Saturday, May 30, 2015

சென்னை ஐஐடி (IIT) யின் காவிமயத்தால் "அம்பேத்கர்பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பிற்கு"தடை விதிப்பு

ஒரு போலியான போராட்ட நிகழ்வுகளுக்கு உலகை உலுக்கிய போராட்டமென சப்பைகட்டு கட்டும்ஊடகங்களுக்கு தீணி போடும் அதேபானியிலான இந்துத்துவ பார்ப்பானியத்தின் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும் சமூகம்தான்நம்முடையது."சென்னை ஐஐடி" இந்தப்பெயரை கேட்டாலே அவலங்கள் நிறைந்த அதுவொரு தனிவுலகமான பார்வையை அவர்களாகவேஉறுவாக்கி வைத்துள்ளார்கள் என்பது நிதர்சன உண்மை, இந்துத்துவ பார்ப்பானியத்தின் பிடியில் என்றோ சிக்கிக்கொண்ட சென்னைஐஐடியை பிறகெந்த கண்ணோட்டத்தில் பார்க்கவியலும்.அதெல்லாம்...

Thursday, May 28, 2015

பழைய சினிமா பாடல்களை பெற்றோர்களுடன் சேர்ந்து பாருங்களேன்

பழைய பாடல்களை பார்க்கத் தொடங்குங்களேன் அதுவும் பெற்றோர்களுடன் பார்க்கையில் நிச்சயம் நீங்கள் பழைய வரலாற்றுப் பக்கங்களை அவர்களின் அனுபவத்தின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். இன்றைய காலத்தில் உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேட்டு ரசிக்கின்ற பொழுது அதனோடு கூடவே அப்பாடல் எங்கே எப்போது கேட்கப்பட்டது? எதனால் அப்பாடல் கவனத்தை ஈர்த்தது? அன்றைய நிகழ்வுகள் என்னென்ன? என்று பாடல் கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவுகளில் அப்பாடல் வரிகளோடும் , இசையோடும் அனுபவமும் கலந்து...

Wednesday, May 27, 2015

பார்மாவில் இலங்கை மற்றும் இந்தியத்தின் யுக்தியால் அழிகிறது "மனிதம்" இது இனப் படுகொலையில்லாமல் வேறென்ன?

மனம் இளகியவர்கள் இப்படங்களைபார்க்கலாம் உங்கள் மனங்களில் மதம்குடிகொண்டிருந்தால் நீங்கள்அதிர்ச்சியடைந்து மூர்ச்சையடைவீர்கள்மாறாக உங்கள் மனங்களில் "மனிதம்"குடிகொண்டிருந்தால் போராடும்குணங்கொண்டு எழுச்சியடைவீர்கள்.தைரியத்தை வளர்க்க நமக்கான தேவைமுற்போக்குச் சிந்தனைகள் மட்டுமே,,பார்மாவில் இலங்கை மற்றும் இந்தியத்தின்யுக்தியால் அழிகிறது "மனிதம்" இதுஇனப்படு கொலையில்லாம் வேறென்ன?பௌத்தம்   பாசிஸத்தின் பிடியில்இருப்பதனால் பற்றி எரிகிறதுபர்மாவும் , இலங்கையும்...

Tuesday, May 26, 2015

மனிதமே செய்வாயா!

என் மதம் இதுவென்று ஊட்டி வளர்த்திட்டார்கள் ஊமையாகிப் போனேன் நான் வெடித்தது மதக்கலவரம் என் சாதி இதுவென்று சமைத்து போட்டார்கள் காரம் தூக்கலாகி கைகளில் ஆயுதமேந்தினேன் நான் அழிந்தது மனிதயினம் நீ ஆளப்பிறந்தவன் என்றார்கள் ஆயுதம் என் கைகளை இன்னும் கெட்டியாக பிடித்திருக்க வெறியின்னும் அடங்கவில்லை எனக்கு பெண்ணடிமை போற்று அதுவே உன் ஆண்மைக்கு இலக்கணமென்று புத்தகமெனக்கு கல்வி புகட்ட புறப்பட்டேன் நான் விந்தணுக்கள் ஊரெங்கும் பரவ வீட்டிற்கொரு மரம் போன்று கண்பார்க்கும்...

"எமனை வரவேற்க கற்றுக்கொள்"

வட்டிக் கடை டாஸ்மாக் மருத்துவமனை தொங்கும் பலகையில் நன்றி மீண்டும் வருக! காவல்துறை அரசுகட்டிடம் அரசியல் வாதிகள் தொங்கும் பலகையில் திருடர்கள் ஜாக்கிரதை! மளிகைகடை துணிக்கடை குடிதண்ணீர் பால் காய்கறி உணவுவிடுதி தொங்கும் பலகையில் எச்சரிக்கை! , அபாயம்! சட்டப்பேரவை பாராளுமன்றம் தேர்தல் வாக்குறுதிகள் தொங்கும் பலகையில் அரசியல் பேசாதே! கல்வி வங்கிக்கடன் உழைப்புக்கூலி பிச்சைக்காரன் தொங்கும் பலகையில் இன்றுபோய் நாளை வா! மதம் மூடநம்பிக்கை சாதியம் பெண்ணடிமை தொங்கும்...

உன் மௌனம் போதுமெனக்கு

மலரினும் இனிய மௌனங்களால் எனை வருடுகிறாய் வியர்வைத் துளிகளால் புருவம் நனைந்திட வழிந்தோடும் மையினை எடுத்து மயிலிறகால் உம்முக பாவனைகளை எழுத வரம் வேண்டுமெனக்கு மௌனமும் பேசும்மொழியென்று இதுவரையில் நானுணர்ந்ததில்லை இன்றதை நுகர்கிறேன் விழிபேசும் வார்த்தைகள் வின்னதிற என் செவிகளுக்கு மட்டும் விருந்தாகிறதே என்ன விந்தையிது செவிபுலன் வாங்கிய வார்த்தைகளை எனதிதயம் சேகரிக்க உன்னைத்தான் நான் காதலிக்கிறேனென்று கத்திவிட தோன்றுகிறதெனக்கு காதலியே காற்றலை வீச்சத்தில்...

Monday, May 25, 2015

கம்யூனிஸ்ட்டுகளின் தீண்டாமை எதிர்ப்புக் களம்

தீண்டாமை எதிர்ப்பு மற்றும் சாதி ஒழிப்பு என்று வருகின்றபோது கம்யூனிஸ்டுகள் மீதான விமர்சனம் மேலெழும்பிச் செல்கிறது . காரணம் முதலாளித்துவம்,நிலபிரபுக்களின் ஆதிக்கம்.கார்ப்பரேட்டுகளின் ஏகாதிபத்தியமென்றுமார்க்ஸிய லெனினியத்தின் மூலமாக அவற்றையெல்லாம் எதிர்த்து புரட்சிபோராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள்முன்னெடுக்கிறதேயன்றி அதனையும் தாண்டி இந்தியத்திற்குத் தேவையான சாதி எதிர்ப்பு, அல்லது பார்ப்பன எதிர்ப்பினை முன்னிருத்தாதகம்யூனிஸ்ட்டுகள் என்று பரவலாககம்யூனிஸ்டுகள்...

Sunday, May 24, 2015

செல்போன் ஏன் வெடித்துச் சிதறுகிறது? தீர்வுகள் என்ன?

தகவல் தொழில்நுட்பத்தின் அதீதவளர்ச்சியின் காரணமாக இன்றையகாலத்தில் அனேகர்கள் செல்போன்பயன்படுத்துபவர்களாகஇருக்கிறார்கள் . செல்போன்இல்லையெனில் வாழ்க்கையையோதொலைந்து விட்டதெனும்சூழலுக்குக் கேற்றவாரு நம்மைநாமே வடிவமைத்துக்கொண்டுள்ளோம் என்றேச்சொல்லலாம் . செல்போனெனும்தகவல் தொழில்நுட்ப உதவியினால்ஒரு காலத்தில் நமக்கு பெரியதாய்தோன்றிய உலகம் இன்று நமக்குசிறியதாய் தெரிகிறது காரணம்உலக உருண்டை நமது கைகளில்செல்போனாக உருமாற்றம்பெற்றுநம்மிடையேபுழங்குகிறது.தொழில்நுட்பங்களில்...

கல்கியின் மூன்று வரலாற்று நூல்களை எவ்வாறு வரிசைபடுத்தி வாசிப்பது?

இலக்கிய உலகில் "கல்கி" என்கிறஇரா. கிருஷ்ணமூர்த்தி என்றதும்எல்லோர் மனதிலும் கடலலைபோலஅடித்தெழுந்து ஓய்ந்து நிற்குமந்த"பொன்னியின் செல்வன்" எனும்வரலாற்றுப் புதினம். நாம் வாழும்நிகழ்கால உலகினைஉதறித்தள்ளிவிட்டு கடந்தகாலவாழ்வுக்கு திரும்ப முடியுமா?என்றால் திரைப்படங்களில்காட்டப்படும் மாயாஜாலங்கள்தேவையில்லை புத்தகங்களைவாசித்து விடுங்கள் நீங்கள் நிச்சயம்முந்தைய கால சமூதாயத்தோடுஒன்றிணைந்து வாழ்வீர்களென்றுஉணரச்செய்தவர் கல்கி.வார்த்தை ஜாலங்கள்,இயற்கை வர்ணிப்புகள்,காதல்ரசனைகள்,இல்லற...

Saturday, May 23, 2015

புகைப்பட கலைஞர்களை கேலிசெய்யும் இணையம்

ஒரு புகைப்படமெடுக்க உயிரைபணயம் வைத்தால்தான்முடியுமென்றால் அதைச்செய்பவர்களை பாராட்டும்மனமின்றி கேலிகளுக்குஇரையாக்குவதை காணுகின்றபொழுது இந்த மனிதர்கள்படைப்பின் மீதுள்ள பற்றினைஎன்றோ கழட்டிஎரிந்துவிட்டார்களென்றேத்தோன்றுகிறது. மேற்கண்டபுகைப்படம் அந்த வகையறாக்களின்கைகளில் சிக்கியதுதான்காலத்தின் கொடுமை.இயற்கையையும்,இயற்கையின்பரிணாம வளர்ச்சியையும்அதனூடாக வெளியுலகைக்காணும் உயிர்களையும்பெரும்பாலும் புகைப்படங்களேநமக்கு எடுத்துச்சொல்கிறது. அந்தவகையில் அப்புகைப்படகலைஞர்களை...

ஊரில் நல்லவர்கள் யார்?

நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகுதற்செயலாக அவனை பார்க்கநேர்ந்தது காலச்சூழல் நட்பெனும்உறவை பலகாலமாக பிரித்தேவைத்திருந்திருந்தது . எங்கள்சந்திப்பு சாலையோரத்தில் நிகழபேசினோம் போசினோம் பிரிந்தகாலத்தை நினைவு கூறுதலில்தொடங்கி நிகழ்காலத்து பரிணாமம்வரையில் பேசினோம். இறுதியாகவிடைபெற்றுப் போகுதலைஒருதலை வருத்தமாகஏற்றுக்கொண்டோம். அவனதுகிராமத்திற்கு என்னைஅழைத்திருந்தான். சிறுவயதில்அவனோடு சேர்ந்துக்கொண்டுஓடியாடிய மண்ணில் மீண்டும்கால்பதிக்க ஒரு வாய்ப்புகிடைக்கப்பெற்றது...

Friday, May 22, 2015

"இன்றோடு இயற்கையோடு"

இயந்திர வாழ்வு இரும்பான மனம் இறுமாப்பு நடை இல்லறக் கசப்பு இழந்த ஆரோக்யம் இனிமை துவர்ப்பு இசை புறக்கணிப்பு இல்லாத உயிர்துடிப்பு இம்சையான உறவு இமைகளை மூடா கனவு இறுதி மரண காத்திருப்பு இழவுக்குபின் இதயமிருந்தென்ன பயன் இவைகளை மறந்து இன்றே பார்த்துவிடு இயற்கையை இன்னமும் வனப்புகளை இழந்துவிடாத அதுவும் இதழ்களை திறந்துன்னை இச்சைக்கு அழைக்கிறது இன்னுமேன் இடைவெளி மனிதா இணைந்துவிடு இன்றோடு இயற்கையோடு...

அண்ணல் அம்பேத்கரை கைபேசியில் அழைத்தால் கொலைவிழும் இந்தியத்தில்,,,

அண்ணல் அம்பேத்கர் அப்படியென்னதான் பாவச்செயலை செய்துவிட்டார் . அவர் பெயரை உச்சரிக்கையில் கொலைகூட செய்துவிடுகிறதே இந்தச் சமூகம். தலித்தின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்காக பாடுபட்டார்,பார்ப்பா­னிய எதிர்ப்பை முன்மொழிந்து அதோடு நின்றுவிடாமல் அதையும் செயல்படுத்தினார் . காந்தியின் மீது கடுமையான விமர்சனம் வைத்தார். இந்திய அரசியலமைச்சட்டத்தில்­ தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு கல்வியுரிமை மற்றும் சமவுரிமை பெற்றுத் தந்தார் இந்தச்...

சுய "சாதி" பரிசோதனையை பிரயோகப்படுத்துதல்

சுய சிந்தனையின் மூலம் சாதனைகள் பல புரிவதெப்படி? என்பது காலத்தில் அழிந்துபோய் அச்சுய சிந்தனையின் மூலம் தன் சாதியை வளர்ப்பதெப்படி? எனும் குறுகிய வட்டத்தில் தொலைநோக்குப் பார்வையை தொலைத்து விட்டு நிற்கிறது நம் சமூகம். எதன்மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு நமக்கு உரிமையில்லை . எனும் முற்போக்குச் சிந்தனைகளிலே சில முரண்பாடுகளை இங்கே காண நேரிடுகிறது. காரணம் தன் சுயசாதி பற்று இவர்களை ஆட்கொண்டு அடிமைபடுத்துகிறது என்றுச் சொன்னால் அது மிகையாகாது. சோதனை ஓட்டத்தில்...

Thursday, May 21, 2015

புகைப்பட கிறுக்கல்கள்

புகைப்பட கிறுக்கல்கள் ...

Wednesday, May 20, 2015

சிறுகதை : "ஒரு ரயில்பயணம் இரு கல்லறைகள்"

விடியலை வரவேற்று வியப்பில்ஆழ்த்திக்கொண்டிருந்த கானப்பறவைகளின் கூச்சலோடு தன்முகத்தை மெல்ல மெல்லக் காட்டிசெங்காலை பொழுதினை பரப்பிக் கொண்டிருந்தது இளஞ்சூரியன் .அவன் அப்போதுதான் சோம்பலை முறித்துக்கொண்டுஎழுந்திருந்தான் . எழுந்தவுடன் சூரிய வணக்கமொன்றையும்வாசலுக்கு வெளியே நின்று சமர்பித்துக் கொண்டிருந்தான்.கடிகாரம் தன்கடமை தவறாத நகர்தலின் மூலம் மணி ஆறென்றுகாட்டிக்கொண்டிருக்க செயலியில் பதிந்து வைத்த ஆறாவதுமணியோசையை கிழித்துக்கொண்டு கேட்டது அந்த குரல்.ராஜியின்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...