ஏக்கங்களை
சுமந்து
செல்கிறேன்
ஏணிகளை
எட்டி
உதைக்காதீர்கள்
இதோ!!!
இந்த பிரபஞ்சத்தில்
நானுமொரு
பிஞ்சுடல்தான்
ஏழை மகளென்று
எச்சிலை
பரிசளித்தபோதும்
துடைத்த கரங்களில்
வாழ்கிறது
என்
வறுமை
படிப்பறிவை
நானறியேன்
பாட்டாளி
வர்க்கத்தான்
பரிசளித்தான்
ரிஃக்ஷாவை
பசிக்காக
மிதிக்கிறது
எனது கால்கள்
எதுவும்
மிச்சமில்லை
கால்வலி
தவிற
என் பார்வையில்
எத்தனை
ஏக்கங்களென்று
கணித மேதையாலும்
கணித்து
விட முடியாது
யாரோ ஒருவன்
எழுதினானே
ஏழையாக பிறந்தது
உன்தவறல்ல
ஏழையாக
மடிவதுதான்
உன் தவறென்று
வரச் சொல்லுங்கள்
அவனை
உரக்கச்
சொல்லுகிறேன்
ஒருநாள்
ஏழையாகிப்பார்
எத்துணை
மனிதர்கள்
எனது ஏழ்மையெனும்
ஏணியை
எட்டி
உதைக்கிறார்கள்
உணரும்
தருவாயிலே
உயிரை விடுவாய்
நீ
ஏனோ என்னுடல்
இத்தனை
வலிகளையும்
தாங்கிப் பிடிக்கிறது
உரக்கச்
சொல்லுகிறேன்
உழைப்பை
சுரண்டுவதில்
உங்களுக்கு
சுகமெனில்
எடுத்துக் கொள்ளுங்கள்
எங்களின்
உழைப்பை
பதிலாக
ஒன்றை கேட்கிறேன்
பசிவயிற்றை
மட்டும்
எட்டி உதைத்து
விடாதீர்கள்
உதைகளின்
வலிகளை உதடுகள்
சொல்லி மாளாது
ஒருநாள்
விடியலில்
உலகை மாற்றிடும்
ஓங்கார
சங்கொலியை
என்
உதடுகளும்
ஊதிடும்
கல்லறை காத்திருக்கிறது
வறுமையினை
புதைத்திட
வானுலகை
எட்டி பிடித்திட
என் வர்க்க
உழைப்பாளிகளே
ஒன்று கூடுங்கள்
ஏழ்மை எனக்கான
விதியெனில்
விதியினை
பணக்காரன்
பஞ்சு மெத்தையில்
படுத்துறங்குகிறேனே
விதி அவனக்கு
எப்படி
விலக்கானது
வறுமையில்
வயிறு வலிக்கிறது
வர்க்க
உழைப்பாளிகளே
ஒன்று கூடுங்கள்
சுமந்து
செல்கிறேன்
ஏணிகளை
எட்டி
உதைக்காதீர்கள்
இதோ!!!
இந்த பிரபஞ்சத்தில்
நானுமொரு
பிஞ்சுடல்தான்
ஏழை மகளென்று
எச்சிலை
பரிசளித்தபோதும்
துடைத்த கரங்களில்
வாழ்கிறது
என்
வறுமை
படிப்பறிவை
நானறியேன்
பாட்டாளி
வர்க்கத்தான்
பரிசளித்தான்
ரிஃக்ஷாவை
பசிக்காக
மிதிக்கிறது
எனது கால்கள்
எதுவும்
மிச்சமில்லை
கால்வலி
தவிற
என் பார்வையில்
எத்தனை
ஏக்கங்களென்று
கணித மேதையாலும்
கணித்து
விட முடியாது
யாரோ ஒருவன்
எழுதினானே
ஏழையாக பிறந்தது
உன்தவறல்ல
ஏழையாக
மடிவதுதான்
உன் தவறென்று
வரச் சொல்லுங்கள்
அவனை
உரக்கச்
சொல்லுகிறேன்
ஒருநாள்
ஏழையாகிப்பார்
எத்துணை
மனிதர்கள்
எனது ஏழ்மையெனும்
ஏணியை
எட்டி
உதைக்கிறார்கள்
உணரும்
தருவாயிலே
உயிரை விடுவாய்
நீ
ஏனோ என்னுடல்
இத்தனை
வலிகளையும்
தாங்கிப் பிடிக்கிறது
உரக்கச்
சொல்லுகிறேன்
உழைப்பை
சுரண்டுவதில்
உங்களுக்கு
சுகமெனில்
எடுத்துக் கொள்ளுங்கள்
எங்களின்
உழைப்பை
பதிலாக
ஒன்றை கேட்கிறேன்
பசிவயிற்றை
மட்டும்
எட்டி உதைத்து
விடாதீர்கள்
உதைகளின்
வலிகளை உதடுகள்
சொல்லி மாளாது
ஒருநாள்
விடியலில்
உலகை மாற்றிடும்
ஓங்கார
சங்கொலியை
என்
உதடுகளும்
ஊதிடும்
கல்லறை காத்திருக்கிறது
வறுமையினை
புதைத்திட
வானுலகை
எட்டி பிடித்திட
என் வர்க்க
உழைப்பாளிகளே
ஒன்று கூடுங்கள்
ஏழ்மை எனக்கான
விதியெனில்
விதியினை
பணக்காரன்
பஞ்சு மெத்தையில்
படுத்துறங்குகிறேனே
விதி அவனக்கு
எப்படி
விலக்கானது
வறுமையில்
வயிறு வலிக்கிறது
வர்க்க
உழைப்பாளிகளே
ஒன்று கூடுங்கள்
0 comments:
Post a Comment