Monday, January 26, 2015

அடுத்த முகம்

செய்தித்தாள்
சுமந்து வந்த
தினசரி
பெண் பால்
வன்புணர்வை
சேர்ந்தே
வாசித்தோம்!

சேற்றில் கிடக்கிறது
சமூகமென்றேன்!

அவ்வப்போது
பேனாவும்
அறிக்கை
எழுதித் தள்ளியது!

ஆங்காங்கே
மேடைபேச்சும்
அவிழ்த்து விட்டது
ஆத்திரத்தை!

குறிப்பெழுதினேன்
பெண்ணின
வாழ்வுதனை!

கணவன்
நெறியுடன்
வாழ்பவன்
நம்பினாயல்லவா
நீ!

காற்றில் தவழ்ந்து
நதியில்
விளையாடி
நடிகனானேன்
நான்!

"பேயாட்டமிடும்
பெண்ணடிமை"
தலைப்பினை
நீயே! தயாரித்து
தந்தாய்,,,

அணிந்துரையும்
அழகாய்
அமைந்து விட,,

விற்றது புத்தகம்
சேர்ந்தது
புகழோடு
பணமும்!

ராமனென
நீயும் நம்பினாய்
நல்லது,,,

அதுவொரு
அமாவாசை
தினம்
நடுநிசியில்
அலறியது
தொலைபேசி!

பிரசவ வலி,
பிரசவ வலி,,,
பிரசவ வலி,,,,,

கழுத்தில் தாலியற்று
தகப்பன் இவனென
வினவ நாதியற்று
அடுத்த நாள்
தாயாகப் போகும்!

உம் தங்கைதான்
உனக்கு
சக்காளத்தி!

இவ்வுண்மை
உனக்குத்
தெரியவாப் போகிறது!

ஊருக்கும் இது புரியவாப்போகிறது!

இனி உரக்கச் சொல்வேன்
உண்மை நடிகன் நானென்று,,,,

0 comments:

Post a Comment

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...