Monday, March 02, 2015

"தல" தம்பதியருக்கு ஆண்குழந்தை

"தல" தம்பதியருக்கு
ஆண்குழந்தை


திரையுலகில் செல்லமாக ரசிகர்களால்
"தல" என்றழைப்படும்
அஜீத் தம்பதியருக்கு
ஆண்குழந்தை பிறந்துள்ளது. வாழ்த்துக்களை கவிதையால் வடித்துவிடமென்ற
நப்பாசை எனக்குள் எழுந்தது. எழுதிவிடுகறேன் கவிதையாக!

திரையுலகம்
அவ்வப்போது
அரங்கேற்றும்
காதல்
திருமணத்தில்
கடைசி
உயிர்த்துடிப்பு
நீ

இதுவரை
உனக்குள் எழுந்ததில்லை
விவாகரத்தெனும்
விவகாரங்கள்

ரசிகர்களின்
ரசனைகளுக்கு
என்றும்
மனதில்
உயிர்பெற்றுவிடும்
காதலுக்கு
சாட்சியாகிறாய்
நீ

இல்லறத்தில்
இன்பக்கடலினில்
எழுந்த
பெண்குழந்தை
முதல் குழந்தை
உனக்கு

முகம்
சுளிக்கவில்லை
தனக்குள் ஏற்றிவைத்த
தாய்மைக்கு
இது சாட்சி

ஷாலினுக்கும்
அனோஷ்காவுக்கும்
அமைதி
முகத்தோடு
அணைத்துவிடும்
தாயுமானவன்
நீ

உன் மீதெழும்
விமர்சனங்களை
விழுதுகளாக
தாங்கி
தகப்பனெனும்
ஸ்தானத்தில்
தவழ்ந்து விடுகிறாய்

தற்போது
உன்மடியில்
ஆண்குழந்தை
அகிலம்
போற்றட்டும்
அனைத்தையும்
வென்றுவிடு
ஆண்குழந்தையும்
பெண்குழந்தையும்
பெற்றெடுத்த
தாயையும்
தன் மார்போடு
அணைத்து
விடு

திரையுலகம்
திரை
விலகட்டும்
"தல" எனும்
நடிகரே
தாயுமானதற்கு
இந்த
கடைகோடி
ரசிகனின்
வாழ்த்துக்கள்

5 comments:

  1. சிலுவை ஒரு கொலைக்கருவி என்றபோது உங்களை எண்ணி சற்று ஆச்சர்யப்பட்டேன். அடடா இதோ ஒரு செந்தழல் சமூக அவலங்களை தோலுரிக்கப் போகிறது என்றே நினைத்தேன். கடைசியில் ஒரு சாதாரன சினிமா நடிகனுக்கு குழந்தை பிறந்ததை இவ்வளவு கொண்டாட்டமாக கவிதை எழுதி குதூகலிக்கும் மிக மலிவான சினிமா ரசிகரா நீங்கள்? வெட்கம்.

    முதலில் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். அப்படியே அந்த profile படதையும்.

    ReplyDelete
  2. ஒரு நடிகனுக்கு குழந்தை பிறந்துள்ளது
    சக தோழனுக்கு குழந்தை பிறந்தாலும் இதே கவிதை தான் இதில் எந்த வகையிலும் ரசிக வெறியை வெளிபடுத்த வில்லை நான் . சமூகத்தை எந்தளவுக்கு தோலுரிக்க வேண்டுமோ அதே அளவிற்கு திரையுலகையும் தோலுரிக்க வேண்டும் ஆனால் அதனை வெளிபடுத்தும் இடம் இதுவல்ல என்பதை
    உணர்வீர்கள் என நம்புகிறேன் . குழந்தை பிறப்பிற்கு ஒரு கவிதையெழுதுவதில் என்ன தவறு இருக்கின்றோ எனக்குத் தெரியவில்லை.

    ReplyDelete
  3. இதற்கு நான் பதில் சொல்வதே அபத்தம். இருந்தும் சொல்கிறேன். ஏனென்றால் உங்களைப் போன்று வேறு சிலர் சமூக அக்கறை என்று பேசிக்கொண்டு சினிமா நடிகனுக்கு காவடி தூக்கக்கூடாது என்பதற்காகத்தான்.

    முதலில் நான் யாரையும் அடைமொழி கொண்டு அழைப்பதில்லை. அது எம் ஜி ஆர் ஆகட்டும் கருணாநிதி ஆகட்டும். அண்ணா ஆகட்டும். ஏன் காந்தியே இருந்தாலும் இல்லை. நீங்கள் அஜித் என்ற உங்களின் அபிமான நடிகருக்கு என்ன விதமான பாராட்டும் செய்துகொள்ளுங்கள். தவறே இல்லை. ஆனால் தயவு செய்து இந்த குணத்தை வைத்துக்கொண்டு உலக அவலங்களைப் பற்றி சேகுவாரே ரேஞ்சுக்கு பேசாதீர்கள். உங்களுக்கு அந்த தகுதி இல்லை.

    --சக தோழனுக்கு குழந்தை பிறந்தாலும் இதே கவிதை தான் இதில் எந்த வகையிலும் ரசிக வெறியை வெளிபடுத்த வில்லை நான் . -----

    இந்தக் கவிதையே ஒரு ரசிக வெறிதான். ஒரு சக தோழனுக்கு இது போன்ற ஒரு பாராட்டுக் கவிதை எழுதியிருந்தால்கூட கண்டிப்பாக நான் அதை வரவேற்றிருப்பேன். ஆனால் இது மிக அபத்தம்.ஒரு நடிகனுக்கு ரசிகனாக இருப்பது எத்தனை கீழ்த்தரமானது என்பது கூட தெரியாத மாயையில் நீங்கள் உழன்று கொண்டு இருக்கிறீர்கள். நல்லது. நான் உங்களைப் பற்றி எண்ணியது தவறு என்று இப்போது தெரிகிறது. எந்த தகுதியில் நீங்கள் மதம் போன்ற மிகத் தீவிரமான விஷயங்கள் பற்றி பேசுகிறீர்கள் என்று வியப்பாக இருக்கிறது. வந்தனம். இனி நான் உங்கள் தளம் வருவதென்பது இயலாத காரியம். I know it doesn't matter to you as long as you worship those so called *******cinema actors...

    Grow up.

    ReplyDelete
  4. செம்ம காமெடிதான்
    இது
    எனது அனைத்து படைப்புகளையும் படித்துவிட்டு அவற்றில் விமர்சனம் செய்திருந்தால் பரவாயில்லை இந்த கவிதையில் பொங்குவது எனக்கொன்றும் வியப்பில்லை "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்ற டைலாக்கெல்லாம் ட்விட்ருக்கோ , பேஸ்புக்கிற்கோ சொன்று வாதிட்டிருக்கலாம்
    தோழரே அப்படி நீங்கள் பொங்குவதாய் இருந்தால் தமிழ்மணம் திரைமணம் வெளியிட்ட அனைத்து சினிமா விமர்சனங்களுக்கும் பொங்கிவிட்டு இங்கே வரவும் இல்லையெனில் என் நூறு படைப்புகளை முழுதாக படித்துவிட்டாவது பொங்கி வரவும்

    ReplyDelete
  5. நானும் கூட உங்க சில பதிவுகளை படிச்சு நீங்க புரட்சிகர சமூக சிந்தனையாளர் என்று நினைத்திருந்தேன். இந்த தல பதிவை படிச்சதும் ரொம்பவே அதிர்ச்சியாயிருந்தது.

    ReplyDelete

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...