Saturday, April 04, 2015

காதல் ராட்டினம்

ரணங்களை
ஏற்றிய
ராட்டினத்தில்
காதலும்
உடனமர்ந்தது

தலைசுற்றி
விழுகின்ற
வரையில்
அலறிக் கத்துகிறேன்
நான்
சந்தோஷத்திலா!
அச்சத்திலா!

அனுமானிக்க
முடியாத மனதை
ஆசுவாசப்படுத்தி
ஆசிர்வதிக்கிறது
சுற்றும் உலகம்

நூற்கயிறுபோலே
அவள்நின்று
சுற்றுகிறாள்
ராட்டினத்தை

என்ன ஆகிவிடுமோ
எனக்கேதும்
தெரியாது

அவளே அதனை
அனிச்சையாக
அறிந்து வைத்திருக்கிறாள்

காதலிக்கச்
சம்மதமென
சொல்லும்
வார்த்தைகளை
அவளும்
சொல்லாமல்
விளையாடுகிறாள்
எனையும் காதலையும்
நிந்திக்கிறாள்

நிதர்சனமாய்
ஒருநாளெடுத்து
சம்மதமுறுதி
ஏற்பாளென்பது
உறுதி

அவள் காட்டும்
மாயகோலத்தை
மனதார ஏற்பதுதானே
முறை

தொடரட்டும்
இந்த
ராட்டின மாய
விளையாட்டு

0 comments:

Post a Comment

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...