
இந்தியச் சமூகம் தனது மதவெறியையும்,சாதி வெறியையும் உணவில் காட்டுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் எதை உண்ணவேண்டும்,எதை உண்ணக்கூடாதென்று தீர்மானித்து உண்ணக்கூடாது என்று தடைபோடவும்,தடையை மீறினால் அவர்களை அடித்துக் கொல்லவும் வெறியர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கி செயல்படுத்தும் மதமும்,சாதியமும் மனித அழிவுக்கான முதன்மைச் சமூகவிரோதியாகத்தானே இருக்க முடியும். சமூக விரோதத்தையும் உரிமை மீறலையும் கண்டிக்காத...