Friday, March 27, 2015

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .4 (பொருளாதார நிலை மற்றும் ஊடகப்பொறுப்புநிலை)

குடும்ப உறவுநிலைச் சிதறல்களுக்கு முக்கிய பங்காக மேற்கண்ட இரண்டையும்
குறிப்பிடலாம் பொருளாதார நிலை இதில் தனிப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி
விடுகிறது என்று கூடச் சொல்லலாம் என்னதான் கடும் உழைப்பினை செலவிட்டாலும்
அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் நிலையையே மக்கள் பெற்றுள்ளனர் ஒரு
மனிதனுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவன்தன்
குடும்பச் சுமையை பிரித்தாளும் சக்தியாக மாற்றியக்கொள்ள இயலாதென்பது
இன்றையச் சூழலில் வெட்டவெளிச்சமாக்கப்ப­ட்டுள்ளது ஒரு மனிதன் தன்
குடும்பச் சுமையை இலகுவாக்க உழைக்கின்ற போது ஊதியத் தட்டுபாட்டால்
தன்குடும்ப உறுப்பினர்களை வெகுவாக தளர்த்திவிட நினைக்கிறான் அதன் பின்
தன்னுடல் தன்வாரிசு தன்மனைவி என்ற சூழலில் அவன் வாழமுற்படுகிறான் இதன்
விளைவாகத்தான் இன்று முதியோரில்லங்கள் பெருகிக்கொண்டிருக்க காரணமாக
அமைகின்றது இது நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் நடவடிக்கையாக
இருக்கின்றது இதுவே ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்கள் தனக்கே
வருமானமில்லாச் சூழலில் அல்லாது உழைப்பிற்கான ஊதியப்படி தனக்கான
குடும்பச் சூழலை தாங்கிப்பிடிக்க போதுமானதாக இல்லாநிலையில் குடும்ப
உறுப்பினர்களை தெருவில் அனாதைகளாக விட்டுவிடுவது உறவுகளை புறந்தள்ளும்
நடவடிக்கைகளுக்காக வன்முறை மற்றும் குற்றச்செயலில் ஈடுபடுவது போன்ற
செயலில் ஈடுபடுகிறார்கள் இதில் நடுத்தர மற்றம் மேல்தட்டு மக்களும்
மறைமுகமாக செய்கின்றனர் ஆனால் அது வெளிவருவதில்லை காரணம் தனக்கான
அந்தஸ்த்து சமூகத்தில் பாதிக்கப்பட்டுவிடுமெ­ன்ற சூழலில் மறைமுகமாக அந்த
சமூகத்திற்கே தெரியாமல் குடும்பச் சிதைவு நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றார்கள் மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் செயலும்
ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்களின் செயலும் ஏறக்குறைய ஒன்றாகவே
கருதப்பட வேண்டும் இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடும்ப உறவுநிலைச்
சிதறல் வெளிப்படையாக நிகழ்வதால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை அது
நிகழ்த்திவிடுகிறது இதனை நியாயப்படுத்தும் நோக்குடனே சமூகம் நகர்ந்து
கொண்டிருக்கின்றதென்ப­தை நம் கண்முன்னே கானுகின்றோம்
இதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் இன்றையச் சமூகம் நகர்கிறது அல்லது
நியாயப்படுத்துகிறது ஒரு குடும்பச் சிதறலினால் ஒட்டுமொத்த சமூகமும்
பாதிப்படைகின்றது இதனை ஒரு விதத்தில் தூண்டிவிட்டு தனது ஓட்டினை
தக்கவைத்துக் கொள்ளும் அரசியலும் அரசியல்வாதிகளும் கூட ஓர்
சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்த மறுக்கிறார்கள் காரணம் அதில் ஆதாயம்
இருப்பதனால் அன்றாட நிகழ்வுகள் நாம் உற்று நோக்கினால் ஒரு புறம் விலைவாசி
உயர்வு தொழில்முனைவோருக்கான வேலைவாய்ப்பின்மை அப்படி பணிகிடைத்தாலும்
உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை என பல பொருளாதார தடைகளால் வெகுசன மக்கள்
தங்கள் குடும்பச் சிதைவினை நியாயப்படுத்தியே நகர்வதை நாம் கானலாம் சமூக
கட்டமைப்பில் இவ்வாறான உறவுநிலைச் சிதறல்கள் ஏற்படா வண்ணம் பொருளாதார
பகுப்பாய்வு, உழைப்பிற்கான உண்மை ஊதியம், அரசியல்நிலை, வறுமைக்கான
காரணங்கள் அக்காரணத்திற்கான தீர்வுகள் என்று அலசி ஆராய வேண்டிய அவசியம்
மக்களுக்கும் மக்களை வழிநடத்தும் அரசிற்கும் அவசியத் தேவையை உணரும்
தருவாயில் நாம் இன்னும் அடியெடுத்து வைக்கவில்லை என்பதே சமூக இழிவிற்கு
தானாகவே வழிவகுத்துவிடுகிறது இவையெல்லாம் ஒருபுறமிருக்க இந்த
சமூககட்டமைப்பை உடைத்தெரிய முற்படும் ஊடகமும் இதற்கு நேர்மாறாய் தனது
பணியை தொடர்கிறது அன்றாட நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் பத்திரிக்கைகளும்
ஊடகங்களும் தங்களுக்கான இன்றை விளம்பரச் செய்தி கிடைத்திருக்கிறது என்று
எண்ணி தினமும் கொலை கொள்ளை வன்முறை வண்கொடுமையென படிப்படியாக
கட்டவிழ்க்கப்படும் சமூகசீர்கேட்டு நிகழ்வுகளை மட்டும் படம்பிடித்துக்
காட்டி தனது கடமை முடிந்துவிட்டதென நினைக்கிறது அந்நிகழ்வுகளுக்கான
காரணவகைகள் தீர்வுகள் அவற்றை நிறுத்த அரசு என்னென்ன நடவடிக்கைககள் எடுக்க
வேண்டுமென்று எடுத்துக் கூறும் தனது கடமையிலும்
தவறவிட்டுக்கொண்டிருக­்கிறது இதில் அரசியல் சாதிமத பாரபட்சம்
பார்க்கப்படுகிறது என்ற உண்மையும் ஊடகத்தின் மீதான அவநம்பிக்கையை
வளர்த்தெடுக்கிறது இன்று பெருமக்களால் பார்க்கப்படும் விவாதங்கள் மற்றும்
குற்றங்களுக்காக சுமூகத் தீர்வு காணுவாதாக பொய்ப்பிம்பம் கொண்டுள்ள
தொலைக்காட்சி பஞ்சாயத்துக்களில் வெகுசன மக்கள் வறுமையிலும் சமூகத்தால்
ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்களே கலந்துகொள்கிறார்கள் அவர்களை
தேடிப்பிடித்து தங்களது விளம்பர யுக்தியை ஊடகங்கள் கையாளுகின்றன என்பது
வெளிப்படையாகவே தெரிந்து கொள்ளலாம் இது ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதிக்கும் நடவடிக்கை என்பதை ஊடகங்களுக்கு தெரிந்தும் தங்களது இலாப
நொக்கிற்காக மக்களை பலியாக்குகிறார்கள் இதிலிருந்து ஊடகங்கள் வெளியேற
முற்பட வேண்டும் அரசு அனாதை இல்லங்களையும் முதியோர் இல்லங்களையும்
நியாயப்படுத்துவதிலிர­ுந்து வெளியேறி மக்களுக்கான உண்மைத் தீர்வுகளை
கண்டறிய முற்படவேண்டும் அரசியலாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க
வேண்டும் ஒரு குடும்பம் சிதறினால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதிக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும் இது ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச்
சிதறலென்ற தலைப்பினை தாங்கியிருந்தாலும் அனைத்து மக்களுக்குமான ஓர்
அரைகூவலாகத்தான் தீர்வுகளைத்தேடி இச்சமூகம் முன்னேற்றப்பாதையில்
சென்றுவிட வேண்டும் என்பதற்கான முழுப்பங்களிப்பையும் நாம் தந்துவிட
கடமைபட்டுள்ளோம்.


முற்றும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...