Showing posts with label ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல். Show all posts
Showing posts with label ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல். Show all posts

Friday, March 27, 2015

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .4 (பொருளாதார நிலை மற்றும் ஊடகப்பொறுப்புநிலை)

குடும்ப உறவுநிலைச் சிதறல்களுக்கு முக்கிய பங்காக மேற்கண்ட இரண்டையும்
குறிப்பிடலாம் பொருளாதார நிலை இதில் தனிப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி
விடுகிறது என்று கூடச் சொல்லலாம் என்னதான் கடும் உழைப்பினை செலவிட்டாலும்
அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் நிலையையே மக்கள் பெற்றுள்ளனர் ஒரு
மனிதனுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவன்தன்
குடும்பச் சுமையை பிரித்தாளும் சக்தியாக மாற்றியக்கொள்ள இயலாதென்பது
இன்றையச் சூழலில் வெட்டவெளிச்சமாக்கப்ப­ட்டுள்ளது ஒரு மனிதன் தன்
குடும்பச் சுமையை இலகுவாக்க உழைக்கின்ற போது ஊதியத் தட்டுபாட்டால்
தன்குடும்ப உறுப்பினர்களை வெகுவாக தளர்த்திவிட நினைக்கிறான் அதன் பின்
தன்னுடல் தன்வாரிசு தன்மனைவி என்ற சூழலில் அவன் வாழமுற்படுகிறான் இதன்
விளைவாகத்தான் இன்று முதியோரில்லங்கள் பெருகிக்கொண்டிருக்க காரணமாக
அமைகின்றது இது நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் நடவடிக்கையாக
இருக்கின்றது இதுவே ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்கள் தனக்கே
வருமானமில்லாச் சூழலில் அல்லாது உழைப்பிற்கான ஊதியப்படி தனக்கான
குடும்பச் சூழலை தாங்கிப்பிடிக்க போதுமானதாக இல்லாநிலையில் குடும்ப
உறுப்பினர்களை தெருவில் அனாதைகளாக விட்டுவிடுவது உறவுகளை புறந்தள்ளும்
நடவடிக்கைகளுக்காக வன்முறை மற்றும் குற்றச்செயலில் ஈடுபடுவது போன்ற
செயலில் ஈடுபடுகிறார்கள் இதில் நடுத்தர மற்றம் மேல்தட்டு மக்களும்
மறைமுகமாக செய்கின்றனர் ஆனால் அது வெளிவருவதில்லை காரணம் தனக்கான
அந்தஸ்த்து சமூகத்தில் பாதிக்கப்பட்டுவிடுமெ­ன்ற சூழலில் மறைமுகமாக அந்த
சமூகத்திற்கே தெரியாமல் குடும்பச் சிதைவு நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றார்கள் மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் செயலும்
ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்களின் செயலும் ஏறக்குறைய ஒன்றாகவே
கருதப்பட வேண்டும் இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடும்ப உறவுநிலைச்
சிதறல் வெளிப்படையாக நிகழ்வதால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை அது
நிகழ்த்திவிடுகிறது இதனை நியாயப்படுத்தும் நோக்குடனே சமூகம் நகர்ந்து
கொண்டிருக்கின்றதென்ப­தை நம் கண்முன்னே கானுகின்றோம்
இதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் இன்றையச் சமூகம் நகர்கிறது அல்லது
நியாயப்படுத்துகிறது ஒரு குடும்பச் சிதறலினால் ஒட்டுமொத்த சமூகமும்
பாதிப்படைகின்றது இதனை ஒரு விதத்தில் தூண்டிவிட்டு தனது ஓட்டினை
தக்கவைத்துக் கொள்ளும் அரசியலும் அரசியல்வாதிகளும் கூட ஓர்
சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்த மறுக்கிறார்கள் காரணம் அதில் ஆதாயம்
இருப்பதனால் அன்றாட நிகழ்வுகள் நாம் உற்று நோக்கினால் ஒரு புறம் விலைவாசி
உயர்வு தொழில்முனைவோருக்கான வேலைவாய்ப்பின்மை அப்படி பணிகிடைத்தாலும்
உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை என பல பொருளாதார தடைகளால் வெகுசன மக்கள்
தங்கள் குடும்பச் சிதைவினை நியாயப்படுத்தியே நகர்வதை நாம் கானலாம் சமூக
கட்டமைப்பில் இவ்வாறான உறவுநிலைச் சிதறல்கள் ஏற்படா வண்ணம் பொருளாதார
பகுப்பாய்வு, உழைப்பிற்கான உண்மை ஊதியம், அரசியல்நிலை, வறுமைக்கான
காரணங்கள் அக்காரணத்திற்கான தீர்வுகள் என்று அலசி ஆராய வேண்டிய அவசியம்
மக்களுக்கும் மக்களை வழிநடத்தும் அரசிற்கும் அவசியத் தேவையை உணரும்
தருவாயில் நாம் இன்னும் அடியெடுத்து வைக்கவில்லை என்பதே சமூக இழிவிற்கு
தானாகவே வழிவகுத்துவிடுகிறது இவையெல்லாம் ஒருபுறமிருக்க இந்த
சமூககட்டமைப்பை உடைத்தெரிய முற்படும் ஊடகமும் இதற்கு நேர்மாறாய் தனது
பணியை தொடர்கிறது அன்றாட நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் பத்திரிக்கைகளும்
ஊடகங்களும் தங்களுக்கான இன்றை விளம்பரச் செய்தி கிடைத்திருக்கிறது என்று
எண்ணி தினமும் கொலை கொள்ளை வன்முறை வண்கொடுமையென படிப்படியாக
கட்டவிழ்க்கப்படும் சமூகசீர்கேட்டு நிகழ்வுகளை மட்டும் படம்பிடித்துக்
காட்டி தனது கடமை முடிந்துவிட்டதென நினைக்கிறது அந்நிகழ்வுகளுக்கான
காரணவகைகள் தீர்வுகள் அவற்றை நிறுத்த அரசு என்னென்ன நடவடிக்கைககள் எடுக்க
வேண்டுமென்று எடுத்துக் கூறும் தனது கடமையிலும்
தவறவிட்டுக்கொண்டிருக­்கிறது இதில் அரசியல் சாதிமத பாரபட்சம்
பார்க்கப்படுகிறது என்ற உண்மையும் ஊடகத்தின் மீதான அவநம்பிக்கையை
வளர்த்தெடுக்கிறது இன்று பெருமக்களால் பார்க்கப்படும் விவாதங்கள் மற்றும்
குற்றங்களுக்காக சுமூகத் தீர்வு காணுவாதாக பொய்ப்பிம்பம் கொண்டுள்ள
தொலைக்காட்சி பஞ்சாயத்துக்களில் வெகுசன மக்கள் வறுமையிலும் சமூகத்தால்
ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்களே கலந்துகொள்கிறார்கள் அவர்களை
தேடிப்பிடித்து தங்களது விளம்பர யுக்தியை ஊடகங்கள் கையாளுகின்றன என்பது
வெளிப்படையாகவே தெரிந்து கொள்ளலாம் இது ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதிக்கும் நடவடிக்கை என்பதை ஊடகங்களுக்கு தெரிந்தும் தங்களது இலாப
நொக்கிற்காக மக்களை பலியாக்குகிறார்கள் இதிலிருந்து ஊடகங்கள் வெளியேற
முற்பட வேண்டும் அரசு அனாதை இல்லங்களையும் முதியோர் இல்லங்களையும்
நியாயப்படுத்துவதிலிர­ுந்து வெளியேறி மக்களுக்கான உண்மைத் தீர்வுகளை
கண்டறிய முற்படவேண்டும் அரசியலாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க
வேண்டும் ஒரு குடும்பம் சிதறினால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதிக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும் இது ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச்
சிதறலென்ற தலைப்பினை தாங்கியிருந்தாலும் அனைத்து மக்களுக்குமான ஓர்
அரைகூவலாகத்தான் தீர்வுகளைத்தேடி இச்சமூகம் முன்னேற்றப்பாதையில்
சென்றுவிட வேண்டும் என்பதற்கான முழுப்பங்களிப்பையும் நாம் தந்துவிட
கடமைபட்டுள்ளோம்.


முற்றும்.

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .3 (கல்வி மற்றும் சுய அறிவின்மை)

ஒரு குடும்பம் எந்தச் சூழலிலும் சிதறாமல்
இருப்பதற்கு அவர்களின் சுயபுத்தியும்
அறிவுத்திறனும் வளர்த்தெடுக்கப்பட
வேண்டும் அதற்கு முதன்மையாக அவர்கள்
கல்வியறிவு பெறுதல் வேண்டும் ஆனால்
அக்கல்வி பெறுவதிலும்
முரண்பாடுகளை வைத்துள்ள நாம்
எப்படி சுயசிந்தனையுடன் நடந்துகொள்ள
முடியும் இதுதான் குடும்பம் இப்படித்தான்
குடும்பம் இருக்க வேண்டுமென்ற
சூழலை கல்வியறிவில்லாமல் அவர்களால்
பிரித்தெடுத்து பகுத்தாய்வு படுத்த
முடியாது இதற்கு ஆதிகாலம் முதல்
அண்மைக்காலம் வரை கல்வியில் உள்ள
ஏற்றத்தாழ்வுகளும் காரணமாக
அமைகின்றது ஒரு சாரருக்கு கல்வி கற்கும்
உரிமையும் மறுசாரருக்கு அதற்கான
உரிமை மறுப்பும்
அன்றிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது கலை இலக்கியம்
தமிழ்க்கலாச்சாரம் பேணிகாத்த ராஜராஜ
சோழகாலத்தில் தான்
தமிழ்க்கல்வி புறந்தள்ளப்பட்டு சமஸ்கிருதம்
வளர்ச்சி பெற்றதும் அக்காலத்தில் தான்
குருகுலக்கல்வியில் வருணபேதம்
அதிகமாக அமல்படுத்தப்பட்டதென்றும்
வரலாறு குறிப்பிடுகின்றது இது தமிழ்மொழிச்
சிதைவு என்றும் சொல்லிவிட
முடியாது தமிழுக்கும் முக்கியதும்
கொடுக்கப்பட்டது ஆனால்
சமஸ்கிரதமொழியின்
சார்பினை தமிழ்மொழி என்ற போக்கில்
உறுவாகிய ஓர் காலக்கட்டம்
அவ்வாறு ஆரியர்கள்
தமிழர்களை நம்பவைத்த காலகட்டத்தில்
கல்வி மறுக்கப்படும்
போது வியப்பேதுமில்லை
இதே சூழல் இன்றளவும்
நடைபெறுகின்றது ஆனால்
அது கண்ணுக்கு புலப்படா மறைமுகமாக
நடைமுறைபடுத்தப்படுகிறது ஆக
கல்வியில் புறந்தள்ளிய மக்கள் குடும்ப
உணர்வுகளை எப்படிச் சரியாக பார்க்க
முடியும் ஒருபுறம் கட்டாய கல்விமறுப்பும்
இன்னொரு புறம் வறுமையும்
சேர்ந்து வாழ்வதெப்படி என்ற மன
உலைச்சலில் தான் பெரும்பாலான
குடும்பங்கள் சிதறிக்கொண்டிருக்கிற­
து ஒருவனுக்கு தேவையான
மூன்று வேளை உணவிலேயே அவனுக்கு இருவேளை அல்லது ஒருவேளை உணவுக்கே அவன்
கஷ்ட்டப்படும் வேளையில் குடும்ப
உறுப்பினர்களை வெளியேற்றுவது அல்லது துரத்துவதைத்
தவிற அவனுக்கு வேறுவழித்
தெரியல்லை நம்மால்
முடியாததை அவனே பெற்றுக்கொள்ளட்டும்
என்ற மனநிலையில் கூட இச்சூழல்
அவனை தள்ளப்பட்டிருக்கலாம்
ஆது விலங்கின
யுக்தி என்று சொல்வார்கள் எவ்வாறெனில்
எந்த ஒரு விலங்கினும் தன் இறுதிக்காலம்
வரை தன்னால் பெற்றெடுத்த சேயுடன்
காலம்
கழிப்பதில்லை கருவிலிருந்து வெளிவந்த
சேயானாது தனது உதவிநாடும் வரையில்
தான் தாய் தன்னுடனே வைத்திருக்கும்
பின்பு சிறிது வளர்ந்தவுடன் தனியாக
உணவுதேடிச் சென்றிவிடுமாறு தாய்
துறத்திவிடும் அல்லது விரட்டிவிடும்
அதற்குப் பின்பு தாய் சேய் என்பதற்கான
உறவு விரட்டிவிடப்பட்ட
நாளிலிருந்தே முடிவுக்கு வந்துவிடும்
தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்
இதே போலத்தான் மனிதச்சமூகமும்
நடைமுறைப்படுத்துறது இதில்
எது நல்லது எது கெட்டதென்று தெரியாமல்
இயற்கையுடன் போரிடத்
துணிவில்லா விலங்கின
அறிவை கல்வி மற்றும் சுய
அறிவின்மையால் மனிதன்
பெற்றுவிடுகிறான்.
அவனுக்கான அந்த
சுயபுத்தியை வளர்த்தெடுக்க
முற்படவேண்டுமானால்
மனிதனை புறந்தள்ளி அவனுக்கான
அடிப்படி உரிமைகளை மறுக்கும்
சமூகத்திலிருந்து அவனை மீட்டெடுக்க
வேண்டும். மனித
ஆசைகளை நிர்ணயிப்பதில்
பெரும்பங்காற்றிவருவது பசியும்
பசிசார்ந்த தீர்வுகளும் தான் அளவான
பசிக்கு அவன் தேடிக்கொள்ளும்
உணவுத்தீர்வானது சரிபட நிலையில்
இல்லாதபோது அவன்
தன்குடும்பத்தையே வெறுக்கும்
சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறான்
என்னதான்
அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்திய
போதும் கல்வியும் அத்திட்ட தீர்வுகளும்
அவனிடம் சரியாக
போய்ச்சேரவில்லை என்பது மறுக்க
முடியாத உண்மை தன்னுடைய
தேவைக்கு அதிகமாக அவன்
வைத்திருக்கின்ற போது அவன்
உறவு சார்ந்தவர்கள் தானாக கூடுவதும்
இந்த அடிப்படையிலான
மூலகாரணமாகத்தான் இருக்கும்
"பணம்பெற்றவனுக்கு பாச உறவுக்கள்
தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
என்று வழக்க மொழிகளில் சொல்வார்கள்
அதாவது ஒட்டுண்ணி உயிரினத்திற்கு இணையாக
இதை பயன்படுத்துவார்கள் ஆக
இங்கே உறவுநிலைச்
சிதறல்களுக்கு பணமின்மை வறுமை கல்வியறிவின்மை ஆகிய
காரணிகள்
மேலோங்கி நிற்கிறது (இவை அதிகப்படியாக
கிடைக்கின்ற போதும் ஆபத்தாக
அமைகின்றது) தேவையின்
அளவு பசிக்கான தீர்வு கல்விக்கான
அடிப்படை கட்டமைப்பு ஆகியவை ஒரு சமூகத்திற்கும்
சமூக உறுவக மூலக்கூறான
குடும்பத்திற்கும் நிச்சயம் பரந்த அளவில்
அளிக்கப்பட வேண்டும்
ஒரு குடுபத்தலைவன் தனக்கான
தேவைக்கும் அவன் குடும்பத்திற்கான
தேவைக்கும் இரண்டிற்கும்
சேர்த்து உழைக்கின்றான் இதில்
ஒன்று நிறைவேறாவிட்டாலும்
அல்லது இரண்டுமே நிறைவேறாவிட்டாலும்
அவன் சிந்திக்கும்
சக்தியை இழந்துவிட்டு மிருக
வாழ்வை மேற்கொள்கிறான் இதற்கான
தீர்வுகள் என்னென்ன எவ்வாறு இதைச்
சரிச்செய்வதென்று சிந்திக்கும்
ஆற்றலை அவனுக்கும் அளிக்கும்
முதன்காரணி கல்வியானது அவன்
பெறவில்லை அல்லது பெறப்படுவதற்கான
வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனும்
போது இக்குடும்ப உறவுநிலைச்சிதறல்
என்பது தொடர்ந்து நடைபெற்றே கொண்டிருக்கிறது எந்த
குடும்பமும் சிதறிக்கொண்டிருக்கும்
சூழலை பெற்ற
ஒரு குடும்பத்தை அப்படியே உள்வாங்கி அதையே நடைமுறையில்
நியாயப்படுத்தி செயல்முறைபடுத்தும்
சமூகச்சூழலில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த
மனநிலை ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதித்துவிடுகின்றது இதற்கான
அளவுகோளொ நமக்கு நாமே தீர்மானித்துக்கொள்ள
வேண்டும்.


தொடரும்.....
--

Thursday, March 26, 2015

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .2 (சமூக கட்டமைப்பின் சாரம்) :

உறவுகள் சிதறிக்கொண்டிருக்கும்
இன்றையச் சூழலில் அதற்கான
காரணங்களைத் தேடி புலப்படுத்த
வேண்டியது அவசியமாகிறது இதன்
மூலக்காரணி அல்லது கரு என்னவென்று பார்த்தோமானால்
முதல்தொடக்கமாக "சமூக கட்டமைப்பு" தான்
மேலோங்கி நிற்கிறது ஒரு சமூகம்
எவ்வாறு உறுவாக்கப்பட்டது அதன்
சாரம்ஸம் என்ன அது எந்தநிலையில்
உறவுச்சிதறல்களுக்கு உருதுணையாக
இருக்கிறது என்பதை நாம் அறிய
வேண்டும் அந்த நிலையில் ஒரு சமூகம்
எந்த அடிப்படையில்
உறுவாகிறது என்று பார்த்தோமானால்
பெரும்பாலும் அது நகரமாக இருந்தாலும்
சரி கிராமமாக இருந்தாலும்
சரி வளர்ச்சிபெற்ற ஒர் நவநாகரீக நகரமாக
இருந்தாலும் அவை கட்டமைக்கப்படும்
விதம் வருணாசிரம சாதியப்
படிநிலை எவ்வாறு படிப்படியாக
பட்டியலிடுகின்றதோ அவ்வாறே சமூக
கட்டமைப்பும் படிப்படியான
படிநிலைகளுடனே தான்
கட்டமைக்கப்படுகிறது உதாரணமாக ஓர்
கிராமத்தை எடுத்துக்கொண்டோமானால்
அங்கே முதலாவதாக குடியிருப்பவர்கள்
பிராமிணர்கள் இரண்டாவதாக அந்த
கிராமத்தில் எந்த ஆதிக்க சாதியினர்
(வருணாசிரம அடுத்த படிநிலையாளர்கள்)
எவரோ அவர்கள் இருப்பார்கள் இது "ஊர்"
என்று அழைக்கப்படும்
மூன்றாவது இவர்கள் இருவருக்குமான
அடிமைச்சமூகமான தலித்துகள் தனியாக
ஒதுக்குப்புறமாக (ஊருக்கு வெளியே)
"சேரி" அல்லது "காலனி" என்ற
அடையாளத்துடன் வசித்து வருவார்கள்
இதுவே கிராமம் என்று அழைக்கப்படும்
இதைப்போலவேதான் நகரம் மாநகரமும்
அமைந்திருக்கும் ஒரு வித்யாசம்
என்னவெனில் நகரமும் மாநகரமும்
நவநாகரீகப் போர்வையில் மறைமுகமாக
இக்கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஆக
இந்தச் சமூக கட்டமைப்பில் ஒருவருக்கும்
இன்னொருவருக்குமான
தொடர்பு என்பது அடிமையை விடுத்து வெறெந்த
உறவுநிலையும் இருக்காது ஊர் மக்களின்
பிரச்சனைக்கு சேரியும் சேரி மக்களின்
பிரச்சனைக்கு ஊரும்
ஒன்றுகூடுவதில்லை ஒரு பரஸ்பரத்தை உருவாக்குவதில்லை மாறாக
இவர்களுக்கிடையேயான மோதல்கள்
கலவரங்கள் உயிருழப்புகள் தான்
அதிகமாக இருக்கும் இதில் பெரும்பாலும்
பாதிப்புக்குள்ளாவது சேரி மக்களாகத்தான்
இரூக்கிறார்கள் இது தான்
சாதியக்கலவரமாக வெடிக்கிறது ஆக சமூக
கட்டமைப்பில்
ஒருவருக்கு இன்னொருவருக்குமான
உதவுதல் பாசம் காட்டுதல்
அறிவுறை வழங்கள் அரவணைத்தல்
ஆகியவை இல்லாமல்
போகின்றது பொது வெளியான
சமூகத்திலேயே இவைகள் அனைத்தும்
புரந்தள்ளப்படும் போது குடும்கங்களில்
புரந்தள்ளப்படுவது என்பது வியப்படைய
வேண்டிய விஷயமாக இல்லை இதனால்
எந்த தலையீடுகளும் இல்லாமல்
ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைகள்
எளிதாக
முறிந்துவிடுகிறது அங்கே எவ்வித
ஒத்துழைப்பும் நடைபெறம்
சாத்தியக்கூறுகள்
இல்லாதநிலையாகிறது இன்னும்
சற்று ஆழமாக பார்த்தோமானால் ஓர் குடும்ப
உறவுநிலைகள் பாசத்திற்காகவும்
ஆதரவிற்காகவும்
அங்கே யாருமில்லை என்றச்சூழலை அறிந்த
பின் தான் உறவுச்சிதறல்
உறுவாகிறது இவைக்கள் பெரும்பாலும்
தனக்கான ஆதரவுக் களமாக இருந்த
கிராமம் தங்களை ஒதுக்கிவைத்திருக்கிற
து இனி எந்த காலத்திலும் எந்த
பிரச்சனையிலும்
அவை பரிந்து வந்து தீர்வு கானும்
நடவடிக்கைகளில் ஈடுபாடாது என்ற
ஆணித்தரமான நம்பிக்கையில் தன்
குடும்ப உறவுகளை சிதறடிக்கின்றது ஒர்
எளிமையான வழக்கச் சொல்
ஒன்று சொல்வார்கள் 'தனியாக
புலம்பி தெருவுக்க
வந்துட்டா அது சபைக்கு வந்த சேதிதான்'
என்று சொல்வார்கள் குடும்பத்திற்கள்
ஒரு வீட்டினுள் நடைபெற்ற
உறவுச்சிதறலுக்கான
சண்டை தெரிவிற்கு வந்துவிட்டால்
அது சமூகப்பிரச்சனையாகிறது அச்சமூகப்பிரச்சனையை எட்டி கூட
பார்க்காத வேடிக்கை பார்த்தால் கூட
தீட்டு என்ற வழக்கத்தில் சமூத்தீர்வு கான
ஊரார்கள் வரமாட்டார்கள் என்ற
தைரியத்துடனேதான் பல
குடும்பச்சிதறல்கள்
நடைபெறுகிறது இதற்கு சட்டமும்
பஞ்சாயத்துகளும் துணைபோகிறது
பல குடும்பங்கள் ஒன்றினையும்
கட்டமைப்பு முறையில்தான் சமூகம்
அல்லது சமுதாயம் உறுவாகும்
என்பது விதி
ஆனால் இங்கே அந்த குடும்பங்கள்
சிதையுண்டு சிதறிக்கிடக்கின்ற
வேளையில் சமூகம் அல்லது சமுதாயம்
எப்படிச்சாத்தியமாகும்
இன்று பெரும்பாலும் சமுகம்
அல்லது சமுதாயம் என்ற
வார்த்தையே சாதித்சமூகம் சாதிச்சமுதாயம்
என்றாகிவிட்ட
சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது ஆண்டான்
ஆளுமையாளன் ஆதிக்கன் என்ற ஒருவன்
இருப்பானெனில் அடிமையாளன்
அடிமைக்காரன் என்ற
ஒரு எதிர்வினை இருக்கத்தானே செய்யும்
ஆண்டச்சமூகம் இருக்கையில்
அடிமைச்சமூகம்
ஒன்று இருக்கத்தானே செய்யும் சமுகம்
என்ற காந்தத்தில் வடதுருவம் தென்துருவம்
என்ற ஆண்டான் அடிமைச்
சாதியத்துருவங்கள்
இருக்கச்செய்துவிட்டது நாம்தான்
அதை இணைக்கமுடியாமல்
திணறிக்கொண்டிருப்பவர்களும் நாம்தான்
இதில் அடிமைச்சமூகத்தின்
வாழ்வுச்சிதறல்களை பெரும்பாலும்
நிர்ணயிக்கும் சக்தியாக
ஆண்டச்சமூகமென சொல்லிக்கொள்பவர்கள்
நிர்ணயிக்கிறார்கள் ஆக
ஒரு குடும்பச்சிதறலில் ஆதிக்கர்களின்
மறைமுகச் சாதியத் தலையீடுகள்
இல்லாமல்
பிரிந்து போய்விடமுடியாது என்று சொல்லலாம்
இங்கே மறைமுகச் சாதியத்தலையீடுகள்
என்பது சமூககட்டமைப்பை குறிக்கும்
அவர்கள் குடும்பச்சிதறலில்
நடைமுறைப்படுத்தும்
தலையீடாக்கொள்கையே இங்கு மறைமுகத்
தலையீடாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்
ஒரு குடும்பத்தில் இயல்பாக
ஒரு உறவுநிலைச் சண்டை வருகிறதென
எடுத்துக்கொள்வோம்
அவை அக்குடும்பத்தை வெகுவாக
பாதித்தி கொஞ்சம் கொஞ்சமாக
முன்னேறி வீதி வரை வந்துவிட்டதென
வைத்துக்கொள்வோம்
வீதிவரை வந்து விட்டாலே அப்பிரச்சனை சமூகத்தை பாதிக்கும்
அல்லது வேறேதும் அதே போல்
பிரச்சனை உருவாகினால்
முன்னதாகவே நடைபெற்றுவிட்டதாக
மேற்கோள் காட்டி நியாயப்படுத்தும்
முயற்சிச் சமூக சீர்கேடாக உருவெடுக்கும்
சூழலுக்கு காரணமான
அப்பிரச்சனையை ஒட்டு மொத்த சமூகமும்
தீர்வைத்தேடி ஒத்துழைப்புத்தராமல்
ஒதுங்கி நின்று அடிமைச்சமூகம்
அழிகிறது இப்படித்தான் என்றும் அந்த
சமூகத்தைப் போல
இருக்காதே என்று தன்சொந்தங்களின்
தவறுகளுக்கு எடுத்துக்காட்டு உரைப்பதுமாக
(உதாரணமாக ,சண்டாளா
பறப்பயபுத்தி, சக்கிளிசவகாசம்,என்று
திட்டுவது ஆதிக்கர்களின் வழக்கம் )
சமூகம்
வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருக்
கிறது அதேபோல் அவர்கள் குடும்பத்தில்
நடந்தாலும் அதையே நியாயப்படுத்த
மறுக்கிறது மாறாக அப்போது தான் அது ஓர்
சமூகச் சீர்கேடாக முன்வைக்ப்படுகிறது ஆக
ஒரே முறையான குடும்பச் சிதறலுக்கான
மூலச்சண்டையானது இருவேறு பார்வையாகவும்
இருவேறு பின்புலத்தோடும் சுற்றி வரும்
சூழலில் சமூகத்தில் அக்குடும்பச்
சிறதலுக்கான
மூலச்சண்டையினை தீர்த்து வைக்கும்
சக்தியாக உருவெடுக்க
மறுக்கிறது இது மிகவும் விபரீத
அழிவை நோக்கி இன்று வேகமாக
வளர்ந்துவருகிறது இந்தியாவில்
தற்போது அதிவேகமாக தனித்து வாழும்
முறை வளர்ந்து கொண்டு வருகிறதென்றும்
குடும்பங்கள் பிளவுபட்டுக்கொண்டிரு
க்கிறது என்றும் அதில் பெரும்பாலும்
ஒடுக்கப்பட்ட
சிறுபான்மை மக்களே இடம்பெருகின்றனர்
என்றும் இந்திய சமூகக்
கூட்டமைப்பு (2011)ஆய்வறிக்கையில்
தெரிவிக்கின்றது இதன் சாரம்சம் சமூக
கட்டமைப்புதான் என்பது இப்போது நன்றாக
புலப்படும் ஓர் குடும்ப
உறவுநிலை சிதறலின்
பாதிப்பு ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதித்து பின் நடைமுறையில்
அதனை நியாயப்படுத்தும் செயலில்
அதேச்சமூகம் நகர்ந்து கொண்டு போகும்
பாதை அழிவுப்பாதையாக அமையும் ஓர்
குடும்பத்தின்
தாய்தந்தையரை விரட்டுவது குற்றம் சமூக
சீர்கேடு ஆனால் முதியோரில்லம்
அமைத்து அக்குற்றத்தினை நீயாயப்படுத்துவது போலத்தான்
இச்சமூககட்டமைப்பும் ஒடுக்கப்பட்டோரின்
உறவுநிலைச்சிதறில் மூலப் பொருளாக
அமைகின்றது.


தொடரும்......

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல்.1

சிதறும் உறவுகளால்
நிகழ்காலத்து காலவோட்டத்தினை நினைக்கையில் எங்கேயோ விழும் இடியானது மனித
தலைகளின் மீது விழுவதுபோல் பல்வேறு சம்பவங்களை இச்சமூகம்
சந்தித்துக்கொண்டிருக­்கிறது. பெற்றோர் பிள்ளைகளுக்கான உறவு, ஆசிரியர்கள்
மாணவர்களுக்கான உறவு , இளைஞர்கள் சமூகத்துக்கான உறவு ,கணவன் மனைவிக்கான
உறவு , என்று அனைத்தும் கேள்விக்குறியாகி இறுதியில் சமூகத்திற்கும்
மனிதனுக்குமான உறவு, என்ற முடிவில் புவியுலகு நம்மைநோக்கி கேலிப்பார்வை
வீசுவதை தவிர்க்கமுடியாததாகி விடுகிறது . ஒரு குழந்தையின் அழுகுரலை
அடக்கும் தாயைபோல் அல்லாமல் நமக்கும் இந்த சமூகத்திற்கும் இருந்த தொடர்பு
நிலை முழுவதுமாக அறுந்துபோகிறது. சிதறும் உறவுகளின் காரணகாரியம் எது?
எதனால் உறவுகள் சிதைவடைகிறது ? அதற்கான தீர்வுகள் என்ன ? என்பதை
எள்ளளவும் கவனியாமல் இயந்திர வாழ்க்கையை யாரோ இயக்க பொம்மைபோல நாமும்
கடந்து போகின்றோம் அவ்வாறான மனநிலையினை மாற்றிக்கொள்ளவும் இயலவில்லை.
ஒருநூற்றாண்டுக்கு முன்னால் பிற்போக்கான சூழல்கள் பல இருந்தாலும் அடுத்த
தலைமுறையினரை வளர்த்தெடுப்பதில் முற்போக்கு சூழலுடனே வளர்த்தெடுத்தார்கள்
, ஆசான்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த தொடர்புநிலையை பாட்டி
தாத்தாக்கள் சொல்ல கேட்டிருப்போம் அவ்வளவு நெருடலாகவும்
உணர்வுப்பூர்வமாகவும்­ இருக்கும். ஆனால் இன்று ஆசான்களுக்கும்
மாணவர்களுக்கும் இருக்கும் தொடர்பினை யாரிடம் கேட்டுத் தெரிந்து
கொள்வார்களோ தெரியவில்லை. திருமணம் முடிந்த அடுத்த நாளே முதிரோரில்லச்
சாலைகளின் முகவரிகளைத் தேடும் பணியை செய்துகொண்டிருக்கிறத­ு இந்த வளரும்
சமூகம்.இதற்கிடையில் பெற்றோர் பிள்ளை, பேரப்பிள்ளை உறவுகளை பிள்ளைகளிடம்
பறிக்க மும்முயற்சியாக இம் முதியோரில்ல தேடுதல் தொடக்கமாக அமைந்து
விடுகிறது. இவ்வாறு நகரும் இச்சமூகத்தில் ஆசிரியர் மாணவர் மோதல் ஆசிரியர்
மீது தாக்குதல் , மாணவர்கள் ஆயுதங்களை பள்ளிக்கு எடுத்து வருதல்,
திருமணமான அடுத்தநாளே விவகாரத்துநோட்டீஸ், மாணவிகள் மற்றும் பெண்கள்
மீதான பாலியல் வன்கொடுமைகள், என அடுக்கிக்கொண்டே போன அடுத்த தலைமுறை
குற்றங்களின் ஆணிவேரை களையாமலும் களைய முற்படாமலும் பயணிக்கையில் நேரம்
போதவில்லை என்ற சப்பைக்கட்டு காரணங்களாலும் வாழ்க்கையை தொலைத்து
நிற்கிறது இந்தச் சமூகம். ஒவ்வொரு சாதியக் கலவரங்களிலும் சாதியம்
தவிர்த்து உயிர்கள் பலியாவதையும் நாம் கண்கூடாக
பார்த்துக்கொண்டிருக்கிறோம் இதற்கான சாத்தியக்கூறுனை உறுவாக்கிவிடும்
உறவுநிலைச் சிதறல்களை கண்டறியாமல் சமூக சமத்துவம் அமைவதென்பது
சாத்தியமாகிவிடாது . ஆகவே சமூகத்தின் உறவுகளை தக்கவைப்பதன் மூலமாக மனித
வாழ்வியலை வளமாக்கிவிடலாம். ஒட்டுமொத்த சமூகத்திற்கான உறவுநிலைச் சிதறலை
குறிப்பிடாமல் ஏன் ஒடுக்கப்பட்ட உறவுநிலைச் சிதறலை குறிப்பிட்டெழுத
வேண்டுமென எண்ணலாம் . சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின்
வாழ்வினில்தான் அதிகப்படியான உறவுநிலைச் சிதறல்களை காணலாம் . ஏன் உயர்
பணக்கார அல்லது ஆதிக்கத்தில் உறவுகள் சிதைவடைவது இல்லையா எனவும்
ஒதுக்கிவிட முடியாது முதல்படிநிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய
ஒடுக்கப்பட்டோர்களின் வாழ்வியலில் ஏற்படும் உறவுச் சிதறல்களை களைய
முற்பட்டால் தானாக ஆதிக்கம் அதன் ஆதிக்கத் தன்மையிலிருந்து விடுபட்டு
சமூகத்தின் உறவுகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் என்பதே நிதர்சனம் .
மேலும் இட ஒதுக்கீடுக்கான சர்ச்சைகள் எழும்போதெல்லாம் கிரிமிலேயர்கள்
எனப்படும் இட ஒதுக்கீட்டால் பயனுற்று தன் பொருளாதார வலிமையினால் மீண்டும்
அதே இட ஒதுக்கீடு கோருவோர்களை புறக்கணிக்கும் ஒதுக்கப்பட்டவர்கள் ஏன்
புறக்கணிக்கிறார்கள் என்கிற காரணத்தையும் அறிந்து விட வேண்டுமதனால்
ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறலாக இதற்கு தலைப்பெழுதுவதில் தவறில்லை
எனத் தோன்றுகிறது. எந்தச் சமூகம் முதலில் சிதைவடைகிறதோ அச்சமூகத்தை
எழுதுவதில் என்ன தவறு இருக்கப்போகிறது. அம்பேத்கரும், பெரியாரும்,
மார்க்ஸியமும் வர்க்கச்சுரண்டலுக்கெதிராக ஒன்றானர்வர்களே என்றாலும்
தங்களுக்கான பொருளுக்தியில் மாறுபட்டவர்களாக இருக்கத்தானே செய்கிறார்கள்
அதன் பொருட்டே ஒட்டுமொத்தச் சமூகத்தையும் எழுச்சியடையச் செய்தவர்கள்
அவர்களாகத்தானே இருக்கிறார்கள் ஆகவே ஒரு குறிப்பிட்டச் சமூகத்தில்
மாற்றம் நிகழாமல் ஒட்டுமொத்த சமூகத்திலும் மாற்றம் ஏற்படப்போவதில்லை
என்பதனால் தான் இதற்கான தேவையினை கருத்தில்கொண்டு ஒடுக்கப்பட்டோரின்
உறவுநிலைச் சிதறலாக எழுதப்படுகிறது.

தொடரும்........

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...