ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை குறித்து ஏற்கனவே திருமுருகன் காந்தி அவர்கள் எச்சரித்ததுதான் ... அடிப்படையில் பாஜகவின் எல்லா திட்டங்களும் மேல்குடி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து அதையும் அவர்கள் ஆஹா ஓஹோ என வரவேற்பார்கள் , கிட்டத்தட்ட எல்லா படிநிலைகளிலும் மோடியின் திட்டங்களை அப்படித்தான் இங்கு பரவலாக்கப்படுகிறது , மக்களையும் பழக்கப்படுத்த வைத்துவிடுகிறார்கள் , தனக்கென ஓர் ரசிக பட்டாளம் வைத்துக்கொண்டு அதன் மூலம் ஏழை எளிய மக்களை சுரண்டுவதுதான் மோடிக்களின் அரசியல் உளவியல் , இதனை அப்படியே ஏற்றுக்கொண்டு பார்ப்பன அஜென்டாவை திணிக்கும் பிற்போக்குகளை கடந்து வந்திருப்போம் , ஜோடி குரூஸ் , ஜெமோ , மாலன் , பானு கோம்ஸ் , சாரு , என இதன் பட்டியல்கள் நீளும் ... போலவே மாநில அடிமை அரசும் மோடிக்களின் காவி மயமாதலை எவ்வாறு அமல்படுத்துகிறார்கள் என்பதை நாமும் கண்கூடாக பார்த்துக்கொண்டு வருகிறோம் , அரசு பள்ளிக்கு துரோணன் பெயர் , பாரதிக்கு காவி முண்டாசு (பாரதியே காவிதான் என்றாலும் அடையாளப்படுத்துதல் எதற்கு? ) வகுப்பறை மேசைகளில் காவி நிறம் அடிப்பது , பாட புத்தகங்களில் காவியை திணிப்பது , என அடுக்கடுக்குகளாய் சொல்லிக்கொண்டே போகலாம் ... இப்போது ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பதை எடுத்துக்கொண்டோமானால் அது முழுக்க முழுக்க மாநில சுயாட்சிக்கு எதிரானது , கிட்டத்தட்ட இந்தி மொழியை ஒரே தேசம் ஒரே மொழியென இவர்கள் மாற்றத் துணிந்ததிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம் , ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் என்ன பொருள் வழங்கலாம் , அதன் விலை நிர்ணயம் , விநியோகத்தின் தன்மை , பொருட்களின் தரம் , என்பன எல்லாவற்றையும் இனி கார்ப்பரேட்டுகளே தீர்மாணிக்கும் , ஏற்கனவே ரேஷன் கடைகளில் எவனோ எந்த போலி நிறுவனமோ மட்டமாக தயாரிக்கும் உதிரி பொருட்களை வாங்கினால்தான் மற்ற ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்கிற கார்ப்பரேட் மூளை வியாபார யுக்தி இங்கு எப்போதோ வந்துவிட்டது , மிகவும் மலிவான தரம் கொண்ட சோப்பு , தேங்காய் எண்ணெய் , டீதூள் , என அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்த தகுதியற்றதாகவே தூக்கி வீசப்படுகிறது , ஆனால் அதனை ரேஷன் கடைகளில் விற்கும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடைகிறது , இது இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எந்தளவுக்கு கொள்ளையடிக்க போகிறது என்பதை தயவுசெய்து ஏழை எளிய மக்கள் உணர வேண்டும் .
Showing posts with label பார்ப்பனியம். Show all posts
Showing posts with label பார்ப்பனியம். Show all posts
Saturday, June 29, 2019
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது மோடியே ...
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை குறித்து ஏற்கனவே திருமுருகன் காந்தி அவர்கள் எச்சரித்ததுதான் ... அடிப்படையில் பாஜகவின் எல்லா திட்டங்களும் மேல்குடி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து அதையும் அவர்கள் ஆஹா ஓஹோ என வரவேற்பார்கள் , கிட்டத்தட்ட எல்லா படிநிலைகளிலும் மோடியின் திட்டங்களை அப்படித்தான் இங்கு பரவலாக்கப்படுகிறது , மக்களையும் பழக்கப்படுத்த வைத்துவிடுகிறார்கள் , தனக்கென ஓர் ரசிக பட்டாளம் வைத்துக்கொண்டு அதன் மூலம் ஏழை எளிய மக்களை சுரண்டுவதுதான் மோடிக்களின் அரசியல் உளவியல் , இதனை அப்படியே ஏற்றுக்கொண்டு பார்ப்பன அஜென்டாவை திணிக்கும் பிற்போக்குகளை கடந்து வந்திருப்போம் , ஜோடி குரூஸ் , ஜெமோ , மாலன் , பானு கோம்ஸ் , சாரு , என இதன் பட்டியல்கள் நீளும் ... போலவே மாநில அடிமை அரசும் மோடிக்களின் காவி மயமாதலை எவ்வாறு அமல்படுத்துகிறார்கள் என்பதை நாமும் கண்கூடாக பார்த்துக்கொண்டு வருகிறோம் , அரசு பள்ளிக்கு துரோணன் பெயர் , பாரதிக்கு காவி முண்டாசு (பாரதியே காவிதான் என்றாலும் அடையாளப்படுத்துதல் எதற்கு? ) வகுப்பறை மேசைகளில் காவி நிறம் அடிப்பது , பாட புத்தகங்களில் காவியை திணிப்பது , என அடுக்கடுக்குகளாய் சொல்லிக்கொண்டே போகலாம் ... இப்போது ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பதை எடுத்துக்கொண்டோமானால் அது முழுக்க முழுக்க மாநில சுயாட்சிக்கு எதிரானது , கிட்டத்தட்ட இந்தி மொழியை ஒரே தேசம் ஒரே மொழியென இவர்கள் மாற்றத் துணிந்ததிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம் , ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் என்ன பொருள் வழங்கலாம் , அதன் விலை நிர்ணயம் , விநியோகத்தின் தன்மை , பொருட்களின் தரம் , என்பன எல்லாவற்றையும் இனி கார்ப்பரேட்டுகளே தீர்மாணிக்கும் , ஏற்கனவே ரேஷன் கடைகளில் எவனோ எந்த போலி நிறுவனமோ மட்டமாக தயாரிக்கும் உதிரி பொருட்களை வாங்கினால்தான் மற்ற ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்கிற கார்ப்பரேட் மூளை வியாபார யுக்தி இங்கு எப்போதோ வந்துவிட்டது , மிகவும் மலிவான தரம் கொண்ட சோப்பு , தேங்காய் எண்ணெய் , டீதூள் , என அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்த தகுதியற்றதாகவே தூக்கி வீசப்படுகிறது , ஆனால் அதனை ரேஷன் கடைகளில் விற்கும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடைகிறது , இது இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எந்தளவுக்கு கொள்ளையடிக்க போகிறது என்பதை தயவுசெய்து ஏழை எளிய மக்கள் உணர வேண்டும் .
Wednesday, March 06, 2019
அம்பேத்கர் பெயர் பார்ப்பன ஆசிரியருடையதா ?
இந்தியாவில் எந்தவொரு அறிவாளியும் , பகுத்தறிவாளரும் , மேதையும் , புரட்சியாளரும் பார்ப்பனரின் துணையின்றி அடையாளப்படுத்தவோ உறுவாகிடவோ முடியாது என்கிற மிக மோசமான மாய தோற்றத்தை உறுவாக்குவதில் பார்ப்பனியம் மெனக்கெடுத்து அதன் வேலைகளை செய்யும் . அப்படியாக உறுவாக்கப்பட்டதே நமது பாட புத்தகங்கள் . இந்திய கல்வி முறைகளை அப்படித்தான் பார்ப்பனியம் கைப்பற்றி வைத்திருக்கிறது . பல்வேறு கட்டுக் கதைகளை வரலாறாய் திரிப்பதன் மூலம் மக்களை மக்களின் செயல்திறனை மழுங்கடிக்கச்செய்து அதன்மூலம் பார்ப்பனியத்தை வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது ஹிந்துத்துவம் . அப்படியான இரட்டிப்பு பார்ப்பன மோசடிதான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "அம்பேத்கர்" என்கிற பெயர் அவரின் ஆசிரியரான பார்ப்பனரின் பெயரென திரித்து காட்டியது . உண்மையில் அம்பேத்கர் பெயர் ஒரு பார்ப்பன ஆசிரியர் பெயர்தானா? என்பதை தகுந்த தரவுகள் மூலம் அலசி அதன் பொய்யான தகவல்களை கட்டுடைத்து பார்ப்பன புரட்டுகளை தோலுரித்து காட்டுகிறது " கழுவப்படும் பெயரழுக்கு" என்கிற இந்நூல் ... நூலின் ஆசிரியர் யாக்கன் அவர்கள் இதன் மூலம் ஒரு நீண்டகால பார்ப்பனிய திரிபுவாத வரலாற்றை கழுவிலேற்றி தனது முத்திரையை பதிக்கிறார் ... இவ்வளவு காலமாக அண்ணல் அம்பேத்கர் வெறும் பீமாராவ் ராம்ஜீ என்கிற பெயரில் மட்டுமே இருந்தார் அதன் பிறகு அவருக்கு முழுமையாக அறிவூட்டிய அவரின் பள்ளி ஆசிரியரான பார்ப்பனர் "அம்பேத்கர்" ஆசிரியரியரின் ப்ரியத்தின்பால் பீமாராவ் ராஜீ பெயருக்கு பின்னால் "அம்பேத்கர்" சேர்த்துக்கொண்டார் என்கிற அப்பட்டமான பொய்யை நாம் தலையில் சுமந்து அல்லது திணிக்கப்பட்டிருக்கிறோம் ...
நூலாசிரியர் யாக்கன் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் பெயர் அவருடைய இயற்பெயரே என பல்வேறு சான்றுகளை தனது "கழுவப்படும் பெயரழுக்கு" இல் பதிவு செய்கிறார் அதில் முக்கியமானது அம்பேத்கர் மோடி எழுத்து மொழியில் தனது சொந்த கையெப்பம் பள்ளி பருவத்தில் இட்டதை சுட்டிக்காட்டுகிறார் ... (மோடி மொழி என்றதும் நம் gobackmodi புகழ் நரேந்திர மோடி என நினைத்துவிட வேண்டாம்) மோடி என்கிற மொழி நம் தமிழ்நாட்டிலேயே புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது ... அதற்கான
தரவுகள் கீழே சொடுக்கவும் ...
மோடி எழுத்து மொழி
மோடி எழுத்து மொழி 2
போலவே இந்நூலுக்கு "கழுவப்படும் பெயரழுக்கு" என்கிற தலைப்பின் மூலம் தனது துணிச்சல் வாதத்தை வெளிகாட்டிய யாக்கன் அவர்களை பாராட்டுதல் நன்று ... இதன் மூலம் புரட்சியாளர் அம்பேத்கர் மீது பூசப்பட்டிருந்த பார்ப்பன அழுக்கு முற்றிலுமாக துடைத்தெரியப்பட்டிருக்கிறது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் ... ஹிந்துத்துவ பார்ப்பனியம் தனக்கேற்றார்போல் எப்படியெல்லாம் வரலாற்றுத் திரிபுகளை மேற்கொள்ளும் என்பதற்கு "பெயரழுக்கு நூலும் அதிலுள்ள தரவுகளும் சான்றாக அமைகிறது ....
கழுவப்படும் பெயரழுக்கு நூலில் யாக்கன் அவர்கள் தரும் தரவுகள் இவை ...
அம்பேத்கர் இயற்பெயர் ;
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
அம்பேத்கர் தந்தை பெயர்;
ராம்ஜி மாலோஜி அம்பேத்கர்.
அம்பேத்கர் தபோலியில் உள்ள A.J. உயர்நிலைப்பள்ளியில் முதலில் பயின்றார்.அது இராணுவ வீரர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளி.அம்பேத்கரின் தந்தை ஓய்வு பெற்ற சுபேதார் என்பதால் அம்பேத்கருக்கு அப்பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு அம்பேத்கர் மராத்தி மொழியை மோடி எழுத்து வடிவில் பயின்றுள்ளார்.தானே கையொப்பமிடவும் கற்றுள்ளார். பின்னாலில் மராத்தி மொழி தேவநகரி எழுத்து வடிவத்தில் மாறியுள்ளது.
பணியின் காரணமாக அம்பேத்கரின் குடும்பம் சதாராவிற்கு குடிபெயர்கிறது, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அம்பேத்கர் திரும்பவும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். அங்கு தான் அம்பேத்கர் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டுள்ளார். அங்குள்ள ஆசிரியர் பெயர் தான் அம்பேத்கர் என்று பொய் கூறப்படுகிறது. அம்பேத்கர் அந்த பள்ளியில் சேர்ந்த அன்றே பள்ளி பதிவேட்டில் பீவா ராம்ஜி அம்பேத்கர் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் சேர்ந்த அன்றே அம்பேத்கர் பீமா ராம்ஜி அம்பேட்கர் என்று மராத்தி மொழியில் மோடி எழுத்தில் கையெழுத்து இட்டுள்ளார். அந்த பதிவேடு இன்றும் அம்பேத்கர் படித்த பள்ளிக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கையெழுத்தில் உள்ள அம்பேத்கர் கையெழுத்தை தமிழக அரசு செயலாளராக பணியாற்றிய மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆட்சியர் அதிகாரி விஷ்வநாத் ஷெகாவ்கர் என்பவர் உறுதி செய்துள்ளார்.
எனவே அம்பேத்கர் என்பது ஆசிரியரின் பெயரல்ல. அது அவரின் இயற்பெயர் என்பது உறுதியாகிறது.
1916 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு அம்பேத்கர் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தனது இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் தனது தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்றும் தன் கைப்பட எழுதியுள்ளார். அதற்கான ஆதாரமும் உள்ளது.
மேலும் அம்பேத்கரின் தந்தை ஆங்கிலேயருக்கு அனுப்பிய கடிதங்களில் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்று கையெழுத்திட்டுள்ளார். அந்தக் கடிதங்களை தன் தந்தையின் காப்பக பெட்டியில் பழைய காகிதக் கட்டுகளிலிருந்து கண்டெடுத்ததாக பிற்காலத்தில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
ஆகவே அம்பேத்கர் எனும் பெயர் அவரின் தந்தை பெயரிலிருந்தே புரட்சியாளர் அம்பேத்கருக்கு வந்துள்ளதே தவிர அது எந்த ஒரு ஆசிரியர் பெயரும் அல்ல. இவை யாக்கன் அவர்கள் தனது "கழுவப்படும் பெயரழுக்கு" நூலில் கொடுத்துள்ள தரவுகளாகும் .
Wednesday, January 09, 2019
10% பொருளாதார இட ஒதுக்கீடு சதி
ஆளும் பாசிக பாஜகவானது அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு ? அதாவது பொது பிரிவினருக்கு... 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019) வை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு... இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு அதுவும் ஏற்கப்படால் நிச்சயமாக இட ஒதுக்கீடு குறித்தான இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காவி அரசு மூக்கை நுழைத்து திருத்தியாக வேண்டிய அபாயம் இருக்கிறது.
ஆதிக்க சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு ? இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தலித்துகள் உட்பட இதர இடைநிலை சாதியர்களின் இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் சமூக அநீதி நிகழும் என்பதில் மாற்றுக் கருத்தினை யவராலும் சொல்ல முடியாது... நிலைமை இப்படியிருக்க சாதிய ரீதியலான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு வித்திடும் இட ஒதுக்கீட்டில் "பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு "என்பதே ஒரு ஏமாற்று வேலை, இதில் பார்ப்பனியம் வென்றிருக்கிறது என்றே சொல்லலாம். 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது இப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனவே, உயர் சாதி ஏழைகளுக்கான அதாவது பார்பனர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஆக... அம்பேத்கரின் அரசயலைப்புச் சட்டத்தை மொத்தமாக நசுக்கவே இதனை பாஜக வஞ்சகம் புரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதாவது அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளின்படி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். இதில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது அது பற்றியான பேச்சுக்கே இடமில்லை. எனவே, இதில் திருத்தம் செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் படிப்படியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அளிக்கப்படும் இட ஒதுக்கீடு உரிமையை மெல்ல மெல்ல நசுக்கி மொத்தமாக இட ஒதுக்கீடு என்பதை "பொருளாதார அடிப்படையில்" கொண்டு வந்துவிடலாம்... இதன் மூலம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்புகள் படி , இட ஒதுக்கீடு குறித்தான வழக்குகள் தொடுக்கப்படும்போது... "சாதியற்ற சமூகம்" என்று வேறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாதபடி ஆகிவிடும் . விளங்கும்படி சொல்ல வேண்டுமெனில் இந்தியாவில் சேரி-ஊர் என பிரித்து வைக்கப்பட்டிருக்கும் சாதிய இரட்டைக்குடில் முறையை முற்றிலுமாக ஒழித்தாகிவிட்டது என்கிற நிலைமையை அரசுகள் கொண்டிருக்குமேயானால் அது இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ரத்து செய்யலாம் என்கிறது உச்சநீதிமன்றம், ஆகவே இவ்வழியை பயன்படுத்தி அரசுகள் இட ஒதுக்கீடு முறையில் நுழைய "சாதி முதலில் ஒழிய வேண்டும்" ஆனால் பின்வாசல் வழியான "பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு என்றால் மொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்து அனைவரையும் "பொதுப் பிரிவு" என்பதற்குள் கொண்டு வந்துவிட்டால் சாதியமும் அப்படியே இருக்கும் , பார்ப்பனியமும் சாதியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கணக்கு போடுகிறது இந்துத்துவ ஆர்எஸ்எஸ் பாஜக...அதுமட்டுமின்றி... இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டில் ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டக்கூடியவர்கள், மற்றும் 5 ஏக்கர் நிலத்திற்கு கீழே உள்ளவர்கள் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் உயர்ஜாதி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்ட மசோதாவாக இருக்கிறது... எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது? அதிலிருந்தும் இந்த அரசு மிகப்பெரிய முட்டாள்களை கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்... வறுமைக்கு வரையறை 8 லட்சமும் 5ஏக்கர் நிலமும் எனில் வரி விதிப்புக்கான 2 லட்ச வரம்பை எங்கே முறையிடுவது? ஆக தங்களை ஒடுக்கப்பட்ட பார்ப்பானாக காட்டிக் கொள்வதில் இந்த பார்ப்பனிய சமூகம் முனைந்திருக்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்.. சரி ... அதை விட்டுவிடலாம் அவர்கள் ஒடுக்கப்பட்ட பார்ப்பானராகவே இருந்துவிட்டு போகலாம் அதே வேளையில் இதே ஒடுக்கப்பட்ட பார்ப்பனர்கள் துப்புரவு பணி செய்ய தயங்களை முனைப்புடன் வந்து பணி செய்ய தயாரா? அதற்கு மட்டும் ஏன் இந்த 10% இட ஒதுக்கீட்டை விலக்கி வைக்கிறது? ஏனென்றால் சாதிய சமூகத்தில் தலித்துகள் மட்டுமே துப்புரவு பணி செய்ய திணிக்கப்படுகிறார்கள் அதுவும் அதே ஹிந்துத்துவ பார்ப்பன வழியில்...உலகிலேயே வறுமை கோட்டினை மேல்நோக்கி கணக்கிட்ட அதி புத்திசாலிகள் நம் ஆர்எஸ்எஸ் மூளைகள்... இவர்களிடம் இந்த நாடு சிக்கிக்கொண்டு பாடாய்படுகிறது... இருக்கின்ற மிகப்பெரிய சிக்கலையும் அதனை தீர்க்கும் வழிகளையும் கைவிட்டுவிட்டு எல்லாம் இருந்து மக்களை அடிமைபடுத்தியே கொழுத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன அஜென்டாக்களுக்குதான்இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இந்தியாவில் 76% சதவிகிதம் ( அதுவும் தோரயமாக ) தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு இன்னமும் நிறைவேற்றப்படாமலே இருக்கிறது என்கிறது தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வு ஆணையம்... ஆனால் இவர்களோ இருக்கும் 50% இட ஒதுக்கீட்டை மீறி மேலும் 10% பிராமணர்களுக்குவாரி வழங்குகிறது பெரும் மோசடி இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்? இந்த பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால் அது நிச்சயம்சமூகநீதிக்கு எதிராகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லைதானே....இந்து மத சாதிய வர்ணாசிரம அடிப்படையில் வேண்டுமால் இவ்வாறு கணக்கிடப்படலாம் , ஆனால் ஒரு துளியளவும் இதனால் எவ்வித பிரயோசனுய் இல்லை என்பதுதான் உண்மை.பார்ப்பனியம் என்றுமே நேரடியாக எந்த காலத்திலும் மோதாது... அதன் குள்ளநரித்தனம் என்பது இடைநிலை சாதியாதிக்கர்களை தூண்டிவிட்டபடியே தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் என்பதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுதான்இந்த பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு.... ரிசர்வேஷனை ஒழித்துவிட்டால் சாதி ஒழியும் என்றும் , சாதி சர்டிபிகேட் கிழித்தால் சாதி ஒழியும் என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால் சாதி ஒழியும் என்றும் கிருக்குத்தனமான பேச்சுகளையெல்லாம் இதே இடைநிலை சாதிகளை வைத்து பேச விட்டு இப்போது பொது பட்டியலில் 10% த்தை... மிக லாவகமாக தட்டிச்சென்றிருக்கிறது பார்ப்பனியம் , அவ்வாறே அவர்கள் ஒடுக்கப்பட்ட பிராமனியர்களாக இருக்குமாயின் அவர்களை சேரியில் குடியேறச்சொல்லுங்களேன் பார்க்கலாம்... அத்துணை முகங்களும் கோபத்தில் விழி பிதுக்கும்... ஏனெனில் இங்கு சாதியத்தை வளர்த்தெடுப்பதே அவர்கள்தானே?
இந்த மோடி அரசு மட்டுமல்ல இந்த பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்த மாயாவதியாகட்டும் , பினராயி விஜயனாகட்டும் , காங்கிரஸ் ஆகட்டும் " ஒடுக்கப்பட்ணவர்களின் வாக்கு வங்கியினை விட ஆதிக்க சாதியத்தின் வாங்கு வங்கியினை கவனத்தில் கொண்டே ஆதரிக்கிறது எனலாம் .. இதன் மூலம் பெறும் ஓட்டரசியல் என்பது மிகப்பெரியதான சமூக அநீதி என்றே சொன்னால் அது மிகையாகாது. பாஜகவை பொறுத்தவரையில் அடுத்த ஆட்சிக்கு யார் வரப்போகிறார்கள் என்கிற தேர்தல் காய்ச்சலிலும் , நிச்சயமாக தலித் வாக்குகள் விழாது , அவர்களின் வாக்கு வங்கி அவசியமற்றது எனவும் , தனக்கே உரிய ஹிந்துத்துவ பார்ப்பனிய சாதிய பாசத்தாலும் , இந்த பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு வடிவம் கொடித்திருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது... நிச்சயமாக காங்கிரஸ் அடுத்த ஆட்சிக்கு வந்தாலும் இந்த மசோதாவை நிறைவேற்றியே ஆகும் , ஏனெனில் சாதியத்தை , மதத்தை வைத்து அரசியல் செய்வதில் ஆர் எஸ்எஸ் இன் இன்னொரு வடிவமாகத்தான் காங்கிரஸ் இன்றளவும் இருக்கிறது...
இந்து மதவாத சக்திகளை அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் வழியில் ஒழித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே இப்போதைக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது.
Friday, October 12, 2018
திவாலிந்தியா
இது ஏதோ பழைய திவான்களின் நாடு என புருவங்களை உயர்த்த வேண்டாம்... அதைப் போலவே புதிய திவான்களின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது என்பதையும் மறக்க வேண்டாம்... மோடி ஆட்சியில் இந்தியா ஏகபோக வளர்ச்சியடையும் என மோடிக்கே 56 இன்ச் என அளந்துவிட்ட அத்துணை வாய்களும் இன்று கமுக்கமாய் வேறொரு விஷயங்கள் , சம்பவங்கள் என நம்மை மடைமாற்றிக்கொண்டே இருக்கிறது... ஆனால் ஹிந்துத்துவ பார்ப்பனிய பாஜக மோடியின் பின்னடைவுகளை பற்றி நாம் எடுத்துக்கூறினால் உடனே அவர்களுக்கு வால் முளைத்துவிடுகிறது... அந்த புதிய திவான்கள் யார்?
அதானிகளும் , அம்பானிகளும் , வால்மார்டுகளும் தான் மோடி ஆட்சியில் முளைத்த புதிய திவான்கள்... ஏதோ வளர்ச்சி , வளர்ச்சி என்று கதைத்துவிட்டு இந்த இந்திய நாட்டை சுரண்ட என்னென்ன வழிகளெல்லாம் இருக்கின்றதோ அந்தந்த வழிகளையெல்லாம் யுக்தியாக பயன்படுத்தி சனநாயக இந்தியாவில் சாதிமத வெறியை குறிப்பாக ஹிந்துத்துவ மதவெறியை கிளறி விட்டு சமத்துவத்தை , சகோதரத்துவத்தை குறிப்பாக இந்திய பொருளாதாரத்தை மொத்தமாய் சீர்குலைத்து இன்று "திவாலாகும்" நிலையில் கொண்டு வந்திருப்பதுதான் மோடியும் மோடிக்களை கைப்பாவையாக்கி வைத்திருக்கும் இந்த கார்ப்பரேட்டுகளின் முக்கிய பணிகளாக இருக்கிறது... எங்கும் சுரண்டல் , எதிலும் சுரண்டல் என்பதே மோடியின் ஆட்சியில் பிரதான மந்திரமாய் இருக்கிறது, இவர்களை நாட்டை சுரண்டுவது மட்டுமில்லாமல் நாட்டின் குடிமக்களையும் சேர்த்தே வதைத்தெடுக்கிறார்கள்..
அதென்ன "திவாலிந்தியா" ?
ஆமாம் இந்தியா திவாலாகும் சூழலுக்குத்தான் தற்போது தள்ளப்பட்டுள்ளது, முக்கியமாக இவர்கள் நாட்டை திவாலாக்கும் வேலையை விட ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதாரத்தை திவாலாக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள் , பாஜக மோடி பிரதமராக பதவியேற்றில் பெட்ரொல் விலை ரூ 30 க்கு கிடைக்கும் என அன்று பரப்புரை செய்தார்கள் , ஆனால் இன்று பெட்ரோல் விலை ரூ 100 ஐத் தொடப்போகிறது.. அதேபோல டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை மோடி ஆட்சிக்கு வந்தால் அபரிவிதமாக ஏற்றம் காணும் என்று பரப்புரை செய்தார்கள் , ஆனால் என்ன நடக்கிறது? டாலரின் மதிப்புதான் ஏற்றமடைந்து ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் அதள பாதாளத்தை நோக்கி செல்கிறது அதாவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.47 என உயர்ந்து நிக்கிறது, இந்த தலைகீழ் விகிதங்களைத்தான் ஹிந்துத்துவ மோடியின் வளர்ச்சியென்று வரிந்துகட்டப் போகிறார்களா? எதை உயர்த்த வேண்டுமோ அது உயர்த்தப்படவில்லை, எதை குறைக்க வேண்டுமோ அதையும் குறைத்தபாடில்லை , ஆனால் இன்னமும் இவர்கள் இல்லாத அந்த 56 இன்ச்சை? (எதை?) பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். புதிய திவான்களை வளர்த்துவிட்டு பாமரர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த புதிய இந்தியா "திவாலிந்தியா" என இவர்கள்தான் பிரசவித்தார்கள் என பெருமையோடு வேண்டுமானால் மோடி பக்தர்கள் பூரிப்படைந்து கொள்ளலாம்...
இன்னமும் தேடிப் பார்க்கிறேன்...
"நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன் என்றால்? " என ஹிந்துத்துவ பார்ப்பன பாஜகவின் காலை நக்கிக்கொண்டிருந்த ஜோ டி குரூஸ்கள் , ஜெமோக்கள் , சாருக்கள் , இப்போது புதிதாய் முளைத்த அரசியல் புள்ளியல் நிபுணர்? மாரிதாஸ்கள் எந்த எலி பொந்துக்குள் ஒளிந்துகொண்டு தங்கள் பேனாக்களை அவர்களே செரித்துக்கொண்டிருக்கிறார்களென்று...
எதுவானாலும் சுரண்டல்களுக்கு எப்பொதுமே பெருச்சாலிகளின் துணைவேண்டுமல்லவா.....
Monday, September 24, 2018
கருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு ?
கருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சமூக பேச்சுகளை காணலாம்... எதார்த்தத்தில் இந்த புலம்பலும் , ஆதங்கமும் முற்போக்குத் தன்மை உடையதோ, ஹிந்துத்துவ பார்ப்பன எதிர்ப்புத் தன்மையுடையதோ இருக்க முடியாது.. இன்னமும் கைது செய்யப்படாமல் அல்லது நீதிமன்றம் அவரை கைது செய்ய அவசியமில்லை என கருத்து கூறும் அளவுக்கு ஹிந்துத்துவ பார்பானியம் தன் பூணூல் பலத்தை எவ்வாறு பிரயோகப்படுத்துகிறதோ ... அதே அளவுக்கு இங்கு இடைநிலை சாதியாதிக்கத்தின் அதிகார பலமும் மேலோங்கியே கிடங்கிறது... கருணாஸ் பேசியதும் எச் ராஜாவின் ஆவேச வாக்குவாதமும் ,அதன் பிறகும் கூட இந்து அறநிலையத்துறை அதிகாரிளை வேசி என பேசியதும் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும்... தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல மொத்த இந்திய சமூகத்திலும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மேலோட்டமாக கொண்ட ஒரு சார் பார்ப்பன எதிர்ப்பு, மிகத் தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு என்று இரண்டு வகையில் இருக்கிறது... அதாவது சாதி , மதத்தினை மிகத்தீவிரமாக எதிர்க்கும்போது அது இயல்பாகவே பார்ப்பனிய எதிர்ப்பாகிவிடுகிறது, அதே வேளையில் தங்களுக்கு சாதி முக்கியம் , மத வழிபாடு வேண்டும் ஆனாலும் பார்ப்பனனை எதிர்ப்போம் என மேலோட்டமாக எதிர்ப்பு தெரிவிப்பது என இந்திய சமூகம் முழுமைக்கும் இந்த நடைமுறைதான் இருக்கிறது. ஆழ்ந்து கவனித்தால் பார்பனியத்தைவிட இவர்கள் ஆபத்தானவர்கள் என்றுணரலாம்... ஏனெனில் பார்ப்பனியம் என்றுமே தனக்கான அடிமைகளை நேரடியாக உறுவாக்குவதில்லை , இடைநிலை சாதியாதிக்கர்களை வைத்தேதான் அது காய்நகர்த்தும்... இதில் வேடிக்கை என்னவென்றால்... நீங்கள் எந்த ஆண்டை சாதியாகவோ இருந்துக்கொள் ஆனால் எங்களுக்கு நீ "சூத்திரன்" மட்டுமே என்கிறது பார்ப்பனியம்... இதையும் எச் ராஜா " மரு . ராமதாஸ் கோவில் கருவறைக்குள் நுழைந்தால் கருவறுப்போம்" என பேசியதிலும் வெளிப்படையாக புரிந்து கொள்ளலாம்... கருனாஸ்கள் , என்றுமே கைது செய்யப்படக்கூடிய சமூக விரோதிகள்தான் , ஆனால் பார்ப்பன பாணியில் பூணூல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் "அதே சூத்திரர்கள்" தான் ... எப்பொழுதும் தலித்தியத்தின் பார்ப்பன எதிர்ப்புக்கும் , சாதியாதிக்க ஆண்டைகளின் பார்ப்பன எதிர்ப்புக்குமான இடைவெளி மிப்பெரிய அளவில் தொடர்ந்தே இருக்கும்...சரி... இதனை கருணாஸ் ,எச் ராஜா ஒப்பீடு கூடாது எனில் வேறு எப்படி ஒப்பிடுவது?
நிறைய இருக்கிறது... கருத்துரிமைக்கு எதிராக எத்தனையோ போராளிகளை இந்த அரசு நசுக்கி ஒடுக்குகிறது... எத்தனோயோ இடதுசாரிய முற்போக்கு இயக்கங்களின் குரல்களை நசுக்கி உடனே கைது செய்து தங்கள் அதிகார பலத்தை பிரயோகிக்கும் அரசு பார்ப்பனியத்திடம் பம்முவது ஏன்? திருமுருகன் காந்தி , சோபியா, திவ்யா பாரதி , நந்தினி, என நீளும் பட்டியல்கள் இருக்க... பெண்களை, ஒடுக்கப்பட்ட சமூக மக்களை , இந்து அறநிலையத்துறை எனும் ஒரு துறையை, தந்தை பெரியாரை, இழிவாக மிகவும் கீழ்த்தரமாக பேசும் எவ்வீ சேகர்களை எச் ராஜாக்களை சுதந்திரமாக அதையும் தாண்டி அரசின் பாதுகாப்போடு வெளியே திரிய விடுகிறார்கள் எனில் இது பூணூல்களின் அடிமை அரசுதானே... ஹிந்துத்துவ பார்ப்பனியத்தின் கூடவே இடைநிலை சாதியாதிக்க வெறியர்களையும் இங்கு அடையாளங் காணப்பட வேண்டும்...
Subscribe to:
Posts (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...













