Monday, March 16, 2015

தாய்த் தொடுதலின் தேடல்

தாய்த் தொடுதலின் தேடல்


மெய்யுடல்
மேம்பட்டிருந்தது
யார் முதலில்
தொடுவதென்பதில் தூரிகை
தாமதித்துதான்
போனது

புத்தம் புதிதாய்
பூமிபார்த்தவுடன்
அழுவதில்
ஆனந்தமே
அணைத்து கொள்ள
எனதருகே
நீயிருக்கையில்

நான் எதை முதலில்
தொட்டிருப்பேன்
தெரியவில்லை
இதய துடிப்பு
யூகித்துக் கூறிற்று

இவன் என் குழந்தையென
காட்டிய
ஆள்காட்டி விரலைத்தானே
முதலில் நான்
தொட்டிருப்பேன்

மொட்டவிழ்த்து
முகமலரும்
மலரை போல
என் முகமப்போது
மலர்ந்தது தானே

சொல் அம்மா
எப்படி உணர்ந்தேன்
உன் முதல்
தொடுதலை
நான்

திங்களவனை
வணங்கி
வாழும் உயிர்களில்
அன்பு நிறைந்தோடும்
ஆகாச வெளி
உறவுகள்
ஒன்றோடொன்று
ஒட்டிக்கொள்வதுபோல்
உயிர் கொடுத்தாளே
இயற்கை அன்னை
அவளை விடவும்
அழகாய் நானும்
சிரித்தேனா?

இல்லை
ஏழைத்தாய்க்கு
பிறந்து விட்டோமென
எண்ணெயில்
வெடிக்கும்
கடுகுகளாக
வெடித்துக்
காரந்தள்ளும்
சினமுகத்தோடு
இருந்தேனா?

இல்லை
மழைவராத
மேகம் பார்த்த
மயில் சோக
முகத்தோடு
இருந்தேனா?

சொல் அம்மா
எப்படி உணர்ந்தேன்
உன் முதல்
தொடுதலை
நான்

வாய்வராதே
உனக்கு
எப்போதும்
நான் சிரித்திட
வேண்டும்
அதை நீயும்
ரசித்திட
வேண்டுமென
எண்ணமுனக்கு

இயற்கை அன்னையே
நீயும் எனக்காகிறாய்
இரண்டாம் தாயாக

இன்னுமும் என்
தாய்
சொல்கிறாள்
சிரித்தே பிறந்தேனாம்
நான்

இருதாய்க்கும்
இன்னொன்று
சொல்கிறேன்
தோல்வி காணாத
முதிய வயதிலும்
முடிந்து போகாது
தொடுதலின்
தேடல்
தொடர்ந்தே
செல்கிறது

எனை வளர்த்தது
இரு தாய்மார்கள்
என்பதாலோ
என்னவோ
பிரிவதாய்
எண்ணமில்லை
எப்போதும்
அவ்வெண்ணம்
எழுந்ததுமில்லை,,,

4 comments:

  1. தாயின் பெருமை குறித்து அருமையாக கடைந்தெடுத்த வரிகள் நண்பரே வாழ்த்துகள்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும்,

    ReplyDelete
  2. தமிழ்மண வாக்களிக்க முயற்சித்தேன் இணைக்க முடியவில்லை நண்பரே...

    ReplyDelete
  3. நன்றி தோழர்!
    என்றும் தங்களின்
    வலைப்பூவின்
    வருகையாளன் நான்,,,

    ReplyDelete
  4. தமிழ்மணத்தில் என் வலைப்பூவை இணைத்த மூன்று மாதங்களே
    ஆனதால் வாக்களிக்கும் வசதி பெற்றிடவில்லை தோழர்

    ReplyDelete

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...