Wednesday, December 24, 2014

சிறுகதை -"சிறைச்சிறகுகள்"

தனித்து விடப்பட்ட ஒரு பறவையின் ஒடிந்த சிறகினைப் போலத்தான் ராமுவின் வாழ்க்கை ஒரு வித்தியாசம் கூடு இருந்தும் கூடிவாழும் போக்கில்லாமல் வீட்டில் அனாதையாகப்பட்ட ஒரு பதின்ம வயதுச் சிறுவன் விடிவது தெரிந்ததும் கானாமல் போகும் முதல் நபராய் தந்தை தனுசு இருந்தார். பதற்றச்சூழலில் பட்சிகளுக்குப் பதிலாக வாகன அலறல் சத்தங்கள் அவசர அவசரமாக வேலைக்காரி தயார் செய்து வைத்திருந்த காலை சிற்றுண்டியை பையில் திணித்த படியே தன்னை தயார் செய்தாள் .அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்த...

Monday, December 22, 2014

மதுபாட்டில் எச்சம்

"மதுபாட்டில் எச்சம்" பிச்சைப் பாத்திரம் பிழைப்பாகி அதிலே விழும் எச்சில் உணவுபோல என்னுடலை மேய்ந்துவிட்டு! உள்ளாடையில் ஊறுகாவை ருசிபார்த்து சில ரூபாய் சொருகிவிட்டு! தீர்ந்ததடி ஆசையென சிரித்தபடி சிகரெட்டில் டாட்டூ வரைந்தான் காமம் அவனை கண்மறைத்தே போனது! படுக்கையறை பாய்விரிப்பில் பாய்ந்த ரத்தம் உறையவில்லை! பட்டென உட்புகுந்து பிரியாணிக்கும் பீருக்கும் பிடுங்கிச் சென்றான் தரகரவந்தான்! பரத்தையென பட்டம் வாங்கினேன்! பட்டைபட்டையாக சூடும் வாங்கினேன்...

Sunday, December 21, 2014

ஹைக்கூ "இம்சை வரங்கள்"

இளைப்பு இருமல் இடுப்புவலி இதயநோய் இறங்கிய இமைகள் இல்லத்தாயின் இம்சை வரங்கள் ___ உறைந்து போன மானிடம் உரக்க சொன்னது உறங்க மறந்த -எறும்புகள் ___ வேர் நரம்பில் வியர்வைத் துளிகள் வானம் பார்த்த மரம் ___ மேடு பள்ளத் தண்ணீர் தேசம் அழுவது யாருக்கும் தெரியவில்லை தரையில் மீன் ___ மலர்களாடும் மார்கழியில் வாசலில் மயிலாடும் -கோலங்கள் ___ நீண்ட வரிசையில் நட்சத்திரங்கள் யாருக்கு மாலையிட? மலரிடம் கேட்டது மார்கழி பனித்துளிகள் ___ குடிசை தோறும் குவிந்த காக்கைகள் கைகளில்...

Saturday, December 20, 2014

சுவாசத்தின் முன்னேற்பாடு

காதலொரு சுவாசத்தின் முன்னேற்பாடு! இதயம் பற்றவைத்த பாசப் பரவச நெருப்பு! உறங்காதே உள்ளமே! உணர்வுகள் விழித்தெழுவதை பார்!! அதோ!! சோலை ரோசாக்கள் சுதந்திரத்தை தேடியே சோர்ந்து இருக்கிறது! நீயும் உன் சுயநலத்தை சூனியமாய் எண்ணி எதிர் நோக்கும் தென்றல் காற்றிற்கு ஒரு முத்தமிடு! தேவதைக்கு தேரிழுப்பது அவைகள்தான்! பதில் முத்தம் பதிந்து வருவதை பகைவனாலும் தடுத்திட முடியாது! காதலை சுமந்துவரும் தென்றல் காற்றிற்கும் கடைசியாக முத்தமிட்டு செய்நன்றியை செதுக்கிவிடு காதல்...

Friday, December 19, 2014

ஹைக்கூ "எங்கும் ஓலக்குரல்"

கையில் ஏந்திய துப்பாக்கி மூடியே கிடந்த கண்கள் இனி தொடரும் மனிதமெனும் வீழ்ச்சி ___ தவித்த வாய்க்கெட்டா தண்ணீர் பக்கத்திலேயே வெடிக்கிறது எவனோ வீசிய -அணுகுண்டு ___ பற்றி எரிகிறது வயிறு தீராத வலிதானோ! -தீவிரவாதம் ___ அழுகிறது மரம் செதுக்காதீர்கள் சிறிய சமாதி பெட்டிகளை கொலையில் வீழ்ந்த -குழந்தைகள் ___ "தீ" ஓரெழுத்து உனை கொல்லும் விடு "தீ"விரவாதத்தை! ___ பெஷாவர் நகருக்கு பேரறிக்கை "மை" இல்லா பேனாவில் எழுதிய -உலக நாடுகள் ___ கொடுத்த அறிவு இப்படி பயன்படுகிறதே...

Thursday, December 18, 2014

கால்தடம் தேடி!

மண்வாசம் மதிமயங்க மங்கையவள் உனைத்தேடி ஒற்றைக் காலுடனே காதலன் நானும் தவம் புரிகிறேன்! எங்கேயென? உன்னுதடு வினவுவதை விதைநெல்லும் அறிந்து வந்து விடைதேட துடிக்கிறது நீ முதல் பார்வை விதைத்தாயே அதேயிடத்தில் கானல்நீரோடு என் கண்ணீரும் சேர்ந்தணைத்து காற்று வெளியில் கரைந்தோடி காலம் கைகூடாத கல்மரமாகி காத்துக்கிடக்கிறேன் விடையறந்த விதைநெல்லும் வீடுநோக்கி வருகிறது காது கொடுத்து கேட்பாயா என்னிதய மறுதுடிப்பே! இன்னமும் மண்தொட மறுக்கிறதென் மறுகால்! காதலின் காசநோயால்...

Wednesday, December 17, 2014

வேண்டாம் தீவிரவாதம்

சிறகுகளை பதம்பார்த்த தோட்டாக்களே தோழமையின் பலமறிவீர்களோ! எவனோ எங்கிருந்தோ தூண்டிவிட தூசிபடிந்த மதநூலுக்கு துள்ளி திரிந்த குழந்தைகளை பலிகொண்டீரே! பாவத்தை புனிதமென்கிறதோ உங்கள் மதம் பள்ளி வாசலென்ன பாசிசத்தை பூசியதா பாவிகளே!! பள்ளிக்கூடம் நுழைந்த தாலிபான்களே! நீங்கள் பள்ளி வாசல் நுழையாத காட்டுமிராண்டிகள்! கிழித்து எறியப்பட்ட நூற்று அருபத்து நாலுயிர்களும் திருக்குரானின் தீரா வலிகொண்ட பக்கங்கள் பல கனவுகளை கண்டிருக்குமே அப்பள்ளிக் குழந்தைகள் பட்டங்களா...

Tuesday, December 16, 2014

பறவைகளே வாருங்கள்!

புது விடியலைத் தேடி பறவைகளே வாருங்கள்! கலங்கரை விளக்கில் காதலை ஏற்றியதொரு கப்பல் தெரிகிறது! வானமகள் கைகொடுக்க தேவதைகளாய் பனிதுளிகள் மண்ணில் பாதம் பதிக்கிறது! பறவைகளே வாருங்கள்! சிவந்த முகத்தோடு சினங்கொண்டு சினுங்கும் விதைகளிங்கே விருட்சக் கனவோடு சிதறிக் கிடக்கிறது! யாரும் சீண்டாமல் விதைகளோ செல்லரிக்கிறது! சொல்லொன்றை சுமந்து வாருங்கள் சுகப்பயணம் விதைக்கு தாருங்கள்! இறக்கைகள் ஆட பனிதுளி தேவதைகள் நமக்கோர் பாதை வகுத்திடுமே! அன்பும்,கருணையும் அதனிடத்திலும்...

Monday, December 15, 2014

தேவை அதுதானோ!

நடனமாடும் இளம்பொழுதில் நாவிசைப் பார்வை விதைத்தவள் நீயோ! நதியாடும் நாணலிங்கே நகைப்பது ஏனோ! வெள்ளித் தாரகை விளக்கேந்தி விழுந்து கிடக்கிறது இங்கே! உன் பாதம் தழுவ அதற்கோர் தயவு தந்திடுவாயோ! தொகை விரித்தாடும் தோழமைத் தேடிநாடும் வண்ண மயில்தனை வாழ்த்திட வழிவிடுவாயோ! வான் விடியலுக்கு வாழ்வுதனை சேர்த்திடுவாயோ! எங்கே அழகென்று? ஏக்கமாய் எட்டிபார்க்கும் மலரை மடியில் சுமந்தாயோ! மலர்மேயும் வண்டானேன் தேனை சுவைத்திட, தேரில் அமர்ந்திட தேவியே அனுமதி தாராயோ! இந்த தேவன்...

Friday, December 12, 2014

மின்கட்டண உயர்வு 15%

தமிழகம் ஏற்கனேவே பல இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கிறது எந்த ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் மக்களின் நலனில் அக்கரை செலுத்துவது போல் நாடகமாடுகிறார்களே தவிர முழுபங்களிப்பினை தருகிறார்களா? என்று கேட்டால் முற்றிலுமாக இல்லையென்றே பதில் வரும் அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் நம் மாநிலத்திலிருந்தெ மின்சாரம் அளிக்கப்படுகிறது . காற்றாலையாகட்டும் நெய்வேலி கல்பாக்கமாகட்டும் சென்னை யாகட்டும் இவை அனைத்துமே நம் தேவைகளுக்காக இயக்கப்படுகின்றதா?...

Monday, December 08, 2014

சிறுகதை" ஆழ்துளைக் கிணறு"

சிறுகதை" ஆழ்துளைக் கிணறு" காலை விடிவதற்கு ஒரு நாழிகை இருந்தது அதற்குள்ளாக அந்த வீட்டின் முற்றத்தில் கிணற்றுத் தண்ணீர் அலும்பல் சத்தம் கேட்டது. விடியும் முன்பே குளிக்கத் தொடங்கினார் முத்தையன் குளியலை முடித்துக்கொண்டு பூசையறையில் இருந்த தன் மனைவியிடம் பூசாரி! சொன்ன பூச சாமான்களையெல்லாம் எடுத்து வச்சுட்டியாடி...

தற்கொலை தீர்வாகுமா?

அச்சத்தில் அகிலமே இருளாகி! அணையா கோபத்தில் விழிப்பிதுங்கி! நீ எடுத்த முடிவாலே உன்கூடு சவக் குழியில்! வீதியிலே நின்ற பிள்ளை விதி அறியுமா! விளையும் போதே அப்பிஞ்சு முகம் புதைகுழியின் பூட்டறியுமா! கண்ணீரில் கரைந்தோடும் இளம்பிஞ்சின் எதிர்காலம் என்னவாகுமோ! ஐயகோ!!! குடும்பபெயர் இனி இல்லை இச்சமூகம் கூப்பிடுமே அப்பிள்ளை அனாதையென்று! பிச்சைக்கு கையேந்திப் போனாலும் கைபிடித்து இழுக்குமே! பசியுடலில் கீரலுடனே பல சீண்டலும் இங்கே நடக்குமே! நீ வரைந்த ஓவியும் கிழிந்து...

Sunday, December 07, 2014

மறந்து விடு!

கனவுகளில் நீயிருந்தால்! என் காட்சிகளும் பிழையாகும்! கண்மணியே கலைந்துவிடு! இக்காதலனை மறந்து விடு! தீவிழுந்த பூமிதனில் புழுவாகி துடிக்கிறதென் மனது! கண்மணியே கலைந்துவிடு! இக்காதலனை மறந்துவிடு! கானும் வனமெல்லாம் கால்பதிந்தோம் என்றுமே சுமையானதில்லை சுற்றுலா பறவைபோலே சுதந்திர காற்றின் சுகத்தினையும் நாமடைந்தோம்! கடற்கரை மணல் நம்மை சுட்டதில்லை! கடலலை காதலை போற்றிற்று! அதன் காதல் கதையையும் நாம் கேட்டதில்லை! வசந்த காலத்தில் அளவிட முடியா அக்காதலின் எல்லையில்...

Friday, December 05, 2014

கார்த்திகை தீபத்திருநாள்

இனியவள் பௌர்ணமி நிலவு அவள்! நிதர்சனமாய் பூமிதனை எட்டிப்பார்த்தாள்! என்ன வியப்பு!!! இரவு பகலானதா? தடம்மாறி, தடுமாறி வந்தோமோ தத்தளிக்கிறதே மனது! ஜோதியில் சோகத்தை புதைக்கிறதே இப்பூமி! ஆழ்ந்து சிந்தித்தாள்! திங்களவனை கூப்பிட்டாள்! சிரித்தபடியே சிந்தனையினை சிதறடித்தான் திங்களவன்! அடியே!!! என்னுள் எழிலாகி சுடரொளி பாதி சுமப்பவளே! இன்று, தீபமடி திருவிளக்கு திகட்டாதடி கார்த்திகை தீபமடி! கானக்குயில் கனவுகளின் காட்சிதனை கானுதடி! கண்கொண்டு பாராயோ தீபத்தினழகை!...

Thursday, December 04, 2014

இயற்கையின் பிள்ளைகள்

உள்ளம் ஊசிமுனையில் ஊசலாட! உடலெப்படி ஓய்வை விரும்பும்! அருகிலேயே இரு! "ஆன்மா" மேலெழும்ப எத்தனிக்கிறது என்றாயே! கைகளை பற்றிக்கொண்டு கண்ணீரில் நான் மிதக்க! கடைசி காலத்தை நீயெப்படி தாங்குவாய்! நானெப்படி நடிக்கப் போகிறேன்! ஏ!!! நட்சத்திரங்களே! நடைபழக துணையொன்று தேடினீர்களோ! தூரமாய் எனை துயரத்தால் துரத்தினீர்களோ! துக்கம் தாளாமல்,, புத்தனுக்கு புதுக்கடிதம் எழுதினேன்! இழவில்லா வீட்டில் இனிப்பை படையலிடு என்றான்! படையலுக்கு எங்கும் பாதையில்லை என்றுணர்ந்தேன்!...

Wednesday, December 03, 2014

சிறுகதை "செல்வத்தின் முகவரி"

காலையிலேயே கரண்ட் கட்டாகிடுச்சே, ஏம்மா!! இந்த பழசெயெல்லாம் உனக்கு பழக்கமிருக்காது கொடு நான்செய்யரேன்! சமையலை கவனித்த கண்மனியிடம் அரைக்க வேண்டிய பொருளை வாங்கிக்கொண்டு அம்மி பக்கம் நகர்ந்தாள் லட்சுமியம்மா. நெசந்தான் அத்தே எல்லத்தையும் கரண்ட்டால செஞ்சதால கைப்பழக்கம் வரமாட்டேங்குது என்று சொல்லிபடியே அடுத்த வேலைபார்க்க நகர்ந்தாள் கண்மணி. அதற்குள் அலுவலக அவசத்தை முடுக்கி விட்டான் செல்வம். ஏம்பா!! செல்வம் இன்னைக்கு தான் கல்யாண நாளாச்சே லீவு போட்டு புள்ள...

இவர்கள் புனிதர்கள்

மேடைக்கு மேடை உன்மீது நான் கல்லெறிய! என்மீது நீ கல்லெறிய! கூட்டத்தை சேர்க்க கற்றுக்கொண்டோம்! கரவொலி மட்டும் குறையவேயில்லை! எங்கும், எதிலும் முரணானோம்! முக்காடு போட்டுக்கொண்டு ரகசியமாய் உறவாடி! கடைசிவரை மக்கள் சிந்தனையில் சீர்படாது சீரழிந்து போக! நாமிருவரும் சிந்திக்க வேண்டுமென சிறு ஒப்பந்தமும் போட்டுக் கொண்டோம்! கரூவூலம் காலிசெய்து கல்லாப்பெட்டியில் அடைத்தோம்! அரசியல் வியாபாரம் அமோக வெற்றிதான்! அதிகார நாற்காலிக்கு நாமிருவரும் செல்லப் பிள்ளைகள்! அறியாமை...

"காதலில் கண்கள்"

நீண்ட!!! பொழுதுகளில் தனிமையில் தத்தளிக்க! வலுக்கிறது அச்சந்தேகம்! அரிச்சந்திரன் அவனது அழகான மனைவியை கண்டதும்! காதல் ரசத்தை பொழிவானே! கவிதையை கட்டவிழ்த்து விடுவானே! இங்கே! முளைக்கிறதென் முதன்மைச் சந்தேகம்! காதல் காவியத்தில் காட்டாத அவன்காதலால்! கண்ணயர்ந்து தூங்கினாலும் கனவிலெழும் அச்சந்தேகம்! எதுவென்றா கேட்கிறீர்கள்? எடுத்துச் சொல்கிறேன் குறிப்பெடுங்கள் காதலர்களே! பொய்யுரைக்க மாட்டானாம் அரிச்சந்திரன்! அப்படியிருக்க,,,,, அழகான மனைவியை அள்ளியெடுத்து...

Tuesday, December 02, 2014

சிறுகதை "தயாளனுக்கு விஷக்காய்ச்சல்"

காலனியின் கடைசித் தெருவில் தேவாலையம் ஒன்றின் ஒலிப்பெருக்கியில் பைபளின் வாசனங்கள் வாசிக்கப்பட்டன. விடிந்தது காலை கடிகாரமில்லாமலே அவ்வசனங்கள் ஐந்து மணியென்று உணர்த்திற்று.வசனங்களை கேட்டவாரே சோம்பலை முறித்தபடி எழுந்தாள் சரளாம்மாள். வீட்டுவேளைகளை நினைவுகூர்ந்தபடியே வாசற்கதவினை திறந்தாள் காலை முழிப்புடன் பெட்டைக் கோழிகள் ரேஷன் அரசிக்கு வரிசையில் நின்று கொக்கறித்தன. இதுகளுக்கு எப்படித்தான் விடிஞ்சது தெரிஞ்சதோ என்று முனுமுனுத்தபடி அரசியை எடுத்து வந்து போட்டுவிட்டு தன் பிள்ளை தயாளனுக்கு சுடுகஞ்சி செய்ய அடுப்பங்கரைக்குப் போனாள். இருக்கின்ற வேலைகளில் மணியானதே...

சிறுகதை "அவன் எனும் மனிதன்"

அதுவொரு இளங்காலை பொழுது இன்னும் பிரசவிக்காத கடல்தாய் தம்பிள்ளையான சூரியனை ஈன்றெடுக்க வலியால் துடித்துக்கொண்டிருந்­த நேரம். அதற்கு முன்பே அவசர அவசரமாக வானமது வெண்சேலையை இழுத்து மூடியது மேகம். கொட்டிய மழை மருத்துவச்சியாக மாறிற்று. அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே! என்று அவசர அவசரவமாக எழுந்து எப்போதும் போலே தமிழக தலைமையிடத்தையும் இந்தியாவின் இறுதிமூலையையும் இணைக்கின்ற அந்நெடுஞ்சாலை வழியே தனது நடைப்பயிற்சியை தொடங்கினான் அவன். வலப்புறம் குடியிருப்புகள் இடப்புறம்...

ஹைக்கூ "சஞ்சலங்கள்"

வழியெங்கும் லஞ்சம் மிஞ்சியிருந்த சில்லரை -முதியோர்பணம் ___ ஏணிகளே வலி தாங்குங்கள் உயரத்தில் ஒருவன் உதைக்கப்போகிறான்! ___ மடைதிறவா மண்வெட்டி நீதிமன்றத்தில் -நிலத்தகராறு ___ பவ்யமாய் பதுங்கும் பாவையவள் வீசிச் சென்றது புயலாய் அவளது பார்வை! ___ சுவற்றில் விழுந்த நிழல் நிமிர்ந்து நின்றது -நிலா ___ மீசை நறைத்ததும் மீண்டும் எழுந்தேன்! புதியதொரு உலகம் பூக்களை தூவி வரவேற்றது! முதுமையை முழுதாய் ஏற்றதன் விளைவிதுவோ! ___ பின்னலாடை பிறவிபலனை அடைந்ததோ! ஏதோ!! திருமண...

Monday, December 01, 2014

மனிதம் மரணிக்கலாமா?

எங்கோ ஒரு மூலையில்! எவனோ ஒருவன் பசிக்கான வேட்கையுடனே படுத்துறங்குகிறான்! விழித்துக்கொண்டது வறுமை! அவனை பார்த்தவாரே! அடுத்த வழியில் கடக்கிறான்! அவனும் வறுமையின் பிடியில்! வந்ததும் , சென்றதுமாய் வாகனங்கள் வந்திறங்கவில்லை யாரும்! வாழும் பணத்தாசை பேய்கள் தானோ அவர்கள்! செய்வினையோ, தெய்வச் செயலோ, பாவத்தின் பிரதிபலனோ! முனுமுனத்த உதடுகளும் முன்னால் நிற்கிறதே தவிர! முந்திவந்திட வில்லை முயற்சியும் செய்திடவில்லை! வறுமையின் வலி இதுவென அம்மூளைக்கு எட்டுமா! வந்ததொரு...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...