இளங்காலை
பொழுதில்
காதுக்கினிய
குயிலோசை கேட்டே எழுவது
வழக்கம் அன்பின்
குழலோலை அதுவென
கண்டேன்,,,
அட என்னயிது
அதிசயம்!!
எப்படி
தெரிந்ததுனக்கு
எனக்கு முன்பே
எழுந்து ரசிக்கிறாயே,,,
சாலையெங்கும் சங்குகள் முழங்கும்
இது இயற்கையாக
எழும் சங்கொலிகள் அல்ல
எந்திரங்கள் ஓலமிடும் அபாய எச்சரிக்கை பிடிக்காதொன்றை பிறவியிலேயே
புறக்கணித்த
காது
இதை என்றுமே
ஏற்காது
காதடைத்தே கடந்து போவது வழக்கம்,,,
அட என்னயிது
அதிசயம்!!
எப்படி
தெரிந்ததுனக்கு
எனக்கு முன்பே
உங்காதுகளை அடைத்துக்கொண்டதே எனை அணைத்த
கைகள்,,,
நிழலெது நிஜமெது
அறியும் ஆவலில்
அந்தி பொழுதில்
ஆகாசவெளி
மூடும்
அகச்சிவப்பு
கண்ணங்களை
தொடும் முயற்சியில் எப்போதும்
என் கண்கள் முயற்சித்திருக்கும்,,,
அட என்னயிது
அதிசயம்!!
எப்படி
தெரிந்ததுனக்கு
எனக்கு முன்பே
எனை ரசித்த
உனது கண்கள்
ஆகாச வெளியை
அசைபோடுகிறதே,,,
உறக்கம்
ஊரை சுற்றும் வேளையில்
உனது முகத்தை ஒருமுறையேனும் காணத் துடிக்கும் காட்சிதனில் நித்திரையில்
நிலவினை பறிக்கும் ஆசையில் அப்படியே விழித்திருப்பேன் எப்படியோ?
எதன் உந்துதலோ
சட்டென விழித்துக்
கொள்கிறாய்,,,
இப்போது என்னில்
அதிசயம் பிறந்திடவில்லை
எப்போதும்
என் நினைவுகளை சுமந்தபடியே
காதலோடு காட்சியளிக்கிறாய்,,
உணர்ந்தேன்!
ஊடல் கொண்டேன்!
இன்றேனும் தூங்கு பெண்ணே.!
உன் விழியழகை
காண உந்தும்
இச்சையில் உறக்கம் பிடிபடவில்லை
எனக்கு,,,
ஓர் வரமாய் பெற்ற
ஓராயிரம் இரவுகளில் விழிதிறந்தே
ரசிக்கும் ரசினாக
எனை மாற்றிடும்
காதலை உந்தன்
காதோரம் சமர்பிக்கிறேன்
இன்றேனும் தூங்கு பெண்ணே!!!
0 comments:
Post a Comment