அமைதி அழகியலில் என்றுமே தனித்துவிடப்படும் அசுத்தமான அரசு மருத்துவனை
அது , அரசின் செயல்பாடற்றது என்று மக்களும் , மக்களின் செயல்பாடற்றது
என்று அரசும் கைவிரித்த கனவுகளை சுமந்துக்கொண்டு ஒரேயடியில் ஓங்கி
நிற்கும் ஆலமரத்தடியில் தன் கடைசிநாளை குறித்துவிட்டு தொட்டால்
தொற்றென்று தனித்து துரத்திவிடப்பட்ட நிலையை கூட உணராத ஒரு ஜீவன் தான்
சங்கரன் . எவளிடம் சென்றுவந்தானோ தொற்றிக்கொண்டே தொடர்ந்த வார்த்தைகளில்
உதறிவிட்ட உறவுகளையும் , இவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும்
திருந்தவே இல்லை திருட்டுத்தனமாக தெவிடியாளிடம் சென்றிருக்கிறான் என்று
குறை கூறி கடந்து போன நட்புவட்டங்களையும் இந்நேரத்தில் நினைப்பதை கூட
மறந்துபோனான் சங்கரன் . அவனுக்கு மட்டுமே அந்த கடந்தகால நிகழ்வுகள்
அச்சுறுத்திக்கொண்டே இருந்தது . மனதின் ஓரத்தில் ஒரேயொரு சந்தோஷம் காதலி
கழன்றுவிட்டாள் என்று,
சங்கரன் தற்போது எய்ட்ஸ் நோயாளி அனைவராலும் அனாதையாக தெருவில் எறிந்த
அவனுடலை யாரோ ஒருவன் எடுத்து வந்து அரசுமருத்துவனையில்
போட்டிருக்கிறார்கள் . மருத்துவர்களும் பிழைக்க வழியில்லை என்று
ஆலமரத்தடியில் எறிந்துவிட்டார்கள் அங்கிருந்து தான் கடைசிநாளை எண்ணி
கடந்த காலத்தை அசைபோட்டுக்கொண்டிருக்கிறான் சங்கரன்.
எட்டு வருடங்களுக்கு முன்னால் இளங்கன்று பயமறியாது என்கிற துள்ளலுடனே
கல்லூரியில் கால்வைக்கும் போதே மதுவிற்கு அடிமையான சங்கரன் இளமையை
கடக்கலானான். மதுமட்டுமே மாது இவனிடம் நெருங்குவதில்லை அவனும் மாதுவிடம்
நெருங்கியதில்லை , பிறகெப்படி எய்ட்ஸ் நோய்?
எப்போதும் சங்கரன் தனியாக மது அருந்துவதில்லை தன் நட்புவட்டத்தை ஒன்றாக
இணைத்து கும்மாளம் அடிப்பதில் அவனுக்கு அவ்வளவு பெரிய சந்தோஷமாய்
இருந்தது . அதிலொருவன்தான் பாண்டி என்கிற பாண்டியன் , பாண்டியன்
அழுக்கடைந்த சேற்றில் முளைத்த காளான் மிகவும் செல்வந்தன் பெண்மோகத்தில்
பைத்தியமானவன், குடிக்க ஆரம்பித்து விட்டால் தன் கூடவே வைத்திருக்கும்
போதையூசியும் அவனுக்கு ஊருகாயாகும் . அப்படி ஒருநாள் சங்கரன் தன்
காதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற மனவருத்தின் பால் மதுவருந்த
முடிவெடுத்தான் . உண்மையில் தன் காதலனின் நட்பு வட்டங்களை உற்று
நோக்கியதில் புலப்பட்ட உண்மைகளின் காரணமாக நட்பினை கைவிடும் படி
கேட்டுக்கொண்ட காதல் ஏமாற்றப்பட்டதாக உணரப்பட்ட ஓர் உண்மைக்காதல் இறந்த
தினத்தின் துக்க அனுசரிப்பிற்காக பாண்டியும் சங்கரனும் மற்றும்பல
நண்பர்களும் மது அருந்த திட்டமிட்டு அதுவும் கைகூடுகையில் இணைந்தார்கள்
நட்பு வட்டங்கள் அது தான் சங்கரனின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து
விட்டது. பாண்டி மது அருந்தி விட்டு பற்றாக்குறைக்கு போதையூசி ஏற்ற
தயாரானான் ஊசியை வலதுகையில் எடுத்து இடது கைநரம்பில் ஏற்றத் தயாரான
நேரத்தில் , பணமில்லா ஏழையை உதறித்தள்ளிவிட்டு பின்பு அவ்வேழை
செல்வந்தனாகும் தருணத்தில் கூடிவரும் சொந்தங்கள் காட்டுமே அந்த அதீத
அக்கரைபோல் , மூளை முழுதாய் மதுவில் நனைந்தபின் உதவிக்கு வரும்
மதுக்கரங்களின் பற்றுதலாய் திடீரென பொங்கியெழும் அக்கரைப் பாசத்தில்
சங்கரன் பாண்டியின் கரங்களை பற்றிக்கொண்டு ஊசி போட்டுக்காதடா! இதுக்கு
மேல உம்முடம்பு தாங்காதுடா , ஏற்கனவே நமக்கு குடிச்சி குடிச்சி குடலு
கெட்டுப்போச்சி இந்த ஊசியும் ஒடம்பில போன ஒடம்பு என்னத்துக்காவரது ,,,,,
பாண்டி இப்போது போதையில் விட்ரா கைய எல்லாத்தையும் அனுபவிச்சாச்சி
அப்புரம் எதுக்கு இந்த மசிரு ஒடம்பு ,,,,
இப்போது இருவருக்கான மதுகாட்டிய அன்பான அக்கரையின் காரணமாக பாதி
உடம்பிலேறிய ஊசி இடறிவிழுந்து சங்கரனின் இடது கால் முட்டியை பதம்
பார்த்தது. ஒருவழியாக குடியுடன் இரவை கழித்த சங்கரன் இந்நிகழ்வை
ஒருபொருட்டாக மதிக்கவில்லை.
காலம் கடந்தோடியது கல்லூரி காலமும் முடிந்து போனது. சங்கரன் ஒரு
அலுவலகத்தில் உதவியாளனாய் சேர்ந்த சமயத்தில் தகவலொன்று காதுகளுக்கு
எட்டியது இதற்கிடையில் சங்கரன் உடல்நிலையும் மாற்றமடைந்தது.
தகவல் இதுதான் பாண்டி எய்ட்ஸ் நோயால் இறந்தான் கல்லூரி படிக்கும்போதே
அந்நோய் அவனை பிடித்திருந்திருந்ததாம் ,,,
தகவலை வாங்கிய செவியோ சும்மாயிருக்க வில்லை எழுந்தது சங்கரனுக்கு
சந்தேகம். இனியும் தாமதிப்பது வீணென அருகில் இருக்கும் மருத்துவமனையை
நாடியிருக்கிறான் .
டாக்டர் எனக்கு செக்கப் செய்யனும்,,,,
எம்மாதிரியான செக்கப்
மலேரியா? டெங்கு? இரத்தகொதிப்பு?
அதுயில்ல டாக்டர் அதுவந்து!!! அதுவந்து!!!
என்ன எய்ட்ஸ் செக்கப்பா அதுக்கேன்பா தயக்குர! இதெல்லாம் சகஜம் எல்லாரும்
செய்து கொள்ள வேண்டியது தாராளமா செக்கப் செய்துகலாம்,, இறுதியாக தோள்மேல்
கைபோட்டு செக்கப்பிற்கு அழைத்துச் சென்றார் மருத்துவர்.
இரண்டுமணிநேரம் முடிந்தது இருவரும் வெளிவந்தனர் .
இப்போது மருத்துவர்,,,
ரிசல்ட் நாளைக்குத்தான் தெரியும் மிஸ்டர் சங்கரன் காலையில் வந்து வாங்கிக்கோங்க,,
என்று அனுப்பிவைத்தார் .
மருநாள் காலை சுடுநீர் காலைப் பற்றிய கணக்காய் பதற்றத்துடன்
அமர்ந்திருந்த சங்கரனுக்கு மருத்துவர் அளித்த ரிசல்ட் "ஆம் உனக்கு
எய்ட்ஸ் வளர்ந்துவிட்ட நிலையில் எய்ட்ஸ்"
இம்மருத்துவ முடிவை ஏதோ ஒரு ஓரத்தில் மனதில் எழுந்தது தான் என்று
தன்னத்தானே சபித்துக்கொண்டான் சங்கரன் .
அன்று ஆரம்பித்த அதிர்ச்சித் தகவலானது அவனது வாழ்நாளை
துரத்திக்கொண்டேயிருந்தது. இதில் பலியானது அதனது வாழக்கை மட்டுமல்ல ,
பெற்றோர்,காதலி,சொந்தங்கள், நட்பு வட்டங்கள் ,சமூகமென அனைத்தையும்
பலிகொடுத்த உயிர் இதோ ஆலமரத்தடியில் அமர்ந்தவாரே பலியானது.
-______முற்றும்______