து தமிழ்சினிமாவே ஏகப்பட்ட சினிமாக்களை எடுத்திருக்கிறது ... அப்படியிருக்க ... கம்யூட்டர் ஜெனரேட்டரை நம்பி எப்படி இவ்வளவு கோடிகளை வைத்து சூதாடி செத்துப் போகிறார்கள் என நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது .. இந்த "வெள்ளையா  இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்" என்கிற காமெடியின் அடிப்படையில் கம்ப்யூட்டர் பொய் சொல்லாது என நம்புகிறார்களோ என்னவோ? கம்ப்யூட்டரை இயக்குவதும் மனிதர்கள் தானே! ...

ஆன்லைன் ரம்மி சூதாட்ட apk களில் 1 ரூபாயில் தொடங்கி பல கோடி ரூபாய் வரை பெட்டிங் பிரிவுகள் இருக்கிறது ... சதுரங்க வேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் இல்லையா!!! "ஒருத்தனை ஏமாத்தனும்னா முதல்ல அவன் ஆசையை தூண்டனும்" அதுமாதிரி தான் ஆன்லைன் ரம்மி சூதாட்ட வித்தையும் , முதலில் உங்களை ஒரு ரூபாயில் வெற்றி பெற வைப்பார்கள் அந்த வெற்றி 100,500 ரூபாயில் போய்க்கொண்டே இருக்கும் பிறகு நீங்கள் பணத்தை வாரி இறைப்பீர்கள் , அதனை கவனமாக ரம்மி ஆப் கண்காணிக்கும் , பிறகுதான் இந்த RNG மூலம் தங்களது மோசடி வேலைகளை அனங்கேற்றுவார்கள் ... உங்களுக்கு வரும் ரம்மி கார்டுகள் "பிச்சைக்காரன் தட்டில் விழும் எச்சில் சோறுகள்" போல எந்த இணையுமே சேராமல் வந்து விழும் ... அதேவேளையில் உங்கள் வரிசையில் இருந்து சரியாக 3 அல்லது 4 ஆவது நபருக்கு ஓரளவுக்கு சாதகமான கார்டுகளை RNG ஜெனரேட் பண்ணும் , ஆனா அவர்களும் உங்களை போல தோல்வியாளர்கள் தான் .. 1 நபர் இதில் டம்மி ... அந்த நபரை பெரும்பாலும் apk  நடத்துபவர்கள் வைத்திருப்பார்கள் ( உங்களை நம்ப வைக்க) ... ஆக 1 அல்லது5 வது நபர் தான் RNG மூலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்ட கம்பெனி நிர்ணயித்த வெற்றியாளர் ... இதன் மூலம் உங்களிடம் பணம் பிடுங்கியதாகவும் ஆச்சு , 2,3 நபர்களை ஏமாற்றியதாகவும் ஆச்சு என கோல் மேல் கோல் போட்டு மோசடி மன்னர்களாக வலம் வருகிறார்கள் ...

இந்த RNG CERTIFICATE  என்பது பெயரளவிற்கு மட்டுமே trusted என பூசி மொழுகி வைப்பார்கள் ... ஆனால் உண்மையில் யார் வெற்றி பெறனும் , யார் தோல்வி அடையனும்னு கம்பெனி காரன்களே RNG மூலம் நிர்ணயிப்பார்கள் ...

ஆனால் நாம என்ன செய்கிறோம் ?

ஆன்லைன் ரம்மி சூதாட்ட மோசடியில் சிக்கி தற்கொலை செய்து செத்துப்போகும் மனிதர்களை திட்டிக் கொண்டிருக்கின்றோம் , எல்லா மனிதர்களுக்குள்ளும் " குறுக்கு வழியில் அல்லது எளிதான வழியில் பணம் சம்பாதிக்கனும் , வாழ்க்கையில் செட்டில் ஆகனும்னு ஆசை இருக்கும் ... அப்படியான ஆசைகளில் விழுந்து ஜெய்த்தவர்கள் சொற்பம், தோற்று செத்தவர்கள் அதிகம், நீங்கள் "அதிகம்" கொண்ட பக்கத்தில் நிற்கிறீர்களா? இல்லை  "சொற்பம்" கொண்ட பக்கத்தில் நிற்கிறீர்களா என்பதை நீங்களேதான் முடிவு செய்ய வேண்டும் ... அரசும் சரி ஆன்லைன் ரம்மி சூதாட்ட Apk களும் சரி உங்களை ஏம்ற்றிக்கொண்டேதான் இருக்கும் ...

பொதுவாக தற்கொலை செய்து கொள்வர்களை நான் திட்டுவதில்லை , அந்த தற்கொலையை தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன இருக்கிறது என்பதை அலசி ஆராய்வது குறித்து யோசிப்பேன் ... அதன்பிறகு இன்னொரு தற்கொலையை தடுத்து நிறுத்த இயலும் ... #OnlineRummy #onlinerummygame #RummyRavi


பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...