Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, July 02, 2016

கபாலியும் கொலையும்

நான்
கபாலி
திரைக் காவியம்
பற்றியும்

ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும்
ஓயாது
மந்திரங்களோதும்
பலகோணத்து
புது படங்களை
பற்றியும்
பேசிக்கொண்டிருந்தேன்

இடையிடையே
அரட்டையும்
அங்கலாய்ப்புகளும்
அடுத்த சூப்பர் ஸ்டார்
தலயா தளபதியா?
என்கிற ஆராய்ச்சி
விவாதங்களுடனும்
அந்த பயணங்களில்

எனதருகில்
ஒரு தற்கொலை
ஒரு படுகொலை

கண்டும்
காணாமல்
நகர்ந்து விட்டேன்

உடனே
விமரிசனம் எழுதியாக
வேண்டுமே

அதுபற்றியல்லாமல்
திரைக் காவியங்களை
பற்றி
தல தளபதிகளை
பற்றி,,,

சுவா(தீ)க்களோ
வினுபிரியாக்களோ
ஜிஷாவோ
நிர்பயாக்களோ
நிர்வாணமாய்
பிணமாய்
கிடந்தாலும்

என் பக்கங்களை
நிரப்பியாக
வேண்டும்
என் விமரிசன
காணொளிகளை
ஏற்றியாக
வேண்டும்

சமூக நீதிகள்
செத்துக் கிடப்பதாய்
பேச
எனக்கொன்று
வாய்த்திருக்கிறது
சென்சார் போர்டு
என்கிற பெயரில்
அதுமட்டுமே
போதுமெனக்கு
பெண்ணியம்
பேசிடவும்
போர்க் கொடி
தூக்கிடவும்,,,

Friday, June 17, 2016

பாபா சாகேப் திரைப்படம் தயாகிறது தமிழில்,,,

காமராசர், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புரட்சியாளர்,
இந்திய அரசியலமைப்புத் தந்தை பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு
'பாபா சாகேப்' என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார்
என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.இப்படம் குறித்து அவர் கூறும்போது,
டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையை மையக் கருவாக வைத்து
உருவாகவிருக்கும் திரைப்படம் தான் "பாபா" சாகேப். தமிழ் சினிமாவில்
இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட
திரைப்படங்கள் அதிகமாக வருகிறது, நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்க்கையை
அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கக் கூடாது என்ற
எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன். ஹாலிவுட்டில்
அட்டன்பரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக
எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை
வரலாற்றை திரைப்படமாக எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்
இந்த பாபா சாகேப்.அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000
பேருக்கு மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை. இறுதியாக எங்கள்
திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் 'ஆய்வுக்கூடம்' திரைப்படத்தின்
நாயகன் ராஜகணபதியை அறிமுகம் செய்தார், அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல
உள்ளதால் அவரை தேர்வு செய்தோம், மேலும் இத்திரைப்படத்திற்காக
அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத்திற்கும் பாரதியார்,
பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான
தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு தேனிசைத் தென்றல்
தேவா இசையமைக்கிறார். ரன் ஹார்ஸ் மீடியா நிறுவனம் சார்பில் அஜய் குமார்
தயாரிக்கிறார்.
- தீக்கதிர்.

Wednesday, June 08, 2016

விஜய் சேதுபதி எழுவர் விடுதலையை பற்றி பேசக்கூடாதென சொல்வதற்கு நீங்கள் யார்?

என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது இந்த தமிழ்ச் சமூகம். திரைத் துறையில் ஒருவரின் அணுகுமுறை சமூக நலனை நோக்கி வருகின்றபோது அதனை இலாவகமாக ஏற்று அரசியல்படுத்தி ஊக்குவிக்கத் தெரியாமல் இருக்கும் இதே தமிழ்ச் சமூகம்தான் அப்படியானவர்களை கூத்தாடிகள் என்று வசைபாடியும், கேலிசெய்தும், கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி ஒருபடி மேலேபோய் ஏதோ இவர்கள்தான் சமூகத்தை காக்கும் காவற்குடிகளாகவும் இவர்களாலே சமூக விடுதலை பேசப்படுவதாகவும் புளங்காகிதம் கொண்ட சில போலித் தமிழ்தேசிய அசிங்கங்கள் அவ்வாறு சமூக நலனை பற்றி திரைத்துறையில் ஒருவன் பேசினாலே "நீ மூடிட்டு போடா வந்தேறி நாயக்க மயிறு" நாங்க போராடிக்கறோம் என்று வீர வசனங்களை அவிழ்த்து விடுகிறார்கள். உண்மையில் அம்மாதிரியான தமிழ்த்தேசியர்களின் பேச்சை கேட்டு கேட்டு போரடத்துதான் போகிறது. திரைத்துறை என்றில்லை ஒரு சாதாரண பாமரன் ஒருவனின் கருத்துகள் சமூக விடுதலையை நோக்கி பயணிக்கிறதென்றால் அதனை கேட்டு அக்கருத்தின் சிந்தனைகளை உள்வாங்கி முற்போக்குடன் அரசியல் படுத்துவதே ஆகச்சிறந்ததாக அமையும். 10 இளை(ஞி)ஞர்களில் 1 இளை(ஞி)ஞன் முற்போக்குச் சிந்தனை பெற்றிருந்தாலும் அந்த ஒரு நபரை வைத்து பத்து பேரை அரசியல்படுத்த முடியாமல் போனதால்தான் இன்று சாதிய தீவிரவாதத்தாலும் மத தீவிரவாதத்தாலும் பெருங்குடி மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் . "ஒரு தாய்க்குத்தான் தெரியும் பிள்ளைக்கு எதை தர வேண்டும்" என வசனங்களை பேசி பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டிய பாலின் விலையை உயர்த்தி டாஸ்மாக் எனும் சாராயக் கடைகள் மூலம் சமூகத்தை சீரழித்து ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கும் அதிமுக அரசிற்கு 25 ஆண்டு காலம் தன் மகனை பிரிந்து வாழும் உண்மையான ஒரு தாயின் வலியென்ன தெரிந்துவிடவாப் போகிறது. ஆனாலும் ஆட்சியில் அமரவைத்து அழகு பார்க்கிறோமே உங்களின் புத்திக்கு நம்மை ஆளுவது பார்ப்பானியம் என்பது உறைக்கவில்லையா? நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு கூறியிருக்கிறார் : " பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 'இன்று வரையில் தான் நிரபராதி' என பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், 'பேரறிவாளன் நிரபராதி' என சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இதிலென்ன தவறு இருக்கிறது? பொய்யாக ஜோடிக்கப்பட்டு கொலைக்கு உடைந்தையாக பேட்டரிகள் விநியோகம் செய்தாரென ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தனிமை சிறையில் தன் வாழ்நாளை தொலைத்து நிற்கிறார் தோழர் பேரறிவாளன். அவரோடு சேர்த்து குற்றவாளிகளாக சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்கு குரலெழுப்புவது என்பது மனிதாபிமானம் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றபோது அதிலொருவனாய் விஜய் சேதுபதியும் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி, விடுதலை கோரிக்கைப் பேரணியில் தானும் கலந்துகொள்வதாய் கூறியிருக்கிறார். திரைத் துறையில் இதற்குமுன் இயக்குநர் பா. இரஞ்சித் தனது ஆதரவை பதிவு செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டுதலுக்கும் உரியது. இவர்களின் ஆதரவினை வைத்தே அரசியலாக்கி எழுவரின் விடுதலைக்கு ஆதரவான அதிர்வலைகளை உறுவாக்கலாம். ஆனால் இந்த போலித் தமிழ்தேசியர்களோ மீண்டும் மீண்டும் நடிகர்களை கூத்தாடிகளாக வசைபாடி ஏதேதோ டி.என்.ஏ சோதனைகளாம் செய்து விஜய் சேதுபதியை வந்தேறி என்றும், நாயக்கச் சாதியனே! என்றும் தமிழ்த்தேச துரோகி என்றும் வசைபாடுகிறார்கள். அதேவேளையில் தனது சுயசாதி ஓட்டில் ஜெ புகழோடு வென்ற கருணாசுக்கு எதிராக எவ்வித விமர்சனமும் அவர்களிடத்தில் எழுந்ததாக தெரியவில்லை, இதனையே நாம் இந்துத்துவ பார்ப்பானிய தமிழ்த்தேசியம் என்கிறோம். எங்கே? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான சு சாமியையும் ,ஜெயாவையும் எதிர்க்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்? அது முடியாது காரணம் தமிழ்த்தேசியத்தை இயக்குவதே பார்ப்பானியமாகத்தான்­ இருக்கிறது. உண்மையில் பேரறிவாளன்,சாந்தன் உள்ளிட்ட எழுவர் விடுதலையாகி எழுவரும் ஒரே பொது மேடையில் பேசினால் அழியப்போவது போலித் தமிழ்த்தேசியமாகத்தான­் இருக்கும். அதனாலோ என்னவோ அந்த எழுவரின் விடுதலைக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் உடனே பதற்றமாகி பொங்கி எழுந்து டி என் ஏ சோதனை மூலம் பொங்கல் வைக்கிறது போலித் தமிழ்த்தேசியம். இந்த பொங்கலெல்லாம் பார்ப்பானியத்திற்கான­ படையலாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் "விஜய் சேதுபதி" என்று கூகுள் தேடுபொறியில் சுட்டினால் அந்நடிகரின் படம்,படம் சார்ந்த கதாபாத்திரம்,பாடல்கள­் என தேடிக் கொடுக்கும் கூகுள், ஆனால் இப்போது தேடினால் "விஜய் சேதுபதி சாதி,ஜாதி" என்று தொடர்புடையதில் இடம் பெறுகிறது "இதற்குத்தானே ஆசைபட்டீர்கள் பாலகுமாரர்களே" என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது உங்களின் பித்தாலட்ட தமிழ்த்தேசியம்.

Thursday, March 31, 2016

நடிகர் கமலஹாசனுக்கு பிரான்சின் ஹென்றி லாங்லாயிஸ் விருது!







நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்சு நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் (Henri Langlois) விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா துறையில் நடிகர் கமல்ஹாசனின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக திரைத்துறையில் பன்முக திறமை கொண்ட நடிகர் கமலஹாசன் தனது நடிப்பின் மூலம் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் கவனத்தை ஈர்த்தவர். திரையுலகில் தனது மாறுபட்ட நடிப்பில் தனக்கென்னு தனி முத்திரை பதித்து வருபவர் ஆவர். சிறந்த நடிப்பிற்காக  4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட  பல இந்திய விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ளார். குறிப்பாக சிறந்த பிறமொழிப்படத்திற்கான அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருபவர். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2009 ல் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் குறிப்பிடத்தக்க இந்திய நடிகர்களில் நடிகர் கமலஹாசனும் குறிப்பிடத்தக்கவர். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் உள்ளிட்ட பிறமொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமலஹாசனுக்கு ஹென்றி லாங் லாட்ஸ் என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருது இந்திய திரை உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் ஆற்றிய சேவைக்காக பிரான்ஸ் நாட்டிலுள்ள சினிமா அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவித்திருக்கிறது.  இது குறித்து கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததிருப்பதாவது : இந்த விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.எனது  குருநாதர் அனந்த் மூலமாக  ஹென்றி லாங் லாட்ஸ்-ஐ அறிந்திருக்கிறேன். அவருடைய சினிமா பணிகள்  அளப்பரியது.  அவர் பெயரில் இந்த விருது கிடைத்தது பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-- தீக்கதிர்

Monday, March 28, 2016

தேசிய விருதுகள், விசாரணைக்கு மூன்று விருதுகள்

63வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த
நடிகருக்கான விருதினை பிகு படத்திற்காக "அமிதாப்பச்சனும்",
சிறந்த நடிகைக்கான விருதினை தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக
"கங்கனா ரனாவத்தும்" சிறந்த இயக்குநருக்கான விருதினை பஜிராவோ பன்சாலி
படத்திற்காக "சஞ்சய் லீலா பன்சாலியும்" சிறந்த திரைப்படமாக "பாகுபலி"
திரைப்படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் "விசாரணை"
படத்திற்கு 3 தேசிய விருதுகளை வென்றது, தமிழில் வெளிவந்த விசாரணை
படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது
தமிழ் திரை உலகில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.
கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் எம். சந்திரகுமார் அவர்கள் எழுதிய நாவல்
லாக்கப். இந்த நாவலைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன்
விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார். நடிகர் தனுஷின் வொண்டர்பார்
நிறுவனமும் வெற்றி மாறனின் கிராஸ்ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இந்த படத்திற்கு தமிழக
காவல் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் பல
தரப்பினரும் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த திரைப்படம்
வெளியிடப்படுவதற்கு முன்னரே வெனிஸ் திரைப்பட விருதுக்கு அனுப்பப்பட்டு
வெனிஸ் விருதுக்கு தேர்வானது. இந்நிலையில் திங்களன்று விசாரணை படத்திற்கு
3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
சிறந்த திரைப்படத் தொகுப்பிற்கான தேசிய விருது விசாரணை படத்திற்கு மறைந்த
"கிஷோருக்கு" வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருது
விசாரணை படத்தில் நடித்த "சமுத்திரக்கனிக்கு" வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தாரை தப்பட்டை படத்தின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது
இசைஞானி "இளையராஜாவுக்கு" வழங்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா ஐந்தாவது
முறையாக தேசிய விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்,,,

Sunday, March 13, 2016

நடிகர்களின் தேர்தல் பிரச்சாரம், இப்போதே தலைசுற்றுகிறது!

தமிழகத் தேர்தல் நெருங்க நெருங்க மனதிற்குள் ஒருவித அச்சம்
தொற்றிக்கொள்கிறது. ஓரளவிற்கு ஐந்துமுனை போட்டிகள் என்கிற தேர்தல்
களத்திற்கு அரசியல் கட்சிகள் அடித்தளமிட்டாலும் இன்னமும் இழுபறியிலேயே
இருப்பதனால் கட்சி வேட்பாளர்களை தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சிகளான
திமுகவும், அதிமுகவும் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் எப்படியும்
தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறிதுகால இடைவெளி கிடைக்குமென்பது ஆகச்சிறந்த
மன நிறைவை அளிக்கிறது. காரணம் இருபெரிய கட்சிகளும் தங்களின் தேர்தல்
பிரச்சாரத்திற்கு முக்கியஸ்தர்களாக "திரைத்துறை" நடிகர் , நடிகைகளை
களத்தில் இறக்குவார்கள். அவர்களோ திரையில் கதாநாய(கி)கர்களாக நடித்து
மக்களை ஏமாற்றியது போதாதென்று அரசியல் தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன்
பேர்வழியென்று மற்றொரு வழியிலும் மக்களை ஏமாற்ற வருகை புரிவார்கள். இதில்
திமுக ஓரளவிற்கு கட்டுப்பாடுகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட
நடிகர்,துணைநடிகர்,நா­டகஸ்தர்களை வைத்திருப்பதால் ஓரளவிற்கு பொதுசன
தலைவலி கட்டுக்குள் வந்துவிடுகிறது. இம்முறை தீவிர திமுக பற்றாளரும்,
நகைச்சுவை நடிகருமான குமரிமுத்து அவர்களின் மரணம் நிச்சயம் திமுக
தரப்பில் ஓர் பேரிழப்புதான் ,,, அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.
திமுக தரப்பில் இம்முறை நடிகர் வடிவேலு, பரோட்டா புகழ் சூரி ஆகியோர்கள்
இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற­து.திமுகவின் பிரச்சாரம்
அவ்வளவாக தலைவலியை ஏற்படுத்தாது , ஆனால் மற்றொரு பெருங்கட்சியான அதிமுக
வின் தேர்தல் பிரச்சாரத்தை நினைக்கும்போதே தலை கணத்து விடுகிறது. ஏற்கனவே
அக்கட்சியின் கொ ப செ ஆன நடிகை சி. ஆர். சரஸ்வதி அவர்கள் அதிமுக சார்பாக
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு தனது பார்ப்பன புத்தியை
காட்டுவதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர் கருத்துக்களுக்கு சம்மந்தமேயல்லாத
பேச்சை பேசி குழப்பும் ஜெயா அடிமையாக இருக்கிறார் இந்நிலையில் பிரச்சாரம்
வேறு செய்யப்போகிறார் என்றால் மனங்களின் அவஸ்தையை சொல்ல வேண்டுமா என்ன!!!
அதன் பிறகான அதிமுகவின் தேர்தல் பிரச்சார பீரங்கிகளின் பட்டியல்
நீள்கிறது. ராமராஜன்,விந்தியா,சி­ங்கமுத்து, மாளவிகா, இப்படியான தலைகளின்
தேர்தல் பிரச்சார வரவேற்புகளை நினைத்தால் நெஞ்சம் பதறி வெடித்தேவிடும்
போலிருக்கிறது.உதாரணம­ாக சமீபத்தில் நடிகர் ராமராஜன் அவர்களின் மாடுகள்
அம்மா என்றே அழைக்கும், 'அரசியலில் ஒரே சிங்கம் அம்மாதான்,
போன்ற பேச்சுகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பே உதித்தாகிவிட்டது.
இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது "ஓ பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி
பிச்சைக்காரனா? வெளங்கிடும்டா நாடு! என்கிற கவுண்ட்டர் மகான் காமெடியை
தவிர்க்க முடியவில்லை. இவர்களுக்கு பின்னால் அணிதிரளும் மக்களை ஒன்றும்
சொல்வதற்கில்லை பழக்கப்படுத்தப்பட்டி­ருக்கிறார்கள் நடிகர்களின் பின்னால்
செல்வதற்கு,,,
இது மிகமோசமான நடத்தை என்பதை இந்த மக்கள் எப்போதுதான் உணரப்போகிறார்களோ
தெரியவில்லை.

Sunday, November 29, 2015

நடிகர்களை "கூத்தாடிகள்" என இழிவுபடுத்துவது சரிதானா?

திரையுலக கலைத்துறையினரை
விமர்சிக்கவும்,அவர்களை கீழ்த்தரமாக
வசைபாடவும் பெரும்பாலான
தமிழ்ச்சமூக மக்களால்
பயன்படுத்தப்படும் வார்த்தை
"கூத்தாடிகள்" என்பதாக இருக்கிறது.
எழுத்துலக விமர்கர்களும் , அறிவுலக
முற்போக்காளர்களும் இதற்கு
விதிவிலக்கல்ல,அவர்களும்
திரையுலக விமர்சனத்திற்கு
"கூத்தாடிகள்" என்றே
பயன்படுத்துகின்றனர். இது பொதுவாக
இழிவுபடுத்தவே
பயன்படுத்தப்படுகிறது என்பதை
அனைவரும் அறிவார்கள்,
கலைத்துறை சார்ந்தோரை
"கூத்தாடிகள்" என இழிபடுத்துவது
சரியா? என்கிற கேள்வி எழுகிறது,
இதற்கு எவ்வித தமிழ் ஆராய்ச்சிக்கும்
செல்ல விரும்பவில்லை, அதன்
நடையிலேயே "கூத்தாடிகள்" எனும்
கலையை நேரடியாகவே
இழிபடுத்துகிறார்கள் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி போல
தெளிவாகிறது. இது சரியான
நடவடிக்கை தானா? சரியான புரிதல்
தானா? எனும் கேள்விப்பதம்தான்
தற்போதெழும் அவசியத் தேவையாக
இருக்கிறது.
நம் தாய்த்தமிழில் இயல் ,இசை,
நாடகம் எனும் முத்தமிழ் போற்றியே
தமிழை வளர்த்திருக்கின்றோம். சங்க
இலக்கியத்தை தாயாக இருந்து
வளர்த்தவைகளாக "முத்தமிழ்"
இருந்திருக்கிறது. இம்மூன்றும் ஒரு
சேர ஒரே அரங்கில் பண்டைய
காலத்திலேயே ஏற்றியிருக்கிறார்கள்.
பண்டைய காலத்தில் சிறப்புற்று
விளங்கிய "கூத்தாடிகள்" எனும் சொல்
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான
இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது. "ஊர்
ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு
கொண்டாட்டம்" என்பது அப்போதுதான்
பரவலாக்கப்பட்டிருக்கி
றது.முதன்முதலாக "கூத்தாடிகள்"
எனும் சொல் இதிலிருந்தே
இழிபடுத்தப்பட்டிருக்கக் கூடும், ஓர்
ஊரானது இரண்டாக பிரிந்து இரண்டு
இனக்குழுக்களும் ஒருவரையொருவர்
தாக்கிக்கொண்டால் அவர்களை
சமாதானம் செய்து சமரச உடன்பாடு
செய்ய வேண்டிய தன்
கடமையிலிருந்து "கூத்தாடிகள்"
நழுவி தங்கள் வியாபாரப்
பணவரவையே நோக்கமாக
கொண்டிருக்கிறார்கள் என்பதாக
மேற்கண்ட வழக்க சொலவடை
இருப்பதாக நமக்குத் தெரிகிறது. இதன்
மூலம் கூத்தாடிகள் முதன்முதலாக
இழிபடுத்தப்படுகிறார்கள் என்பதாக
உணர்த்தப்படுகிறது. இந்தச் சொலவடை
பண்டையக்காலங்களில் இருந்ததாக
தெரியவில்லை இரண்டாம்
தலைமுறைகள் உறுவாக்கம் பெற்ற
பின்னர்தான் வழக்கத்திற்கு
வந்திருக்கிறது அதாவது மேடை
நாடகங்கள் புகழுறும் காலத்தில்
வந்திருக்கிறது. மேடை நாடகங்கள்
அடுத்தக்கட்ட நகர்வான சினிமா எனும்
திரைத்துறையில் கால்பதிக்கும்
காலத்தில் யாராலும் மறக்கமுடியாத
மனதில் அழியாத புகழுடையோர்களாக
தியாகராஜ பாகவதர் ,
சிவாஜிகணேசன்,எம் ஜி ஆர்,
போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.
கலைத்துரையினர்கள் மத்தியில்
பல்வேறு போட்டிகள் நிலவிய
காரணத்தினால் மக்கள் அவர்களுக்கு
பிடித்தமான நடிகர்களை
விட்டுக்கொடுக்காத விவாதங்களில்
வெகு தீவிரமாக மேற்கண்ட சொலவடை
பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது .
ஆனாலும் அதனை வெளிப்படையாக
விமர்சனம் என்கிற கட்டத்துக்குள்
மக்கள் எடுத்துச் செல்லவில்லை
காரணம் மேடை நாடகங்கள் மற்றும்
சினிமா கலைத்துறை மூலம்
வெகுசன மக்களுக்கு அதிதீவிரமான
சமூக மாற்ற விழிப்புணர்வு
கொள்கைகளை பரப்பினார்கள். மேலும்
சமூகத்தில் ஏற்பட்டுள்ள
பிளவுகளையும்,சமூக
அவலங்களையும் கண்டித்து பல்வேறு
மேடை நாடகங்களையும்,திரைப்
படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்
கூத்தாடிகள் எனும்
கலைத்துறையினர். குலக்கல்வி
முறையை கண்டித்து மேடை
நாடகங்களை அரங்கேற்றயதற்காக
அன்றைய ராஜாஜி அரசு நடிகவேள் எம்
ஆர் ராதா அவர்களை கைது செய்து
சிறையடைத்து சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றியதாக
வரலாறு, தியாராஜ பாகவதர் அப்போதே
விதவை மறுமணம் குறித்தான
விழிப்புணர்வினை
ஏற்படுத்தியிருக்கிறார், சுதந்திர
போராட்டத் தியாகிகளை நம்
கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்
சிவாஜிகணேசன், என அன்றை
சினிமாவின் சமூக அக்கரைப் பணிகள்
நீண்டுக்கொண்டே செல்கின்றன,
அப்போதும் கூத்தாடிகள் என
இழிபடுத்தப்பட்டிருந்தாலும் அதன்
தன்மை அவ்வளவாக
பாதிப்பாகவில்லை , ஆனால் இன்றைய
காலக்கட்டத்தில் மிகத்தீவிரமாக
"கூத்தாடிகள்" இழிபடுத்தப்பட்டு
வருகிறது. கிட்டத்தட்ட அதன்
எல்லையைத் தாண்டி அடுத்தவரை
திட்டுவதற்கு கூட ஆங்காங்கே
பயன்படுத்தப்படுகிறது . உண்மையில்
நடிப்புத் தொழிலை செய்பவர்களின்
குறியீட்டு கலைச் சொல்லான
"கூத்தாடிகள்" என்பதை
இழிபடுத்துவது நாகரீகமானதா என்று
சிந்திக்க வேண்டும். அன்றைய
நடிப்புத் தொழில் புரிந்தோரின் சமூக
அக்கரையினை துளிகூட இன்றைய
நடிப்புத் தொழிலாளர்கள் பெற்றிருக்கா
விட்டாலும் அவர்களின் தொழிலை
கேவலப்படுத்தி "கூத்தாடிகள்" என
குறிப்பிடுவது அபத்தமாக இருக்கிறது.
ஏனெனில் இங்கே தொழிலின்
அடிப்படையினான பல்வேறு
கலைச்சொற்களை
கேவலப்படுத்துவதை நாம் அன்றாடம்
பார்க்கின்றோம்.இது சரியான
அணுகுமுறைதானா என்று பரிசீலனை
செய்ய கடமைபட்டுள்ளோம்.
அதுமட்டுமில்லாது அக்கால
கலைத்துறை நடிகர்களை போல சமூக
அக்கரையில் தங்களை அர்பணிக்க
இன்றைய கலைத்துறை நடிகர்கள்
முன்வர வேண்டும். ஒரு பொழுதுபோக்கு
அம்சமாக அல்லாமல் கொஞ்சமேனும்
சமூக அக்கரை விழிப்புணர்வு கொண்ட
காட்சிகளை கலைத்துறையினர்
முன்னெடுக்க வேண்டும்.
அதுமட்டுமே அவர்களின் கலைச்
சொல்லான "கூத்தாடிகள்" என்பதை
இழிவுபடுத்துவதிலிருந்து தடுக்கும்.
சினிமா ரசிகர்கள் உண்மையில்
திரையில் காண்பிக்கப்படும்
செயல்களையே நிஜத்தில் நடிகர்களும்
கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து
வெளியேறி நடிப்பு மட்டுமே அவர்கள்
தொழில் அவர்கள் நடிக்கிறார்கள்
நிஜமென்பது வேறென்று உணர்ந்து
அதீதி பற்றின் காரணமாக எழும்
கோபத்திலிருந்து வெளியேறினால்
நன்றாக இருக்கும். "பயணம்" என்றோரு
படத்தில் கடத்தப்பட்ட ஒரு
விமானத்தில் இக்காட்சியை
அருமையாக வடிவமைத்திருப்பார்கள்.
ஒருவன் தன் தொழிலை
இழிபடுத்துவதை எந்த விதத்திலும்
அனுமதிக்காத பொழுது அந்த ஒருவன்
மற்ற தொழிலை இழிவுபடுத்துவது
தவறென்று உணர மறுப்பதன்
விளைவே இன்று "கூத்தாடிகள்"
எனும் கலைச்சொல்
இழிவுபடுத்தப்படுவதற்கான
காரணமாய் அமைகின்றது.
கூத்தாடிகள் எனும் சினிமா நடிகர்கள்
மீது நமக்கு பல்வேறு விமர்சனங்கள்
இருந்தாலும் கலைக்கான
கலைச்சொல்லை இழிவுபடுத்த
இழுப்பதனால் சினிமா மட்டுமல்லாது
அதையும் தாண்டிய பல்வேறு
கூத்தாடிகள் தொழிலாளர்களையும்
சேர்த்தே நாம் இழிவுபடுத்துகிறோம்
என்பதை உணர்ந்து விமர்சனம்
தவிர்ப்பது நமக்கான நல்லதொரு
பாதையாக அமைகின்றது. இதில் நாம்
கழைக்கூத்தாடிகளையும் சேர்த்தே
இழிபடுத்துகிறோம் என்றுணர
வேண்டும்.

Sunday, November 22, 2015

நடிகைகளின் விபச்சார ஈடுபாடும், முத்தப்போராட்ட முக்கிய குற்றவாளியும்

முற்போக்கு என்றாலும் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்பதும்
பிற்போக்கு என்றும் தளவளையத்திற்குள் வந்துவிடுகிறது. அந்த வகையில் கடந்த
(2014) ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தென்னிந்திய
ஊடககங்களாலும் , முற்போக்காளர்களாலும்­­ பெரிதும் கவரப்பட்ட ஓர்
போராட்டம்தான் "கிஸ் ஆஃப் லவ்" எனும் முத்தப் போராட்டம்.
சென்னைப்பெருநகரத்து உயர்படிப்பாளர்களான IIT மாணவர்கள் இந்த முத்தப்
போராட்டத்தால் தமிழகத்தை திரும்பி பார்க்கச்செய்தார்கள்­­ போலவே
தொடங்கப்பட்ட கேரளத்தில் அதன் தாக்கம் பரவலாக்கப்பட்ட நிலையில் , ஏன்
எதற்கு இந்தப் போராட்டம் , இதன் பின்புல அமைப்பாளர்கள் யார்? இந்துத்துவ
சங்பரிவார
அமைப்பை எதிர்க்க கையாளப்பட்ட போராட்டமெனில் எந்த வகையில் அது
இந்துத்துவத்தை எதிர்க்கிறது, என்கிற எவ்வித முன்யோசனை முயற்சிகளையும்
மேற்க்கொள்ளாமல் சமூக வலைதளங்களும் தங்கள் பங்கிற்கு ஆதரவு பதிவுகள்
இட்டு இந்திய அளவிற்கு "முத்தப் போராட்டத்தினை எடுத்துச் சென்றார்கள்"
இது இந்துத்துவ பார்ப்பானியத்தின் அடாவடிச் செயல்களுக்களுக்கான அல்லது
போலி கலாச்சாரத்திற்கான எதிர்ப்பு வகை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டால­­ும்
எதிர்ப்புக்கு முந்தைய அல்லது பிந்தைய இயக்க வகையினர் யாரென்பதை மறந்தும்
அறிய முற்படாமல் விட்டதன் விளைவுகளுக்காக இன்று முத்தப்போராட்ட
ஆதரிப்பாளர்கள் அவமானப்பட்டு உதட்டை கடித்துக்கொள்வார்கள்­­ என்பது
நிச்சயம். கேரளாவில் சமீபத்தில் சங்பரிவார அமைப்புகளை கண்டித்து பொது
இடங்களில் கட்டிப்பிடித்து முத்தமிடும் போராட்டம் நடத்திய கிஸ் ஆஃப் லவ்
என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் "ராகுல் பசுபாலன்" என்பவனும் அவரது
மனைவியான கேரள மாடல் ரஷ்மி ராயரும் விபசார தொழிலில் ஈடுபட்டதாக கேரள
காவல்துறை கைது செய்திருக்கிறார்கள்.­­
இவர்களோடு மொத்தம் எட்டு பேர், ஆன்லைனில் விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பசுபாலன் காவல்துறையிடம் வாக்குமூலம் அளிக்கையில் பல
அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்திருக்கிறான்­­. அவன் கூறுகையில்,,,
ஏழு வருடங்களுக்கு முன்பு வேலைக்காக சென்னை சென்றிருந்தேன். அப்போது
அங்கு ரஷ்மியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம். திருமணம்
செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்தோம்.
அப்போது இருவரும் சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபட முடிவு செய்தோம்.
ஆன்லைன் மூலமாக இதைச் செய்ய ஆரம்பித்தோம். அதற்கு நல்ல வரவேற்பு
இருந்தது. அதனால் கொச்சிக்கு சென்று இன்னும் விரிவாக இந்த தொழிலை செய்ய
நினைத்தோம்.
இந்தத் தொழிலில் மாதம் ரூ. 20 லட்சம் வரை வருமானம் கிடைத்தது" என்று
சொல்லுகிறான். மேலும் அவன் கூறுகையில்,,, திரைத்துறையில் புகழ் பெற்ற
நடிகைகள் பலரை வைத்து தான் விபசாரம் செய்ததாகவும். குறிப்பிடுகிறான்.
காவல்துறை வாக்குமூலத்தில் "எங்களுக்கு புகழ் பெற்ற பல நடிகைகளின்
அறிமுகம் உண்டு. அவர்களும் எங்களுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மலையாளத்தில் பிரபலமாக உள்ள நடிகைகள் பலரையும் நாங்கள் தொழிலில்
ஈடுபடுத்தியுள்ளோம். நடிகையுடன் ஒரு இரவைக் கழிக்க 2.25 லட்சம் ரூபாய்
கட்டணம் வசூலித்தோம்" எங்களுக்கு தமிழக திரையுலகிலும் தொடர்பு உண்டு.
மிகப் பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகைகள், சின்னத்திரை நாடக
நடிகைகள்,விளம்பர நடிகைகள் பல பேரை நாங்கள் இத்தொழிலில்
ஈடுபடுத்தியிருக்கிறோ­­ம். என்று தெரிவித்திருக்கிறான்­­. விபச்சாரத்தில்
ஈடுபட்ட குறிப்பிட்ட தமிழ் நடிகைகள் மற்றும் கேரள நடிகைகளின் விவரங்களை
பசுபாலன் காவல்துறைக்கு தெரிவித்திருப்பதாகவு­­ம் செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஷ்வரி ,
விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகைகளின் விவரங்களை கொடுத்திருந்தாலும் ,
அப்போது அந்த விவகாரம், அதிரடியாக மூடப்பட்டது. விவரங்களை தெரிவிக்க
கடும் எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் போராட்டத்தில்
ஈடுபட்ட நடிகர் ரஜினி அவர்கள் நடிகைகளுக்கு ஆதரவாக கடுமையாக
விமர்சித்தார் என்பதும் கவனத்திற்கு,,, இதனிடையே பசுபாலன் என்கிற
விபச்சாரன் கைதானதை தொடர்ந்து தமிழ் திரையுலகம் நிச்சயமாக அடையாளங் கண்டு
அதன்பின்னரே ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முற்போக்காளர்கள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு பாடமாக அமைந்து விடுகிறது. அவலங்களை
முன்னெடுத்தவனே ஒரு கொடுமையான சமூக அவலத்திற்கு காரணமாய்
இருந்திருக்கிறான் அதனை ஆதரித்த குற்றத்திற்காக முற்போக்கும் குற்றவாளிக்
கூண்டில் நிற்கிறது எனும் போது அவமானப்படுவதைத் தவிர வேறென்ன இருக்கப்
போகிறது. முற்போக்கு மறுபரிசீலனை தேவைப்படும் ஒன்றாக இங்கே இருக்கிறது.
தொடர் தற்கொலைகள், தொடர் விபச்சார தொழிலென திரையுல நடிகைகளின் சமூக
அவலங்களுக்கும்,ஒடுக்­குமுறைகளுக்கும் நல்லதொரு தீர்வுகள் முன்னெடுத்து
அவர்களின் மறுவாழ்வுக்கான அலோசனை நடவடிக்கைகள் இங்கே தேவையாக இருக்கிறது.

Friday, November 20, 2015

நடிகர் சங்க அறிவிப்பும் நமக்கான விழிப்பும்

மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட
மக்களுக்கு உதவ வேண்டியது அரசின்
கடமை இதில் நடிகர் சங்கம் ஓன்றும்
செய்ய முடியாது நடிகர் சங்கம்
என்பது நடிகர்களின் பிரட்சனையை
மட்டும் தீர்க்க உள்ள அமைப்பு ஆகும்.
முதல்வரை சந்தித்த பின்
நடிகர் சங்க நிர்வாகிகள் இப்படி
அறிவித்திருக்கிறார்கள். மாற்றுக்
கோணத்தில் நடிகர்கள் சங்கம்
கூடியெடுக்கும் முடிவுகளிலும் சிலச்
சாதகமானவைகள் இடம்பெறவேச்
செய்கின்றன. ஈழ இனப்படுகொலை
குறித்து ரஜினி ஏன் பேசவில்லை,
உலகவங்கிகள் ஒப்பந்தம் குறித்து
உலகநாயகன் ஏன் கண்டனம்
தெரிவிக்கவில்லை, காஷ்மீர்
இனவாதம் குறித்து நாசர் ஏன்
வாய்திறக்கவில்லை , கடலூர்
சென்னை கரூர் வெள்ள பாதிப்பு
குறித்து நடிகர்சங்கம் ஏன்
கேட்கவில்லை, என்று நம்மறிவு
கேட்கும் கேள்விகளென்பது
அபத்தபமாகும். நடிகர்
சங்கத்திற்குள்ளேயும் பல
ஒடுக்குமுறைகள் காலங்காலமாக
இருந்துக்கொண்டே இருக்கிறது.
அதற்கான பலமானச் செயல்பாடுகளை
முதலில் அவர்கள் முன்னெடுக்கட்டும்
. கலைத்துறைக்கும் , அரசியலுக்கும்
இருக்கும் நெருக்கத் தொடர்பை
இவ்வகையான முடிவுகளின் மூலம்
பிரித்தெடுக்கலாம். அரசியல் வேறு,
கலைத்துறை வேறு என்கிற
பார்வையில் எடுத்துச் சென்றால்
மக்கள் சிந்தனையுள்ள சமூக
நல்லிணக்க மனிதர்களை எளிதாக
தேர்ந்தெடுத்து விடலாம். 18 வயது
பூர்த்தியடைந்த ஒரு இளைஞனோ,
இளைஞியோ வாக்களிக்கும் உரிமை
பெற்று அதனை முறையாக
பயன்படுத்தும் ஓர் முடிவுக்கு
வருகிறார்கள் அது மக்களவை
தேர்தலோ, சட்டசபை தேர்தலோ,
உள்ளாட்சித் தேர்தலோ . யாருக்கு
ஓட்டுப்போட வேண்டும் என்பதில் சில
சதவிகிதங்கள் நடிகர் நடிகைகளே
தீர்மானிக்கிறார்கள். அதனால்தான்
ஆளுமையின் உச்சத்தில் இருக்கும்
அதிமுக மற்றும் திமுக கட்சிகள்
தேர்தல் நேரங்களில் நடிகர்
நடிகைகளை களத்தில் இறக்குகின்றன.
அதுமட்டுமில்லாது 2016 தேர்தல்
சந்திக்கப்போகும் வேளையில்
இவ்வகையிலான முடிவுகள்
சாதமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது
எனலாம். தனது நடிப்புத் துறையின்
அடையாள முகங்கொண்டு அரசியலில்
உள்நுழையும் நடிகர் நடிகைகளால்
மக்கள் பாதிப்படைவதை விடவும்
அதிகமாக இந்த தமிழ்ச் சமூகத்திற்காக
உண்மையாக உழைக்கும் மக்கள் நல
களப்பணியாளர்களின் உழைப்பு
வீணாக்கப்பட்டு பெரும்
பாதிப்படைகிறார்கள். ஒரு தொகுதியில்
பேச்சுக்காக ரஜினியோ, கமலோ, அஜீத்தோ,
விஜயோ, கார்த்திக்கோ, விஷாலோ
தேர்தலை சந்திக்கிறார்களெனில்
அங்கே அவர்கள் வெற்றிவாகை
சூடிக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கு
மாறாக அந்த தொகுதி மக்களின்
அடிப்படை வசதி மற்றும்
உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கு­
ம் சமூகச் சிந்தனையாளர்கள் அல்லது
அரசியலாளர்கள் டெபாசிட் இழந்து
படுதோல்வி சந்திக்கிறார்கள் . இது
நமது அரசியலின் எதார்த்த
உண்மைகள். திமுக ஆட்சியின் போது
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா
எடுப்பதும், ஊழல் அதிமுக ஜெ
சிறையிலிருக்கும்போது தெய்வத்தை
தண்டிப்பதா என்பதும்
அரசியலாளர்களுக்கும்
கலைத்துறையினருக்கும்
மத்தியிலிருக்கும் பிழைப்புவாத
பரிவரித்தனையே காரணமாய்
இருந்திருக்கிறது. இதனை
மையப்படுத்தி நடிகர் சங்கமும் நடிகர்
நடிகைகளும் தங்களை
வளர்த்துக்கொள்கிறார்கள் மேலும்
ஒடுக்குதலுக்கும் ஆளாகி
நிற்கிறார்கள். ஒரு சங்கம் மக்கள்
பாதிப்புக்கு உதவ வேண்டும் என்பதை
திணிக்க முடியாது. அது
அவர்களாகவே முன்வந்துச் செய்ய
வேண்டும் . உதவுவதும் உதவ
மறுப்பதும் அவரவர் விருப்பம். அதில்
தலையிட நமக்கு உரிமையில்லை
ஆனால் யார் உதவுகிறார்கள் உதவ
மறுக்கிறார்கள் எனும் வகையறிந்துச்
செயல்படுவதும், சிந்திப்பதும்,
அடையாளம் காணுவதும் மிக
முக்கியான பணியாக நமக்கிருக்கிறது.
வெள்ள பாதிப்புக்களுக்கு நடிகர் சங்கம்
தலையிட முடியாது, அது அரசின்
வேலையென செல்வதில் ஓர்
உண்மையும் கடமையும் இருக்கிறது
நமக்கான முதல் பணி
மெத்தனப்போக்கோடு ஐந்தாண்டுகள்
ஆட்சி செய்யும் அரசை கண்டிக்கவும் ,
எதிர்க்கவும் ஓர் வலுவான இயக்க
முடிவுகளை முன்னிலை படுத்த
வேண்டும். அதன் பிறகே
கலைத்துறையின் அரசியல்
குறிக்கீடுகளை எதிர்க்க முற்பட
வேண்டும். நடிகர் சங்கம் உதவ
மறுத்து விட்டது என்பதற்காக
அவர்களை கடுமையாக எதிர்க்கும்
அதே மக்கள்தான் அதீத உணர்ச்சி
கொண்டு அவர்களின் உருவத்திற்கும்,
திரைப்பட கட்டவுட்களுக்கும்
பாலபிஷேகம் செய்கின்றோம் .
அதையும் தாண்டி ஒருபடி மேலே போய்
பீர் அபிஷேகம் நிகழ்ந்துக்கொண்டிருக­
்கிறது இது முரணாக நமக்குத்
தெரியவில்லையே ஏன்?
கலைத்துறையிலும் பல்வேறு
ஒடுக்குமுறைகள் இருப்பதை நம்மால்
மறுக்க முடியாது. அவ்வப்போதெழும்
"தடை உத்தரவுகள்" நமக்கு
பழிகிப்போனவைகள். அது பற்றியே
பேசாத போது அவர்களிடமிருந்து
மற்றவற்றை எதிர்பார்ப்பது நியாயமே
இல்லை.ஒரு வலுவான மக்கள்
இயக்கம் இருந்தால் ஒருவேளை அந்த
தைரியம் நடிகர் சங்கத்திற்கு
வந்திருக்கும். ஏன் நமக்கே
அப்போதுதான் நம்பிக்கை வரும். நாமும்
இங்கே வலுவான மக்கள் இயக்கத்தை
கட்டமைக்கவுமில்லை என்பதே
பிரதான உண்மை. வெறும் மூவாயிரம்
ஓட்டுக்களை முன்வைத்த நடிகர்
சங்கத் தேர்தலை முழுநேர
நேரலையில் காட்டிய நமது செய்தி
ஊடகங்கள் , ஒரு லட்சத்திற்கும்
மேலாக இருக்கும்
விவசாயம்,கூலித்தொழிலாளர்,
கட்டுமானர்கள் சங்கங்களின் தேர்தலை
ஏன் நேரலையில் காட்டவில்லை
என்று என்றாவது கேள்விக்
கேட்டிருப்போமா? இங்கே
தவறுகளையும்,குற்றவுண­
ர்வுகளையும் தற்செயல் நிகழ்வுகளாக
கடந்துபோகும் மனநிலையே சராசரி?
மனித மனநிலையென கற்பதம்
கொண்டவர்கள் நாமாக இருக்கையில்
ஏன் எதிர்பார்க்கிறோம் அடுத்தவர்
உதவு வேண்டுமென்று,,,
காலம் கனிந்து வந்துக்
கொண்டிருக்கிறது நமது முன்னால்
நமக்கேத் தெரியாமல் நன்மைகள்
பின்தொடர்ந்து வருகிறது அடுத்த
2016 தேர்தலில் மக்கள் நல சனநாயக
முற்போக்கு சிந்தனைகளின் வெற்றிச்
சுடர்களை ஏற்றிவைக்க நமக்கே உரிய
முழு அதிகார இயக்கமொன்றை
கட்டமைப்போம் , அப்போது கலைத்துறை
தாமாக விலகிவிடும் அரசியலில்
இருந்து, அதுவரையில்
எதிர்பார்க்காதீர்கள் அவர்களின்
கைகளை,,, IT துறையில் தொடங்கி
தொழிலாளர் துறைகள் வரையில் நம்
கண்முன்னால் வெள்ள நிவாரண
உதவிகளைச் செய்திடும்
நல்லுள்ளங்களை இத்தருணத்தில்
பாராட்டிட வேண்டுமல்லவா
அதற்காகவேனும் கலைத்துறை மீதான
எதிர்ப்புகளை கொஞ்சம் ஒதுக்கியே
வையுங்கள். நடக்கும், நடக்கப்போகும்
நிகழ்வுகளை நேரில் கண்டு நடிகர்
சங்கம் தாமாகவே தங்களை திருத்திக்
கொள்ளும் வாய்ப்புகளை
பொதுமக்களாகிய நாம் உறுவாக்கிட
வேண்டும்.

Thursday, May 28, 2015

பழைய சினிமா பாடல்களை பெற்றோர்களுடன் சேர்ந்து பாருங்களேன்

பழைய பாடல்களை பார்க்கத் தொடங்குங்களேன் அதுவும் பெற்றோர்களுடன்
பார்க்கையில் நிச்சயம் நீங்கள் பழைய வரலாற்றுப் பக்கங்களை அவர்களின்
அனுபவத்தின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். இன்றைய காலத்தில் உங்களுக்கு
பிடித்தமான பாடல்களை கேட்டு ரசிக்கின்ற பொழுது அதனோடு கூடவே அப்பாடல்
எங்கே எப்போது கேட்கப்பட்டது? எதனால் அப்பாடல் கவனத்தை ஈர்த்தது? அன்றைய
நிகழ்வுகள் என்னென்ன? என்று பாடல் கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவுகளில்
அப்பாடல் வரிகளோடும் , இசையோடும் அனுபவமும் கலந்து ஓர் இன்பத்தில் அல்லது
அதற்கெதிரான துன்பத்தில் உங்கள் மனது மூழ்கி கிடப்பதை உணர்ந்து
அவ்வுணர்வினை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள மனம் துடிக்கையில் பகிர்தலை
தடை செய்யாமல் நீங்களும் உடனடியாக பகிர்ந்து கொள்கிறீர்கள் . எனக்கு
பிடித்தமான இப்பாடலை எங்கே கேட்டேன் தெரியுமா? அப்போது எனக்குள்ளும்
என்னை சுற்றியுள்ள சமூகத்துக்குள்ளும் என்ன நிகழ்வுகள் நடந்தது தெரியுமா?
என்று உறுக்கமாகவோ அல்லது உற்சாகத்துடனோ மற்றவரோடு பகிர்ந்து கொள்ள
துடிக்கையில் நீங்கள் தனிமைபடுத்தப் பட்டுள்ளீர்கள் என்றுணர்ந்தால் தன்
உணர்வுகள் தடை செய்யப்பட்டிருக்கிறத­ெனும் வலியிலிருந்து உங்களால் விடுபட
முடியாதுதானே,அவ்வாறிருக்க பெற்றோர்களின் உணர்வுகளுக்கு தடையாக
நீங்களிருப்பது நியாயமற்றதென்று ஏன் உணர மறுக்கிறீர்கள்.ஒருமுறையேனும்
இதைச் செய்து பாருங்களேன் . உங்கள் பெற்றோருக்கு பிடித்தமான பழைய பாடலை
அவர்களோடு சேர்ந்து நீங்களும் பாருங்கள் பாடலோடு சேர்த்து பெற்றோர்களின்
முகபாவனைகளை கவனியுங்கள், முன்னெப்போதுமில்லாத மாற்று முகபாவனைகளை
பெற்றிருப்பார்கள் பெற்றோர்களென அறிவீர்கள் . அதோடு நில்லாமல் பாடலையும்
குலைத்து விடாமல் மிதமான பேச்சு கொடுங்கள் , அம்மா,அப்பா,தாத்தா,ப­ாட்டி
யாரிருந்தாலும் . திரையிலோடும் பாடலுக்கான பின்னனி நிலவரம்தான் என்ன
உங்களுக்கு ஏன் அந்த பாடல் பிடித்திருக்கிறதென்ற­ு பேச்சுவாக்கில்
கேட்டுப்பாருங்கள் பல உண்மையான வரலாற்று நிகழ்வுகளோடு பெற்றோர்களின்
காதலும்,கண்ணீரும் பேச ஆரம்பிக்கும் . அதன் பிறகு நீங்கள் உணவீர்கள் இந்த
உணர்களையா இத்தனைநாள் நாம் தடைசெய்து வைத்திருந்தோமென்று,,­ கூடவே
அப்பாடலும் உங்களுக்கு பிடித்து போகும்.இதன் மூலமாகவே பழைய பாடல்களையும்
மீட்டெடுக்கும் பணியில் நாமிறங்கி விட்டோமென்று ஒரு மகிழ்சியும்
உங்களுக்கு ஏற்படலாம். எடுத்துக்காட்டாக எனக்கான ஒரு நிகழ்வினை
முன்வைக்கலாமென்று தோன்றுவதனால்,,,
எனக்கு பழைய பாடல்களின் மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை நடிகர் திலகம்
சிவாஜி வாங்கிய பணத்திற்கு மேல் நடிக்கிறார் என்கிற புத்தியாகவும்
இருக்கலாம் , (சம காலத்து அனேகரின் புரிதலாகவும் இது இருக்கிறது) ஆனால்
ஒரு நாடகக் கலைஞனுக்கு வசனமட்டுமல்லாது அவன் உடலில் வளைவு நெளிவு அதனோடு
கூடிய முகபாவனைகளை கொண்டிருந்தால் மட்டுமே கடைசி பார்வையாளனையும்
கவர்ந்திழுக்க முடியுமென்றும், கலைஞனின் கருத்துகளை கடைசி பார்வையாளன்
உள்வாங்கிக் கொள்ளமுடியுமென்றும் உணர தவறவிட்டதை உணர்த்தினார்கள்
எம்பெற்றோர்கள் .அன்றைய நடிகச் சிகாமணிகள் அனைவரும் தெருவீதி நாடகத்தில்
நடித்தவர்களென்றும்,அ­தன் மூலம் சமூகத்திற்கு செய்தி சொன்னவர்களென்றும்
பழைய பாடலை எம்பெற்றோர்கள் முன் பார்த்தமையால் அறிந்த வரலாற்று
தகவலாகும். ஆகவேதான் உணர்வுகளையும்,உறவுகள­ையும் சிதைத்து விடாமல்
சீர்படுத்த பழைய பாடல்களை பெற்றோர்களுடன் சேர்ந்து பாருங்கள் ,பழைய
பாடல்களோடு நம் வாழ்வும் இனிக்கும்.

Monday, May 04, 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா ரஞ்சித் கூட்டணி விரைவில்

அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய குறைந்த முதலீட்டில் சராசரி வெற்றிப்படங்களை
கொடுத்த இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரென
அறியப்பட்ட திரையாளுமை ரஜினிகாந்த் அவர்களை வைத்து விரைவில்
திரைப்படமொன்றை இயக்கப்போவதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகி
கொண்டிருக்கிறது . எல்லோரையும் போலவே வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு
நகர்ந்து போக முடியவில்லை , காரணம் சூப்பர் ஸ்டார் போன்ற ஆளுமைகள்
அடிசருக்கல் அடைந்த பின்னரே அதற்கான மீட்புடைக்காக சாதாரண இயக்குநர்களை
தேடிவருவார்கள் .அதுமட்டுமன்றி காரணம் . தொடர்ந்து தமது இயக்கத்தின்
மூலம் விளிம்புநிலை சமூகத்து வாழ்வியலை படமாக்கிய பா ரஞ்சித் அவர்களின்
உணர்வு பாராட்டப்டவேண்டியது இதனை மென்மேலும் மெழுகேற்றி தொடர்ந்து தனது
படங்களில் சமூகத்துப் பார்வையை காட்டுவதே எனது பணியெனவும் பா ரஞ்சித்
அவர்கள் பலமுறை தெரிவித்திருந்தார் . அவ்வாறு இருக்கையில்.பெண்ணடிமை,
தீவிர இந்துத்துவம் , திடீர் அரசியல் பேச்சு , தீடீர் இமயமலை சர்ச்சைகள்,
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பெருந்தடையே கிருஸ்த்துவமென, பல யுகங்களாய்
மக்களின் அப்பாவித்தனங்களால் பெரும்புகழ் பெற்று சூப்பர் ஸ்டென
வளர்ந்துவிட்ட ரஜினிகாந்திற்கு நிச்சயமாக ஒரு சராசரி விளிம்புநிலை
மக்களின் வாழ்வியல் எதார்த்த காட்சிகளை பா ரஞ்சித் அவர்களால் அமைத்து
கொடுக்க முடியாதென்பதே உண்மையாக இருக்கிறது. இவ்வாறு பார்த்தோமானால் பா
ரஞ்சித் அவர்கள் சமூக எதார்த்த பார்வையிலிருந்து விலகி கதாநாயகனுக்கு
முக்கியத்துவமளிக்கும­் படத்தினை மட்டுமே கொடுக்க முடியும் . ஏற்கனவே
சூப்பர் ஸ்டார் ரஜினிந்தின் படமென்றாலே அவையனைத்தும் கதாநாயக
முக்கியத்துவ படங்களாகவே தயாரிக்கப்பட்டிருந்த­து. இதனை நன்குணர்ந்த
ரசிகர்களும், மக்களுமே மெல்லமெல்ல ரஜினிகாந்த் மீதான ஈர்ப்பிலிருந்து
தங்களை விடுவித்துக்கொண்டு. எதார்த்த நிகழ்வுகளை எடுத்துச்சொல்லும்
குறைந்த முதலீட்டுப் படங்களுக்கு கவனத்தை செலுத்தியிருக்கிறார்­கள் . இது
இயக்குநர் என்கிற முறையில் பா ரஞ்சித் அவர்களுக்கே தெரியும் . மேலும் சில
உண்மைகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை , தற்போதுள்ள சூழலில் ரஜினிகாந்த்
கதாநாயகனாக நடிப்பதையே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, வயது வித்தியாசமின்றி
தந்தை ஸ்தானத்தில் ஜோடியாக டூயட் ரஜினிகாந்திற்கு தேவைதானா? என்கிற
விமர்சனமும் அனேக மக்களால் பேசப்படுகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் எனும்
தகவல் பரிமாற்றத்தில் பெரும் பிரபலமாக பேசப்பட்ட காணொளி நிச்சயம்
அனைவருக்கும் தெரிந்தே இருக்கும் அந்தளவிற்கு வாட்ஸ் அப் எனும் ஊடகம்
ஒவ்வொரு கையிலும் புழங்கும் ஊடகமாக உள்ளது . அந்த வாட்ஸ் அப் காணொளியில்
2050ல் இந்தியா என்கிற செய்திவாசிப்பு நகைச்சுவை நினைவிருக்கலாம் அதில்
ரஜினிகாந்த் அவர்களின் புதிய படத்திற்கு " தெய்வத்திருமகள் குழந்தை
நட்சத்திர நாயகி பேபிசாரா ஜோடியாக நடிக்கிறார், என்று நகைச்சுவையாக
காணொளியை அமைத்திருப்பார்கள். இந்த வசனத்தை உறுவாக்கியவரின் மனநிலையில்
எவ்வித தாக்கம் இருந்திருக்குமென்று உணர முடிகிறது .ஆகவே இவற்றையெல்லாம்
கருத்தில் கொண்டு இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் நல்லதொரு இயக்கத்தின்
மூலமாக ஒரு சிறந்த படத்தினை உறுவாக்க இறுதியான வாழ்த்துக்களை
தெரியபடுத்தி விடலாம் . லிங்காவெனும் இழப்பிற்கு மீட்டொப்படைப்பு
திரைப்படமொன்று விரைவில் வெளிவரலாம் ஆனால் அதில் நிச்சயமாக சமூகம்
பேசப்போவதில்லை , சமூகப்பேச்சிற்கும் அதிலிடமில்லை. பார்ப்போம் ,
எதிர்பார்ப்புக்களோடு­,,,,,,

Thursday, April 23, 2015

கொசு வத்திச் சுருளை எப்படி பிரித்தெடுப்பது?

அனேகமாக என்ன மேற்படிப்பு படிக்கலாம், மேற்படி என்ன பாடத்தை
பத்தாம்வகுப்பு முடித்தவர்கள் எடுக்கலாம் இதற்கிடையே ஐ ஏ எஸ், டி என்
பிஎஸ்ஸி , கேட், வாட்டு, நோட்டு என நீண்ட பட்டியியலில் "கொசுவத்திச்
சுருளை உடைக்காமல் பிரித்தெடுப்பது எப்படி?"யென்று கோடை சிறப்பு பயிற்சி
வகுப்புகளை ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் அந்தளவிற்கு மனுஷனை
பாடாபடுத்துகிறது இந்த "கொசு" என்னாமா கடிக்கிறது, வலிதாங்க முடியாமல்
கத்திய கதறல் சத்தங்கூட கேட்காமல் பக்கத்தில் வேறு மனைவி தானே
புலம்புகிளாள் "என்னங்க நாளைக்கு கல்யாண் ஜுல்லரி புதுஸா தெறக்கலாங்களால்
கண்டிப்பா போறோம்" ன்னு அவளை புலம்ப வைத்து தூக்கம் தொலைய வைத்த கொசுவை
என்னதான் செய்வது! "நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா
மருந்தடிச்சி கொல்லுங்கடா" என்பது போல இந்த கல்யாண் ஜூல்லரி
விளம்பரத்தையும் தலைவிதியேன்னு பார்க்கவும் வைத்துவிடுகிறார்கள்
கொசுப்பாவிகள்.இவற்றுக்கெல்லாம் இடையில் வீட்டில்வேறு ராமாயணம் ஓடுகிறது
,பாட்டி இல்லாத குறையை பையன் போக்குகிறான் , காதல்தூதாம் காலை விடிவதுகூட
தெரியாத காதல் கைபேசி கிசுகிசு, தெளிவா கேட்டது ஒன்று படத்திற்கு
போகிறார்களாகளாம் படத்த்தலைப்பு "ஓடிப்போவது எப்படி" இதற்கு ஏன் இப்படி
விடிய விடிய பேசுகிறார்களென்று தெரியவில்லை,அவர்களுக­்கு முன்பே
"தடுப்பது எப்படி" (காதலையும் சேர்த்து பிரிப்பதையும் கலந்து) எனும்
படத்தை எனக்கு காட்டிவிட்டான் காதல் பட நாயகன் என்பதை எப்படி
புரியவைப்பதென்று மண்டையில் ஒரே ஜிந்தனை ஓட்டம்.சரி மின்விசிரியை போட்டு
கொஞ்ச கொசுவையும் விரட்டிவிடலாமென்று பார்த்தால் அந்த மின்விசிரியிடமே
மோகலீலையில் கொஞ்சிகொஞ்சி பேசுகிறது கொசு, காரணம் கரண்ட் இல்லை என்பதே
,,,
இந்த அரசும் அரசியல்வாதிகளும் அடுத்தவர் ரத்தத்தை உறுஞ்சுவதெப்படி என்று
நமக்கு முன்னரே கோடை சிறப்பு பயிற்சி வகுப்பில் பாடம் பெற்றார்கள்
போலும், சரி கொசுமருந்தாவது அடித்தார்களா என்று பார்த்தால் அதிலும்
வெறும் புகை மட்டுமே, கொசுமருந்தை ஊழலுக்கு விற்று
விட்டார்களே,,எல்லாவற­்றையும் விட்டுத்தள்ளி விளம்பரத்தில் வரும்
தொழில்நுட்ப கொசுவிரட்டிகளை வாங்கி உபயோகித்தால் "கரடியே காறி துப்பியது"
போல தொழில்நுட்பத்தை காறி துப்பிவிட்டு சந்தோஷமாய் திரிகிறது கொசு, அட
போங்கடா நீங்களும் உங்க தொழில்நுட்பமும் என்று புலம்பி புதிய உலகை
தேடிப்போகிறேனென்று தெருமுக்கு டாஸ்மாக்கில் சாராயத்தை வாங்கி குடித்து
கடிக்கும் கொசு வலியில் நிவாரணம் தேடினால் அடிச்சது போலிசரக்காக
இருக்கிறது போனது பணம் வந்தது உடலுக்கு நோய். குடல் வெந்து குப்புர
படுத்தாலும் காதை குடைந்து எழுப்புகிறது கொசு. என்னதான் வழியென்று
வீதியையும்,வீட்டையும­்,விதியையும் நோட்டமிட்டத்தில் விடாது கருப்பு போல்
ஆங்காங்கே குப்பைகள்,தேங்கிய கழிவுநீர்நிலைகள். இனி
கொசுத்தொல்லையிலிருந்­து விடுதலை அனைத்தையும் அப்புறப்படுத்தியதில்­,,,
ஒருவழியாக கொசுத்தொல்லையிலிருந்­து மீண்டுவந்து படுத்தால் குரட்டைச்
சத்தத்துடனே மீண்டும் புலம்புகிறாள் மனைவி, "என்னங்க பக்கத்துவீட்டு மாமி
பட்டுப்புடவ போல எப்பங்க வாங்கித்தருவீங்க" போச்சுடா "எனக்கு
நடிக்கத்தெரியாது" என்கிற உணர்ச்சியோடு "என்கிட்ட புடவ வாங்க
பணமில்லடி"என்று எப்படி புரியவைப்பேன், இதற்காக சிம்புவிடமோ இல்லை
பப்லுவிடமோதான் கோடை பயிற்சிக்கு போக வேண்டும். எல்லாம் முடிந்து
காலையில் எழுந்து தொலைகாட்சி பட்டனை தட்டினால் ஓடுகிறது விளம்பரம் ,
எர்வாமேட்டின்,டேபிள்­மேட், அமேஸான் காடு,அது இதுவென்று தாங்கமுடியாத
தலைவலிக்கு மத்தியில் வந்துபோகிறது அந்த மகத்தான வாக்கு "ஐயோ!!! ராமா
என்ன ஏன் இந்த கழிசட கூடல்லாம் கூட்டுசேர வைக்கிற"
கொசுமுதல்,கொள்ளையடித­்தல் வரையிலான அனைத்திற்கும் ஒரே நிவாரணி
காமெடியும்,கவுண்டமணி­யும், சிரிப்பும்தான் என்றுச் சொன்னால் அது
மிகையாகாது.

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...