Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

Friday, December 06, 2019

தூக்கு தண்டனை (அ) மரண தண்டனை குறித்து அம்பேத்கர்




                          நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக ‘உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் உரிமை' நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா? அல்லது எத்தகைய கிரிமினல் மேல் முறையீடுகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை, நாம் நமது நாடாளுமன்றத்திடமே அளித்து விடலாமா? இந்தக் கேள்விகளை, தவிர்க்க இயலாத ஒரு நியதியாக உருவாக்க நான் விரும்பவில்லை. மேலும், கேள்விகளுக்கான எனது தீர்மானமான பதில் என்று எதையும் இந்தச் சூழலில் நான் கூற விரும்பவில்லை.

எனக்கென்று தனிப்பட்ட கருத்துகள் உள்ளன. பிரச்சனைகள் எழும்போது, எனது கருத்துகளை நான் அதன் மீது திணிப்பதில்லை. குறை நிறைகளை சீர்தூக்கி, திறந்த மனதுடன்தான் பிரச்சனைக்கான தீர்வினைத் தருகிறேன். கிரிமினல் மேல் முறையீடுகளை விசாரிக்கப் போதுமான அதிகாரத்தை, உச்ச நீதிமன்றத்திற்கு நமது நாடாளுமன்றமே வழங்கிவிடலாம்.

உச்ச நீதிமன்றத்திற்கானப் பணியின் அளவையும், உச்ச நீதி மன்றத்தால் எவ்வளவு வேலை செய்ய முடியும் என்பதையும், அங்கு பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையையும், அதற்கானப் பொருளாதார செலவுகளையும், நமது நாடு சந்திக்க முடியுமா என்பதற்கானப் புள்ளிவிவரம் திரட்டப்பட்டு, அதை நமது நாடாளுமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.

மரண தண்டனை மேல் முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கலாம் என்பதற்கு மாறாக, மரண தண்டனையை முழுவதுமாக ஒழித்து விடுவதை நான் ஆதரிக்கிறேன். இந்த முடிவைப் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் பல முரண்பாடுகள் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.

நமது நாடு அகிம்சையில் நம்பிக்கை கொண்ட நாடு. அகிம்சை நமது நாட்டின் பண்டைய கலாச்சாரம். மக்கள் தற்போது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத் தீர்ப்பாக மக்கள் முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்.....'' - 

[டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு': 13, பக்கம் 639]


Wednesday, March 06, 2019

அம்பேத்கர் பெயர் பார்ப்பன ஆசிரியருடையதா ?





இந்தியாவில் எந்தவொரு  அறிவாளியும் ,  பகுத்தறிவாளரும் , மேதையும் , புரட்சியாளரும் பார்ப்பனரின் துணையின்றி அடையாளப்படுத்தவோ உறுவாகிடவோ முடியாது என்கிற மிக மோசமான மாய தோற்றத்தை உறுவாக்குவதில் பார்ப்பனியம் மெனக்கெடுத்து அதன் வேலைகளை செய்யும் . அப்படியாக உறுவாக்கப்பட்டதே நமது பாட புத்தகங்கள் . இந்திய கல்வி முறைகளை அப்படித்தான் பார்ப்பனியம்  கைப்பற்றி வைத்திருக்கிறது . பல்வேறு கட்டுக் கதைகளை வரலாறாய் திரிப்பதன் மூலம் மக்களை மக்களின் செயல்திறனை மழுங்கடிக்கச்செய்து அதன்மூலம் பார்ப்பனியத்தை வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது ஹிந்துத்துவம் . அப்படியான இரட்டிப்பு பார்ப்பன மோசடிதான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "அம்பேத்கர்" என்கிற பெயர் அவரின் ஆசிரியரான பார்ப்பனரின் பெயரென திரித்து காட்டியது . உண்மையில் அம்பேத்கர் பெயர் ஒரு பார்ப்பன ஆசிரியர் பெயர்தானா? என்பதை தகுந்த தரவுகள் மூலம் அலசி அதன் பொய்யான தகவல்களை கட்டுடைத்து  பார்ப்பன புரட்டுகளை தோலுரித்து காட்டுகிறது " கழுவப்படும் பெயரழுக்கு" என்கிற இந்நூல் ... நூலின் ஆசிரியர் யாக்கன் அவர்கள் இதன் மூலம் ஒரு  நீண்டகால பார்ப்பனிய திரிபுவாத வரலாற்றை கழுவிலேற்றி தனது முத்திரையை பதிக்கிறார் ... இவ்வளவு காலமாக  அண்ணல் அம்பேத்கர் வெறும் பீமாராவ் ராம்ஜீ என்கிற பெயரில் மட்டுமே இருந்தார் அதன் பிறகு அவருக்கு முழுமையாக அறிவூட்டிய அவரின் பள்ளி ஆசிரியரான  பார்ப்பனர்  "அம்பேத்கர்"  ஆசிரியரியரின் ப்ரியத்தின்பால் பீமாராவ் ராஜீ பெயருக்கு பின்னால் "அம்பேத்கர்" சேர்த்துக்கொண்டார் என்கிற அப்பட்டமான பொய்யை நாம் தலையில் சுமந்து அல்லது திணிக்கப்பட்டிருக்கிறோம் ...

நூலாசிரியர் யாக்கன் அவர்கள்  அண்ணல் அம்பேத்கர் பெயர் அவருடைய இயற்பெயரே என பல்வேறு சான்றுகளை தனது "கழுவப்படும் பெயரழுக்கு" இல் பதிவு செய்கிறார் அதில் முக்கியமானது அம்பேத்கர் மோடி எழுத்து மொழியில் தனது சொந்த கையெப்பம் பள்ளி பருவத்தில் இட்டதை சுட்டிக்காட்டுகிறார் ... (மோடி மொழி  என்றதும் நம் gobackmodi புகழ் நரேந்திர மோடி என நினைத்துவிட வேண்டாம்) மோடி  என்கிற மொழி நம் தமிழ்நாட்டிலேயே புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது ... அதற்கான
தரவுகள் கீழே சொடுக்கவும் ...

மோடி எழுத்து மொழி


மோடி எழுத்து மொழி 2



போலவே இந்நூலுக்கு "கழுவப்படும் பெயரழுக்கு" என்கிற தலைப்பின் மூலம் தனது துணிச்சல் வாதத்தை வெளிகாட்டிய யாக்கன் அவர்களை பாராட்டுதல் நன்று ... இதன் மூலம் புரட்சியாளர் அம்பேத்கர் மீது பூசப்பட்டிருந்த பார்ப்பன அழுக்கு  முற்றிலுமாக துடைத்தெரியப்பட்டிருக்கிறது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் ... ஹிந்துத்துவ பார்ப்பனியம் தனக்கேற்றார்போல் எப்படியெல்லாம் வரலாற்றுத் திரிபுகளை மேற்கொள்ளும் என்பதற்கு "பெயரழுக்கு நூலும் அதிலுள்ள தரவுகளும் சான்றாக அமைகிறது ..‌..

கழுவப்படும் பெயரழுக்கு நூலில் யாக்கன் அவர்கள் தரும் தரவுகள் இவை ...

அம்பேத்கர் இயற்பெயர் ;
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
அம்பேத்கர் தந்தை பெயர்;
ராம்ஜி மாலோஜி அம்பேத்கர்.

அம்பேத்கர் தபோலியில் உள்ள A.J. உயர்நிலைப்பள்ளியில் முதலில் பயின்றார்.அது இராணுவ வீரர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளி.அம்பேத்கரின் தந்தை ஓய்வு பெற்ற சுபேதார் என்பதால் அம்பேத்கருக்கு அப்பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு அம்பேத்கர் மராத்தி மொழியை மோடி எழுத்து வடிவில் பயின்றுள்ளார்.தானே கையொப்பமிடவும் கற்றுள்ளார். பின்னாலில் மராத்தி மொழி தேவநகரி எழுத்து வடிவத்தில் மாறியுள்ளது.

பணியின் காரணமாக அம்பேத்கரின் குடும்பம் சதாராவிற்கு குடிபெயர்கிறது, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அம்பேத்கர் திரும்பவும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். அங்கு தான் அம்பேத்கர் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டுள்ளார். அங்குள்ள ஆசிரியர் பெயர் தான் அம்பேத்கர் என்று பொய் கூறப்படுகிறது. அம்பேத்கர் அந்த பள்ளியில் சேர்ந்த அன்றே பள்ளி பதிவேட்டில் பீவா ராம்ஜி அம்பேத்கர் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் சேர்ந்த அன்றே அம்பேத்கர் பீமா ராம்ஜி அம்பேட்கர் என்று மராத்தி மொழியில் மோடி எழுத்தில் கையெழுத்து இட்டுள்ளார். அந்த பதிவேடு இன்றும் அம்பேத்கர் படித்த பள்ளிக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கையெழுத்தில் உள்ள அம்பேத்கர் கையெழுத்தை தமிழக அரசு செயலாளராக பணியாற்றிய மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆட்சியர் அதிகாரி விஷ்வநாத் ஷெகாவ்கர் என்பவர் உறுதி செய்துள்ளார்.

எனவே அம்பேத்கர் என்பது ஆசிரியரின் பெயரல்ல. அது அவரின் இயற்பெயர் என்பது உறுதியாகிறது.

1916 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு அம்பேத்கர்   பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தனது இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் தனது தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்றும் தன் கைப்பட எழுதியுள்ளார். அதற்கான ஆதாரமும் உள்ளது.

மேலும் அம்பேத்கரின் தந்தை ஆங்கிலேயருக்கு அனுப்பிய கடிதங்களில் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்று கையெழுத்திட்டுள்ளார். அந்தக் கடிதங்களை தன் தந்தையின் காப்பக பெட்டியில் பழைய காகிதக் கட்டுகளிலிருந்து கண்டெடுத்ததாக பிற்காலத்தில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

ஆகவே அம்பேத்கர் எனும் பெயர் அவரின் தந்தை பெயரிலிருந்தே புரட்சியாளர் அம்பேத்கருக்கு வந்துள்ளதே தவிர அது எந்த  ஒரு ஆசிரியர் பெயரும் அல்ல. இவை யாக்கன் அவர்கள் தனது "கழுவப்படும் பெயரழுக்கு" நூலில் கொடுத்துள்ள தரவுகளாகும் .












Wednesday, January 09, 2019

பௌத்தம் இரண்டு கேள்விகள் ?




இரண்டு கேள்விகளை முன்வைத்து  ....

ஒன்று : மணிமேகலை தவிர்த்து (அக்காலம்) ஏன் தமிழகத்தில் தற்போது ஒரு பெண் பிக்கு கூட இல்லை

இரண்டு : தலித்துகளை பௌத்தனாக மதம் மாற்றினால் அவனை ஊருக்குள் அனுமதிக்குமா இந்த சாதிவெறி சமூகம்.

முதலாவது கேள்வியில் அனேகமாக இன்னும் பௌத்தம் பரவலாக்கப்படவில்லை மேலும் இந்துத்துவம் பௌத்தத்தை பரவலாக்க விடவில்லை அதனால் பெண் பிக்குகள் உறுவெடுக்கப்படவில்லை என்று சப்பை கட்டுகள் கட்டப்படலாம்... காரணங்கள் இரண்டுமே இதற்கு பொருந்தாது... ஏனெனில்... எப்பொழுது பௌத்தம் மதமாக்கப்பட்டதோ அப்பொழுதே அது பெண்களை ஒதுக்கி வைக்கும் அதே மதவாத சக்திக்குள் வந்துவிட்டது... இந்து முஸ்லீம் கிருஸ்துவம் போல அதுவும் பெண்களை மதத்திற்குள் அனுமதிப்பதில்லை என்பதன் வெளிப்பாடுதான் பெண் பிக்குகள் தமிழகத்தில் உறுவாகவில்லை... போலவே இதோ பெண் பிக்குகள்  எடுத்துக்காட்டுகள் என தமிழகத்தை தவிர்த்த மற்ற மாநிலத்தவர்களை சுட்டிக்காட்டுவதில் இருக்கிறது அந்த மதப்பற்று சுய மதவாதம்....

இரண்டாவதான கேள்விக்கு தெளிவாகச் சொல்வதென்றால் சேரி-ஊர் என இரண்டாக பிரிந்து கிடக்கும் இரட்டைக்குடில் முறை சமூக கட்டமைப்பிலிருந்து பௌத்தம் விடுவிக்குமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம் முதல் கேள்விக்கு சப்பைக்கட்டு கட்டுவதை கூட இதில் செய்யமுடியாது... ஏனெனில் சாதியாதிக்கம் தான் இந்துவிலிருந்து வெளியேறுவேனே தவிர சாதியத்திலிருந்து வெளியேற முடியாது என்று தீர்க்கமாக இருப்பதன் வெளிப்பாடுதான் கிருஸ்த்தவ நாடார் இன்ன பிறரும்.. முகமதிய நாடார் இன்ன பிறரும் , ஆக இங்கு தலித்துகள் பௌத்தம் திரும்பினாலும் அதே சேரியில் காலணியில்தான் வாழ வேண்டும்... இது ஒரு முக்கியமான பௌத்த மாற்றத்திற்கு பெரும் சிக்கலாக இருக்கும் என்பது பௌத்தர்களுக்கும் தெரியாமல் இல்லை, பிறகு ஏன் தலித்துகளை பௌத்தத்திற்குள் அடக்குகிறார்கள் என்பதை அவர்கள்தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.போலவே புத்தர் எங்கேயாவது என்னுடையது "மதம்" என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை , இங்கு எல்லா மதங்களும் ஏதோ ஒரு விதத்தில் மக்களை அடிமைபடுத்துவதையே தன் பணியாக கொண்டிருக்கிறது என்பது உண்மை , இதில் பௌத்தமும் விதிவிலக்கல்ல, அம்பேத்கர் இந்து பட்டத்தை துறப்பதற்காக  பௌத்தம் தழுவினார் சரி... இதே அம்பேத்கருக்கு பௌத்தம் தழுவினாலும் சேரியில்தான் அவன் வாழனும் என்பது தெரியாதா? என்கிற விமர்சனம் உண்டு... போலவே இதையே பிடியாய் பிடித்துக்கொண்டு பௌத்த மதம் மாறுங்கள் என தலித்துகளிடம் கொண்டு செல்வதை  அழுத்தமாக "திணிப்பது" என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது...

மதம் ஒரு அபின் என்கிற மார்க்ஸ் கூற்று...
மதம் மனிதனை மிருகமாக்கும் என்கிற பெரியார் கூற்று...
இவை இரண்டிற்கும் சற்று விலகியே அம்பேத்கர் இருக்கிறார்... அதாவது ஒன்றுக்கு தீர்வு மற்றொன்று என்பதாக மதத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை கோவில் நுழைவு போராட்டமே சான்றாக அமையும்... தலித்துகளை இந்து கோவில்களில் , இஸ்லாம் பெண்களை மசூதிகளில் நுழைய விடாமல் தடுக்கின்ற போது அதற்கு மாற்று நீ கோவிலுக்கே செல்லக்கூடாது என்றால் அது மாற்றுத் தீர்வு அல்ல , தொட்டால் தீட்டென்றால் தொடாமல் விடாதே... என மும்முனை எதிர்ப்பு என்பது தீர்வாகும்... அதே போல ஒரு மதம் மனிதனை விலக்கி வைக்கிறதென்றால் அதற்கு மாற்று இன்னொரு மதம் அல்ல , அந்த மதத்திற்குள்னான எல்லா தீட்டும் , புனிதங்களையும் பொது வெளியில் போட்டுடைத்து மதமற்றவன் மனிதன் என்பதை உணர்த்துவது தீர்வு... எந்த மனிதனும் பிறக்கும் போது சாதியோடு , மதத்தோடு பிறப்பதில்லை அவன்சார்ந்த சமூக கட்டமைப்பில் இருந்து மதங்களால் சாதிகளால் திணிக்கப்பட்டே அவன் இன்ன மதம் , இன்ன சாதி என அடையாளப்படுத்தப்படுகிறது.... எல்லா மதங்களிலும், பௌத்தம் உட்பட அனைத்திலும் தீட்டும் புனிதமும் ஒன்றோடொன்று பிணைந்தே இருக்கிறது ‌... அதுதான் மதம்... முதலில் தீட்டும் புனிதத்தையும் கிழித்து எறிந்துவிட்டு எந்த மதம் வருகின்றதோ அந்த மதத்தை எல்லோரும் ஏற்கலாம்... ஆனால் தீட்டும் புனிதத்தையும் கிழித்து எறிந்தால் " மதம் " மண்ணாகிவிடும் என்று அதே பௌத்தம் உட்பட எல்லா மதங்களுக்கும் நன்றாகவே தெரியும்...

Friday, December 28, 2018

இந்துமத சாதிகள் அதிர்வுகள்




இந்தியாவில் நிலவும் சாதிய அடுக்குகளில் ஒவ்வொன்றிலும் விஷம் பரவியிருக்கிறது என்பதுதான் உண்மை. இங்கு  ஹிந்து மதம்  மனுசாஸ்த்திர வர்ணாசிரம அடிப்படையில் நால்வர்ணம் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்திய சாதிய அமைப்பு முறைகளில் எந்தவிதமான மாறுதலுமின்றி மூவாயிரம் (தோராயமாக) ஆண்டுகளுக்கு மேலாக   மக்களை அடிமைபடுத்துவதில் இன்று வரையில் தொடர்ந்துகொண்டே செல்கிறதெனில், அது ஒரேயொரு அழுத்தமான மதக்கொள்கையில் மட்டுமே... அது... "தனக்கு கீழாக ஒரு அடிமை மக்கள் எப்பொழுதுமே இருத்தல் வேண்டும்" என்பதுதான்... ஹிந்துமத மனுதர்ம வர்ணாசிரமத்தின் படி பார்ப்பனர்கள் , வைசியர்கள், ஷத்ரியர்கள், சூத்திரர்கள் என்கிற நால்வர்ணம் படிப்படியாக ஒருத்தரை ஒருத்தர் தங்களுக்கு தேவையான அடிமை மக்களை ஏறி மிதிப்பதுதான் ஹிந்து மதம், இதில் கவனிக்கப்பட வேண்டியது பஞ்சமர்கள் (தாழ்த்தப்பட்டோர்) பட்டியலில் இல்லை ஆனால் ஹிந்துமத  சாதிய அடிமை படுத்துதலில் அவர்கள்  உண்டு... காரணம் பார்ப்பானியத்தை பொறுத்தவரை சூத்திரன் (தேவடியாள் மகன்) பட்டியலிலேயே அவர்களை ஹிந்துமதம் வைத்திருக்கிறது... பெரியார் இதனை எதிர்த்து "பறையர் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது என்கிறார்"
(சமதர்ம அறிக்கை- முன்னுரை ... குடியரசு 1931)
அதைவிட மேலாக அம்பேத்கர் அவர்கள் திரு காந்தியை சாடி (ஹரிஜன்) எங்களை இந்து மதம் அடிமைபடுத்துவதைத்தான் திரு காந்தி விரும்புகிறாரா?  தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் (ராமனின் பிள்ளை) என்று திரு காந்தி அழைப்பதையும் அதன் பெயரில் பத்திரிகை வருவதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்கிறார் ( சாதி ஒழிப்பு நூல் ) ஆக அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து சனாதன சாதிய வன்மத்தை போட்டு உடைக்கிறார்கள்... காந்தியின் கூற்றுப்படி ஹரிஜன் என்பது ராமனின் பிள்ளை எனில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருமைதானே என நினைக்கத் தோன்றும் ஆனால்
அம்பேத்கரும்,  பெரியாரும்  மிகத் தெளிவாக ராம ராஜியத்தை உடைத்தெறிகிறார்கள், ராமாயணத்தில் உள்ள சம்பூகன் வதத்தை  இருவருமே மிக நேர்த்தியாக கையாண்டார்கள் ... ராமனின் ஆட்சியில் ஒரு பார்ப்பனின் கோரிக்கைக்காக எவ்வித விசாரணையுமின்றி கொலையும் செய்யத் துணியும் கேடுகெட்டதுதான் ஹிந்து  சனாதன ராம ராஜ்ஜியம் என அறிவுறுத்துகின்றனர்... இங்கு  ராமாயணத்தில் ஒரு பார்ப்பனன் ராம ராஜ்ஜியத்தை குறை கூறுகிறான் அதற்கு நாரதர் என்பவர் குறையை தீர்க்க வழி சொல்கிறார், என்னவென்றால் கடைகோடியில் எங்கோ பார்ப்பனர் அல்லாத ஒருவன் தவம் இருப்பதாகவும் (பார்ப்பனர் அல்லாதோர் தவம் இருப்பது குற்றமா?) அவன் உயிரை பறித்து விட்டால் தீர்வு வரும் என்கிறார்... ராமனும் அவனை தேடி அலைகிறார் சம்பூகன் அவன் என அடையாளம் காண்கிறார் ... எந்த சாதி என மட்டும் வினவுகிறார் ( வேறு எதுவும் அவனிடத்தில் கேட்கப்படவில்லை) அவன் "சூத்திரன்" என்றதும் தலையை துண்டிக்கிறார்... இதுதான் ராம ராஜ்ஜியம் எனில் எங்களை எப்படி ராமனின் பிள்ளை என அழைப்பீர்கள் என அம்பேத்கரும் பெரியாரும் சாடுகிறார்கள்...ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 65 – 77
அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)ஹிந்து மதம் எந்த விதத்திலும் , எக்காலத்திலும் சாதியத்தை வைத்தே பிழைப்பு நடத்துவதைத்தான் நோக்கமாககொண்டிருக்கிறது அதிலும் குறிப்பாக பார்ப்பனியத்தை.... இடைநிலை சாதிகளான ஏனைய அனைத்து "சுமார் 3000 க்கும் மேலான சாதிகள்) சாதிகளுமே பார்ப்பனனை பொறுத்தவரையில் "சூத்திரன் (தேவடியாள் மகன்) மட்டுமே.... ஆனால் இந்திய சாதிய அமைப்புகள் தங்களை சூத்திரன் என்றழைக்கும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் தங்களுக்கு கீழான  அடிமை சாதிகளை உறுவாக்கி அவர்களை ஒடுக்குதலையே முதன்மையாக கொண்டிருக்கிறார்கள்.... இவர்களுக்கு தேவை எதிர்ப்பு அல்ல ஏனைய அடிமைகள் அவ்வளவே....
தங்களை ஆண்ட சாதி , படியளந்த சாதி, அரசாண்ட ஷத்ரியர்கள் என பெருமை பிதற்றிக்கொடண்டாலும் ஹிந்துமத பார்பனனை கேட்டுப்பாருங்கள் "அவாள்ளாம் சூத்திரா" என்பார்கள்... இதுதான் ஹிந்துமதம்...
இந்த இடைநிலை சாதிகளானாலும் , அதன் கீழான தாழ்த்தப்பட்டவர்களானாலும் ஹிந்து மதத்தின் மிக நுணுக்கமான அடிமை படுத்துதலையே கடைபிடிக்கிறார்கள்... தங்களை வைசியர்களாக , ஷத்ரியர்களாக , அடையாளப்படுத்தும் சாதிகள் சூத்திரர்களை ஒடுக்குவது, சூத்திரர்கள் தங்களை ஒடுக்கும் இடைநிலை சாதிகளை எதிர்க்காமல்  தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவது , தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையே ஒடுக்குவது... அதன் வழி ஹிந்து மதத்தை விடாப்பிடியாக இறுக்கமாக கட்டமைப்பது என்பதைத்தான் காலங்காலமாக பின்பற்றப்படுகிறது...ஒரு சாதிகள் சூழ்ந்து இன்னொரு சாதிகளை அனுசரிக்கும் வழக்கம் ஹிந்து மதத்திற்கோ, அதன் பார்ப்பனியத்திற்கோ  அறவே இருக்காது.... ஏனென்னால் அப்பொழுது ஹிந்துமதம் அழிந்து போகும்... இதன் காரணமாகவே பெருந்தலைவர்களையெல்லாம் ஹிந்துமதம் சாதிய வட்டத்திற்குள் அடக்கி வைக்கும் , அம்பேத்கரை  தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமான தலைவராக ஹிந்து மதம்  வைத்தது இதன் மூலமேயாகம், நடைமுறையில் காமராஜரை கூட சாதித்தலைவராக மாற்றியதும் குறிப்பிடப்பட வேண்டும், மக்களின் உணர்வுகளில் , அவர்களின் பலவீனங்களில் ஒவ்வொன்றிலும் ஹிந்து மதத்தின் அனுகூலங்களை புகுத்தி அவர்களின் சாதிய உணர்வுகளை எப்பொழுதுமே ஹிந்து மதம் கிளரிக்கொண்டே இருக்கும்...
என்ன சாதித்தது ஹிந்து மத சாதிகள் , தாழ்த்தப்பவர்கள் கல்வி யை செவி வழியில் கேட்டால்கூட பொசுக்கி விடு என்றதும்(கீதை) , பெண்களுக்கு (பார்ப்பன பெண்களும்) கல்வி அறவேக்கூடாது அவர்கள் ஆண்களுக்கு அடிமையாளர்கள் என்றும்தான் ஹிந்துமத பார்ப்பனிய சாதனையா? இப்போதெல்லாம் இப்படி நடப்பதில்லையே என்கிறீர்களா?   "நான் உன்னை கல்யாணம் பன்னிட்டேன்டி இனிமேல் எனக்கு நீ அடிமை" என எத்தனை உதடுகள் சொல்லியிருக்கும் என்று மனதை திறந்து வைத்து உங்களை நீங்களே உணருங்கள், சாதியின் பெயரால் ஆணவக்கொலைகளை நிகழ்த்துவதில் , தீண்டாமை கடைபிடிக்கப்படுவதில்  ஹிந்து மத சனாதனம் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்பது இந்த நாட்டின் மிகப் பெரிய சாபம் என்றால் அது மிகையாகாது.

Thursday, December 06, 2018

அம்பேத்கர் நினைவு தினம்






யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்...

அமைதி மதமென
அஹிம்சை  கொண்டவனை
அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்....

ஆண்டாண்டு கால அடிமை சமூகத்தை
நீ அடிமையென அவர்களுக்கே உணரச் செய்தவன்‌...

முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி எனும் புனைவுகளுக்கு
மத்தியில்,
அரசமைப்புச் சட்டமெனும் பெருந் தேரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாய் தன்னையே தேராக்கியவன்....

விடவில்லை , வீழ்ந்துவிடவுமில்லை
மதவாதமோ, சாதியவாதமோ...
என் தேரை இழுத்து தெருவில் விடுமானால்
அதை தீயிலிட தயங்க மாட்டேன் என்றான்...

எரிந்து கொண்டிருக்கிறது திரும்ப திரும்ப
அழியாத சாதியால்
நுழையாத தேரினை
தலித் தொட்டால் தீட்டென்று கோவில் தேர்களை...
இன்னமும்... இன்னமும்...

பசி, தாகம், பட்டினி , வறுமையென அனைத்தும் ஒற்றை ராந்தல் விளக்கில் அமிழ்த்து இந்திய தேசத்தில் ஒளியாய்
நின்றவன்....

வருத்தங்கள் வந்து போகாதா மனமே...
சேரிக்கு மட்டுமா
சிலை அவனுக்கு?
ஊருக்கு எப்போது போகுமோ ஏக்கத்தில்
வெடிக்கிறது நெஞ்சம்...

ஒரு பேனாவின் கூர்முனை கிழித்து
தைக்கும் பல்லாயிரம்
பதிலடிகளுக்கு சொந்தக்காரனவன்...

கேட்டாயோ காவிகளின் அதிகார திமிரை...
அவனின் நினைவு தினத்தை அடியோடு ஒழித்திடவே...
அழித்து தரைமட்டமாக்கினார்கள் பாபர் மசூதியை...

அவன்... அதிகாரத்தை அனைவருக்குமாய் பகிர்ந்து கொடுத்தான்...

அவன்... உன்னையும் என்னையும் சமமாக்கினான்...

அவன்... பெண்ணடிமையை
தகர்த்திட துடித்தவன்...

அவன்.... கல்வியை பொதுவில் வைத்தான்...

அவன்... முழக்கமிடுகிறான்

கற்பி!!!!
ஒன்று சேர்!!!
புரட்சி செய்!!!

அவன்.... சத்தமின்றி
யுத்தமின்றி...
புரட்சி செய்கிறான்...
சமத்துவம், சகோதரத்துவம், வார்த்தைகளோடு....

ஆமாம் இன்னமும்...
அவன்... பட்டினியோடுதான் இருக்கிறான்...
எப்போது மடியும் இந்த அடிமைத்தனமென்று...

ஜெய்பீம்!!!!
நீலம் வெல்லும் !!!
புத்தம் சரணம் கச்சாமி!!!
பாபா சாகேப் அம்பேத்கர் என்பவன் அவனே!!!!

Friday, June 17, 2016

பாபா சாகேப் திரைப்படம் தயாகிறது தமிழில்,,,

காமராசர், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புரட்சியாளர்,
இந்திய அரசியலமைப்புத் தந்தை பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு
'பாபா சாகேப்' என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார்
என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.இப்படம் குறித்து அவர் கூறும்போது,
டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையை மையக் கருவாக வைத்து
உருவாகவிருக்கும் திரைப்படம் தான் "பாபா" சாகேப். தமிழ் சினிமாவில்
இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட
திரைப்படங்கள் அதிகமாக வருகிறது, நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்க்கையை
அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கக் கூடாது என்ற
எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன். ஹாலிவுட்டில்
அட்டன்பரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக
எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை
வரலாற்றை திரைப்படமாக எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்
இந்த பாபா சாகேப்.அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000
பேருக்கு மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை. இறுதியாக எங்கள்
திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் 'ஆய்வுக்கூடம்' திரைப்படத்தின்
நாயகன் ராஜகணபதியை அறிமுகம் செய்தார், அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல
உள்ளதால் அவரை தேர்வு செய்தோம், மேலும் இத்திரைப்படத்திற்காக
அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத்திற்கும் பாரதியார்,
பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான
தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு தேனிசைத் தென்றல்
தேவா இசையமைக்கிறார். ரன் ஹார்ஸ் மீடியா நிறுவனம் சார்பில் அஜய் குமார்
தயாரிக்கிறார்.
- தீக்கதிர்.

Thursday, May 12, 2016

பார்ப்பனர் ஆதிக்கம் பற்றி - அம்பேத்கர்

ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய
சமுதாயச் சிந்தனை என்ன?

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில்
பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின்
(சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள்.
இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் .
இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண
மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு
எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு
முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு
தாழ்வு நிலைகள்

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை
பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .

பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை,
கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு
இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும்.

ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில்
மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர்கள் கல்வியைத் தங்களது ஏக
போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள
வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள்.
அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக்
காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை
ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால்
அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் ,
தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று
பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு
ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத
வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள்
மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள்
வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள்
பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை
மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை
குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை
யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு
விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும்
கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன?
அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட
நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொள்கையின் பலனேயாகும்.

பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ
இல்லை. ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது
என்பதுதான் பார்ப்பனர்களின் மதம். அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக்
கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள்
தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த
எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக்
கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக்
கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள்
`உடன்கட்டை ஏறுதல்' என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள்.
`உடன்கட்டை ஏறுதல்' என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு
ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்
கப்படவில்லை . இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு
ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம்
செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு
பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம்
அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக்
கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான்.
பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம்
இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம்
இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச்
சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால்
பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார்,
தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத
மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும்
என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை
இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள
பார்ப்பனர்கள் செய்தது போல் .

தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று
ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு
அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம்
சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி
ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல்
தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி
அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்
காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான்
சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும்,
பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான்
செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும்
அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான்.
இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ,
நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

————— டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட "காந்தியும், காங்கிரசும்
தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?" என்ற நூலிலிருந்து – பக்கம்
215-216

Friday, April 08, 2016

இரண்டே வர்க்கங்கள் மட்டுமே என்பது வறட்டுத் தத்துவமே - அம்பேத்கர்

பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது
மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக,
பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு
குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில் உரிமைகள், லட்சக்கணக்கான
மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது, பார்ப்பனியத்தின் விளைவு அல்ல என்று
யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும் உயிரோட்ட முள்ள ஒரு
மின்கம்பியாக ஓடிக்கொண்டிருக்கவில்லையா? பொருளாதார வாய்ப்புகளைக் கூட
பாதிக்கும் அளவுக்கு, அத்தனை சர்வ வல்லமை கொண்டதாக பார்ப்பனியம்
விளங்குகிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளை, பிற தொழிலாளியின்
வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப் பாதுகாப்பு, பணி
முன்னேற்றம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள்
என்ன? தீண்டத்தகாதவன் என்பதால், அவனுக்கு எத்தனையோ வேலைவாய்ப்புகள்
மூடப்பட்டு விடுகின்றன. இதற்கு பருத்தித் தொழில் மிகச் சிறந்த
எடுத்துக்காட்டு. இந்தியாவில் பிற பகுதிகளில் உள்ள நிலவரம் எனக்குத்
தெரியாது. ஆனால், பம்பாயிலும் சரி, அகமதாபாத்திலும் சரி, தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத்
துறையில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் அவர்களுக்கு
வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தீண்டத்தகாதவர்கள்
என்பதுதான். ஒரு சாதி இந்து, முஸ்லிம்களோடு பணிபுரிவதில் எந்தச்
சுணக்கமும் காட்டுவதில்லை. இருப்பினும் தீண்டத்தகாதோர் என்றால், அவன்
எதிர்ப்புத் தெரிவிக்கிறான்.

ரயில்வேயை எடுத்துக் கொள்ளுங்கள். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட மக்களின்
நிலை என்ன? தாழ்த்தப்பட்டவன் ஒரு 'கேங்க் மேனா'கத்தான் பணிபுரிய வேண்டும்
என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முழுவதும் எந்தவித உயர்வும்
இல்லாமல் 'கேங்க் மேனா'கவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்கு வேறு பதவி
உயர்வும் தரப்படு வதில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்டராக
வர வேண்டுமானால், ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக
வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே,
தாழ்த்தப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை அவர்
விரும்பமாட்டார். எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போர்ட்டராக
நியமிக்கப்படுவதில்லை.

ரயில்வே எழுத்தர் பணிக்குத் தேர்வு நடத்துவதில்லை. மெட்ரிக் தேர்ச்சி
அடையாதவர்களே பெரும்பாலும் இந்த இடங்களுக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சாதி இந்துக்கள் ஆகிய
சமூகத்தினர் மெட்ரிக் தேறாத பட்சத்திலும் நூற்றுக்கணக்கில் ரயில்வேயில்
எழுத்தர்களாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நூற்றுக்கணக்கில்
மெட்ரிக் தேறியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எழுத்தர் பணி வாய்ப்பு
வேண்டுமென்றே மறுக்கப்படுகிறது. ரயில்வே பணிமனைகளிலும் இதே நிலைதான்.
தாழ்த்தப்பட்டோர் மெக்கானிக் துறையில் நுழையவே முடியாது. அவன் மேஸ்திரி
ஆகவும் முடியாது. பணிமனையில் போர்மென், சார்ஜ்மென் ஆகிய பணிகளில் அமர
அவனுக்குத் தகுதியில்லை. அவன் வெறும் கூலிதான். இறுதிவரை அவன் கூலியாகவே
இருந்துவிடுகிறான். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட தொழிலாளியின் நிலை
இதுதான்…

எனக்கும் உங்களுக்கும் தீய நோக்கத்தைக் கற்பிப்பவர்களிடம் இரண்டு
கேள்விகளைக் கேட்கிறேன். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே
சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்தானே? உண்மையான குறைபாடுகள்
என்றால், அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே? இந்தக்
கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும், எதிர்மறையாக பதிலளிக்க முடியாது.
எனவே, நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர்
தலைவர்கள், ஏதோ ஒரு வித மாயையில் இருக்கிறார்கள். அவர்கள் கார்ல்
மார்க்சைப் படித்தவர்கள்; உடைமை வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு
வர்க்கங்கள் மட்டுமே உள்ளன என்பவர்கள். எனவே இந்தியாவிலும் இரண்டே
வர்க்கங்கள்தான் உள்ளன; ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பதே என்று
கருதுபவர்கள், இதே விஷயத்தில் இரண்டு தவறுகளைச் செய்கிறார்கள்.

மார்க்ஸ் சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என்று
நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்களே
உள்ளன என்பது கருத்துநிலை. அதை வறட்டுத் தத்துவமாகத் தொழிலாளர் தலைவர்கள்
பிடித்துக் கொண்டு விட்டார்கள். இரு வர்க்கங்கள் என்பதை அடிப்படையாகக்
கொண்டு பிரச்சாரம் நடத்தினால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா
வகுப்பிலும் ஒரு பொருளாதார மனிதன், ஒரு பகுத்தறிவுள்ள மனிதன், ஒரு தர்க்க
நியாயத்திற்கு உட்பட்ட மனிதன் இருப்பதாக நம்புவது எத்தனை பொய்மையானதோ,
அத்தனை பொய்மையானது இவர்கள் சிந்தனையும் செயலும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:177)

இந்திய தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடன் போராட வேண்டும் - அம்பேத்கர்

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை
நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை
நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான்
பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது.
இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை
சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள்
பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில்
நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே
நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு
இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும்
விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை
ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.

மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம்
இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப்
போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம்
இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை
இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும்.
தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம்
அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை
அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில்
பலன் தரக் கூடியதாகும்.

புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல்
அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு.
இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின்,
சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம்.
பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர்
மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்
அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை
அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக
விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக
இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப்
பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம்
என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும்,
தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம்
இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய
திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம்
கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை
விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில்
இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க
மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப்
பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும்
போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம்.
தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட
வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால்,
இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம்
சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக்
கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம்,
உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று
சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப்
பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான்
பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா
வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை.
பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா
வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும்
பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது
மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை
மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற
வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம்
சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று
விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக்
கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம்
பார்க்கிறது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

முதலாளித்துவ அமைப்புகளில் கம்யூனிச தொழிற்சங்கங்கள் ? - அம்பேத்கர்

அடுத்ததொரு பிரிவு தொழிற்சங்கங்களைக் கட்டுவதே – தம்மைச் செயலாளர்கள்,
தலைவர்கள் என்று முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்; சொந்தப் பதவிகளுக்காகத்
தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்தான். சொந்தப் பதவிகளுக்காகத்
தங்களுக்கென்று தனித்தனி சங்கங்கள் வைத்துக் கொண்டு, போட்டி அரசியல்
நடத்துபவர்கள் அவர்கள். இத்தகைய விந்தையான, வெட்கப்படத்தக்க நிகழ்வுகள்
இந்தியாவில் புகழ் பெற்றுள்ளன. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும்
இடையே நடைபெறும் போராட்டத்தைவிட, கடுமையான போராட்டம் -போட்டிச்
சங்கங்களிடையே நடைபெறுவது விந்தையிலும் விந்தை!

இத்தனையும் எதற்காக? தமது தலைமைப் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக!
இதில் கம்யூனிஸ்டுகள் இன்னொரு வகை. அவர்கள் அர்த்தமுள்ளவர்கள்தான்.
ஆனால், தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள். அவர்களைவிட தொழிலாளி
வர்க்கத்திற்குப் பேரழிவைக் கொண்டு வந்தவர்கள் வேறு எவரும் இல்லை. இன்று
தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது; முதலாளிகளின் கை
மேலோங்கியிருக்கிறது; பொது மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும்
நெருங்கிய நட்பும் இல்லை. இவற்றுக்கெல்லாம் காரணம், இந்தக் கம்யூனிஸ்ட்
தலைவர்கள்தான். தாங்கள் ஒரு காலத்தில் வென்றெடுத்த அதிகாரத்தை, இவர்கள்
தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இவர்களுடைய வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான்.
அதிருப்திதான் புரட்சியைத் தூண்டும் என்றும், புரட்சியின் மூலம்
பாட்டாளிகளின் ஆட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள்
நம்புகிறார்கள். இதற்காகவே இந்த அதிருப்தி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு,
பிளவு -சிதறல் இவற்றையே ஓர் அமைப்பு அலையாக தொடர்ந்து விளைவித்து
வருகிறார்கள். இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலை
நிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்? இது, சிதறுதலைத் திட்டமிட்டு
செயல்படுத்தும் ஒரு முயற்சிதானே? வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி
மட்டுமே போதாது. அரசியல், சமூக உரிமைகளுக்கான நியாயம், தேவை,
முக்கியத்துவம் ஆகியவை பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே
வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும்.

ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட், வேலை நிறுத்தம் செய்வதையே ஒரு வேலை என்று
அலைய மாட்டான். புரட்சிகர சிண்டிகலிஸ்டுகளின் காலங்களில் அப்படித்தான்
நடந்தது. வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக
எப்போதுமே தீர்மானித்துக் கொண்டதில்லை. எல்லா வழிகளுமே அடைக்கப்பட்ட
பிறகுதான் இறுதிப் புகலிடமாக வேலை நிறுத்தம் கையாளப்பட வேண்டும் என்பதே
மார்க்சியம். இந்த உண்மைகளை கம்யூனிஸ்டுகள் காற்றில் பறக்க விட்டு
விட்டார்கள். தொழிலாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கத் தங்களுக்கு
கிடைத்த வேலை நிறுத்தங்களை, ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் திணித்தார்கள்.

இதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ, அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும்
தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது. இன்றைய தினம்
அவர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். முதலாளித்துவ அமைப்புகளில்
புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொருளற்ற செயல்கள் அப்படித்தானே
முடிய வேண்டும்? இன்றைய கம்யூனிஸ்டு எப்படி இருக்கிறான்?
சுற்றுவட்டாரத்தில் மாபெரும் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை
எறிந்த ஒருவன், தன் சொந்த வீட்டையும்கூட காப்பாற்ற இயலாத நிலையில்
இருக்கிறான்.

விளைவு, இன்று தொழிலாளிகள் குறை தீர்க்கும் சங்கங்களே இல்லை. பம்பாய்
நூற்பாலைத் தொழிலாளர் மத்தியில் நிலவும் அவலங்களைப் பற்றி நான் பேசப்
போவதில்லை. அவற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது. ஜி.அய்.பி.
ரயில்வே தொழிலாளர் நிலையை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய தொழிற்சங்கம்
1920 இல் தொடங்கப்பட்டது. அதன் பெயர் ஜி.அய்.பி. ரயில்வே ஸ்டாப் யூனியன்.
1922-24 கட்டத்தில் அது முடங்கிப் போனது. 1925 இல் அது மீண்டும்
புதுப்பிக்கப்பட்டது. 1927இல் ஒரு போட்டிச் சங்கம் உருவானது. அதன் பெயர்
ஜி.அய்.பி. மேன்ஸ் ரயில்வே யூனியன், 1931 இல் இரண்டும் இணைந்தன.

ரயில்வே ஒர்க்கர்ஸ் யூனியன் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது. 1932 இல்
மீண்டும் பிளவு. புதிய சங்கத்திற்கு ரயில்வே லேபர் யூனியன் என்று பெயர்.
1935இல் பழைய ஜி.அய்.பி. ஸ்டாப் யூனியன் புத்துயிர் பெற்று செயல்படத்
தொடங்கியது. இன்று மோதல்கள். இத்தனைக்கும் எல்லாமே ரயில்வே
தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக நிறுவப்பட்டவைதாம். இந்த முரண்பாடு
-மோதல்களுக்கு காரணம், கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத
குழுக்களுக்கிடையிலான போட்டி. இப்பகைமை மத்திய அமைப்பிலும் பிளவைக்
கொண்டு வந்தது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:182)

தொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? - அம்பேத்கர்

பார்ப்பனியம் உயிர்ப்புடன் இருக்கும் வரை, மக்கள் அதை விடாப்பிடியாகக்
கொண்டிருக்கும் வரை – ஒரு பிரிவினருக்கு உரிமைகளையும், இன்னொரு
பிரிவினருக்கு இடையூறுகளையும் அது விளைவிப்பதால் – பாதிப்புக்குள்ளாகக்
கூடியவர்கள் அமைப்பு ரீதியாகத் திரள்வது அவசியம். அவர்கள் அப்படித்
திரள்வதால் என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? இவ்வாறு பாதிக்கப்பட்ட
தொழிலாளர் அமைப்புகள் உருவாவது, முதலாளிகளுடைய முயற்சியின் காரணமாக
நேர்கிறது என்று வைத்துக் கொண்டால், அதைப் பற்றிப் புகார் சொல்வதை
என்னால் புரிந்து கொள்ள முடியும்… ஆனால், நாம் இப்படி அமைப்பு ரீதியாகத்
திரள்வதற்கு முதலாளிகள் பின்புலமாக அமைந்திருக்கிறார்கள் என்று யாராவது
சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல எந்த விமர்சகராவது இருக்கிறாரா என்று
நான் சவால் விட்டுக் கேட்கிறேன்.

எனவே, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டியதற்காக வெட்கப்படத் தேவையில்லை;
அதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமுமில்லை. மாநாடு கூட்டப்படுவதை
நியாயப்படுத்துவதற்கு உரிய காரணங்களும், நோக்கங்களும் இருக்கின்றன.
ஒடுக்கப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஓரிருவர், இந்த மாநாட்டை ஏற்கவில்லை.
அவர்கள் போக்கில் புதுமை எதையும் நான் காணவில்லை. அவர்களில் சிலர்
மற்றவர்களின் கூலிப்படைகள். சிலர் தவறாக வழிகாட்டப்பட்டவர்கள். சங்கம்
என்கிற வார்த்தையே அவர்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரிகிறது. செல்வாக்கு
மிக்க பிரச்சாரகர்கள் வாயிலிருந்து அந்த வார்த்தை வெளிவரும்போது அவர்கள்
மயங்கி விடுகிறார்கள். அதனால் ஒருவருக்கொருவர் உணர்வுகளிலும்,
அணுகுமுறையிலும் முரண்பட்டுக் கிடக்கிறார்கள்.

ஒருவன் உரிமை கேட்கிறான். அவனுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அதன்
நோக்கம். இதுவே மற்றவர்களுடைய நலன்களுக்கு எதிராகத் தோன்றுகிறது
என்கிறபோது, அவர்களிடையே உண்மையான சங்கம் எப்படி சாத்தியமாகும்?
பலவீனமானோர், துன்புறுவோரைப் பொறுத்தவரை, இந்தச் சங்கம் ஒரு மோசடியே தவிர
வேறு ஒன்றுமில்லை. இந்த மோசடியை தோலுரித்துக் காட்டும் நேர்மையான மனிதன்,
மோசடிப் பேர்வழிகளால் தூற்றப்படுவது இயற்கைதான். அவனைப் பிரிவினைவாதி
என்று அவர்கள் ஏசுவதும் இயற்கைதான். அவன் செய்வது பிளவுபடுத்தும்
வேலைதான். எங்கே உண்மையான வேறுபாடு இருக்கிறதோ – எங்கே முரண்பாடு
இருக்கிறதோ, அதை அவன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான். இந்த முரண்பாடும்
மோதலும் ஏன் தோன்றுகின்றன? தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஒடுக்கப்பட்ட
வகுப்பினர். அவர்கள் மீது மற்ற பிரிவினர் ஆதிக்க உரிமைகளைக்
கோருகின்றனர். அதனால் பிளவும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன. வேண்டுமென்றே
யாரும் வேறுபாடுகளை உருவாக்கவில்லை. நம்மிடையே உள்ள வேறுபாடுகளைப்
புரிந்து கொள்ளுங்கள். இந்த வேறுபாடுகள் மூலம் நமக்கு அநீதி இழைத்து
விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் நான் சொல்லுகிறேன்.

உங்கள் குறைபாடுகளைக் களைய வேண்டுமானால், அவற்றிற்குத் தீர்வு காண
வேண்டுமெனில், நீங்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டாக வேண்டும். அப்படித்
திரளும்போது அந்த அமைப்பு எந்த நோக்கத்தோடு பணிபுரிய வேண்டும் என்பது
அடுத்த கேள்வி. வணிக மேம்பாடு அதன் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும்.
சங்கம் ஒன்றில் சேருவதா அல்லது உங்களுக்கென்று தனியாக சங்கம் தொடங்குவதா
என்பது இன்னொரு கேள்வி. உங்கள் திசை வழியைத் தீர்மானிப்பதற்கு முன்னால்,
இந்தக் கேள்வியைப் பற்றி நீங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும்.

இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் மிகவும் வருந்தத்தக்க நிலையில்
இருக்கிறது. அதன் தலையாய நோக்கம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை.
உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் சரிந்துவிடாமல் பாதுகாப்பதே அதன்
தலையாய நோக்கம். அய்ரோப்பாவில் ஒரு சராசரி மனிதன் தன் பிறப்பு, பயிற்சி
ஆகியவற்றிற்கு ஏற்ப வழக்கமான அதே வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க வேண்டும்
என்பதில் குறியாக இருக்கிறான். அதைக் குறைக்க முற்படும் எந்த
முயற்சியையும் அவன் உறுதியாக எதிர்க்கிறான். இந்த உறுதி இந்தியத்
தொழிலாளர்களிடம் இல்லை. இவர்களுக்கு நாட்களை ஓட்டினால் போதும், வேலையில்
நீடித்தால் போதும். தரமுள்ள வாழ்வில் இவர்களுக்கு வேட்கையில்லை. இப்படித்
தரம் தாழ்ந்து போவதை எதிர்க்கும் உறுதி இல்லை என்றால், அந்த நாட்டின் ஏழை
எளிய மக்கள் மேலும் மேலும் கீழ்நிலைக்குதான் போவார்கள்.

என்னைப் பொறுத்தவரை, தொழிற்சங்க இயக்கம் என்பது வேறு எந்த நாட்டையும்விட
இந்தியாவுக்கு மிக மிகத் தேவை. நான் முன்பே சொன்னபடி, இன்றைய இந்தியத்
தொழிற்சங்க இயக்கம் தேங்கிப் போய் நாற்றம் வீசுகின்ற குட்டையாய்க்
கிடக்கிறது. இதற்கான காரணம், இதன் தலைவர்கள் கோழைகள், சுயநலக்காரர்கள்
என்பதும்; தவறாக வழிகாட்டப்பட்டவர்கள் என்பதுமாகும். இன்னும் சில
தலைவர்கள் வெறும் சாய்வு நாற்காலித் தத்துவ ஆசிரியர்களாக அல்லது
அரசியல்வாதிகளாகவே உள்ளனர். அவர்களுடைய கடமை, பத்திரிகைகளுக்கு அறிக்கை
தருவதோடு நின்று விடுகிறது. தொழிலாளர்களைத் திரட்டுவது, அவர்களுக்கு
கல்வி புகட்டுவது, அவர்கள் போராட உதவுவது போன்ற கடமைகள் அவர்களுக்கு
இல்லை. தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு,
அவர்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் தயார். ஆனால்,
தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்வதை அவர்கள்
தவிர்க்கிறார்கள்.
-

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:181)

வர்க்கத் திரட்சிக்கு தடையாக இருப்பது எது? – அம்பேத்கர்

பொது உண்மைகளை அலசும்போது, பொருளாதார வல்லுநர்கள் ஓர் எச்சரிக்கையை
மேற்கொள்ளுவர். நாம் ஒரு பொருளாதார மனிதனை அடிப்படை உண்மையாக வைத்துக்
கொண்டால், பிற புறச் சூழல்களும் சரிசமமாக அமைந்திருக்கின்றன என்னும்
கருத்து நிலையிலேயே – அப்படி ஒரு பொருளாதார மனிதனைக் கற்பனை செய்து
கொள்கிறோம் என்றுதான் – அவர்கள் எச்சரிக்கை வரையறையுடன் தமது
ஆய்வுகளையும், முடிவுகளையும் வெளியிடுவர். ஆனால், தொழிலாளர் தலைவர்கள்,
பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் பிற புறச்சூழல்களின் சாதக நிலையை
அறவே மறந்து விடுகின்றனர். அய்ரோப்பாவில்கூட, மார்க்ஸ் சொன்னது சரியாக
இருந்தது என்று சொல்வதற்கில்லை.

"ஜெர்மனியில் ஓர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதன் இருக்கிறான். அதே போல்
பிரான்சில் சுரண்டப்பட்டு, அழிக்கப்பட்ட ஒரு கைவினைஞன் இருக்கிறான். இரு
நாட்டு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்களும் – ஓர் இனம், ஒரு கொள்கை,
ஒரு கடந்த காலம், ஒரு நிகழ்காலம், ஓர் எதிர்காலம் என்பதற்குச்
சொந்தக்காரர்கள்தான்; அவர்கள் ஒன்று சேர வேண்டும்" என்று மார்க்ஸ்
காலத்தில் அறைகூவல் விடப்பட்டது. ஆனால், உண்மையில் ஜெர்மனியில் உள்ள ஏழை
– ஒடுக்கப்பட்ட மனிதனும், பிரான்சில் சுரண்டப்பட்டு வாழ்வே சிதைந்து போன
கைவினைஞனும் இணைந்து நிற்கிறார்களா? நூறு ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்கள்
ஒன்றுபடக் கற்றுக் கொள்ளவில்லை. கடந்த உலகப் போரில் கூட, அவர்கள்
எதிரெதிர் அணியில் நின்று மூர்க்கத்துடன் போரிட்டனர். இந்தியாவுக்கும்
அது பொருந்தும். இந்தியாவிலும் அத்தகைய ஒற்றுமை ஏற்படவேயில்லை.

பணக்கார வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற தெளிவான பிரிவினை –
இந்தியாவில் ஏற்படவே இல்லை. எல்லா தொழிலாளர்களும் ஒரே வர்க்கம் என்பது
ஒரு லட்சியம். அது அடையப்பட வேண்டிய லட்சியமே ஒழிய, அதுவே இன்றைய
உண்மையான சூழல் என்று முடிவு செய்து கொள்வது தவறு. இந்நிலையில் தொழிலாளர்
அணிகளை எப்படி திரட்ட முடியும்? தொழிலாளர்களிடையே எப்படி ஒற்றுமையைக்
கொண்டு வர முடியும்? ஒரு பிரிவுத் தொழிலாளர்கள், இன்னொரு பிரிவுத்
தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம்தான் – அவர்களிடையே ஒற்றுமையை
உருவாக்க இயலும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத்
தடுப்பதன் மூலம் அது முடியாது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு
எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அத்தகைய
ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.

இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமை கொள்ளுவதற்கான அடிப்படைக் காரணங்களைக்
கண்டறிந்து களைவதுதான் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான ஒரே வழி. ஒரு
தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தர விரும்பாத உரிமைகளை, அவன் மட்டும்
பெற வேண்டும் என்பது தவறான சிந்தனை என்பது, அவனுக்கு எடுத்துச் சொல்லப்பட
வேண்டும். தொழிலாளர் களிடையே ஒற்றுமையைக் கொண்டு வர சிறந்த வழி –
தங்களுக்கிடையே சமூக வேறுபாடுகளைக் கடைப்பிடிக்கும் போக்கு, தொழிலாளர்
மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்து விடும் என்பதை அவர்களுக்குப் புரிய
வைப்பதுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால், சமத்துவமின்மை என்னும்
குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து வேரோடு
களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர்கள்
யார்? முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர் தலைவர்கள் ஆவேசமாகப்
பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், பார்ப்பனியத்திற்கு எதிராக
தொழிலாளர்களிடையே எவருமே பேசியதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில்
அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு வேளை தொழிலாளர் அமைப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கும் –
பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா?
அல்லது தொழிலாளர்கள் சிதறிக் கிடப்பதற்கு பார்ப்பனியம் பெருமளவு காரணமாக
இருக்கிறது என்பது, இன்னும் அவர்களுக்குத் தெரியவே இல்லையா? ஒருவேளை இந்த
அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண்படுத்தி விடக்
கூடாது; அப்போதுதான் நாம் தலைமைப் பொறுப்பில் நீடிக்க முடியும் என்று
நம்புகிறார்களா? இப்படித் தொழிலாளர் வர்க்கம் சிதறுண்டு கிடப்பதற்கு
அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப்
பார்ப்பனியப் போக்கு தொழிலாளர்களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக
வேண்டும். இந்தத் தொற்று நோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப் பற்றி மவுனம்
சாதிப்பதாலோ – அதை ஒழித்துவிட முடியாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத்
தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடியோடு கிள்ளி எறிய
வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 179)

தேர்தல் அறிக்கைகள் வெறும் உறுதி மொழியாக மட்டுமே இருக்கக் கூடாது - அம்பேத்கர்


சில நாட்களுக்கு முன்பு பண்டித நேரு இங்கு வந்திருந்தார். அவர் பேசுவதைக்
கேட்க, ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் கூடியதாக பத்திரிகைகள் செய்தி
வெளியிட்டன. நான் நேற்று ஜலந்தர் சென்றிருந்தபோது, இரண்டு லட்சம் மக்கள்
கூடியிருப்பார்கள். ஆனால், முப்பதாயிரம் மக்கள் மட்டுமே கூடியதாகப்
பத்திரிகைகள் எழுதுகின்றன. காங்கிரஸ் மாநாட்டுக்கு குறைந்தளவே மக்கள்
திரண்டிருந்தாலும், மாநாட்டுக்கு ஏராளமானோர் கலந்து கொண்டதாக
பத்திரிகைகளில் செய்தி வெளியாகும். அய்ந்து பேர் கூடினால் அய்ம்பது பேர்
என்றும், அய்ம்பது பேர் கூடினால் அய்நூறு பேர் என்றும், அய்நூறு பேர்
கூடினால் அய்ந்தாயிரம் பேர் என்றும், அய்ந்தாயிரம் பேர் கூடினால் அய்ந்து
லட்சம் பேர் என்றும் செய்தி வெளியிடுவார்கள். பத்திகையாளர்களின் இத்தகைய
விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. மக்கள் அதிகளவில் கூட வேண்டும்
என்று நான் எண்ணியதில்லை. நான் விரும்புவதெல்லாம் சாதி இந்துக்களின்
வன்கொடுமைகளுக்கு எதிராக, நம்முடைய மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்
என்றுதான் விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு பேர் கூடுகிறீர்கள் என்பது
முக்கியமல்ல; நான் சொல்வதை எத்தனை பேர் கேட்கின்றீர்கள் என்பதுதான்
முக்கியம்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அவை
உறுதிமொழி அளித்து வருகின்றன. "பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு'ம் ஒரு
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் மிகப் பெரியதொரு
அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதை மக்கள் புரிந்து கொள்வது கடினம்
என்று தெரிந்தவுடன், அதை மாற்றி சிறிய அளவில் வெளியிட்டுள்ளனர்.
அவர்களுடைய தேர்தல் அறிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, ஒருநாள்
காங்கிரசுக்கென்று தேர்தல் அறிக்கையே இல்லாமல் போய்விடும். நான்
அனைத்துக் கட்சிகளுக்கும் சவால்விட்டுச் சொல்கிறேன். நீங்கள் ஒரு குழுவை
அமைத்து, எந்தத் தேர்தல் அறிக்கை மிகச் சிறப்பாக இருக்கிறது என்று ஆய்வு
செய்யுங்கள். எங்கள் தேர்தல் அறிக்கையே மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும்
என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. அனைத்துக் கட்சிகளும் தங்கள்
தேர்தல் அறிக்கையில் மக்களுக்குப் பலவற்றைச் செய்வதாக உறுதி அளித்துள்ளன.
உறுதிமொழி அளிப்பது எளிது. ஆனால், செய்வது கடினம். தேர்தல் அறிக்கைகள்
வெறும் உறுதிமொழிகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அது பிரச்சினைகளைப்
பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை
இத்தகைய தன்மையோடு இருக்கின்றதா?…

வரவிருக்கின்ற தேர்தலில், "பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' மூலம் நாம்
வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறோம். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு,
அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதொரு அமைப்பாகும். ஒவ்வொரு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.
யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. "சமார்'களும் "பாங்கி'களும்
சமமானவர்களே. நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்; நமக்கிடையே வேறுபாடுகள்
பார்க்கக்கூடாது. அனைத்து ஆண்களும் பெண்களும் எல்லாவற்றையும் ஒருபுறம்
வைத்துவிட்டு, தேர்தல் அன்று வாக்களிக்கச் செல்ல வேண்டும். ஏற்கனவே
நம்முடைய வாக்குகள் போதிய அளவுக்கு இல்லை; நாம் போதிய அளவில்
வாக்களிக்கவில்லை எனில், அது நமக்கு நல்லதல்ல. நம்மைப்
பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லாமல் போய்விடுவர். தேர்தல் நாள்
பட்டியல் சாதியினருக்கு வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிக்கும் நாளாகும்.

வரவிருக்கும் தேர்தலில், நமது கூட்டமைப்பின் சின்னம் யானை. நம்
மக்களுக்கு எந்தக் குழப்பம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் இதைத்
தேர்ந்தெடுத்தேன்… பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்காக நம்மை அணுகியுள்ளன.
ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
நாம் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து
ஒரு முறைக்குப் பலமுறை சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால், கூட்டணி
அமைத்தாக வேண்டிய சூழல் நிலவுகிறது.

இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால்,
ஆயிரக்கணக்கான மக்கள் டில்லி, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும்
பல்வேறு இடங்களில் இருந்து என்னிடம் தங்களின் குறைகளை முறையிடுகிறார்கள்.
சிலர் தாங்கள் பண்ணையார்களால் தாக்கப்படுவதாகவும், இது குறித்து அரசிடம்
முறையிட்டால் அதிகாரத்தில் உள்ள சாதி இந்துக்கள், பாதிக்கப்பட்டவர்கள்
மீதே நடவடிக்கை எடுப்பதாகவும் சொல்கிறார்கள். இதைப்போன்ற எண்ணற்ற
குற்றப்பத்திகைகளைத் தனியொருவனாகத் தீர்க்க முடியாது. இதனால், மக்கள்
அனைவரும் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.

இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஓர் அலுவலகத்தை
டில்லியில் நிறுவ இருக்கிறேன். உங்களின் குறைகளைத் தீர்க்கவும், ஆலோசனை
சொல்லவும் ஒருவரை அங்கு நியமிக்க இருக்கிறேன். இதற்கென புது டில்லியில்
ஏற்கனவே ஓர் இடத்தை வாங்கிவிட்டேன். இந்த இடம் கூட்டமைப்பின் தலைமை
அலுவலகமாகவும் செயல்படும். இவ்விடத்தில் கட்டடத்தை எழுப்ப போதிய பணவசதி
இல்லை. எனவே, இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற, நீங்கள் உங்களால் இயன்ற
பணத்தை இம்மய்யத்திற்கு அளித்து உதவுங்கள். இதன் மூலம் நம்முடைய நோக்கம்
நிறைவேறும்.

(28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை)

Saturday, February 27, 2016

அம்பேத்கர் பார்வையில் இந்திய மார்க்சியம்

புரட்சியாளர் அம்பேத்கர் மார்க்சியம் குறித்த தன் சிந்தனையில் சமூக
நலன்களை எதிர்பார்த்து உரசிவிடத் தயங்கியதில்லை,கம்யூன­ிஸ
சித்தாந்தத்தில் சாதிய பாகுபாடுகளும்,தீண்டா­மைகளும் இல்லையென்றாலும்
சாதியத்தை வேரறுப்பதற்கான சிந்தனைகள் இந்தியத்திலும்,இந்தி­ய
மார்க்சியத்திலும் முற்றுப்பெறாததாக இருக்கிறது என்கிறார் அம்பேத்கர்.
தீண்டாமை ஒழிப்பை மிக முக்கியானதாக அம்பேத்கர் திட்டவட்டமாக கருதினார்.
லெனின் இந்துஸ்தானில் பிறந்திருந்தால் முதலில் சாதிய வேறுபாடுகளை ஒடுக்க
பாடுபட்டிருப்பார், தீண்டாமை முற்றிலும் அவரால்
ஒழிக்கப்பட்டிருக்கும­்-(1926) என்கிறார் அம்பேத்கர். இவை இரண்டையும்
செயல் வடிவில் கொண்டுவராத மார்க்சியம் ஓர் மகத்தான புரட்சியை
முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் அம்பேத்கர் கருதினார். மேலும்
திலகர் ஒரு தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தால்
"சுதந்திரம் எனது பிறப்புரிமை" என முழக்கமிடாமல் தீண்டாமையை ஒழிப்பதுதான்
முதல் கடமையென திட்டவட்டமாக கூறியிருப்பார். லெனின்-திலகர் இவர்களை பற்றி
கூறும் போது அம்பேத்கர் சாதி ஒழிப்பினைதான் முதன்மையான புரட்சியெனவும்
அதற்கான முக்கியத்துவத்தையும்­ தெளிவுபடுத்துகிறார்.­ புரட்சி,சுதந்திரம்
என்பதை விட சாதி ஒழிப்பும், சமத்துவத்தை விரும்புவதும் மட்டுமே மக்கள்
விடுதலையென முழக்கமிடுகிறார் அம்பேத்கர். புரட்சியும் , சுதந்திரமும்
அரசியலை அடிப்படையாக கொண்ட மார்க்சிய சிந்தனைகளின் இயக்கப் பணிகள். ஆனால்
இந்தியத்தில் அரசியல் புரட்சியை விட சமூகப்பணியும், சமத்துவப் பணியும்
முக்கியமானது அதுவே பாட்டாளி வர்க்கத் தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை
பெற்றுத்தரும் என்று அம்பேத்கர் விடாப்பிடியாக இருந்தார். இந்தியாவில்
இந்து சமூக அமைப்பு முறையானது நால்வர்ண சாதிகளாலும் பல்வேறு
உட்சாதிகளாலுப் கடைசியாக தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட மக்களை பஞ்சமர்கள்
சாதியாலும் (Mr.காந்தி எங்களை ஹரிசன் என இழிபடுத்துகிறார்) பிரித்து
வைக்கப்பட்டிருக்கிறத­ு. இந்தப் பிரிவினைகள் என்றும் வேற்றுமைகளாக
மட்டுமல்லாது அடுக்கு முறையிலான ஏற்றத்தாழ்வுகளை கொண்டது சாதிகள்
ஒவ்வொன்றும் பிற சாதிகளை மிகக் கீழாக நடத்துகின்றன. சந்தேகப்பார்வையை
அவைகள் விதைக்கின்றன. இந்திய சாதிய அமைப்பு முறை ஒழிக்கப்பட்டால் சிலர்
அதிகாரம் இழப்பார்கள்,சிலர் அங்கீகாரம் பெறுவார்கள் . அதனால்தான் இந்து
சமூக அமைப்பில் பாட்டாளி வர்க்கத் தொழிலாளார் ஒற்றுமை உணர்வை
காணமுடிவதில்லை. இந்திய மார்க்சியம் அவ்வாறு பாட்டாளிகளின் ஒற்றுமையை
உண்மையாக விரும்பியிருந்தால் வர்க்க முரண்பாடுகளுக்கு உண்மையில் தீண்டாமை
என பெயரிட்டிருக்கும். சாதிய அமைப்பு முறை என்பது வேலைப்பகிர்வு
,வேலைப்பிரிவு என்பது மட்டுமல்ல அது தொழிலாளர்களையே பிரிக்கிறது
என்கிறார் அம்பேத்கர். சாதி என்பது வேலையை மட்டும் பிரிக்காமல் வேலை
செய்பவர்களையும் பிரிக்கிறது. இந்தப் பிரிவினையானது மதச்சட்ட
அடிப்படையிலும் மனுதர்ம சாதிய அடிப்படையிலும் உயர்வு,தாழ்வு என்கிற
கற்பனை அடிப்படையிலும் வகுக்கப்பட்டுள்ளது. எனவே சுரண்டப்பட்ட ஒரு ஏழை
சாதி இந்துவின் மீதுள்ள சாதி வெறியரின் சமூக அந்தஸ்து சமமாக இருக்க
முடியாது . பார்ப்பன வேலையாட்களுக்கும் தலித் தொழிலாளிகளுக்கும் இடையே
உள்ள சமூக ஏற்றத்தாழ்வையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் . இந்த
ஏற்றத்தாழ்வை கொஞ்சமும் கவனிக்காமல் புறக்கணித்த பொதுவுடமை இந்திய
மார்க்சியம் இவற்றுக்கெதிரான சாட்டையை எடுக்காததையும், லெனினியப்
பார்வையில் இருந்து இந்திய பொதுவுடமை விலகியதையும் அம்பேத்கர்
கண்டிக்கிறார். "தொழிற்சங்கவாதிகள் முதலாளித்துவத்திற்கு­ எதிராக அழகாகப்
பேசுவதை நான் கேட்டிருக்கிறேன் ஆனால் பார்ப்பானிய சாதி இந்துக்களுக்கு
எதிராக எந்த தொழிற்சங்க வாதியும் பேசியதை நான் கேட்டதில்லை (1938) என
அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அவரை பொருத்தவரை முதலாளித்துவம்
எந்தளவிற்கு சுரண்டல் சக்தியாக இருக்கின்றதோ அந்த அளவிற்கும் அதற்கும்
மேலாகவும் பார்ப்பானியமும் ஒரு சுரண்டல் சக்திதான்
என்கிறார்.ஏற்றத்தாழ்­வான இந்து சமூக அமைப்பானது தலித்துகளை அடிமைபடுத்தி
அவர்களை சுரண்டி எடுக்கிறது. பார்ப்பானியத்தில் நிலைநாட்டப்பட்டுள்ள
அடுக்குமுறை சூழலை எதிர்த்து பேசாதவரை இந்திய மார்க்சியம் காலத்திற்கு
நிற்காது அது படிப்படியாக தன் கோட்பாடுகளை இழந்து அழிந்துபோகும். இந்திய
மார்க்சியம் அவ்வாறான அழிவை விரும்பாது எனவும் நான் கருதுகிறேன்
என்கிறார் அம்பேத்கர். மேலும் இந்திய மார்க்சிய பொதுவுடமை சித்தாந்த
வாதிகள் மட்டும் மதத்தை பற்றியும்,கடவுளை பற்றியும் வெளியே உண்மையை பேச
ஆரம்பித்து விட்டார்கள் என்றால் இன்றைய சூழலில் (அதாவது 1929) ஒரு
தொழிலாளிகூட அவர்கள் பின்னால் செல்லமாட்டார்கள்-அம்­பேத்கர். இங்கே
காலச்சூழலுக்கு ஏற்ப மார்க்சியம் அது தன்நிலையிலிருந்து மாற்றிக்கொண்டு
தற்போதைய முதன்மை எதிர்ப்பு தீண்டாமை என்பதாக முன்னெடுத்துச் செல்லும்
பல்வேறு செயல்வடிவங்களையும், புரட்சி போராட்டங்களையும் முன்னெடுத்துச்
செல்லும் ஒரு முதன்மையான சமூக சிந்தனையை பெற்றிருக்கும் சக்தியாக
உறுவாக்கப்பட்டுவிட்ட­து என்பதையும் இந்தியத்தில் எல்லா பகுதிகளிலும்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்கிற அமைப்பை உறுவாக்கிவைத்துள்ளது­
என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியமாக இருக்கிறது.

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...