நன்றி! இப்போது டாட் காமிற்கு ஏனென்றால் அவர்கள் "நான் உயர்சாதி"
தரப்பினர்கள் என்று என் கண்ணுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறதெனும்
நினைப்பை உடைத்து இல்லையில்லை எங்களுக்கும் தெரியுமென அருமையாக
காட்டியிருக்கிறது. நான் உயர் சாதி ஆனால் ஆணவக்கொலையை எதிர்க்கிறேன்
எனும் காணொளி "ஆதிக்க சாதி" எனும் அடையாளத்துடன் இதனை கையாளும் போது
ஆணவக்கொலைக்கு எதிராக கருத்தை ஆதிக்க சாதியினரிடம் தாக்கத்தை
ஏற்படுத்தும் என்ற விளக்கத்திற்கு பின்னால் எப்படியும் இங்கே சாதி
ஆதிக்கம்தான் இருந்திருக்கிறது. அதுவும் சரியான நபர்களைதான்
தேர்ந்தெடுத்திருக்கிறது இப்போது டாட் காம். தேவர் ஜெயந்தி பூஜை
விழாவின் போது பெருமையோடு நாங்கள் தேவர் என விளித்து அது சம்மந்தமான
அனைத்து விதமான புகைப்படம் மற்றும் காணொளிகளை விரும்பி பகிர்வு
செய்தவர்கள். அதற்கும் ஒருபடி மேலேபோய் ஏதோ முத்துராமலிங்க தேவர் கேள்வி
கேட்டாராம் அதற்கு பெரியார் பேந்த பேந்தென முழித்தாராம் . பதிவுகளை
இடைவிடாமல் ஒருவார காலமாக விழுந்து விழுந்து பேஸ்புக்கில்
பகிர்ந்தவர்கள். தலதளபதி போரடிக்கையில் பொழுதுபோக்கிற்காக "ஆணாதிக்கம்"
பேசுவோர்கள், ஒரு மாதம் திடீரென நல்லவனாக முகமூடி போட்டுக்கொண்ட கிஷோரு
கே ச்சாமி ஜெயாவை விமர்ச்சித்தான் என்பதற்காக , எவ்வளவு எடுத்துகூறியும்
அவனை நம்பி அவன் பதிவுகளை ஏதோ சமூக பதிவாக ஏற்றுக்கொண்டு பேஸ்புக்கில்
பகிர்ந்தவர்கள், அவனை ச்சமூக ஆர்வலராக ஊடகங்களில் பேச வைத்தவர்களும்
இவர்களே,,, என இருந்தவர்கள் , ஜெயாவை செல்லமாய் "அம்மா " வென அழைத்துக்கொண்டும் கலைஞரை கொரூரமாக கட்டுமரமென விளிப்பவர்களின் ஆணவக் கொலை எதிர்ப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ள
முடியும். சரி அப்படியும் ஏற்றுக்கொள்கிறோம். எனில் ஆணவக் கொலைகளால்
மிகவும் அச்சமுற்று எப்போது நாம் கொல்லப்படுவோமெனும் பதற்றத்திலேயே
வாழ்க்கையை நகர்த்தும் ஒடுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்களை
ஓரணியில் இணைக்கும் "தலித்" என்பது சாதியல்ல அது சமத்துவம்" எனும்
தார்மீக பொருட்பாட்டை அவ்வகையினர் ஏற்றுக்கொள்வார்களா? அப்படி ஏற்றுக்
கொள்வதற்கான செயல் வடிவாக "தலித் என்பது சாதியல்ல அது சமத்துவம்" என்பதை
பரப்பும் நடவடிக்கைகளை ஈடுபடுவார்களா? தலித் எனும் சொல்லே இவர்களுக்கு
கசக்குகின்ற போது எவ்வாறு இவர்களால் ஆணவக்கொலைகளை எதிர்க்க முடிகிறது.
உடனே உயிர் பலிகளுக்கு சாதிப்பூசம் தடவ வேண்டாமென விளிக்கலாம் "அய்யா
ஜோதிராவ் பூலே அவர்களின் தலித் சாதியல்ல சமத்துவம் என்பதை
ஏற்றுக்கொண்டவன் நான். இதற்கு ஏன் tag செய்ய வேண்டும்? நட்பு பட்டியலில்
இருக்கிறார்கள் . விவாதிக்க நான் தயார்.
என்னில் இதிலிருந்து குட்டி ரேவதி, கொற்றவை, தமிழச்சி தங்கபாண்டியன்
மூவரை மட்டும் விலக்கி வைக்கிறேன். மூவரும் உணர்வுப் பூர்வமாக "தலித்
சாதியல்ல சமத்துவம்" என்பதை ஏற்றுக்கொண்டவர்கள். கம்யூனிஸத்தை
நேசிப்பவர்கள்,திராவிடத்தை ஏற்றவர்கள், தலித்தியத்திற்கான பங்களிப்பை
தருகிறவர்கள். நான் உயர்சாதி ஆனால் ஆணவக்கொலையை எதிர்க்கிறேன் , எனக்கு "ஆனால்" என்பதே வேண்டாம் இன்குலாப் போதும் "மனசங்கடா நாங்க மனுசங்கடா"
Showing posts with label இணையம். Show all posts

Friday, March 18, 2016
Saturday, November 21, 2015
பேஸ்புக்கில் என் சுய பாதுக்காப்பு முறைகள்
உலக மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த ஒன்றுதான் பேஸ்புக்காக
இருக்கிறது. தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதவும்
பரிமாறிக்கொள்ளவும் மிக எளிதான ஓர் சமூக வலைதளமாக பேஸ்புக்
இருந்திருக்கிறது , இந்த பேஸ்புக்கில் போலி கணக்கர்களின் வருகை
நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் அவர்களிடமிருந்து
நம்மையும் நம் நட்பு வட்டங்களையும் சேர்த்தே பாதுகாப்பளிக்கபட வேண்டிய
கட்டாயம் நமக்கிருக்கிறது. ஆகவே நமது பாதுகாப்போடும் அடுத்தவரின்
பாதுகாப்புக்களையும் நாம் தீர்மாணிக்க வேண்டி தள்ளப்படுகின்றோம். பொதுவாக
நம்மை பெரிதும் அச்சுறுத்தும் போலி கணக்குகளின் நோக்கம் நிறைவேற அவர்கள்
பயன்படுத்துவது அதீத சாதிமத வெறியையும் முக்கியமாக ஆபாசத்தையும்
தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் பல தொல்லைகள் ஏற்பட்டு நட்புகள் பல
இழக்கும் அபாயக் கட்டத்தை நாம் நெருங்கிவிடுகிறோம். பேஸ்புக் பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர்கள் எழுதி வந்தாலும் நம்மில்
இன்னும் விழிப்புணர்வு ஏற்படவேயில்லை என்பதே உண்மையாக இருக்கின்றது.
ஆகையால் எனது சொந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை இங்கே பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன். காரணம் கடந்த ஏழாண்டு கால பேஸ்புக் அனுபவத்தில்
எந்தவிதமான போலி அல்லது ஆபாசக்காரர்கள் என்னை நெருங்கவில்லை அவர்களை நான்
நெருங்கவிட்டதுமில்லை அப்படியான சில வழிமுறைகளை நான்
கையாண்டுக்கொண்டிருக்கிறேன் அதை பகிர்தல் மூலம் பேஸ்புக் பாதுகாப்பு
பற்றி சிறிய விழிப்புணர்வு ஏற்படலாம் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
அதேவேளையில் எனது பேஸ்புக் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள்வதில் சில
சிக்கல்கள் இருக்கின்றன. ஆசைகளை துறக்க வேண்டும், அதிக லைக் மற்றும்
ஷேருக்கு ஏங்கக்கூடாது. முக்கியமாக பேஸ்புக் பிரபலம் என்கிற நோக்கத்தை
கைவிட வேண்டும். உங்களின் பதிவுகளும்,புகைப்படங்களும்,வீடியோக்களும்
சிறப்பாகவும் சமூகத் தேவைக்கு உகந்ததாகவும் இருக்குமேயானால் தானாகவே
நீங்கள் பிரபலமடைவீர்கள் அவ்வளவே,,, இனி எனது சுய பாதுகாப்பு முறைகளைச்
சொல்கிறேன்.
* முதலில் ஆபாச லைக் பேஜ்களிடமிருந்து சுத்தமாக விலகியிருக்கிறேன்.
*தேவையற்ற விளம்பரங்களை லைக் மற்றும் ஷேர் செய்யவதில்லை, மேலும்
பேஸ்புக்குகென இருக்கும் பிரத்யேக அப்ளிகேஷனை இன்ஸ்ட்டால் செய்வதில்லை
*ஃப்ரண்ட் ரிக்கொஸ்ட் நூறு அதற்கு மேற்பட்டு வந்தாலும் நிதானமாக
அவர்களின் ஃப்ரொபைலை பரிசோதிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்.
*ஒருவர் எனக்கு ஃப்ரண்ட் ரிக்கொஸ்ட் அளித்தால் அவரின் கணக்கில் சென்று
கீழ்க்கண்டவைகளை பரிசோதிப்பேன்,,,
a) பேஸ்புக் யூஸர் நேம்
b) லைக்பேஜ், குரூப்,டைம்லைன்
c) பிறந்த தேதி, இடம்,படிப்பு
c) பதியப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அதற்கு லைக்கிட்டவர்கள்
c) அவரின் நட்பு வட்டம்,எனக்கும் அவருக்குமான பொது நண்பர்களின் விவரங்கள்.
இவைகளனைத்தையும் ஆராய்ந்தாலே அது போலிக்கணக்கா என்று கண்டுபிடித்துவிடலாம்.
சில அறிவுசீவிகள் பெண்கள் பெயரில் உலாவரும் ஆனால் பேஸ்புக் பிரத்யேக
யூஸர் நேமில் ஆண் பெயர் இருக்கும்,சிலர் ஃபெஸ்டிவல் நாளை பிறந்தநாளாய்
வைத்திருக்கும் , சிலர் ஆபாச லைக்பேஜ்க்கு லைக் இட்டிருப்பார்கள், சிலர்
வேண்டுமென்றே பெண்கள் பெயர்களை முன்னால் போட்டிருப்பார்கள் (சிலர்
மட்டுமே,அவர்களின் நோக்கம் குறைந்த காலத்தில் பேஸ்புக் பிரபலமாவது).
*ஃப்ரெண்ட் ரிக்கொஸ்ட் கொடுக்கும் நபர் நடப்பாண்டின்படி 20 வயதுக்குள்ளாக
இருப்பின் எவராயினும் நிராகரித்து விடுவேன்.
*ஃபிரெண்ட் ரிக்கொஸ்ட் கொடுக்கும் நபருக்கும் எனக்கும் பிரதான பொது
நண்பர்களின் எண்ணிக்கு 50 க்கும் மேலாக இருந்தால் மட்டுமே
ஏற்றுக்கொள்வேன்(முந்தைய ப்ரொபைல் பரிசோதனை செய்த பின்னரும்)
*ரிக்கொஸ்ட் கொடுக்கும் நண்பரின் லைக் பேஜில் ஆபாசங்கள் கூடவே ஆதிக்க
மதவெறி மற்றும் சாதிவெறி லைக்பேஜ்களை சேர்த்திருந்தாலும் உடனே
துண்டித்துவிடுவேன்.
*மிகச்சாதாரணமாகவும்,மற்றும் அதீத உணர்ச்சியாலும் கெட்ட வார்த்தைகளை
உபயோகிப்போரை என்றுமே சேர்க்க மாட்டேன்
*எனது நட்பு வட்டாரங்களின் பதிவுகளுக்குச் சென்று அனாவசியாம
மேற்குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளை உபயோகித்தாலும் இதே நிலைதான்,,
*ஒருகால் நட்பில் சேர்த்துவிட்டபின் வியாபார நோக்கோடு அவர்கள் ஆரம்பித்த
லைக்பேஜ் , குரூப், களில் என்னை சேரவேண்டி அழைப்பு விடுத்தால் உடனே
துண்டிப்பு.
*எனது நட்பு வட்டத்திலிருந்து குறிப்பிட்ட நபர்களை நியாயமான
காரணங்களுக்காக தடைசெய்ய கோரினாலும் உடனே துண்டிப்பு.
* பேஸ்புக் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில்லை
*இந்த சாமியை ஷேர் செய்யுங்கள் பத்து நிமிடங்களில் நல்லது நடக்கும்
என்றும், ஒரு புகைப்படத்தை போட்டு லைக்கிட்டால் நகரும் ஷேர் செய்தால்
ஆடும் என்கிற அனாமதேய பதிவுகளின் பக்கம் போவதேயில்லை.
*நேரடியாக ரிக்கொஸ்ட் கொடுக்காமல் ஃபாலோ மட்டும் செய்பவர்களின் கணக்குகளை
ஆராய்ந்த பின்னரே அனுமதிப்பு , தவறானவரென தெரிந்தால் உடனே தடை,
*எனது டைம்லைனில் எனக்கு விருப்பனான புகைப்படங்களை மட்டுமே ஃடேக் செய்ய
அனுமதிக்கிறேன். அதற்கான செக்யூரிட்டி வசதிகளை பேஸ்புக் செட்டிங்
தந்திருக்கிறது.
*பேஸ்புக்கிற்கென தனியான ஈமெயில் வைத்து உபயோகிக்கிறேன். எக்காரணம்
கொண்டும் மொபைல் எண் கொடுப்பதில்லை. ஈமெயிலையும் பூட்டியே
வைத்திருக்கிறேன். இதன்மூலம் தேவையற்ற கருப்பழகிகளின் செய்தி
தடைபடுகிறது. அதையும் மீறி வந்தாலும் பதிலளிக்காமல் முதல் அழித்தல் வேலை
மேற்க்கொள்வேன். இவ்வளவுதான் நான் மேற்கொள்ளும் பேஸ்புக் பாதுகாப்பு
நடவடிக்கைகள்,இது தவிர்த்து பேஸ்புக் பரிந்துரைக்கும் மீட்சுவல்
பட்டியலில் அவ்வப்போது உள்நுளைந்து மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி
தடைசெய்யும் நடவடிக்கைகளில் மேற்கொள்வேன். நான் குறிப்பிட்டுள்ள பேஸ்புக்
பாதுகாப்பு நடவடிக்கைகள் பெண்களுக்கும் பொறுத்தமாக இருக்குமென்று
கருதுகிறேன். முதலில் நாம் பாதுகாப்பு உறுதி செய்துவிட்டு பிறகு பேஸ்புக்
மார்க்கிடம் முறையிடுவோம் அதுவே முறையாகவும் இருக்கின்றது.

Thursday, November 19, 2015
இணைய உலகிற்கு என் நன்றிகள்!
இவ்வாண்டில் 300 பதிவுகளை எழுதிக் கடந்துவிட்டேன் . எதுவும்
சாத்தியமாகிறது என்னுள் பிறந்து வளர்ந்த நம்பிக்கையினால்,,, இணைய
வெளியில் அதுவும் வலைப்பூவுலகில் முதலில் என்னை எழுதவைத்தது பேஸ்புக்காக
இருக்கிறது. ட்விட்டர் எனக்கு அவ்வளவாக பரிட்சயமில்லை, உண்மையில்
பேஸ்புக்கால் எந்த நன்மையுமில்லை, அதுவொரு வெட்டியாக பொழுது போக்குமிடம்,
அதனால் எவ்வித சிந்தனைகளும் வளர்த்தெடுக்க முடியாதென வாதம் புரிவோர்களைக்
கண்டால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. எனக்கு இவ்வளவு செய்திருக்கும்
பேஸ்புக்கை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. "உன்
நண்பன் யாரென்றுச் சொல் நீயாரென்று சொல்கிறேன்" என்பதை மறந்திருப்பார்களோ
இவ்விவாதக்காரர்கள். நான் பேஸ்புக்கை, ஜி ப்ளசை எந்தளவுக்கு
காதலிக்கிறேனோ அதைவிட மேலாக வலைப்பூவினை காதலிக்கத் தொடங்கி விட்டேன்.
அவ்வளவு பிடித்திருக்கிறது இந்த பரந்து விரிந்த வலைப்பூவுலகம்.
பேஸ்புக்கில் நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதை உணர்ந்தாலே
நீயும் நல்ல நண்பனாகவும்,சிந்தனையுள்ளவனாகவும் நிச்சயமாக இருப்பாய்.
எனது நட்பு வட்டம் அவ்வளவு அலாதியானது. ஊடகவியலாளர்கள்,சமூக
ஆர்வலர்கள்,எழுத்தாளர்கள்,முற்போக்குச்
சிந்தனையாளர்கள்,கவிஞர்கள்,இலக்கியவாதிகள்,அரசியலாளர்கள், பெண்
ஆளுமைகள், பெண்ணிய சிந்தனையாளர்கள்,
பதிப்பகத்தார்கள்,சட்டத்துறையினர்,மருத்துவர்கள்,பொறியாளர்கள்,மார்ஸியர்கள்,பெரியாரியர்கள்,அம்பேத்கரியர்கள்,இயக்கத்தார்கள்,என
பட்டியல் மிக நீண்டுக்கொண்டே போகும். இதைவைத்து நான் பேஸ்புக் பிரபலம் என
நினைக்காதீர்கள். நான் சாதாரணன், மிஞ்சிப்போனால் ஒருபதிவுக்கு மூன்று
லைக் விழும் அம்மூன்றுபேரும் எனது பழைய பள்ளி நண்பர்கள்.
மேற்குறிப்பிட்ட சிந்தனையார்கள் எழுதிய, பரிந்துரைத்த, புத்தகங்களை
வாசிக்கத் தொடங்கியதன் விளைவுதான் இந்த "அரும்பிதழ்" வலைப்பூ.அதுமட்டுமல்லாது "நீங்க எழுதுங்க, உங்களால முடியும்" நிச்சயமா நீங்க எழுதுவீங்க! என்று, என்னை எழுத வைத்த பேஸ்புக் தோழர் திருமதி Rajeswary Medzinskii அவர்களை நன்றியோடும் அன்போடும் பார்க்கிறேன்.
பேஸ்புக் திறந்து அவரவர் பதிவுகளை கவனிப்பேன், எதை
எழுதுகிறார்கள்,எதுபற்றி எழுதிகிறார்கள்,யாரை பின்பற்றுகிறார்கள் ,
என்றெல்லாம் கவனத்தோடு பார்த்தும் தெரிந்தும் கொண்டேன். நட்புப்
பட்டியலில் இருக்கும் மூவாயிரத்து சொச்சம் நண்பர்களை குறிப்பிட்டு
எழுதமுடியாது, ஆகவே யார் என் நண்பர்களாக இருக்கிறார்கள் என்று பார்க்க
நீங்கள் எழுத்துலகில்,வாசிப்புலகில், நுழைந்தாலே போதுமானதாகும். இதில்
இன்னொரு வேடிக்கை என்னவெனில் நான் வலைப்பதிவில் எழுதுகிறேன் என்று அனேக
நண்பர்களுக்குத் தெரியாது. அவ்வளவா பேஸ்கில் பகிர்ந்து கொண்டதில்லை,
காரணம் இருக்கிறது உபயோகிப்பது செல்போன் என்பதால்,,,
வலைப்பதிவுலம் பொருத்தவரையில் 2014 ஆகஸ்ட்டில் எழுதத் தொடங்கினாலும்
முழுமையாக எழுதத் தொடங்கியதும் அறிமுக தோற்றத்தை அளித்ததும் நடப்பாண்டான
2015 சனவரி 5 , அந்நாளில்தான் தமிழ் மணம் என் தளத்தை இணைத்துக்கொண்டதாக
ஈமெயில் அனுப்பியது. அதற்கு முன்பு தமிழ்மணம் பேஸ்புக்கால்
அறியப்பட்டாலும் அந்த சனவரி 5ம் நாளிலிருந்து பல புதிய
நண்பர்களும்,மூத்தோர்களும்,அனுபவஸ்த்தர்களும் எனக்கு அறிமுகமானார்கள்.
மூத்தோர்கள்
புலவர் இராமாநுசம்,பழனி கந்தசாமி, தருமி, இரா எட்வின், ஆகியவர்களையும்,
என்னை வழிநடத்தியவர்களான
கில்லர்ஜி, திண்டுக்கல் தனபாலன் , சி.பி.செந்தில்குமார்(சென்னியார்),
யாழ்பாவாணன் , புதுவை ராம்ஜி , S.Raman, தி.தமிழ் இளங்கோ , S.P. Senthil
Kumar, முகுந்த் அம்மா, வலிப்போக்கன் , தேன்மதுரத்தமிழ் கிரேஸ்,
நாகேந்திர பாரதி, Ramani S , Geetha M, Thulasidharan, 'தளிர்' சுரேஷ் ,
Mythily kasthuri rengan, Mubeen Sadhika, ஊமைக்கனவுகள். செங்கதிரோன்,
தனி மரம், சுரேகா, பசி பரமசிவம் ஆகியோர்களையும் நன்றியுடன் இத்தருணத்தை
எண்ணிப்பார்க்கிறேன். இதில் (வினவு, மு.வி.நந்தினி, கனி ஓவியா, சத்தீஷ்
செல்லதுறை, வே மதிமாறன் பேஸ்புக் நட்பு வட்டார நண்பர்களையும்)
இவர்களனைவரும் என்னை எழுத வைத்தவர்கள்,வாசிக்க வைத்தவர்கள், அனைவரையும்
ஒருசேர எனக்கு அறிமுகப்படுத்திய தமிழ் மணத்திற்கு முக்கிய நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் ஒரு தகவலைத் தெரிவிக்க
விரும்புகிறேன், கணினி,மடிக்கணினி இருந்தால் மட்டுமே வலைப்பூவில்
பதிவெழுத முடியும் என்கிற தவறான கருத்தினை அனேகரும் கொண்டுள்ளனர் .
அக்கருத்தை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளுகிறேன். கையில் தேனை
வைத்துக்கொண்டு வாய்க்கு சர்க்கரை இனிக்கவில்லை என்கிறார்கள்
இவ்வகையினர். வெறும் ஆண்ட்ராய்ட், சிம்பெய்ன் என இரண்டு கைபேசிகளை
மட்டுமே வைத்து இந்த 300 பதிவுகளை ஓராண்டில் எழுதியிருக்கிறேன். ஒரு
பொருளின் நுணுக்கங்களை நன்கறிந்து அதன் தேவைப் பயன்பாட்டினை அப்படியே
உள்வாங்கிக் கொண்டோமானால் கைபேசியால் உலகை அளந்து விடலாம். எதையும் மிகச்
சாதாரணமாக எடைபோடாதீர்கள். எல்லாவற்றிலும் அதற்கான சேவைகள்
கொடுக்கப்பட்டே இருக்கின்றன. அதனை சரியான முறையில் கையாண்டு நமக்குச்
சாதமாக்கிக்கொள்ளலாம். உங்கள் எண்ணம் உங்கள் கையிலேதான் இருக்கிறது
கைபேசி வடிவத்தில், ஆகவே வலைப்பூவுலகில் எழுதவும் , வாசிக்கவும் முன்வர
வேண்டி அரைகூவல் விடுக்கிறேன். ஆனந்தப் பெருவெள்ளத்தில் வரும் ஆனந்தக்
கண்ணீரை கொஞ்சம் மாடலாக மாற்றிவிட்டார்களாம் ஆகையால நானு "அழுவுலயே!!!
கண்ணு வேர்க்குது!!!"

Sunday, November 01, 2015
சமூக வலைதள கருத்தியலாக்கம்,,,
நமது சமூகம் முற்றிலும் இணையதள யுகத்தில் கால்பதிந்து அவரவர் தங்கள்
கருத்துக்களை முகநூலிலும்,ட்விட்டரிலும்,வாட்ஸ்
அப்பிலும்,வலைப்பூவிலும்,ஜி ப்ளஸ்ஸிலும் இன்னபிற சமூக வளைதளங்களிலும்
பதிந்து தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் வேளையில், ஒருவரின்
கருத்துக்களோ அல்லது வரலாற்று ஆய்வுகளோ நமக்கு பிடிக்காமல் போகலாம்
அல்லது அதற்கான மாற்றுக் கருத்து நம்மிடையே உறுவாகியிருந்தாலும் நட்பின்
காரணமாக சொல்லச் தயங்கலாம் , வேறுசிலரோ நட்பே வேண்டாமென்று ஒதுங்கி
விடுவதும் உண்டு . ஆனால் அது சரியான முடிவாக இருக்க முடியாது , காரணம்
பதிவரின் மற்றக் கருத்துக்களோ அல்லது வரலாற்று ஆய்வுகளோ நமக்கு
பிடித்துபோக உடனே அவரிடமிருந்து விலகினால் மறு ஆய்வு மற்றும்
மறுபார்வையிலிருந்து நாம் தள்ளியே இருக்க முடியும் . மீண்டும் அந்த
வாய்ப்பு நமக்கு கிட்டாமலும் போகலாம் . மிகவும் கீழ்த்தரமான மனித உரிமை
மீறல்களுக்கும், மனித இனத்தின் ஒற்றுமையை குலைக்கும்
விதத்திலும்,ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கோடும்,ஆபாச
நோக்கோடும் எழுத்துக்கள் இருக்குமாயின் நாம் அந்த நட்பிலிருந்து முற்றாக
விடுவித்துக்கொள்வது ஆகச்சிறந்ததாக இருக்கிறது. கருத்து முரண்பாடுகள்
ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருக்கும் அதன் நிலைகளின் அவசியக்
கூறுகளால் பலர் பிரிந்திருக்கிறார்கள். நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும்
கருத்து முரண்பாடு, திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும்,
தமிழ்த்தேசிய திராவிடத்திற்கும் பொதுவுடைமைக்கும், பொதுவுடைமைக்கும்
தேசிய இனங்களுக்கும் என்று பல கூறுகளாக இணையத்தில் கருத்து முரண்பாட்டுச்
சண்டைகளையும் விவாதங்களையும் காண நேரிடும் ஒரு சராசரி இணைய
உபயோகிப்பாளரின் எண்ணங்கள் நிச்சயம் மாற்றப்பட்டு அவர் அத்தனை காலங்களாக
பழகியும்,பாராட்டியும் வந்த நட்பை ஒரே விநாடியில் உதறித்தள்ளிவிட்டுச்
செல்கிறார் என்றால் இங்கே அக்கருத்து முரண்பாட்டால் எழும் விவாதமானது
சண்டையாக மூண்டு மன அழுத்தத்தை அளவில்லாமல் அனுபவித்ததன் விளைவுதானே
அன்றே வேறில்லை. சரி,,,இந்த மன அழுத்தத்தின் காரணமாக எழும் நட்பு
முறித்தலால் அவர்களின் முந்தைய அல்லது பிந்தைய நற்சிந்தனைப் பதிவுகள்
பாதிப்படைந்து நமக்கு பயனற்றுப் போய் புதிய தகவலை நாமே முன்வந்து
புறக்கணித்து விடுகிறோமே அதற்கு என்ன தீர்வு இருந்துவிடப் போகிறதென்று
எண்ண வேண்டாம் . அனைத்திற்கும் தீர்வென்ற ஒன்று உண்டு உலகில், ஆனால் அதனை
தேடியெடுப்பதில் சோம்பலை தெளிக்கின்றோம் எனலாம். ஒரு புத்தகத்
திருவிழாவில் ஆசான் ஈரோடு தமிழன்பன் அவர்கள் பேசுகிறார், வழங்கப்பட்ட
தலைப்பு "எதை படிக்கலாம்" என்பதாகும் . ஆழச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள
"வாசிப்பு" மட்டுமே நமக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில்
தலைப்பிற்கேற்ற தனது உரையில் ஆசான் அவர்கள் மிகத்தெளிவாக ஒன்றைக்
குறிப்பிட்டார்."எது நமது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், கேள்விகளுக்கும்
உகந்ததாக இருக்கின்றதோ அதை படியுங்கள், மற்றதை மேலோட்ட ஆய்வுக்கு அது
எடுத்துச் செல்லும். இதற்கு என்னை விட பெரியார் அவர்கள் சிறப்பாக
எடுத்துரைக்கிறார் ,"நானே உரைத்தாலும் அப்படியே ஏற்காமல் அதனை மறு
ஆய்வுக்கு உட்படுத்துங்கள் அதுவே பகுத்தறிவு வளர்ச்சி" என்கிறார்.ஆக நாம்
எதை படிக்க வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிப்பது அல்லது
திணிப்பதிலிருந்து வெளியேறி உங்களை நீங்களே முதலில் வாசிக்கப் பழகுங்கள்.
என தன் ஆழக்கருத்தை அந்த புத்தக கண்காட்சித் திருவிழாவில் பதிவுசெய்தார்
ஆசான் ஈரோடு தமிழன்பன். அவரின் கருத்துக்களை அப்படியே இணைய வெளிவிக்கும்
பொருந்துமாறு பார்க்கையில் "வாசிப்பு" என்பது மிகத்தெளிவான ஒன்றாக
கிடைத்துவிடுகிறது. தீர்வாக அதுவும் திகழ்கிறது. இணையத்தில் பதியப்படும்
பெரும்பாலான கருத்துக்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் அத்தனையும்
புரட்டுகளாகவும்,ஏதோவொரு சாதியம் மற்றும் மதத்தினை உள்வாங்கிக்
கொண்டதாகவுமே இருக்கும். எப்படி நமது பள்ளிக்கால புத்தக வரலாறுகள் அதன்
பிறகான நமது வாசிப்பிலிருந்து படித்ததெல்லாம் பொய்யாகிப் போகின்றதோ
அதேபோலதொரு உணர்வை இணைய கருத்துக்களும் நமக்குச் சொல்கின்றது. என்னைப்
பொருத்தவரையில் மார்க்ஸிய,லெனினிய,அம்பேத்கரிய, பெரியாரிய பாதைகளில்
பயணிக்கும் இணைய பயன்பாட்டாளர்களையும்,அதைதவிர்த்து நாகரீக முறையில்
கருத்துகளை வெளிப்படுத்தும் இணைய பயன்பாட்டாளர்களையும் சேர்த்தே
வாசிப்பை முன்னெடுக்கிறேன் . இதன் மூலம் ஒப்பிட்டும் மறு ஆய்வுக்கு
உட்படுத்தியும் செல்ல முடிகிறது. ஒருவர் மற்றவைகளை எதிர்ப்பு
கருத்தியலாக்குகிறார் என்றால் அவர் அறிவுக்குள் நம்மை மறு ஆய்வுக்கு
அழைக்கிறார் என்பதை உணரமுடியும். ஆகவே எதிர்க்கிறார் என்ற ஒற்றை காரணத்தை
முன்வைத்து ஒரே அடியில் அவரிடமிருந்து விலகுவது சரியாய் இருக்காது. போலவே
அவ்வகையான எதிர்ப்பிலும்,ஆதரவிலும் விஷமத்தனமும் ,ஆபாசமும் , சமூக
விரோதமும் இருக்கிறதெனில் தாராளமாக அவரிடமிருந்து விலகிக்கொள்வது
காலச்சிறந்தது. இணையத்தில் நாம் எதை வாசிக்கத் தொடங்கியிருக்கிறோம்
என்பதன் விளைவுகளை இறுதியாக தீர்மானிப்பது நமது ஆழச்சிந்தனையாகும்.

Thursday, July 16, 2015
M.S.V ஐயா! மன்னித்துவிடுங்கள்.இது சரியா?தவறா? தெரியவில்லை
தமிழிசைக்கு கட்டற்ற களஞ்சியமாக காலத்திற்கும் அழியாத இசையை தந்தளித்து
தமிழுக்கும், தமிழிசைக்கும் மிகப்பெரிய தொண்டாற்றிய நம் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா இம்மண்ணில் உயிர் துறந்தார் எனும் போது அதை
ஏற்றுக்கொள்ளவும்,மனதிலேற்றிக்கொள்ளவும் மிகக்கடினமாகத்தான் இருக்கிறது.
இசைப் படைப்பாளி ஒருவரை தமிழகம் இழந்து கண்ணீரால் நனைவதை காண முடியாமல்
நம் தொண்டைகளில் துக்கம் அடைத்து ஆழ்மனதிலோர் அழியா மனவேதனையானது
மரத்தில் அடித்த ஆணிபோல பாய்கிறது. தன் வாழ்நாள் முழுவதையும்
தமிழிசைக்காக அர்ப்பணித்த மனிதரை மறக்க முடியாமலும் அவர் மரணத்தை
ஜீரணிக்க முடியாமலும் அவரின் இசைகேட்டு துக்கத்தில் பங்கெடுக்கிறார்கள்
தமிழர்கள்.முதியோர்கள் முதல் இளையோர்கள் வரையில் எம் எஸ் வி ஐயாவின்
இசைக்கு அடிமைபட்டவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய
இளைஞர்களுக்கும் ஐயாவின் இசை பிடித்திருக்கிறதென்றால் இசைக்காகவே அவர்
உழைத்திருக்கிறார் என்பது தெள்ளந்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. ஈழ
உணர்வை இளைஞர்களுக்கு பாய்ச்சிய "விடைகொடு எங்கள் நாடே" பாடலானது
இன்னமும் அவரவர் மனங்களில் அழியா இன உணர்வை ஊட்டியிருக்கிறதென்றால்
எம்.எஸ்.வி ஐயா வின் குரலுக்குள்ள வீரியம் வயதானாலும் குறைந்து போகவில்லை
என்பதை உணர்த்திவிட்டுச் செல்கிறது. அதோடல்லாமல் சிறந்த குனச்சித்திர
நடிகராக தோன்றி தன்திறமையின் மூலம் மக்களை கவர்ந்திழுத்த மெல்லிசை
மன்னரவல்லவா அவர்.ஆழ்ந்த துயரத்தோடு அவரின் இறுதி ஊர்வலத்தை தமிழ்த்
தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த திரையுலகினரும்,
அரசியல் தலைவர்களும்,மற்ற கலைத்துறையிர்களும்,வளரும்
இசையமைப்பாளர்களுமாக அங்கே கூடியிருந்தார்கள் துக்கம் அனுசரிக்க,,,
இதற்கிடையே அவரவர் எம்.எஸ்.வி ஐயாவுடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்த
வண்ணமிருந்தனர்.உயிரற்ற அவருடலை (உயிரற்றிருந்தாலும் அவ்வுடலில் இசை
வாழ்கிறது) அடக்கம் செய்வதற்கு இறுதி ஊர்வலம் தயார்நிலையில் இருக்கையில்
சட்டென கண்ணில் பட்டது அந்த விளம்பரம். உற்று கவனிக்கையில் அது தெளிவாகத்
தெரிந்தது.எம்.எஸ்.வி அவர்களின் சடலத்தின் மேல் அவருக்காக உருவாக்கப்பட்ட
அதிகாரப் பூர்வ இணைதள முகவரி பொறிக்கப்பட்ட போர்வை
போர்த்தப்பட்டிருந்தது. அந்த இணையதள முகவரி
www.msvtimes.comஆகும். இசைக்காக உழைத்தவருக்கு இணையதள
உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனால் உலகம்
முழுக்க அவரின் இசையும்,புகழும் பரப்பப்படும் என்பதில் மிக்க மகிழ்சியே ,
ஆனால் இணையதளத்தை அறிமுகப்படுத்திய விதம் மிகுந்த சங்கடத்திற்கு
உள்ளாக்கியுள்ளதென்றே உணரப்படுகிறது. அவர் வாழ்ந்த காலத்திலேயே
இந்நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் அதை விடுத்த அவரின் சடலடத்தின் மூலம்
அறிமுகப்படுத்தும் இம்மாதிரியான செயல்களை வரவேற்க வேண்டுமா? இல்லை
வருத்தப்பட வேண்டுமா? என்றுகூட ஒரு முடிவெடுக்க முடியாத இக்கட்டான
சூழ்நிலைகளோடு அவருக்கு அஞ்சலி செலுத்த
வேண்டியிருக்கிறது.எதையும்,எப்போதும் சரியான காலத்தில் செய்யும்
எம்.எஸ்.வி ஐயாவுக்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தை
அறிமுகப்படுத்துதலுக்கு அவரின் மரணத்தை உபயோகப்படுத்துவது சரியானச்
செயலா? அவர் உயிரோடிக்கும் போதே இணையதள அறிமுகத்தை செய்திருந்திருந்தால்
அதன் தன்மையும்,பார்வையும் எப்படி இருந்திருக்கும், உயிரோடிருக்கும்
போது அறிமுகப் படுத்துதலுக்கும், இறப்பில் அறிமுகப்ப டுத்துதலுக்கும்
பிரபலப்படுத்துதல் சார்பாக சிக்கல் எழ வாய்ப்புள்ளதா? என்று எந்த
கேள்விகளுக்கும் விடையறியாமல் இன்னமும் அவரின் இசையோடு பயணிக்க
வைக்கிறது. இது எதார்த்தங்களை மிஞ்சிய படைப்பாளியின் வளர்ச்சியென்று
மிகச் சாதாரணமாக கடந்து போகவும் முடியவில்லை, இன்னமும் நம்மால்
எம்.எஸ்.வி ஐயா இறந்துவிட்டாரென்று நம்பக்கூட முடியவில்லை, அந்தளவிற்கு
அவரின் இசை நம்மை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. எங்களால் ஆன
உதவியாக,நீங்கள் தமிழிசைக்கு செய்த சேவைக்குப் பலனாக நாங்கள் அந்த
இணையதளத்தை புகழின் உச்சிக்கு நிச்சயம் எடுத்துச் செல்வோம் என்பதுமட்டும்
உறுதி.இம்மண்ணிற்கு நீங்கள் செய்த இசைப் பணிக்காக உங்களுக்கு நாங்கள்
கண்ணீர் அஞ்சலி செலுத்த கடமைபட்டுள்ளோம் எம்.எஸ்.வி ஐயா ! உங்கள் ஆன்மா
சாந்தியடையட்டும்.

Tuesday, June 16, 2015
தமிழ்ச் செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்களும் அதனோடு ஒரு இணையதள கவனஈர்ப்பும்
தமிழ்ச் செய்தி ஊடகத்துறையில் சிறந்ததொகுப்பாளர்கள் பட்டியலை http://www.thenewsminute.com/article/star-anchors-driving-tamil-tv-news-uprising வெளியிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிஅளிப்பதாக இருக்கிறது . உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை மக்களுக்கு பயன்படும் வகையில் தங்களின் உடலுழைப்பை சமூக சேவைக்காக அர்ப்ணிக்கும் சிறந்த தமிழ்ச் செய்தியாளர்களுக்கு நன்றியோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தல் நமது கடமையாகும்.அதே வேளையில் இதுஒருபுறமிருக்க இன்னொரு கவலையும்தமிழ்ச் செய்தி ஊடகத்துறையை சுற்றிவளைத்திருக்கிறது. எவ்வழியிலென்றால்"இணையம்" வழியில் தமிழ்ச் செய்தி ஊடகம்சுற்றிவளைத்து மிகப்பெரும்அதிர்ச்சியினை தந்திருக்கிறது. சிலதினங்களுக்கு முன்னால் http://arumbithazh.blogspot.in/2015/06/blog-post_2.html 02-6-15 அன்று "தமிழ்ச் செய்தி ஊடகங்களின்கவனத்திற்கு,,," என்கிற முன்னரே எழுதியபதிவுக்கான ஏற்ற புகைப்படத்தினைதேர்வு செய்வதற்காக கூகுள்தேடுபொறியில் "Tamil News Reader" எனச்சொடுக்கி என் பதிவுக்கு பொருத்தமான"அனைத்து தமிழ்ச் செய்திவாசிப்பாளர்களின் கூட்டுப் புகைப்படம்"ஏதேனும் கிடைக்கும் என்கிறஎதிர்பார்ப்பில் தேடலானானேன். முதல்பக்கத்திலேயே பேரதிர்ச்சி தந்ததுகூகுள் தேடுபொறி. அனைத்தும் "பெண்" தொகுப்பாளர்களையேசுட்டிக்காட்டியது கூகுள் அதுவும்ஆபாச நோக்கத்தோடு பதியப்பட்டபுகைப்படங்களையே கிட்டத்தட்ட 15பக்கங்களுக்கு மேல் காட்டியிருந்ததுகூகுள். மிகவும் நொந்துபோய் என்பதிவுக்கான பொருத்தமற்றபுகைப்படத்தினை வைக்க நேர்ந்தது .தமிழ்ச் செய்தி ஊடகங்களில் செய்திகள்தொகுப்பு முறைப் பட்டியலில்"இணையம்" தற்போது சேர்ந்திருப்பதுமிகத் தெளிவாகத் தெரிகிறது. வணிகச் செய்திகள்,விளையாட்டுச்செய்திகள்,உலகச் செய்திகள் பட்டியலில்இணையச் செய்திகளை தற்போதுஅனைத்து ஊடகங்களும்வழங்கிவருகின்றன. போலவே விவாதநிகழ்ச்சிகளில் கூடஇணையதளத்திற்கென்று ஒரு சிறப்புப்பகுதியையும் ஒதுக்கி இணையவெளிகருத்துக்களை மக்களிடையேகொண்டுசெல்லும் பணியைசெம்மையாகச் செய்யும் தமிழ்ச் செய்திஊடகவியளார்களுக்கே இந்தநிலமையெனில் இணையம்பொருத்தவரையில் தமிழ்ச்சமூகம் மிகவும்பரிதாபத்திற்குரியதே,,,ஏற்கனவே கூகுள் தேடுபொறிதமிழ்ச்சமூகத்தை மிகவும் கேவலமாகவும்ஆபாசமாகவும் காட்டிக்கொண்டிருக்கிறது. கூகுளில் "தமிழ்,Tamil" என்றுதேடினால் எத்தனையோ நல்ல வரலாற்றுப்பதிவுகள் மற்றும் வலைப்பதிவர்கள்இருந்தும் அதுகாட்டுவது என்னவோஆபாச புகைப்படங்கள், காணொளிகள்,பதிவுகள்,ஆபாசக் கதைகளாகவேதருவதை பலகாலமாகவேசுட்டிக்காட்டப்பட்டுள்ள வேளையில் தமிழ்ச்செய்தி ஊடகவியளார்களையும்குறிப்பாக பெண்களையும் அதே ஆபாசநோக்கோடு காட்டிவிட்டுச் செல்வதைமிகச் சாதாரணமாக கடந்து போகமுடியவில்லை. குறிப்பாக Tamil NewsReader எனத் தேடுகையில் கூகுள் காட்டும்"தொடர்புடையவை" என்பதன்அதிர்ச்சியிலிருந்து இன்னமும்மீளமுடியவில்லை.இப்பரப்புரைகளுக்கு கூகுளா? இல்லைஇணையத்தை பயன்படுத்தும்தமிழ்ச்சமூகமா? யார்தான் காரணம்என்றும் தெரியவில்லை. ஒட்டு மொத்தமாகஒரு தமிழ்ச்சமூகத்தையே கேவலபடுத்தும்கூகுள் தேடுதளத்தின் பின்விளைகளின்ஒரு பகுதிதான் தமிழ்ச் செய்திஊடகத்துறை. இதுபோன்று பல்வேறுதுறைகளில் பல்வேறு கோணங்களில்ஆபாசங்களை அள்ளித்தெளித்திருக்கிறது கூகுள் தேடுதளம்.எதுவுமற்று வெற்றிடத்தைநிரப்பிக்கொண்டிருக்கிறது பலசெய்திகளையும், விவாதங்களையும்தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும்ஊடகமானது அந்நிகழ்சிகளின் கீழைமேலும் (படிக்க,,,பார்க்க,,,ரசிக்க,,,பின்தொடர,,,கருத்துகளைதெரிவிக்க,,,வாக்களிக்க,,,)என்று தனதுவலைதளங்களையும்,பேஸ்புக்,ட்விட்டர்போன்ற சமூக வலைதளங்களையும்பகிர்ந்து அதற்கென்று முக்கியத்துவம்கொடுப்பது போலவே அதேவலைதளங்களில் அரங்கேரும் ஆபாசஅநாகரீக செயல்களை எதிர்த்துசெய்திகளையும்,விவாதங்களையும்முன்னெடுத்துச் செல்லவேண்டியதுதமிழ்ச் செய்தி ஊடகவியளார்களின்கடமையாகவும், இணையத்து ஆபாசவலையில் அவர்களும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைநன்குணர்ந்து இணையத்தின்ஈனச்செயல்களுக்கான தீர்வினைவெளிகொணரப்பட வேண்டும். பொதுவெளியில் பெண்ணினத்தை ஆபாசநோக்கோடு பார்க்கும்ஆணாதிக்கமானது அதை விட ஒருபடிமேலே இணையத்தில் ஆபாசப் பார்வையைவிதைத்துவிட்டுச் சென்றிருக்கிறது.இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டுதமிழ்ச் செய்தி ஊடகமும்,பணிபுரியும்ஊடகவியளார்களும் இணையஆபாசத்திற்கெதிராக செய்திகளையோ,விவாதங்களையோ, முன்னெடுப்பார்கள்என்கிற நம்பிக்கையில் இங்குபதிவுசெய்யப்படுகிறது.
Saturday, May 23, 2015
புகைப்பட கலைஞர்களை கேலிசெய்யும் இணையம்

ஒரு புகைப்படமெடுக்க உயிரை
பணயம் வைத்தால்தான்
முடியுமென்றால் அதைச்
செய்பவர்களை பாராட்டும்
மனமின்றி கேலிகளுக்கு
இரையாக்குவதை காணுகின்ற
பொழுது இந்த மனிதர்கள்
படைப்பின் மீதுள்ள பற்றினை
என்றோ கழட்டி
எரிந்துவிட்டார்களென்றேத்
தோன்றுகிறது. மேற்கண்ட
புகைப்படம் அந்த வகையறாக்களின்
கைகளில் சிக்கியதுதான்
காலத்தின் கொடுமை.
இயற்கையையும்,இயற்கையின்
பரிணாம வளர்ச்சியையும்
அதனூடாக வெளியுலகைக்
காணும் உயிர்களையும்
பெரும்பாலும் புகைப்படங்களே
நமக்கு எடுத்துச்சொல்கிறது. அந்த
வகையில் அப்புகைப்பட
கலைஞர்களை பாராட்டக்கூட
தேவையில்லை
கேலிகிண்டலுக்கு
உட்படுத்தாதீர்கள் என்பதே
வேண்டுகோளாய் இருக்கிறது.
மேற்காணும் புகைப்படமானது
இணைய வெளியில் "சாவுடா
மவனே" "எதுக்கிந்த வேல"
இதுபோன்று பல்வேறு கேலிக்
கிண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு வலம்
வந்துக் கொண்டிருக்கிறது.
எனக்கே அவ்வகையான கேலிக்
கிண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு
வாட்ச் அப் எனும் இணைய
வெளியில்தான் கிடைத்தது.
பார்த்தவுடன் பதறிப்போய்
அரைமணி நேர விவாதத்தால்
அனுப்பிய நபரை மனம்மாற்றிய
தருணம்,ஒரு புகைப்பட
கலைஞனின்
வலிகளையும்,வேதனைகளையும்
ஒருவருக்கேனும்
உணரச்செய்தோமே என்கிற ஆத்ம
திருப்தியடைந்தேன். கையில் ஒரு
கேமரா எடுத்தவனெல்லாம்
கலைஞனா? எனப்
பெரும்பான்மையானோர்
கேட்கிறார்கள். ஆமாம் அவன்
கலைஞன்தான்! தன் கையுள்ள கேமராவினால் தன்
கண்களை
தூய்மைபடுத்துகிறானே அவன்
கலைஞனில்லாமல் வேறென்னவாக
இருக்க முடியும் . அதற்காக
தன்னுயிரை கூட துட்சமென
எண்ணி உலகிற்கு புகைப்படம்
மூலம் புலப்படாத பல விஷயங்களை
தகவல்களாக நமக்குத் தருகிறானே
அவன் கலைஞனில்லாமல்
வெறன்னவாக இருக்க முடியும்.
இதல் கையில் கிடைத்த கேமராவை
கவலையின்றி குற்றச்
செயல்களுக்கு கொண்டுசெல்லும்
மூடர்களை இணைத்துக்
காட்டிவிடாதீர்கள். உண்மையையும்
,பொய்மையையும்
நேர்மையும்,நெறிதவறுதலையும்
எதிரெதிரேதானே நாம் வைத்துப்
பார்க்கிறோம் அந்த வகையில்
உண்மை உழைப்புகளை நாமேன்
கேலிக்குள்ளாக்குகிறோம்,
சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு புகைப்பட கலைஞனிடம்
உனக்கு உயிர் முக்கியமா?
புகைப்படக் கலை முக்கியமா?
எனக்கேட்டால் புகைப்படக் கலையே
முக்கியமென்பான் ஏனென்றால்
அவன் புகைப்படக் கலையைத்தான்
உயிராக நேசிப்பவனாக
இருக்கிறான்.
"என் கற்பனையில் முளைத்தெழும்
கவிதைகளை யாரோ ஒருவன்
எடுத்த புகைப்படம்
காட்சிபடுத்துகிறது
கவிதைக்காரனை
காட்சிக்காரனே
வெளிபடுத்துகிறான்" என்பதை
நானெப்போதும் என்மனதினில்
ஏற்றிவிட்டேன். உணர்ந்து நீங்கள்
செயல்பட்டால் உதவாத
கேலிப்பேச்சுகள் ஒழிந்து
போகுமென்பது உண்மை.

என்னை சமூகத்தின் மீது
பார்வையை திருப்பு!
அவர்களுக்காவே நீ வாழ்ந்திட
வேண்டுமென்று! உணர்த்தியது
ஒரு புகைப்படம் என்றுச்
சொன்னால் அப்புகைப்படமெடுத்த
படைப்பாளியை எப்படி என்னால்
கேலிசெய்ய முடியும்.
முதன்முதலாக இதுதான்
உன்சமூகம் இவர்கள் படும்
வேதனை,வலிகள் இதுதானென்று
எனக்கு உணர்த்தியது 1984ல் நடந்த
போபால் விஷவாயு விபத்தில்
உயிரிழந்து மண்ணில்
புதையுண்டு கிடந்த அந்தக்
குழந்தையின் புகைப்படம்தான்.
உயிரின் வலியை உணர்த்திய
அப்பச்சிளம் குழந்தையை
புகைப்படமெடுத்து போபாலின்
அவலநிலையையும்,இந்தியாவின்
அடிமை நிலையையும்,உலக
ஏகாதிபத்தியத்தின் கோர
முகத்தையும் வெளியுலகிற்குக்
காட்டிய அந்த ரகு ராய் (Raghu Rai)
எனும் புகைப்படக் கலைஞனை
கலாய்த்துவிட்டு
மிகச்சாதாரணமாய் கடந்து
போனால் நானுமொரு
குற்றவாளி தானே! புரிந்து
கொள்ளுங்கள் என் சமூகமே
உணர்வுகளுக்கும்
அவ்வுணர்வுகளை வெளிபடுத்தும்
புகைப்படத்தையும்,புகைப்பட
கலைஞர்களையும் இணைய
வெளியிலோ அல்லது
பொதுவெளியிலோ
கூடுமானவரை கேலிக்
கிண்டலுக்கு உட்படுத்தாமல்
மதிப்பு கொடுங்கள். மனமிருந்தால்
பாராட்டி விடுங்கள்.
Wednesday, May 13, 2015
இணையத்தில் இப்படியும் பல தொல்லைகள்!
சிறு வயதில் பள்ளிக்கூடத்தை விட்டு சாலையில் வீட்டை நோக்கி நடந்து
கொண்டிருக்கும் போது பல்வேறு முகங்கள் எங்களைச் சூழ்ந்திருக்கும்.
ஒவ்வொருவரும் வேற்றுமத பற்றாளர்களாக இருப்பார்கள்.
இந்து,கிருஸ்த்துவம்,இஸ்லாமியரென அனைவரும் எங்களை நெருங்கி வந்து
சாதுவாய் பேசி அவர்களின் கையுளுள்ளதை எங்களின் கையில் சாதுர்யமாய்
திணித்துவிட்டுப் போவார்கள் அந்த துண்டறிக்கைகளை,,, அந்த துண்டறிக்கையின்
தலைப்புகளை நோட்டமிட்டால் நமது இலக்கிய ஜாம்பவான்கள் கூட கால்தூசிக்கு
சமமானவர்களாக தெரியும். அந்த பருவத்தில் எங்களுக்கு இலக்கியமும் தெரியாது
ஒன்றும் தெரியாது , பள்ளி விழாவில் வாசிக்கப்படும் கட்டுரை,கவிதை, கதைத்
தலைப்புகளைத் தவிர,, அதேபோல் அவர்கள் திணித்துவிட்டுச் சென்ற
துண்டறிக்கைகளை வேண்டாமென்றும் சொல்லமுடியாது காரணம் சிறுவர்களாகிய
எங்களையும் மதித்து பெரியவர்கள் துண்டறிக்கை கொடுக்கையில் சந்தோஷத்தின்
கூடவே கர்வமும் கலந்து போனதாலோ என்னவோ, அந்த துண்டறிக்கைகளை பக்குவமாய்
பேசி எங்களின் கைகளில் திணித்துவிட்டு கடைசியாக ஒன்றை சொல்லுவார்கள்
பாருங்கள் கேட்டதும் பயத்திலேயே அடிவயிறு கலங்கிவிடும். "சாமி
கண்ணகுத்திடும், ஏவாளை சபித்தமாதிரி ஆண்டவர் உங்களையும் சபித்துவிடுவார்,
அல்லா இரவில் அகோரமா வந்து உங்களை சாப்பிடுவார், என்றெல்லாம்
பயமுறுத்திவிட்டு கடைசியாக மறைந்து விடுவார்கள். பயத்தை போக்க வேண்டுமே
அதே பயத்தினால்,, ஆகவே வீட்டுக்கு வந்தவுடன் அந்த துண்டறிக்கையில் கூறிய
படியே இருபது பேருக்கோ அல்லது அதற்கும் மேலானவர்களுக்கோ சொந்த கைகாசு
போட்டு பிரதியெடுத்து மதத்தை தாங்கிநின்ற அந்த துண்டறிக்கையை பரப்பி
விட்டப்பிறகே நிம்மதி பெருமூச்சு வரும். பிறகு அத்துண்டறிக்கையில்
கூறியபடியே பிரதிபலனை எதிர்ப்பார்ப்பதெல்லாம் இரண்டு, மூன்று
நாட்களுக்குத் தொடரும் பிறகு மறந்துபோகும் அதன்பிறகு மீண்டும் அதே
துண்டறிக்கை கண்ணில் பட்டு சுழற்றி தொடங்கும். இப்படியே தொடர்ந்து நின்ற
அந்த மத துண்டறிக்கைகள்தான் இன்று இணையத்தில் புது அவதாரம்
எடுத்திருக்கிறது.ஏதேனும் மதக் கடவுளின் உருவம் பதிந்தோ அல்லது மத
நூல்களின் வாசகத்தை தாங்கியோ புகைப்படமொன்றை உறுவாக்கி அதன் கீழே "இதை
அதிகம் பகிருங்கள் விரைவில் நல்லசேதி வரும் தவறினால் கடவுளால்
தண்டிக்கப்படுவீர்கள்" என்றெழுதி இணையத்திலும் சமூக வலைதளங்களிலும்
பரப்புரை செய்வது வாடிக்கையாக இருக்கிறது.அதைவிடவும் மிகப்பெரிய
அச்சுறுத்தல் என்னவெனில், சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு "செக்" வைப்பது
போல நமக்கும் கால அவகாசம் வைக்கிறார்கள் அதற்குள் அந்த புகைப்படத்தை பகிர
வேண்டுமாம் இல்லையேல் பலனற்று போய்விடுமாம் மேலும் கடவுளின்
கோபத்திற்கும் ஆளாகிவிடுவோமாம். மூட நம்பிக்கைகளின் உச்சத்தில் மக்களை
நிருத்தி கீழே நீன்று கடவுள் குதிக்கச் சொல்கிறார். நாமும் அறிவின்றி
யாரென்றே தெரியாத ஒருவனுக்காக குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறோம்.
என்பதே இவ்வாறான துண்டறிக்கைகளும் இணைய புகைப்படங்களும் நமக்கு
உணர்த்துகிறது. மத பரப்புரை விஷமானது மிக வேகமாக பரவி இங்கே பலபேரின்
உயிர்களை பறித்துக் கொண்டிருக்கிறது என்றேச் சொல்லாம் . இணையத்தில்
இவற்றால் பாதிக்கப்பட்டோர் நிறைய நபர்களை நமது முற்போக்குச்
சிந்தனையாளர்கள் வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இருந்தும் மிக வேகமாக
இந்தப் பொய் பரப்புரை புகைப்படங்கள் பரவத்தான் செய்கிறது. தனக்குத் தானே
பகுத்தறிவை வளர்த்துக் கொண்டாலன்றி இவ்வாறான மூட நம்பிக்கைகள்
உயிர்பெற்றே இருக்கும். பல சமூக விரோதிகளும் போலிச் சாமியார்களும்
இதைவைத்தே பிழைப்பு நடத்துகிறார்கள். மக்களோ பிழைப்பை இழந்து
நிற்கிறார்கள். போதுமானவரை இவ்வாறான புகைப்படங்களை நம்பி மன உலைச்சலுக்கு
ஆளாவதை விட நகர்ந்து சென்றுவிடுதலே நமக்கும் நம்மை
சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லது. வீணாக நம்பி மனவிரக்தியை நீங்களே
உறுவாக்கிக் கொள்ளாதீர்கள்.இ(ளை)ணைய சமூகத்தையாவது விட்டுவிடுங்கள்
மதவாதிகளே! உங்களுடைய புதுப்புது யுக்திகளை அறிவியலுக்கு
பயன்படுத்துங்களேன்,,

Subscribe to:
Posts (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...