Monday, June 15, 2015

சாதி உங்களுக்கு என்ன செய்தது?

சாதியத்தை உயர்த்திப் பிடித்து சாதியானது சமூகத்திற்கு மிகத்தேவையென
சுயசாதி பெருமைபேசும்
மனிதர்களிடம்,
"சாதி உங்களுக்கு என்ன செய்தது?" எனும் கேள்வியை முன்வைக்கையில் எவ்வித
சிந்தனைகளுக்கும் இடம்தராமல் பட்டென பதிலுரைப்பார்கள் ஒற்றை காரணத்தை,,,
"சாதிதான் எங்களுக்கு கீழே அடிமைகளை உறுவாக்கித் தருகிறது" என்பதுதான்
மனிதர்களின் வாயில் தெறிக்கும் பதிலாக இருக்கிறது. இங்கே சக மனிதனை
அடிமைபடுத்துவதென்பது­­ மிகச்சரியானதுதானென வாதிடப்படுகிறது. சாதி
சமூகத்திற்கு தேவையான ஒன்றென அடிமைபட்ட அடித்தட்டு மக்களிடம்
எளிமையாகவும் கூடவே அதிகாரத்தோடும் நியாயப்படுத்தப்பட்டு­­
செயல்படுத்தப்படுகிறத­­ு.
ஏழை,பணக்காரன் என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விட
சக மனிதனை அடிமைபடுத்த தொழில்,பிறப்பு, தெய்வ வழிபாடு போன்றவற்றில் எழும்
மூல சமூக கட்டமைப்புச் சாதியத்தால் மிகச்சாதாரணமாக மற்றவனை
அடிமைபடுத்திவிடலாம் என்கிற பொதுபுத்திக்கு வந்துவிட்டது சாதி ஆதிக்கச்
சமூகம். தங்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும்,போலிய­­ான கவுரவத்தை
நிலைநிறுத்திக் கொள்ளவும் , சக மனிதன் மீது அடிமை விலங்கை கட்டுவித்தல்
தான் நியாயத்தின் பேராற்றலெனில் சாதியத்தை நியாயப்படுத்துதல் என்பது
ஒருபோதும் சமூகத்தை நல்வழிப்படுத்தப் போவதில்லை.
சாதியம் உங்களுக்குச் செய்யும் அடிமைபடுத்துதல் பணியானது
நிலைத்துநிற்கும் தன்மையுடையதாக என்றுமே இருந்ததில்லை. ஒரு கட்டத்தில்
அது உங்களையே ஆட்கொண்டு அடிமைபடுத்தும் ஆகச்சிறந்த பணியை செவ்வனே செய்து
முடிக்கும். ஏதோ இந்துத்துவம் மட்டுமே சாதியத்தை உயர்த்திப்
பிடிக்கிறதென்று எண்ண வேண்டாம். உறுவாக்கத்தில் விதையின் வேர்களாய்
மட்டுமே இந்துமதம் இருந்தாலும் கிளை விருட்சங்களாய் அதன் இயக்க
விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு இஸ்லாம்,கிருஸ்த்துவம­­் என்று
வேற்றுமதத்திலும் பரவிகிடக்கிறது இந்த மனுதர்ம வருணாசிரம சாதியம். இதனை
சுட்டிக்காட்டிதான் அம்பேத்கர் அவர்கள் பௌத்த மதத்தினை தேர்வுசெய்து
மதமாற்றத்தினை உறுதிசெய்கிறார். "சாதியம்" எனும் ஒரு கருவிக்கு வெட்டவும்
தெரியும் வெட்டியதை வெட்கமில்லாமல் புணரவும் தெரியும். கல்வி
கற்றவர்களிடத்தில் அறிவியலை விட சாதியமே மேலோங்கிறதே ஏன்? அதுவும் 21ம்
நூற்றாண்டில் கல்விகற்றோரிடத்தில் அதிகளவில் "சாதியம்" தலைதூக்குகிறதே,,,
காரணம் தேடி களைத்துபோக வேண்டும் எளிதான புரிதல் ஒன்றே "அறிவியல்
எங்கெல்லாம் இயங்குகின்றதோ அங்கெல்லாம் அது சாதிமதத்தால்
இயக்கப்படுகிறது" இந்தச்சூழலில் கல்விகற்றவன் எளிதாய் சாதியத்தின்
வலையில் சிக்கிக்கொள்கிறான். கண்ணோட்டம் ஒன்றே அவர்களுக்கு முன்னால்
செல்கிறது அவர்களும் அதற்கு வளைந்து கொடுக்கிறார்கள் அதுவாகவே தானாய்
சாதியமும் வளர்ந்து நிற்கிறது. என்ன கண்ணோட்டம் அது? அடுத்தவர்களை அடிமை
படுத்துதல் என்பதே அவ்வொற்றைக் கண்ணோட்டம். சாதி உங்களுக்கு என்ன
செய்தது? மீண்டும் தொடக்க கேள்வியை முடிவில் வைத்தாலும் வளர்ந்தே
நிற்கிறது "சாதியம்" அழிந்தே போகிறதிங்கே "மனிதம்" அடிமைத்தனத்தை எப்போது
அகற்றப்போகிறோம் நாம்,,,

2 comments:

  1. சாதி ஒழிய கலப்பு திருமணங்கள் நடக்க வேண்டும் இது இப்பொழுது காதலின் வேகத்தால் பரவி வருகிறது

    ReplyDelete
  2. கலப்பு திருமணங்கள் வரவேற்க்கத்தக்க ஒன்று ,தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...