Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

Friday, March 08, 2019

வெயில்




பூரண சரணாகதி அடைகிறேன்

என் மேல் பூசி மெழுகும் வியர்த்தல் வேண்டி வெயிலிடம் ...



பெருந் தழலில் காய்ந்து

வியர்வையில் நனைந்து

எனது ஆடையில் படிந்து போகும்  உப்பின் படிமங்களில்

முத்தங்களிட்டு உன்னை

எனக்குள் வரைந்து உதடுகளில் சரணடையும் ஆதி கனவுகளுக்குள்

பேரன்போடு உள்நுழைந்து

அழைப்பாய் ...



வா .... ஒரு குளியலில்

கூடலாமென சினுங்கும்

அந்த மொழிக்காகவே

தினம் என்னில் வதைக்கும் சூரியனில்

வேண்டி தருகிறேன் என்னையே ...



வதைத்தாலும் வெயில்

அழகென

எனக்கு மட்டுமே தெரியும் ...



வியர்த்திடும் எல்லா பொழுதுகளிலும் விசிறி ஆடை போர்த்திவிடுகிறாய் ..



உச்சி வெயிலில்

நீ ... தரும் உச்சந்தலை

முத்தத்தில் குளிர்ந்து விடுகிறது இந்த வெயில் ...



சொல்கிறேன் ...

வெயில் பேரழகு ...

மழையை விடவும் ...

Saturday, January 19, 2019

முன்பனி யாமத்தில் ...




முன்பனி யாமத்தில் உன் தேகம் தெளிக்கும் வாசம் முகர்ந்து 
நம்மை சூழ்ந்திருக்கும் போர்வைக்குள் நிர்வாணத்தை  பூசிக்கொண்டு
பிரளயம் காணாத பேரன்பின்
சினுங்கல் ஒலியினூடே
பாதி உறக்கம் கொண்டு 
ஊர்ந்திடும் சின்ன சின்ன வருடல்களில்தான்
எத்துணை அர்த்தங்களை நாம் ரகசியங்களாக்கி
காமம் கலந்த காதலோடு
பனிக் காற்றில் கலந்திடுகிடுறோம் ...

நமக்குள்ளாக நமக்கே விளங்கும் செல்லப் பெயர்களை சொல்லி சொல்லி சினுங்கிடுகிறோம் அந்த சினுங்கல்களில் ...

ஒரு கூண்டிலிருந்து  விடுபட்டு துள்ளலிடும் ஏதோ ஒரு பறவையின் முத்த சப்தங்கள் அந்த யாமத்தில் நமக்கு மட்டுமே கேட்பதாக
உணரும் பொழுதுகளில் இன்னமும் விடிந்திடா யாமம் தொடருவதாக வேண்டி நம்மிரு மனமும் நினைத்திட கண்டேன் ...

தலையணை வேண்டாமென
உன் வயிற்றில் நானும்
தவிப்புகள் வேண்டாமென
என் மார்பில் நீயும்
மாற்றி மாற்றி
துயில் கொள்கிறோம்

தூங்குவது போல நடித்துக்கொண்டே
இன்னமும் யாமத்தை கடந்திடுகிறோம்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...