Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Sunday, May 24, 2015

கல்கியின் மூன்று வரலாற்று நூல்களை எவ்வாறு வரிசைபடுத்தி வாசிப்பது?






இலக்கிய உலகில் "கல்கி" என்கிற
இரா. கிருஷ்ணமூர்த்தி என்றதும்
எல்லோர் மனதிலும் கடலலைபோல
அடித்தெழுந்து ஓய்ந்து நிற்குமந்த
"பொன்னியின் செல்வன்" எனும்
வரலாற்றுப் புதினம். நாம் வாழும்
நிகழ்கால உலகினை
உதறித்தள்ளிவிட்டு கடந்தகால
வாழ்வுக்கு திரும்ப முடியுமா?
என்றால் திரைப்படங்களில்
காட்டப்படும் மாயாஜாலங்கள்
தேவையில்லை புத்தகங்களை
வாசித்து விடுங்கள் நீங்கள் நிச்சயம்
முந்தைய கால சமூதாயத்தோடு
ஒன்றிணைந்து வாழ்வீர்களென்று
உணரச்செய்தவர் கல்கி.
வார்த்தை ஜாலங்கள்,இயற்கை வர்ணிப்புகள்,காதல்
ரசனைகள்,இல்லற இனிப்புகள்
இவையனைத்தையும் ஒரு பேனா
எழுதுகிறதே! அது பேனாவா?
இல்லை மாயக்கோலா? எனும்
சந்தேகம் வந்தால் சந்தோஷத்தோடு
கல்கியின் படைப்புகளை நீங்கள்
நுகர்ந்துள்ளீர்கள் எனச்சொல்லலாம்.
பூவிதழை மீறி வழியும் பூக்களில்
வழியும் தேனமுதை கண்டதும்
தேனீக்கள் கொண்ட இன்பத்தேன்
மகிழ்வினை கண்டு இருதேனமுது
ஒரே கிண்ணத்தாலா!  . எனும்
ஆச்சர்யத்தின் அறிகுறிகளை
அப்படியே உள்வாங்கி வரலாற்றுப்
புதினமெனம் புத்தக பூக்களில்
வழியும் தேனெழுத்துக்களை
நுகரும் வாசகனும்
தேனமுதாகிவிடும் விந்தையைச்
செய்துகாட்டியதால் தானோ
என்னவோ கல்கி எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
அனேகர்களால் வாசிக்கப்பட்ட "பொன்னியின் செல்வன்" உண்மையில் வாசகனை
கட்டிப்போடும் கயிறுதான்.
அதேவேளையில் இவ்வொற்றை
நாவலை படித்துவிட்டு கல்கியை
வாசித்துவிட்டேன்   என்று
சொல்வது இன்று பரவலாக
பார்க்கலாம். அப்படி பொன்னியின்
செல்வனை மட்டும் படித்துவிட்டு
நகர்ந்து போகிறவர்கள் உண்மையில் அந்நாவலையே முழுமையாக வாசிக்கவில்லை என்றேத் தோன்றினால் அது மனதிற்கு கொஞ்சம் வேதனையாகத்தானிருக்கும்.
பொன்னியின் செல்வன் நாவலானது முற்றுபெற்ற
நாவலா? என்றால் இல்லையென்றேச் சொல்லிவிடலாம் காரணம் அந்நாவல்
மேலும் இரு நாவலுக்குத்
தொடக்கப் புள்ளியாக இருக்கிறது.
அப்புள்ளியானது எங்கேயுள்ளது
என்பதை வாசகன் அறிந்தால்
மட்டுமே அவ்வாசகன் முழுமையாக
பொன்னியின் செல்வனை நுகர்ந்து
விட்டானென்று எடுத்துக்
கொள்ளலாம். பொன்னியின் செல்வன் நாவலை
வாசித்தோருக்கு"கோடியக்கரையை" அவ்வளவு
எளிதாக மறந்துவிட முடியாது.
அவ்விடத்தில்தான் மூன்று நாவல்களுக்கா
புள்ளி வைக்கப்பட்டுள்ளதை உணரலாம் . நாவலின்
கதாநாயகனான பொன்னியின் செல்வனான
அருள்மொழிவர்மனுக்கு ஏற்பட்ட
விஷக்காய்ச்சலை குணமாக்கும்
புத்த பிக்ஷ்க்கள் இறுதியாக
காட்டாற்று பேரலைகளால்
அடித்துச் செல்லப்பட்டு அழிந்து
போவார்களே அந்நிகழ்வில் தான்
அடுத்த நாவலுக்கான
புள்ளியிருக்கிறதென்று
உணர்ந்தால் வாசிப்பானது
முழுமை கொண்டதாக
எடுத்துக்கொள்ளலாம்.



அந்த அடுத்த நாவல் எது? என்கிற
கேள்வியெழுமேயானால் அந்த
நாவலையும் அவ்வளவு எளிதாக கடந்துவிட
முடியாது . பல்லவர்களின் கலைவண்ணத்தை
எடுத்துச் சொல்லும் "சிவகாமி
சபதம்" என்கிற வரலாற்று நாவல்தான்
அது, விளங்கவில்லையா?
மீண்டுமொருமுறை வாசித்து விடுங்கள்
பொன்னியின் செல்வன் எனும்
நாவல் முடிவில்லை அது ஆரம்பமென்று
விளங்கும். சிவகாமி சபதம் என்கிற நாவலை
வாசித்தோருக்கு சளுக்க வீர்களையும் அச்சளுக்க
வீர்களின் தளபதியான நீலகேசி எனும் நாகநந்தி புத்த பிக்ஷ்ஷூவை மறந்திருக்க
மாட்டார்கள். சிவகாமியின் மீதான
அதீத காதலால் அவரை அடைய நாடுகடத்தி
தன்னுடைய சளுக்க நாட்டில் குடியமர்த்தும்
நாகநந்தி எனும் புத்த பிக்ஷ்ஷு சிவாகாமி
சபதமெனும் நாவலின்படி
எதிராளியாகவும் , துரோகியாகவும் ,
வில்லனாகவும் சித்தரிக்கப்படுகிறார் .
இறுதியில் பரஞ்சோதியால் கைகளை இழந்து
கொல்லப்பட்டாரா? இல்லையா?
என்கிற எதிர்பார்ப்பு எழுப்பப்பட்டிருக்கிறதே
அங்கேதான் மூன்றாவது நாவலுக்கான
புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளதென்று
வாசிப்பாளர்கள் உணர்ந்தால் சிவகாமி
சபதம் நாவலை அவர்கள் முழுதாய்
நுகர்ந்துவிட்டார்களென்று எடுத்துக்
கொள்ளலாம்.



அந்த மூன்றாம் நாவல் எது? என்கிற
கேள்வியெழுமேயானால் அந்த
நாவலையும் அவ்வளவு எளிதாக
கடந்துவிட முடியாது . மேற்கண்ட
சிவகாமி சபதமெனும் நாவலால்
அறியப்பட்ட பல்லவர்களின் காலத்திய வரலாற்றுப் புதினமான "
பார்த்திபன் கனவு" எனும்
நாவல்தான் அம்மூன்றாவது
புள்ளியென உணரலாம்.
பார்த்திபன் கனவு நாவலை
வாசித்தவர்களுக்கு கபால
பைரவராக வேடமிட்ட புத்த
பிக்ஷ்ஷுவை அவ்வளவு எளிதாக
மறந்து விட முடியாது. நரசிம்ம
பல்லவரின் ஆட்சியினை கவிழ்க்க
கபால பைரவராக வேடமிட்ட புத்த
பிக்ஷ்ஷு மேற்கண்ட சிவகாமி சபதம்
எனும் நாவலில் சிவகாமியை
கடத்திச் சென்று அதனால்
கையிழந்து பரஞ்சோதியிடம்
உயிர்பிச்சை பெற்று மூன்றாவது
நாவலுக்கு முக்கியமானதொரு
இடத்தில் அங்கம் வகித்த
நீலகேசியோடு பார்த்திபன் கனவு
நாவலை முடித்திருப்பார் கல்கி .
இதன் மூலம் பொன்னியின்
செல்வனோடு நாவல் முடிவுபெறவில்லை என்பதை
உணரலாம் .ஆகவே வாசிப்பாளர்கள்
பொன்னியின் செல்வனோடு
முடித்துக் கொள்ளாமல் அதன்
தொடர்சியான சிவகாமி
சபதம்,பார்த்திபன் கனவு, நாவல்களை வாசித்தால் தான் நாவலின் தேனமுது ருசியை சுவைக்க முடியும் . முதலில் பொன்னியின்
செல்வன், இரண்டாவதாக சிவகாமி
சபதம் ,மூன்றாவதாக பார்த்திபன்
கனவு என்று வரிசைபடித்தி
வாசிக்கப்பட வேண்டும் .
அவ்வாறில்லாம் இதன் வரிசைகளை
வேறுபடுத்தி வாசித்தால்
முழுமையாக நாவலை
ருசித்துண்ண முடியாது .
வாசிக்கத் தொடங்குங்கள்
வரிசைபடியே
ருசித்துப் பருகுங்கள்
நாவலெனும்
தேனையே,,, புத்தக வாசிப்புதான்
நம்மை புதுவுலகை படைக்கும்
வழிகளை காட்டும்.

Wednesday, April 22, 2015

ஆமாம்!!எங்களுக்கு வைரமுத்துவையும் தெரியாது ஜெயகாந்தனையும் தெரியாது

இன்னும் என்னென்ன சர்ச்சைகளுக்குள் மாட்டி சீரழியப்போகிறதோ இந்த
தமிழ்ச்சமூகம் என பயப்படும் அளவிற்கு ஊடகங்கங்களும் அவ்வூடகங்களுக்கு
தீனிபோட்டுக் கொண்டிருக்கும் இலக்கிய ஜாம்பவான்களும் சமூகத்திற்கு
என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது புலப்படவேயில்லை. குமுதம்
வெளியிட்டிருக்கின்ற வைரமுத்து அவர்களின் தற்பெருமைக்கு ஜெயகாந்தன்
அவர்களின் மகள் கொடுக்கும் பதிலடி இலக்கிய மோதலாகவே உறுமாறியிருக்கிறது.
இலக்கியம் தாண்டி வைரமுத்து அவர்களும் ஜெயகாந்தன் அவர்களும் மேற்கொண்ட
சமூகப் பாதைகளை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
பொதுவாகவே இலக்கியத்தில் புலமைபெற்றவர்கள் எழுப்பும் அதே இலக்கிய மோதலான
சர்ச்சைகள்தான் தற்போது கிளம்பியிருக்கும் சர்ச்சைகள் என
எடுத்துக்கொள்ளலாம்.
கவிப்பேரரசு என வர்ணிக்கப்படும் கள்ளிக்காட்டு புதல்வனான வைரமுத்து
அவர்கள் தான் என்னதான் திராவிடத்தில் பங்கு பெற்றாலும் தன்சாதிப்பெருமையை
உயர்த்திப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பவர் . குறியீடுகளை ஆங்காங்கே
விதைத்த வைரமுத்து அவர்களின் சாதியப்பற்றினால் புகழின் உச்சிக்கு
புகழ்ந்தும் தள்ளிவிடுகிறார்கள் இந்துத்துவ பற்றாளர்கள்.

சென்ற ஆண்டில்(2014) கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்ட "
பத்மபூஷன்" எனும் உயர்விருதிற்கான பட்டியலில் "வைரமுத்து ராமசாமி தேவர்"
என தனது பெயருக்குப் பின்னால் சாதியத்தை பூசிக்கொண்டதென்பது அவரின்
சம்மதத்தின் பேரில் தானே நிகழ்ந்தது. பெயர்பட்டியலில் இன்ன பெயர்தான்
இடம்பெற வேண்டுமென்பது அவரின் ஆதிக்கச்சாதியத்தை அளவிடுகிறதே,

அம்மாவுக்கொரு கடிதம்" என்கிற தலைப்பில் " அவிழ்த்துவிடப்பட்ட அந்த
கவிதையில் "பொன்னையா தேவனுக்கு,,," என்றெழுதி தன் தாயின் தகப்பனாவன்
ஆதிக்க "தேவர்" சாதியில் பிறந்தவள் அதனால் தானொரு "தேவர்" சாதிக்காரனென
ஆதிக்கச் சாதியத்தை சுட்டிக்காட்டி ஆண்டச்சாதியென குறிப்பிடுவதென்பது
திராவிடத்திற்கெதிரான­தென உறுத்தவில்லையா கவிப்பேரரசிற்கு,,,

https://­m.youtube.com /­watch?v=IHHpa2in-
_g&i­tct=CBEQpDAYBiITCNDj­z- uOisUCFUI8vgod1ycA­FzIHcmVsY
XRlZEjG3bOo­k7OZsn8%3D& gl=IN&hl=­en-GB&client=mv- goog­le

(லிங்க் வேலை செய்யவில்லையெனில் Vairamuthu kavithai என்றும் ஆயிரம் தான்
கவி சொன்னேன் என்றும் youtube தேடுபொறியில் பதிவிடவும்)

போலவே சிறுகதை ஜாம்பவான் என்று தமிழ்ச்சமூகம் போற்றிப் புகழ்ந்து
கொண்டாடும் ஜெயகாந்தன் அவர்கள் ஆரம்பகால கட்டங்களில் திராவிடத்தில்
அங்கம் வகித்து அதன்பின்னான சூழலில் திராவிடம் தமிழை புறந்தள்ளுகிறதெனும்
பொய்யுரையால் இந்துத்துவ பார்ப்பானியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது
மீண்டும் பிற்போக்குத் தனங்களுக்கு தன்னை அற்பணித்துக் கொண்டோமென்கிற
உறுத்தல் உறுவாகவில்லையே ஜெயகாந்தனுக்கு,,,
அகிம்ஸையை கடைபிடித்து இழந்தோம் ஈழத்து திலீபனை என்பதனால் ஆயுதமேந்துவதே
ஈழத்திற்கான விடுதலை என்று சூருளுத்து ஈழத்து விடுதலைக்காகவும் ஈழ
மண்ணிற்காகவும் இத்தமிழ்மண்ணில் வீரத்தை ஊட்டிய எங்களின் ஈழப்போராளி
"மேதகு பிரபாகரன்" அவர்களின் சீரியச் சிந்தனையால் முளைத்த "விடுதலைப்
புலிகள் " எனும் உலகமதிறும் படையை பற்றி கொஞ்சமும் நாக்கூசாமல் "தீவிரவாத
இயக்கும்" என்றும் விடுதலைப்புலிகளால் தான் ஈழமக்கள் அழிந்தார்கள்
என்றும் சொல்லத்துணிந்த ஜெயகாந்தனுக்கு காந்திய அகிம்ஸை சிங்களவனால்
என்றோ அழிக்கப்பட்டுவிட்டெத­ும் உண்மை நிச்சயமாக தெரிந்திருக்கும்.
அப்படியிருந்தும் அப்பொய்யுரையை எப்படி இவரால் பரப்ப முடிந்தது.
தமிழிலக்கியம் எந்தளவிற்கு எங்களுக்கு முக்கியமோ அதே அளவிற்கு ஈழ
இலக்கியம் எங்களின் இருகண்களாக முக்கியப்படுத்துகின்­றோம். ஒவ்வொரு ஈழ
இலக்கியத்திலும் வாழ்கிறார்கள் எங்களின் ஈழப்புரட்சியாளர்கள்.

01.09.1990 அன்று சென்னையில் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் செயலாளர் க. பத்மநாபா அவர்களின் நினைவு அஞ்சலிக்
கூட்டத்தில் எங்களின் உயிரினும் மேலான விடுதலைப் புலிகளின் மீது எப்படி
உங்களால் குற்றம் சுமத்த முடிந்தது.

https://­m.youtube.com /­watch?v=-dWp_VhOGww&
i­tct=CDMQpDAYAyITCMqf­t9OMis UCFUWQvgod- lgA­mVISamF5YWthbnRoYW4g­c
3BlZWNo&client=mv-g­oogle& hl=en-GB&gl=IN

(லிங்க் வேலை செய்யவில்லையெனில் Commomeration Meeting for EPRLF Leader
K Pathmanabha என்றும் Jeyakanthan speech என்றும் Youtube தேடுபொறியில்
பதிவிடவும்)

இவைகளனைத்தையும் புறந்தள்ளிவிட்டு இலக்கிய உலகின் பேரரசர்களாக
பாவித்துக்கொள்கிறோம்­ என்றால் தமிழின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும்
நாங்கள் வைத்திருக்கின்ற அளவுகடந்த அன்பினால் மட்டுமே,,,
கவிப்பேரரசராகட்டும் இன்னும் பல கவிச்சொந்தங்களாகட்டு­ம் தமிழுக்காக
உண்மையிருந்து "தற்பெறுமையிலிருந்து­ம்,ஊடகமோகத்திலிருந்த­ும்,
போலிப்புகழினை வலிய பெறுவதிலிருந்து வெளிவர வேண்டுமென்பதே இந்த சமாணிய
இலக்கிய காதலர்களின் வேண்டுகோள். கவனிப்பார்கள் எம்மின இலக்கியப்
பேரரசர்கள்.

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...