அரசியல்
நிர்ணய
சபையின்
பணிகளை ஒரு முறை திரும்பிப்
பார்க்கும்போது, 1946 ஆம்
ஆண்டு டிசம்பர் 9 அன்று, முதலில்
கூடியதிலிருந்து இரண்டு ஆண்டுகள்
பதினோரு மாதங்கள், பதினேழு நாட்கள்
கழிந்துள்ளன. இந்தக் கால அளவில்
அரசியல் நிர்ணய சபை மொத்தத்தில்
பதினோரு முறை கூடியுள்ளது. இந்தப்
பதினோரு அமர்வுகளில், நோக்கங்களைப்
பற்றிய
தீர்மானங்களை நிறைவேற்றவும்,
அடிப்படை உரிமைகள் பற்றிய
குழுவின் அறிக்கை, ஒன்றியத்தின்
அரசியல் சட்டம் பற்றிய அறிக்கை,
ஒன்றியத்தின் அதிகாரம் பற்றிய
அறிக்கை, மாகாண அரசியல்
அமைப்புச் சட்டம் பற்றிய அறிக்கை,
சிறுபான்மையினர் பற்றிய அறிக்கை,
பட்டியல் வகுப்பினர் பற்றிய அறிக்கை,
பட்டியல் பழங்குடியினர் பற்றிய
அறிக்கை ஆகியவைகளைப்
பரிசீலிப்பதில் கழிந்தன. ஏழு, எட்டு,
ஒன்பது, பத்து மற்றும்
பதினோராவது அமர்வுகள், அரசியல்
சாசன வரைவுச்
சட்டத்தை பரிசீலிப்பதில் கழிந்தன.
அரசியல் நிர்ணய சபையின் இந்தப்
பதினோரு அமர்வுகளுக்கும் 165
நாட்கள் பிடித்தன.
வரைவுக் குழுவைப் பொறுத்தவரை,
அது அரசியல் நிர்ணய சபையால்
1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29
அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆகஸ்டு மாதம் 30 ஆம் நாளில்
அது தன் முதல்
கூட்டத்தை நடத்தியது. ஆகஸ்டு 30
ஆம் நாளிலிருந்து 141 நாள்கள்
அது அமர்வில் இருந்தது. இந்த
சமயத்தில் அது அரசியல் சாசன
வரைவைத் தயாரித்தது. வரைவுக்
குழுவின் பணிக்கு அடிப்படையாக,
அரசியல் சாசனத் தயாரிப்பு ஆலோசகர்
தயாரித்து, வரைவுக் குழுவின்
பணிக்கு அடிப்படையாகக்
கொடுக்கப்பட்ட அரசியல் சாசனம் –
243 விதிகளையும் 13
அட்டவணைகளையும் கொண்டிருந்தது.
வரைவுக் குழு அரசியல் நிர்ணய
சபைக்கு அளித்த முதலாவது அரசியல்
சாசன வரைவில், 315 விதிகளும் 8
அட்டவணைகளும் இருந்தன.
பரிசீலனைக் கூட்டத்திற்குப்
பிறகு அரசியல் சாசன வரைவில்
அடங்கியிருந்த விதிகளின்
எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது.
அதன் இறுதி வடிவத்தில் அரசியல்
சாசன வரைவு, 395 விதிகளையும் 8
அட்டவணைகளையும் கொண்டுள்ளது.
சுமார் 7,635 திருத்தங்கள் அரசியல்
சாசன வரைவுக்கு முன்
வைக்கப்பட்டன. இவற்றில்
எதார்த்தத்தில் சபையில்
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 2,475
ஆகும்.
இந்தத் தகவல்களையெல்லாம் நான்
ஏன் கூறுகிறேன் என்றால்
ஒரு கட்டத்தில், இந்தப்
பணியை முடிப்பதற்கு அரசியல்
நிர்ணய சபை அதிக நேரம் எடுத்துக்
கொள்கிறது என்று கூறப்பட்டது. அது,
பொதுமக்கள் பணத்தை விரயம்
செய்து ஆமை வேகத்தில்
பணியாற்றுவதாகக்
குறை கூறப்பட்டது.
‘ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன்
பிடில் இசைத்ததைப் போன்றுள்ளது’
என்று பழி சுமத்தப்பட்டது. இந்தக்
குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயம்
உள்ளதா?
அரசியல் சாசனங்களை உருவாக்க
மற்ற நாடுகளிலுள்ள அரசியல் நிர்ணய
சபைகள் எடுத்துக் கொண்ட
நேரத்தை நாம் பார்க்கலாம். சில
எடுத்துக்காட்டுகள் : 1787 மே மாதம்
25 அன்று கூடிய அமெரிக்க
கன்வென்ஷன், தன் பணியை 1787
செப்டம்பர் 17இல்
அதாவது நான்கு மாதத்தில் முடித்தது.
கனடா நாட்டு அரசியல் சாசன
அமைப்பு கன்வென்ஷன், 1864
அக்டோபர் 10 இல் கூடியது; 1867
மார்ச்சில் அரசியல் சாசனம்
ஏற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளும்
அய்ந்து மாதங்களும் எடுத்துக்
கொண்டது. ஆஸ்திரேலியாவின்
அரசியல் சாசனத் தயாரிப்பு அவை,
1891 மார்ச்சில் கூடியது; 1900
சூலை 9 இல் அரசியல்
சாசனத்தை உருவாக்கியது. 9
ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
தென்
ஆப்பிரிக்க கன்வென்ஷன், 1908
அக்டோபரில் கூடியது; 1909
செப்டம்பர் 20 இல் அரசியல்
சாசனத்தை நிறைவேற்றியது.
இதற்கு ஓராண்டுக்கால
உழைப்பு தேவைப்பட்டது.
அமெரிக்கா மற்றும் தென்
ஆப்பிரிக்க
அரசியல் சாசனத்
தயாரிப்பு அமைப்புகளைவிட, நாம்
அதிக காலம் எடுத்துக்
கொண்டது உண்மைதான். ஆனால்,
கனடா கன்வென்ஷனைவிட அதிக
காலம் எடுத்துக் கொள்ளவில்லை;
ஆஸ்திரேலியா கன்வென்ஷனை விடக்
குறைவாகவே நாம் எடுத்துக்
கொண்டிருக்கிறோம். நாம் கால
அளவை ஒப்பிடும் போது,
இரண்டு விஷயங்களைக் கவனத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா, கனடா, தென்
ஆப்பிரிக்கா,
ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின்
அரசியல் சாசனங்கள், இந்திய அரசியல்
சாசனத்தைவிட மிகச் சிறியவை. நான்
ஏற்கனவே கூறியபடி, நமது அரசியல்
சாசனத்தில் 395 விதிகள் உள்ளன.
அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7
விதிகள் மட்டுமே உள்ளன. முதல்
நான்கு விதிகள் 21 பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன.
கனடா நாட்டு அரசியல் சாசனத்தில்
147ம், ஆஸ்திரேலிய சாசனத்தில்
1283ம் தென் ஆப்பிரிக்க அரசியல்
சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன.
இரண்டாவது விஷயம்
என்னவென்றால் – அமெரிக்கா,
கனடா,
ஆஸ்திரேலியா மற்றும்
தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின்
அரசியல் அமைப்புச்
சாசனங்களை உருவாக்கியவர்கள்,
திருத்தங்கள் சம்பந்தமான
பிரச்சினையைச் சந்திக்க
வேண்டியிருக்கவில்லை.
முன்மொழியப்பட்ட
வடிவத்திலேயே அவை ஏற்றுக்
கொள்ளப்பட்டன. ஆனால்,
அதே நேரத்தில் நமது அரசியல் நிர்ணய
சபை 2,473 திருத்தங்கள்
வரை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த
உண்மை களை எல்லாம்
கணக்கிலெடுத்துக்
கொண்டு பார்த்தால்,
நாம் தாமதமாகச் செயல்பட்டோம் என்ற
குற்றச்சாட்டு, முற்றிலும்
ஆதாரமற்றது என்று எனக்குத்
தோன்றுகிறது. இவ்வளவு கடினமான
பணியை, இவ்வளவு விரைவில்
நிறைவேற்றியதற்காக, அரசியல்
நிர்ணய சபை கண்டிப்பாகத் தன்னைப்
பாராட்டிக் கொள்ளலாம்…
ஒரே ஒரு தனிப்பட்ட உறுப்பினரைத்
தவிர, வரைவுக் குழுவின் பணிகளைக்
குறித்து, அரசியல் நிர்ணய
சபை உறுப்பினர்களின்
பாராட்டுதல்களில் பொதுவான
உடன்பாடு காணப்படுகிறது.
தனது பணிகளை அங்கீகரித்து,
தன்னிச்சையாக தாராளமாக
வழங்கப்பட்ட பாராட்டுதல்களினால்,
குழு மகிழ்ச்சி அடைந்திருக்கும்
என்பதில் அய்யமில்லை. இந்த
வரைவுக் குழு சபையின்
உறுப்பினர்களும் வரைவுக் குழுவில்
என்னுடன் பணியாற்றிய நண்பர்களும்
என் மீது பொழிந்த புகழாரங்களுக்கு,
நன்றி தெரிவித்துக் கொள்ள
சொற்கள்
கிடைக்காமல் திண்டாடுகிறேன்.
பட்டியல் சாதியினரின் நலன்களைப்
பாதுகாக்க வேண்டுமென்பதைத் தவிர,
வேறு எந்தவித நோக்கங்களுமின்றிதான்
நான் அரசியல் நிர்ணய சபையில்
சேர்ந்தேன். அதிகப் பொறுப்பான
பணி களை ஏற்க நான்
அழைக்கப்படுவேன் என்று நான்
சிறிதளவுகூட சிந்திக்கவில்லை.
என்னை வரைவுக்
குழுவுக்கு சட்டமன்றம்
தேர்ந்தெடுத்தபோது, நான் பெரிதும்
வியப்படைந்தேன். வரைவுக்
குழு என்னை அதன் தலைவராகத்
தேர்ந்தெடுத்தபோது, நான் அதைவிட
கூடுதல் வியப்படைந்தேன்.
எனது நண்பர்
அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யர்)
போன்ற என்னைவிட மிகவும்
தகுதிபெற்ற சிறந்த பெரிய மனிதர்கள்
வரைவுக் குழுவில் இருந்தனர். என்
மீது இவ்வளவு நம்பிக்கை கொண்டு,
பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து –
அவர்களுடைய கருவியாக என்னைப்
பயன்படுத்தி – நாட்டிற்குத்
தொண்டு செய்ய
எனக்கு அளித்துள்ள
வாய்ப்புக்கு அரசியல் நிர்ணய
சபைக்கும், வரைவுக் குழுவிற்கும்
நன்றியுடையவனாக இருப்பேன்…
எல்லா உறுப்பினர்களும் கட்சிக் கட்டுப்
பாட்டிற்கு அடங்கி நடந்திருந்தால்,
அரசியல் நிர்ணய சபையின்
நடவடிக்கைகள் சுவையற்றதாக
இருந்திருக்கும். கட்சிக் கட்டுப்பாடு,
அதன் கண்டிப்பான தன்மையால்
சட்டமன்றத்தை ‘ஆமாம் சாமி’களின்
கூட்டமாக மாற்றியிருக்கும்.
நல்லவேளை சில ‘புரட்சியாளர்கள்’
இருந்தனர். திரு. காமத், டாக்டர் பி.எஸ்.
தேஷ்முக், திரு. சித்வா, பேராசிரியர்
சக்சேனா, பண்டிட் தாகூர்தாஸ்
பார்கவா ஆகியவர்களைக் குறிப்பிட
வேண்டும். அவர்கள் எழுப்பிய
பிரச்சினைகளெல்லாம் பெரும்பாலும்
சித்தாந்தம் பற்றியவையே.
அவர்களுடைய ஆலோசனைகளை நான்
ஏற்றுக் கொள்ளத் தயாராக
இல்லாதிருந்தது, அவர்களுடைய
ஆலோசனைகளின் மதிப்பைக்
குறைத்துவிடவில்லை. சட்டமன்ற
நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம்
அளிக்க, அவர்கள் செய்த
பணியை குறைத்து மதிப்பிட
முடியாது. நான் அவர்களுக்கு மிகவும்
கடமைப்பட்டுள்ளேன். அவர்கள்
இல்லையென்றால், அரசியல்
சாசனத்தின் அடிப்படை யான
கோட்பாடுகளை விளக்கும்
வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்காமல்
போயிருக்கும். அரசியல்
சாசனத்தை எந்திர கதியில்
நிறைவேற்றுவதைவிட
இது முக்கியமானது.
இறுதியாக, இந்தச்
சபை நடவடிக்கைகளை நடத்திய
முறைக்கு தலைவர் அவர்களே,
உங்களுக்கு நான் என் நன்றியைக்
கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த
சபையின் நடவடிக்கைகளில்
பங்கு கொண்டவர்களுக்கு – தாங்கள்
காட்டிய பரிவும், மரியாதையும்
அவர்களால் மறந்துவிட முடியாது.
வரைவுக் குழுவின் திருத்தங்கள் சில
தருணங்களில் தொழில் ரீதியான சில
காரணங்களினால் ரத்து செய்யப்பட
வேண்டி வந்தது.
அவை எனக்கு மிகவும் நெருக்கடியான
தருணங்களாக இருந்தன. அரசியல்
சாசனத் தயாரிப்புப் பணி; சட்டப்
பிடிப்பில் சிக்கிக்கொள்ள
அனுமதிக்காததற்கு நான் முக்கியமாக
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நண்பர்கள் திரு.
அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யரும்),
திரு. டி.டி. கிருஷ்ணமாச்(சாரி)யும்
அரசியல்
சாசனத்திற்கு எவ்வளவு ஆதரவு அளிக்க
முடியுமோ அவ்வளவு ஆதரவு அளித்துள்
ளனர். எனவே, நமது அரசியல்
சாசனத்தின் சிறப்புத் தகுதிகளைப்
பற்றி இப்பொழுது நான் பேசப்
போவதில்லை. ஏனெனில், ஓர் அரசியல்
சாசனம் எவ்வளவு சிறப்பாக
இருந்தாலும் அதைச்
செயல்படுத்து பவர்களின்
தன்மையைப் பொறுத்து,
அது மோசமானதாக மாறலாம். ஓர்
அரசியல் சாசனம் எவ்வளவு மோசமாக
இருப்பினும், அதைச்
செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக
இருப்பின் – அது ஒரு சிறந்த அரசியல்
சாசனமாக செயல்படும். ஓர் அரசியல்
சாசனத்தின் செயல்பாடு அதன்
தன்மையை மட்டும் முற்றிலும்
சார்ந்ததன்று. அரசின் உறுப்புகளான
சட்டமன்றம், ஆட்சித்துறை,
நீதித்துறை ஆகியவைகளை உருவாக்க
மட்டும் அரசியல் சாசனம்
வழிவகை செய்யும். ஆனால், அரசின்
இந்த அமைப்புகளின்
செயல்பாடுகளுக்கு ஆதாரமான
காரணிகள் – மக்களும், அவர்கள் தங்கள்
நோக்கங் களையும் அரசியல்
விருப்பங்களையும் நிறைவேற்ற
கருவிகளாகப் பயன்படுத்தும் அரசியல்
கட்சிகளுமேயாகும். இவற்றின்
செயல்பாடுகளைப்
பொறுத்தே அதன்
வெற்றியுள்ளது.
0 comments:
Post a Comment