Saturday, February 14, 2015

தூற்றும் ஆணுதடுகள்

பெண்ணை
பேய்
என்பார்
பெற்ற தாயும்
பெண்ணென
அறியாதோர்

தன்வீட்டு
பெண்டீருக்கு
தங்க மகுடம்
சூட்டி
தெருவெங்கும்
திட்டித்
தீர்ப்பார்கள்

தீராவகமோ
தலையெடுப்போ
தூண்டும்
தற்கொலையோ
வீசும் சொல்கூட
வாளாகிப்
போகுமென
விளங்குமா
இந்த விளங்காத
பெண்ணிழிவு
போதகர்களுக்கு

எண்ணிப்பார்த்திட வேண்டும்
எவர்தான் ஏமாற்றவில்லை
தாயும் சுயநலம்
பூண்டவள்தான் மனந்திறந்து
பேசு
பல மனவழுக்கு
உன் மடியில்
விழும்

உண்மை அறிந்த
பின்னலே
உதறித் தள்ளிவிடுவாயோ
பெற்ற தாயை

பெண் சுமக்கும்
வலியில்
பாதிகூட
அறிந்திடாத
அனுபவிக்காத
ஆணாதிக்க
புத்திகளில்
புகலிடம்
தேடுகிறது
புழுக்கள்

"ஆண்"
என்பதே
அதிகார
தோனியல்லவா
அதன்
ஆதிக்க வெறிதனில்
பெண்மை சிதைகிறதல்லவா

உற்றுநோக்கு
உலகமே
ஒரு ஏமாற்று ஏகாந்தவெளிதான்

உதாரணம் ஒன்றைச்
சொல்லவா
ஊரார் கூடி
விழா எடுத்தாலும் சுனாமியெனும்
சூழ்ச்சி செய்து
உயிரைச் சுருட்டி
உண்ண
வில்லையா
இந்த உறங்காத
விழிகொண்ட
கடல்

யார் ஏமாற்றியது
பெண்ணா
அப்படியெனில்
நீயுமொரு ஏமாற்றுக்காரன் தான்
ஏதோவொரு
விதத்தில்
எப்போதும்
வசைபாடும்
ஆதிக்கத் திமிரில்
எல்லா மதமும்
உணர்த்தும்
உண்மை
இதுதான்

ஆணாக பிறந்ததே
ஒரு ஏமாற்று
வேலைதான்

ஆணுதடுகள்
விதைக்கும்
கொச்சை சொல்லனைத்திலும்
தலைகுனிந்தே
போகிறாள் தமிழ்மொழியும்
பெண்ணாதலால்

மொழிப்பற்றே
இல்லாதிடத்தில்
பெண்னன்பு
புகலிடம் தேடிடுமா
இல்லையென
தெரிந்தபின்னே
இளஞ்சூரியனும்
சுடுகிறது

சொல்லம்பு
பெண்னன்பை
வீழ்த்துவதா

ஆணினமே
அவசரப்படாதே
என்றேனும்
பெண்னன்புதான்
பேருதவி
செய்யும்

ஆணினமே
அவசரப்படாதே
என்றேனும்
பெண்னன்புதான்
பேருதவி
செய்யும்

0 comments:

Post a Comment

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...