Wednesday, December 24, 2014

சிறுகதை -"சிறைச்சிறகுகள்"

தனித்து விடப்பட்ட ஒரு பறவையின் ஒடிந்த சிறகினைப் போலத்தான் ராமுவின் வாழ்க்கை ஒரு வித்தியாசம் கூடு இருந்தும் கூடிவாழும் போக்கில்லாமல் வீட்டில் அனாதையாகப்பட்ட ஒரு பதின்ம வயதுச் சிறுவன் விடிவது தெரிந்ததும் கானாமல் போகும் முதல் நபராய் தந்தை தனுசு இருந்தார். பதற்றச்சூழலில் பட்சிகளுக்குப் பதிலாக வாகன அலறல் சத்தங்கள் அவசர அவசரமாக வேலைக்காரி தயார் செய்து வைத்திருந்த காலை சிற்றுண்டியை பையில் திணித்த படியே தன்னை தயார் செய்தாள் .அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்த...

Monday, December 22, 2014

மதுபாட்டில் எச்சம்

"மதுபாட்டில் எச்சம்" பிச்சைப் பாத்திரம் பிழைப்பாகி அதிலே விழும் எச்சில் உணவுபோல என்னுடலை மேய்ந்துவிட்டு! உள்ளாடையில் ஊறுகாவை ருசிபார்த்து சில ரூபாய் சொருகிவிட்டு! தீர்ந்ததடி ஆசையென சிரித்தபடி சிகரெட்டில் டாட்டூ வரைந்தான் காமம் அவனை கண்மறைத்தே போனது! படுக்கையறை பாய்விரிப்பில் பாய்ந்த ரத்தம் உறையவில்லை! பட்டென உட்புகுந்து பிரியாணிக்கும் பீருக்கும் பிடுங்கிச் சென்றான் தரகரவந்தான்! பரத்தையென பட்டம் வாங்கினேன்! பட்டைபட்டையாக சூடும் வாங்கினேன்...

Sunday, December 21, 2014

ஹைக்கூ "இம்சை வரங்கள்"

இளைப்பு இருமல் இடுப்புவலி இதயநோய் இறங்கிய இமைகள் இல்லத்தாயின் இம்சை வரங்கள் ___ உறைந்து போன மானிடம் உரக்க சொன்னது உறங்க மறந்த -எறும்புகள் ___ வேர் நரம்பில் வியர்வைத் துளிகள் வானம் பார்த்த மரம் ___ மேடு பள்ளத் தண்ணீர் தேசம் அழுவது யாருக்கும் தெரியவில்லை தரையில் மீன் ___ மலர்களாடும் மார்கழியில் வாசலில் மயிலாடும் -கோலங்கள் ___ நீண்ட வரிசையில் நட்சத்திரங்கள் யாருக்கு மாலையிட? மலரிடம் கேட்டது மார்கழி பனித்துளிகள் ___ குடிசை தோறும் குவிந்த காக்கைகள் கைகளில்...

Saturday, December 20, 2014

சுவாசத்தின் முன்னேற்பாடு

காதலொரு சுவாசத்தின் முன்னேற்பாடு! இதயம் பற்றவைத்த பாசப் பரவச நெருப்பு! உறங்காதே உள்ளமே! உணர்வுகள் விழித்தெழுவதை பார்!! அதோ!! சோலை ரோசாக்கள் சுதந்திரத்தை தேடியே சோர்ந்து இருக்கிறது! நீயும் உன் சுயநலத்தை சூனியமாய் எண்ணி எதிர் நோக்கும் தென்றல் காற்றிற்கு ஒரு முத்தமிடு! தேவதைக்கு தேரிழுப்பது அவைகள்தான்! பதில் முத்தம் பதிந்து வருவதை பகைவனாலும் தடுத்திட முடியாது! காதலை சுமந்துவரும் தென்றல் காற்றிற்கும் கடைசியாக முத்தமிட்டு செய்நன்றியை செதுக்கிவிடு காதல்...

Friday, December 19, 2014

ஹைக்கூ "எங்கும் ஓலக்குரல்"

கையில் ஏந்திய துப்பாக்கி மூடியே கிடந்த கண்கள் இனி தொடரும் மனிதமெனும் வீழ்ச்சி ___ தவித்த வாய்க்கெட்டா தண்ணீர் பக்கத்திலேயே வெடிக்கிறது எவனோ வீசிய -அணுகுண்டு ___ பற்றி எரிகிறது வயிறு தீராத வலிதானோ! -தீவிரவாதம் ___ அழுகிறது மரம் செதுக்காதீர்கள் சிறிய சமாதி பெட்டிகளை கொலையில் வீழ்ந்த -குழந்தைகள் ___ "தீ" ஓரெழுத்து உனை கொல்லும் விடு "தீ"விரவாதத்தை! ___ பெஷாவர் நகருக்கு பேரறிக்கை "மை" இல்லா பேனாவில் எழுதிய -உலக நாடுகள் ___ கொடுத்த அறிவு இப்படி பயன்படுகிறதே...

Thursday, December 18, 2014

கால்தடம் தேடி!

மண்வாசம் மதிமயங்க மங்கையவள் உனைத்தேடி ஒற்றைக் காலுடனே காதலன் நானும் தவம் புரிகிறேன்! எங்கேயென? உன்னுதடு வினவுவதை விதைநெல்லும் அறிந்து வந்து விடைதேட துடிக்கிறது நீ முதல் பார்வை விதைத்தாயே அதேயிடத்தில் கானல்நீரோடு என் கண்ணீரும் சேர்ந்தணைத்து காற்று வெளியில் கரைந்தோடி காலம் கைகூடாத கல்மரமாகி காத்துக்கிடக்கிறேன் விடையறந்த விதைநெல்லும் வீடுநோக்கி வருகிறது காது கொடுத்து கேட்பாயா என்னிதய மறுதுடிப்பே! இன்னமும் மண்தொட மறுக்கிறதென் மறுகால்! காதலின் காசநோயால்...

Wednesday, December 17, 2014

வேண்டாம் தீவிரவாதம்

சிறகுகளை பதம்பார்த்த தோட்டாக்களே தோழமையின் பலமறிவீர்களோ! எவனோ எங்கிருந்தோ தூண்டிவிட தூசிபடிந்த மதநூலுக்கு துள்ளி திரிந்த குழந்தைகளை பலிகொண்டீரே! பாவத்தை புனிதமென்கிறதோ உங்கள் மதம் பள்ளி வாசலென்ன பாசிசத்தை பூசியதா பாவிகளே!! பள்ளிக்கூடம் நுழைந்த தாலிபான்களே! நீங்கள் பள்ளி வாசல் நுழையாத காட்டுமிராண்டிகள்! கிழித்து எறியப்பட்ட நூற்று அருபத்து நாலுயிர்களும் திருக்குரானின் தீரா வலிகொண்ட பக்கங்கள் பல கனவுகளை கண்டிருக்குமே அப்பள்ளிக் குழந்தைகள் பட்டங்களா...

Tuesday, December 16, 2014

பறவைகளே வாருங்கள்!

புது விடியலைத் தேடி பறவைகளே வாருங்கள்! கலங்கரை விளக்கில் காதலை ஏற்றியதொரு கப்பல் தெரிகிறது! வானமகள் கைகொடுக்க தேவதைகளாய் பனிதுளிகள் மண்ணில் பாதம் பதிக்கிறது! பறவைகளே வாருங்கள்! சிவந்த முகத்தோடு சினங்கொண்டு சினுங்கும் விதைகளிங்கே விருட்சக் கனவோடு சிதறிக் கிடக்கிறது! யாரும் சீண்டாமல் விதைகளோ செல்லரிக்கிறது! சொல்லொன்றை சுமந்து வாருங்கள் சுகப்பயணம் விதைக்கு தாருங்கள்! இறக்கைகள் ஆட பனிதுளி தேவதைகள் நமக்கோர் பாதை வகுத்திடுமே! அன்பும்,கருணையும் அதனிடத்திலும்...

Monday, December 15, 2014

தேவை அதுதானோ!

நடனமாடும் இளம்பொழுதில் நாவிசைப் பார்வை விதைத்தவள் நீயோ! நதியாடும் நாணலிங்கே நகைப்பது ஏனோ! வெள்ளித் தாரகை விளக்கேந்தி விழுந்து கிடக்கிறது இங்கே! உன் பாதம் தழுவ அதற்கோர் தயவு தந்திடுவாயோ! தொகை விரித்தாடும் தோழமைத் தேடிநாடும் வண்ண மயில்தனை வாழ்த்திட வழிவிடுவாயோ! வான் விடியலுக்கு வாழ்வுதனை சேர்த்திடுவாயோ! எங்கே அழகென்று? ஏக்கமாய் எட்டிபார்க்கும் மலரை மடியில் சுமந்தாயோ! மலர்மேயும் வண்டானேன் தேனை சுவைத்திட, தேரில் அமர்ந்திட தேவியே அனுமதி தாராயோ! இந்த தேவன்...

Friday, December 12, 2014

மின்கட்டண உயர்வு 15%

தமிழகம் ஏற்கனேவே பல இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கிறது எந்த ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் மக்களின் நலனில் அக்கரை செலுத்துவது போல் நாடகமாடுகிறார்களே தவிர முழுபங்களிப்பினை தருகிறார்களா? என்று கேட்டால் முற்றிலுமாக இல்லையென்றே பதில் வரும் அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் நம் மாநிலத்திலிருந்தெ மின்சாரம் அளிக்கப்படுகிறது . காற்றாலையாகட்டும் நெய்வேலி கல்பாக்கமாகட்டும் சென்னை யாகட்டும் இவை அனைத்துமே நம் தேவைகளுக்காக இயக்கப்படுகின்றதா?...

Monday, December 08, 2014

சிறுகதை" ஆழ்துளைக் கிணறு"

சிறுகதை" ஆழ்துளைக் கிணறு" காலை விடிவதற்கு ஒரு நாழிகை இருந்தது அதற்குள்ளாக அந்த வீட்டின் முற்றத்தில் கிணற்றுத் தண்ணீர் அலும்பல் சத்தம் கேட்டது. விடியும் முன்பே குளிக்கத் தொடங்கினார் முத்தையன் குளியலை முடித்துக்கொண்டு பூசையறையில் இருந்த தன் மனைவியிடம் பூசாரி! சொன்ன பூச சாமான்களையெல்லாம் எடுத்து வச்சுட்டியாடி...

தற்கொலை தீர்வாகுமா?

அச்சத்தில் அகிலமே இருளாகி! அணையா கோபத்தில் விழிப்பிதுங்கி! நீ எடுத்த முடிவாலே உன்கூடு சவக் குழியில்! வீதியிலே நின்ற பிள்ளை விதி அறியுமா! விளையும் போதே அப்பிஞ்சு முகம் புதைகுழியின் பூட்டறியுமா! கண்ணீரில் கரைந்தோடும் இளம்பிஞ்சின் எதிர்காலம் என்னவாகுமோ! ஐயகோ!!! குடும்பபெயர் இனி இல்லை இச்சமூகம் கூப்பிடுமே அப்பிள்ளை அனாதையென்று! பிச்சைக்கு கையேந்திப் போனாலும் கைபிடித்து இழுக்குமே! பசியுடலில் கீரலுடனே பல சீண்டலும் இங்கே நடக்குமே! நீ வரைந்த ஓவியும் கிழிந்து...

Sunday, December 07, 2014

மறந்து விடு!

கனவுகளில் நீயிருந்தால்! என் காட்சிகளும் பிழையாகும்! கண்மணியே கலைந்துவிடு! இக்காதலனை மறந்து விடு! தீவிழுந்த பூமிதனில் புழுவாகி துடிக்கிறதென் மனது! கண்மணியே கலைந்துவிடு! இக்காதலனை மறந்துவிடு! கானும் வனமெல்லாம் கால்பதிந்தோம் என்றுமே சுமையானதில்லை சுற்றுலா பறவைபோலே சுதந்திர காற்றின் சுகத்தினையும் நாமடைந்தோம்! கடற்கரை மணல் நம்மை சுட்டதில்லை! கடலலை காதலை போற்றிற்று! அதன் காதல் கதையையும் நாம் கேட்டதில்லை! வசந்த காலத்தில் அளவிட முடியா அக்காதலின் எல்லையில்...

Friday, December 05, 2014

கார்த்திகை தீபத்திருநாள்

இனியவள் பௌர்ணமி நிலவு அவள்! நிதர்சனமாய் பூமிதனை எட்டிப்பார்த்தாள்! என்ன வியப்பு!!! இரவு பகலானதா? தடம்மாறி, தடுமாறி வந்தோமோ தத்தளிக்கிறதே மனது! ஜோதியில் சோகத்தை புதைக்கிறதே இப்பூமி! ஆழ்ந்து சிந்தித்தாள்! திங்களவனை கூப்பிட்டாள்! சிரித்தபடியே சிந்தனையினை சிதறடித்தான் திங்களவன்! அடியே!!! என்னுள் எழிலாகி சுடரொளி பாதி சுமப்பவளே! இன்று, தீபமடி திருவிளக்கு திகட்டாதடி கார்த்திகை தீபமடி! கானக்குயில் கனவுகளின் காட்சிதனை கானுதடி! கண்கொண்டு பாராயோ தீபத்தினழகை!...

Thursday, December 04, 2014

இயற்கையின் பிள்ளைகள்

உள்ளம் ஊசிமுனையில் ஊசலாட! உடலெப்படி ஓய்வை விரும்பும்! அருகிலேயே இரு! "ஆன்மா" மேலெழும்ப எத்தனிக்கிறது என்றாயே! கைகளை பற்றிக்கொண்டு கண்ணீரில் நான் மிதக்க! கடைசி காலத்தை நீயெப்படி தாங்குவாய்! நானெப்படி நடிக்கப் போகிறேன்! ஏ!!! நட்சத்திரங்களே! நடைபழக துணையொன்று தேடினீர்களோ! தூரமாய் எனை துயரத்தால் துரத்தினீர்களோ! துக்கம் தாளாமல்,, புத்தனுக்கு புதுக்கடிதம் எழுதினேன்! இழவில்லா வீட்டில் இனிப்பை படையலிடு என்றான்! படையலுக்கு எங்கும் பாதையில்லை என்றுணர்ந்தேன்!...

Wednesday, December 03, 2014

சிறுகதை "செல்வத்தின் முகவரி"

காலையிலேயே கரண்ட் கட்டாகிடுச்சே, ஏம்மா!! இந்த பழசெயெல்லாம் உனக்கு பழக்கமிருக்காது கொடு நான்செய்யரேன்! சமையலை கவனித்த கண்மனியிடம் அரைக்க வேண்டிய பொருளை வாங்கிக்கொண்டு அம்மி பக்கம் நகர்ந்தாள் லட்சுமியம்மா. நெசந்தான் அத்தே எல்லத்தையும் கரண்ட்டால செஞ்சதால கைப்பழக்கம் வரமாட்டேங்குது என்று சொல்லிபடியே அடுத்த வேலைபார்க்க நகர்ந்தாள் கண்மணி. அதற்குள் அலுவலக அவசத்தை முடுக்கி விட்டான் செல்வம். ஏம்பா!! செல்வம் இன்னைக்கு தான் கல்யாண நாளாச்சே லீவு போட்டு புள்ள...

இவர்கள் புனிதர்கள்

மேடைக்கு மேடை உன்மீது நான் கல்லெறிய! என்மீது நீ கல்லெறிய! கூட்டத்தை சேர்க்க கற்றுக்கொண்டோம்! கரவொலி மட்டும் குறையவேயில்லை! எங்கும், எதிலும் முரணானோம்! முக்காடு போட்டுக்கொண்டு ரகசியமாய் உறவாடி! கடைசிவரை மக்கள் சிந்தனையில் சீர்படாது சீரழிந்து போக! நாமிருவரும் சிந்திக்க வேண்டுமென சிறு ஒப்பந்தமும் போட்டுக் கொண்டோம்! கரூவூலம் காலிசெய்து கல்லாப்பெட்டியில் அடைத்தோம்! அரசியல் வியாபாரம் அமோக வெற்றிதான்! அதிகார நாற்காலிக்கு நாமிருவரும் செல்லப் பிள்ளைகள்! அறியாமை...

"காதலில் கண்கள்"

நீண்ட!!! பொழுதுகளில் தனிமையில் தத்தளிக்க! வலுக்கிறது அச்சந்தேகம்! அரிச்சந்திரன் அவனது அழகான மனைவியை கண்டதும்! காதல் ரசத்தை பொழிவானே! கவிதையை கட்டவிழ்த்து விடுவானே! இங்கே! முளைக்கிறதென் முதன்மைச் சந்தேகம்! காதல் காவியத்தில் காட்டாத அவன்காதலால்! கண்ணயர்ந்து தூங்கினாலும் கனவிலெழும் அச்சந்தேகம்! எதுவென்றா கேட்கிறீர்கள்? எடுத்துச் சொல்கிறேன் குறிப்பெடுங்கள் காதலர்களே! பொய்யுரைக்க மாட்டானாம் அரிச்சந்திரன்! அப்படியிருக்க,,,,, அழகான மனைவியை அள்ளியெடுத்து...

Tuesday, December 02, 2014

சிறுகதை "தயாளனுக்கு விஷக்காய்ச்சல்"

காலனியின் கடைசித் தெருவில் தேவாலையம் ஒன்றின் ஒலிப்பெருக்கியில் பைபளின் வாசனங்கள் வாசிக்கப்பட்டன. விடிந்தது காலை கடிகாரமில்லாமலே அவ்வசனங்கள் ஐந்து மணியென்று உணர்த்திற்று.வசனங்களை கேட்டவாரே சோம்பலை முறித்தபடி எழுந்தாள் சரளாம்மாள். வீட்டுவேளைகளை நினைவுகூர்ந்தபடியே வாசற்கதவினை திறந்தாள் காலை முழிப்புடன் பெட்டைக் கோழிகள் ரேஷன் அரசிக்கு வரிசையில் நின்று கொக்கறித்தன. இதுகளுக்கு எப்படித்தான் விடிஞ்சது தெரிஞ்சதோ என்று முனுமுனுத்தபடி அரசியை எடுத்து வந்து போட்டுவிட்டு தன் பிள்ளை தயாளனுக்கு சுடுகஞ்சி செய்ய அடுப்பங்கரைக்குப் போனாள். இருக்கின்ற வேலைகளில் மணியானதே...

சிறுகதை "அவன் எனும் மனிதன்"

அதுவொரு இளங்காலை பொழுது இன்னும் பிரசவிக்காத கடல்தாய் தம்பிள்ளையான சூரியனை ஈன்றெடுக்க வலியால் துடித்துக்கொண்டிருந்­த நேரம். அதற்கு முன்பே அவசர அவசரமாக வானமது வெண்சேலையை இழுத்து மூடியது மேகம். கொட்டிய மழை மருத்துவச்சியாக மாறிற்று. அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே! என்று அவசர அவசரவமாக எழுந்து எப்போதும் போலே தமிழக தலைமையிடத்தையும் இந்தியாவின் இறுதிமூலையையும் இணைக்கின்ற அந்நெடுஞ்சாலை வழியே தனது நடைப்பயிற்சியை தொடங்கினான் அவன். வலப்புறம் குடியிருப்புகள் இடப்புறம்...

ஹைக்கூ "சஞ்சலங்கள்"

வழியெங்கும் லஞ்சம் மிஞ்சியிருந்த சில்லரை -முதியோர்பணம் ___ ஏணிகளே வலி தாங்குங்கள் உயரத்தில் ஒருவன் உதைக்கப்போகிறான்! ___ மடைதிறவா மண்வெட்டி நீதிமன்றத்தில் -நிலத்தகராறு ___ பவ்யமாய் பதுங்கும் பாவையவள் வீசிச் சென்றது புயலாய் அவளது பார்வை! ___ சுவற்றில் விழுந்த நிழல் நிமிர்ந்து நின்றது -நிலா ___ மீசை நறைத்ததும் மீண்டும் எழுந்தேன்! புதியதொரு உலகம் பூக்களை தூவி வரவேற்றது! முதுமையை முழுதாய் ஏற்றதன் விளைவிதுவோ! ___ பின்னலாடை பிறவிபலனை அடைந்ததோ! ஏதோ!! திருமண...

Monday, December 01, 2014

மனிதம் மரணிக்கலாமா?

எங்கோ ஒரு மூலையில்! எவனோ ஒருவன் பசிக்கான வேட்கையுடனே படுத்துறங்குகிறான்! விழித்துக்கொண்டது வறுமை! அவனை பார்த்தவாரே! அடுத்த வழியில் கடக்கிறான்! அவனும் வறுமையின் பிடியில்! வந்ததும் , சென்றதுமாய் வாகனங்கள் வந்திறங்கவில்லை யாரும்! வாழும் பணத்தாசை பேய்கள் தானோ அவர்கள்! செய்வினையோ, தெய்வச் செயலோ, பாவத்தின் பிரதிபலனோ! முனுமுனத்த உதடுகளும் முன்னால் நிற்கிறதே தவிர! முந்திவந்திட வில்லை முயற்சியும் செய்திடவில்லை! வறுமையின் வலி இதுவென அம்மூளைக்கு எட்டுமா! வந்ததொரு...

Sunday, November 30, 2014

"நிலவும் நிழலும்"

வானத்து முழு நிலவின் உடல் முழுதும் வழியும் சீழுடனே கலந்த குருதி வாடை! பாவம் படுத்திருக்கிறாள் கடைசி காலத்தை எண்ணியபடியே! இதயம் எழுப்பிய அதிர்வுகளைத் தாங்கிக்கொண்டே அருகே சென்றேன்! அழுகையும்,அலறலும் ஒருசேர! படுக்கையில் கிடந்த நிலவின் வலிமுனுகலை கேட்க இருகாதுகள் போதவில்லை! அவசரமாதலால் அவசியமான மருந்தை எடுத்துத் தடவ எத்தணிக்க! அருகிலேயே அதட்டியது அக்குரல்! அடேய்!! நிறுத்து அவளைத்தொடாதே என்றொரு குரல்! குரலே காட்டிவிட்டது அதன் திமிறை! திரும்பி பார்க்கையில்!...

பணப்பேயா பறத்தை!

எத்தனை மொழிகள் அத்தனையும் நானறிவேன்! என் மொழி போலிச் சினுகல் மட்டுமே! நவநாகரீக டாட்டூக்களை கண்டதும் கோபமெனுக்கு! எவனோ! எப்போதோ! வைத்த சிகரெட் சூடுகளை விடவா அழகானது அவையென்று! வீசிவிட்ட பணம் தெருவீதிக்கு வந்துவிட்டாலும்! தேவாங்கு பார்வையுடனே பார்ப்பார்கள்! இது தாசியின் பணமென கல்லாப்பெட்டியும் கண்ணடிக்கும்! ஆடைகள் வாங்கவே ஆடைகளை களைந்தேன்! அவசர அவசரமாய் இறங்கிய அவனுறுப்பு அனுபவித்ததில் அத்துணை மனைவியரின் வலைகளையும் நானறிவேன்! பணப்பேயா பறத்தை! பட்டிமன்றம்...

சில கல்லறைகள்

வெட்கத்தில் பனிதுளிகள் பூக்களின் அரும்பிதழ் -முத்தம் ___ கல்லறைக்கு வர்ணம் பெயருக்கு பின்னால் -பிணங்கள் ___ ஒரே அலங்கோல காட்சி அழுகையில் அரசு -மருத்துவமனை ___ கருவிழிதனை காதலுக்கு கொடுத்தாயோ இப்படி சிவந்துள்ளது -முகம் ___ எத்தனை வசைச்சொற்கள் பிறந்தது குற்றமா? -பெண் ___ அடுப்படியில் பூனை துள்ளி குதித்தது -டாஸ்மாக் ___ வாடாத முகம் வட்டமிடும் கழுகுகள் நிரந்தர இடம் ஊரெல்லையில் -கல்லறை ___ காதலும் அறிவியலே வாழ்க்கையில் எத்தனை -கண்டுபிடிப்பு ___ ஒரு குறையுமில்லை...

Friday, November 28, 2014

ஹைக்கூ "பாலைவன நிலவு"

இறுதி முடிவு முதல் சந்தித்த இடத்திலே தொடங்கிற்று! இனி சுமப்பது நினைவுகளைத்தானோ! _____ தாகம் தணிக்காத இரவுகள் நிலவின் மீதான -கோபம் _____ கைகளை கழுவிய உறவுகள் பறவைகளை நம்பியே -தனிமரம் _____ வெட்கத்தில் செங்காந்தள் அழகை ரசித்தது கார்த்திகை மாதம் _____ அஞ்சலி செலுத்தும் தேனீக்கள் வரிசையாக வாகனம் மோதிய வண்ணத்துப்பூச்சிகள் _____ என் மீதான இரக்கத்தை கைவிடு கைநழுவியபின் காதலை நினைத்தே வாழ்கிறேன்! _____ உள்ளம் உறங்கவில்லை ஊரெல்லையில் ஓலம் நாய்கள் ஜாக்கிரதை...

ஹைக்கூ "மூன்று கோடுகள்"

"மூன்று கோடுகள்" நடிக்க தெரியாத நாணல் வலைந்து கொடுக்கும் -வாழ்வு _____ புழுதியுடனே! பறந்த மண் தேடியும் கிட்டாத விளைநிலம் _____ பனிதுளிகளே இரவோடு ஆடுங்கள் கண்திறந்தான் கதிரவன் _____ விடிந்ததும் கானவில்லை கணவன் , மனைவியரை மூன்றாம் கோட்டில் தனியே -குழந்தை _____ எல்லாம் கண்துடைப்பு நாடகமோ! சாலையோர -சந்திப்புகள் ______ வீதியெங்கும் ஊமையான மொழி இனி எட்டாக்கனியா நம்தமிழ் _____ அதோ! கடைசிக் கல்லறையில் காதல் பிழைத்துக் கொண்டது -சாதிமதம் __...

Thursday, November 27, 2014

ஹைக்கூ "நேற்றைய காற்று"

"நேற்றைய காற்று" விடியும் பூமி எழமுடியாத அதிகாலை -உறக்கம் _______ வீதியெங்கும் அகல்விளக்கு காலியான கூடை தீராத வறுமை _______ தென்றலில் தலைகோதும் காற்று காதல் இனி வசப்பட்டுவிடும் _______ நிராசைகளை நீரில் கழுவியது நிலா இனி எல்லா இரவுகளுக்கும் பரிசாகும் வெள்ளி ______ பனிகளை பாருங்கள் படரும் கொடிகள் ஒட்டியானமாகும் ______ அவளின் வருகையை உணரவைத்த காற்றிற்கு நன்றி! _______ மேடை முழுதும் அலங்கார விளக்குகள் காற்றிற்கு வேலையில்லை ஏமாந்து போன முகம் _______ நாட்டிற்கும்...

Thursday, November 20, 2014

ஈழத்தலைவரின் படைச்சிறப்பு

ஈழத்தின் இணையில்லாச் சொந்தம் மேதகு தலைவர் பிரபாகரனின் 26 Nov பிறந்தநாளை தமிழகம் இதுவரைக் கண்டிராத முறையில் கொண்டாடப்பட வேண்டும். அதன் மூலம் ஈழத்துரோகிகளை இணங்கான வேண்டும். இதோ! மேதகு தலைவர் அவர்களின் மரபுவழிப் படைப்பிரிவுகளைத் தான் இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விடுதலைப்புலிகளின் மரபுவழி இராணுவக் கட்டமைப்புக்கள் "தரைப்படைகள்" * இம்ரான் பாண்டியன் படையணி. * ஜெயந்தன் படையணி. * சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி. * கிட்டு பிரங்கிப் படையணி. *...

Monday, November 17, 2014

தண்ணீர் சிற்பங்கள்!

தண்ணீர் சிற்பங்கள் நெடுஞ்சாலைக் கழுவி நெடுந்தூரப் பயணம் ஏதோ! தடுக்கிறதே! ஓ! அணைக்கட்டா! குழந்தை வயிற்றில் உதைக்கும் உணர்வினை போல் நானுனை உணர்ந்தேன்! எங்கே? நம் விளைநிலச் சொந்தங்கள் ஒளித்து வைத்து விளையாடாதேயடி கள்ளி! திறந்து காட்டு தீரட்டும் விவசாயப்பசி அடடே! கண்ணத்தில் முத்தமிடும் முகம் யாருடையது? ஓ? மீன்குஞ்சுகளா! பாசத்தில் பாசாங்கில்லா பாசப்பிறவிகள் நீங்கள்தானே! துள்ளி குதிப்பதன் காரணமென்னவோ! வானம்பாடி வாசலை நோக்கி வருவதைக் கண்டீரோ! எங்கே? நம்...

Wednesday, November 05, 2014

ஹைக்கூ "இருகயிறு"

*தூரத்தில் நிலவொளி மங்கிற்று திட்டியபடியே மேகத்தை கடக்கிறது காதலிரவுகள்!* __________ *பயத்தில் பதுங்கிய கிராமம் எச்சரிக்கையா? ஊரெல்லையில் -நாய்கள் ஓலம்* __________ *பசி வயிற்றுக்கு ஏது நிம்மதி! பானையை திறந்தால் நீருக்கு பதிலாக கண்ணீரே நிரம்புகிறது!* __________ *வீசும் புயலுக்கு இரையான குடிசைகள் ஆங்காங்கே காத்திருக்கும் ஆறடி நிலங்கள்* __________ *விரக்தியில் ஏழை தற்கொலைக்கு தயாராகிறது -பசும்பால்* __________ *வெற்றிடத்து சமையல் காற்றும் காசானது உறையில்...

Monday, November 03, 2014

சிறுமிகளைச் சீரழிக்காதீர்கள்!

சமீப காலங்களில் இந்திய தேசியத்தில்அதிகப்படியானவண்முறைகளுக்கு உட்படுத்தப்படும்சிறுவர்சிறுமிகளை இச்சமூகம்கண்டுகொள்ளவே இல்லை ஆங்காங்கே ஆசிரியர்களின்அத்துமீறல் "குடி"மகன்களின்வெறியாட்டமென சிறுவர்சிறுமிகள்அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்அடிக்கடி இச்சமூகம்அழிவை நோக்கியே பயணிக்கிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளப்படுகிறதுநம் பண்பாட்டு நெறியடிப்படையில்"மாதா,பிதா,குரு,தெய்வம்"எனச்சொல்வதுண்டுஅம்மை அப்பனுக்கு அடுத்தப்படியாக ஆசானும்அதன் பிறகே தெய்வம் எனபோதிக்கப்படுகிறது...

Sunday, November 02, 2014

ஆற்று மணலின் வேண்டுகோள்!

நதிகளைத் தேடி கடல் அலையும் காலமிது கானாமல் போனதேன்? "விளைநிலங்கள்" செய்நன்றி சேற்றுப்புழுதியிலே சிக்கித் தவிப்பதுவோ! புதையுண்டு கிடக்கிறது நம் சீவ ரகசியம்! பிரித்தாளும் சூழ்ச்சியில் பிரியாமல் கைகோர்க்கும் கயவர்கள் இவர்கள் தானோ! உயரத்திலேற்றி ஊஞ்சலாடிய மணலோ! உருகுலைந்து கண்ணீரை அத்தார்ச்சாலையில் தெளித்தபடியே! ஒப்பாரி வைக்கிறது ஆற்றுமணல்! காதும் செவிடா? கண்ணும் குருடா? கடைசியாக கையெடுத்து வேண்டுகோள் வைக்கிறது மணல்! கொஞ்சம் திரும்பியாவது பாருங்கள்!...

Thursday, October 30, 2014

பனிச்சாரல் கடற்கரைக் காதல்!

பனிச்சாரல் கடற்கரைக் காதல்! இமைகளை மூடாமல் வியர்வைத்துளி உப்போடு! செய்து வைத்த மணல்வீட்டருகில்! மனிதனை விழுங்கி அவனே! "தலைவன்" என்றழைத்த மீன்வாடை படாத அந்த வீட்டாரின் மனையின் மீதோர் கண்! மணற்குவியலருகே அந்த ஜல்லிக்குவியல் தான் அனைவரின் மனதையும் கவர்ந்தது அவளும் அதிலொருவள்! ஓ!!! அடுத்த ஆட்டம் ஆரம்பமாயிற்றோ! அதோ! அடியாள் அதட்டுவானெனும் பயத்திலே! அழகழகான கல்லங்காயை அடுத்தடுத்து பறிக்கிறது அக்கைகள்! அவளைக் கவர! அடுத்த கலையை அவிழ்த்து விடுவதுதானே முறை!...

Wednesday, October 15, 2014

கருப்புடல் குமரியே!

கருப்புடலில் கவர்ந்திழுக்கும் காவியமே கேளடி கிளியோபாட்ரா காலத்தின் கண்ணாடியல்லவா கண்டதும் காதலுனை கவர்ந்ததே காரணம் கேளடி கருவிழியும் கருப்புதானே கட்டுடல் கருப்பென கர்வம் கொள்ளடி கடவுள் கருவரையில் காட்சியும் கருப்புதானே காதலில் கருப்புடல் கானமில்லை கரம் கோர்த்தபின் கார்மேகமே நம் கைப்பிள்ளை கருப்பொன்றும் கேலிசொல்லில்லை காதலுக்கு கருப்பெழுதும் கதையெல்லாம் காட்சிப்பிழையில்லை காதலோடு குடையொன்றில் குடியிருப்போம் கருப்புடல் குமரி...

Thursday, October 09, 2014

நெசந்தானா!!!

நெசந்தானா! இது நெசந்தானா! ஏம்புள்ள எழுத படிக்குது நெசந்தானா! ஏணிமேல ஏறி! எட்டடுக்கு மாளிகனாலும் எழவெடுத்த உசுருமேல எப்பவும் கவலபடாம! அந்தரத்துல தொங்கிகிட்டு அழகழகா சுண்ணாம்படிக்க! அடிச்ச சுண்ணாம்போ! அலர்ஜியாக ஆஸ்துமாவும் அழுத்தி புடிக்க! அஞ்சாறு காசு சேர்த்து! அங்கங்க கடன் கேட்டு! அதோடு நோயுஞ் சேர்த்து! அமிச்சி வச்சேன் பள்ளிகொடத்துக்கு! அடுக்கடுக்கா புஸ்தகம் படிக்க ஆன செலவோ! அஞ்சு சைபரு! அழுது பொலம்ப நேரமில்ல! அழுது பொரண்டாலோ அதபார்த்து அந்தபுள்ள!...

Friday, August 29, 2014

-சிறைப்பறவை-

ஆடைக்கும் உணவுக்கும் அவசியப் பணமாதலால் ஆடையின்றி படுத்திருந்தேன்! கட்டில் முழுக்க மல்லிகையும் மணம் வீசும் வாசனைத் திரவியங்களும் தெரியவில்லை மூக்கிற்கு அந்த மணம்! மதுவும் சிகரெட் மணமும் கலந்த கலவை மட்டுமே கடித்துக்கொண்டே கொன்றழிக்கிறது என்னிதழை! கால்களுக்கிடையில் அவணுறுப்பு அழுத்துகையில்! பசியுடனும்! வலியுடனும்! சாகும் என்வயிற்றுத் தசையெழுப்பிய அவ்வொலியை முனகலென முடித்துவிட்டான்! முடிவு அறியா கண்ணீர்த்துளி மட்டும் கட்டிலை நனைக்கிறது! பசிக்கழுகும்...

-என்னிரவு நிலவுத்தோழி-

கருப்புடை அணிந்து நட்சத்திரங்களின் நாடக வெளிச்சத்தில் வெட்கப்படும் முகமணிந்தவளே! நீயெனைக் கவர கவசமிட்டாயோ! ஐய்யோ! உனது இழுவிசையால் இலைவிழும் மரங்களுக்கிடையில் சிக்கித் தவிக்கிறேனோ நான்! காதலை உணர்ந்து கண்ணீரில் நனைந்து கரைந்து போகாத சுயவலியைச் சுமந்து அதுவும் இனிதெனக் கண்டு இணைசேரா இம்சையுடனே! எனைப்போலத் தவித்தவனும் எத்தனை பேரோ! தனிமையை தனதாக்கி தனிமரமே சுகமெனக் கிடந்த இச்சுகவாசிக்கு சுமையாக வந்தாயா? இல்லை! சுவையாக வந்தாயா? சட்டென கூறாமல் சாரலில்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...