Wednesday, March 18, 2015

குருடான அரசு தொடரும் பார்வையற்றோர் போராட்டம்

குருடான அரசு தொடரும் பார்வையற்றோர் போராட்டம்

எப்பொழுதும் மக்களுக்கான அவசியப் பணிகளையும் அடிப்படைத் தேவைகளையும்
பூர்த்தி செய்திடவே "அரசு" என்கின்ற அதிகாரத்தை மக்கள்
தேர்ந்தெடுக்கிறார்கள­். ஆனால் தொடர் சர்வாதிகார போக்கில்
முதலாளித்துவமாக அரசு செயல்படும் போதுதான் போராட்டம் என்கிற ஒன்றை மக்கள்
கையிலெடுக்கிறார்கள் . அதன் அவசியத்தை ஆளும் அரசு நினைத்தால் தக்கத்தொரு
தீர்வினை மக்களுக்கு அளிக்கலாம் .ஆனால் ஆளும் அரசானது தொடர் மக்கள் விரோத
போக்கினை கைவிடுவதாகத் தெரியவில்லை.
தமிழகத்தை பொருத்தமட்டில் இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கெதிரான
போக்கினை கையாள்வதில் ஒன்றுக்கொன்று பிணைப்புடனே செயல்படுகிறது .
வெளியுலகத்தில் இத்திராவிட கட்சிகள் எலியும் பூனையுமாக தெரிந்தாலும்
உள்ளுக்குள் மக்களை அடக்கியாளும் முதலாளித்தவ யுக்தியினைத்தான்
கையாள்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் நமக்கு எழுந்திடவில்லை.
இவ்வுலகில் ஆரோக்கிய உடலமைப்பை கொண்டுள்ள மனிதர்களே வாழ்வாதாரத்திற்காக
தங்களின் வாழ்க்கையை தொலைத்து வறுமையில் வாடுகின்றச் சூழலில்,
உடற்கூறு குறைபாடுடைய கண்பார்வையற்றோரின் நிலமை எப்படியிருக்குமென்று­
யோசித்துப்பாருங்களேன­் . யோசிக்க நேரமில்லை என்கிறீர்களா? உண்மைதான்
நகர்புற சாலையில் ஒவ்வொரு வாகனத்தின் முன்பும் கையேந்தும்
குருடர்களைக்கூட விலங்கினைவிட கேவலமாகத்தானே நாம் பார்க்கிறோம்,இன்னும்
ஆட்சியர் அலுவலகங்களில் கையேந்தும் பல ஊனமுற்றோர்களையும் மிகச்
சாதாரனமாகத்தானே நாம் கடந்து செல்கிறோம். அவ்வாறு இச்சமூகம் இருக்கையில்
ஊனமுற்றோரை எண்ணிப்பார்த்திடலாகு­மா?
இதுதான் இன்றையச் சூழல் ,அந்த ஊனமுற்ற நம் உழைக்கும் வர்க்கங்கள்
தெருவில் நின்று போராடத் துணிந்து விட்டார்கள் . போராட்டக் களமாடும்
இடத்தின் பெயர் மட்டுமே அவர்களுக்குத் தெரியும்
அவ்விடத்தின் காட்சியை கூட அவர்களால் பார்க்க முடியாது . அவ்வாறு
இருக்கையில் அரசு மற்றும் அரசும் தனியார் துறையும் இணைந்த பொதுத்துறை
நிருவனங்களில் ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்
,தங்களின் திறமைகளுக்கு அரசானது மதிப்பளித்து ஊக்குவிக்கப்பட வேண்டும்,
இருக்கும் காலிப்பனியிடங்களை (ஊனமுற்றோருக்கான) நிரப்பட வேண்டுமென்கிற 9
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும்
அவர்களின் நியாயக் கோரிக்கைகளையும் ,திறமையை வளர்த்துக்கொண்டு
உடற்தகுதியுள்ள மனிதர்களுக்கு நிகராக நாங்களும் உடற்தகுதி
பெற்றிருக்கிறோம் உழைத்துச் சாப்பிட வாய்ப்புத் தாருங்கள் ,என்றும்
போராட்டக் களத்தில் இறங்கியிருக்கும் ஊனமுற்ற உழைக்கும் வர்க்கங்களின்
நியாயக் கோரிக்கையினை ஏற்க மறுக்கிறது ஆளும் அதிமுக அரசு, மாறாக
அவர்களின் மீதே காவல்துறையை ஏவிவிட்டு ஏகாதிபத்தியத்தை
கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கைபார்க்கிறது.­ இப்போராட்டம் இன்று தொடங்கிய
போராட்டமல்ல இரு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டை எப்போது
ஆளத்தொடங்கியதோ அப்போதிருந்தே தொடங்கிய போராட்டம் . ஊனமுற்றோரின் இந்த
அறநிலை போராட்டத்திற்கு இதுவரை எந்தவோரு அரசியல் கட்சிகளும்
,இயக்கங்களும்,மக்களு­ம் ஆதரவுக் குரல் கூட எழுப்பவில்லையென்பது
வருத்தமான விஷயத்தை விடவும் அவமானப்பட வேண்டிய விஷயம்.
ஓராண்டிற்கு சராசரியாக 3850 ஊனமுற்றவர்கள் தங்களுக்கான வாழ்வினைத் தேட
வழியற்று உரிமைகள் மறுக்கப்பட்டமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
என்று மத்திய மனித உரிமை ஆய்வக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அவர்களும் நம்மைப்போலவே மனிதர்கள் என்று மக்களும் ,ஊனமுற்றோருக்கும்
உழைப்பானது பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென அரசும் உணர வேண்டும் . அவர்களின்
போராட்டத்தில் எழும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உழைக்கும் வர்க்கச்
சுரண்டலை கைவிட்டு சமூகத்தை சீர்படுத்த அரசு முன்வர வேண்டும்.
அடக்குமுறைகள் என்றுமே தீர்வாகாது என்பதுதான் நம் முன்னோர்களான
முற்போக்குச் சிந்தனையாளர்களின் சித்தாந்தம்.
இனியும் ஆளும் அதிமுக அரசும்,நாட்டுமக்களும­் தீர்வுபெற்றுத் தருவார்களா
என்கிற ஏக்கம் கலந்த எதிர்ப்பார்ப்புடன் எத்தனையோ ஊனமுற்றவர்களின்
எதிர்ப்பார்ப்புகளை ,நாமும் மனித உள்ளத்துடன் நிறைவேற்றிட
வேண்டும்,இல்லையேல் அனைத்தும் இருந்து நமக்குப் பயனில்லை நாமும்
குருடர்கள்தான்,,,
(மாற்றுத் திறனாளிகள் என்கிற சொல்லை இங்கு பயன்படுத்த விரும்பவில்லை
,அவர்களும் ஒடுக்கப்பட்டவர்கள் என்கிற முறையில் அதித்தீவிரமாக
இப்போதைக்கு"ஊனமுற்றோ­ர்" என்கிறச் சொல்லே அனைத்து மனங்களையும் திறக்கும்
சொல்லாக இருக்க வேண்டும் என்பதனால்தான் இந்த திருத்தம்)

2 comments:

  1. எழுதுவது கவிதை ஆனாலும் கட்டுரை ஆனாலும் கண்டு கொள்ளாத அரசே, தற்போது நடக்கிறது! இன்றுகூட நான் கவிதை ஒன்று எழுதியுள்ளேன்! என்ன ?பயன்!

    ReplyDelete
  2. அவ்வாறு கண்டுகொள்ளாத அரசின் பிற்போக்குத் தனங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் மகத்தான பணியை கவிதையும், கட்டுரையும் செய்வதாக நான் கருதுகிறேன் தோழர் . எல்லா ஊடகமும் கார்ப்பரேட்டுகளாக மாறிவிட்டச் சூழலில் நமது எழுத்துக்கள் வெளிச்சத்தில் உண்மையை வெளிகாட்டும் தோழர் . (நான் ஏற்ற ஓர் இயக்கத்தின் கண்டன ஆர்ப்பாட்ட அழைப்பினை ஏற்று கலந்து கொண்டமையால் பதிலுரை தாமதமாக அளிக்கிறேன் மன்னிக்கவும்)

    ReplyDelete

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...