வானத்து முழு நிலவின் உடல் முழுதும் வழியும் சீழுடனே கலந்த குருதி வாடை! பாவம் படுத்திருக்கிறாள் கடைசி காலத்தை எண்ணியபடியே! இதயம் எழுப்பிய அதிர்வுகளைத் தாங்கிக்கொண்டே அருகே சென்றேன்! அழுகையும்,அலறலும் ஒருசேர! படுக்கையில் கிடந்த நிலவின் வலிமுனுகலை கேட்க இருகாதுகள் போதவில்லை! அவசரமாதலால் அவசியமான மருந்தை எடுத்துத் தடவ எத்தணிக்க! அருகிலேயே அதட்டியது அக்குரல்! அடேய்!! நிறுத்து அவளைத்தொடாதே என்றொரு குரல்! குரலே காட்டிவிட்டது அதன் திமிறை! திரும்பி பார்க்கையில்!...