Tuesday, July 21, 2015

ஜோதிராவ் பூலே "அனுபவம் பேசுகிறது"

"ஜோதிராவ் பூலே" இந்தியாவில் மறைக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளில்
இவருக்கும் இடமுண்டு காரணம் ஜோதிராவ் பூலே அவர்கள் பெண் விடுதலைக்காகவும்
பட்டியலின ஒடுக்கப்பட்ட தலித்தின மக்களுக்காகவும் பாடுபட்டார் என்கிற
காரணத்தாலே அவரின் வரலாற்றுப் பதிவு ஆதிக்க இந்துத்துவ சக்திகளால்
மறைக்கப்பட்டது. சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்கள் தன் குருவாக ஜோதிராவ்
பூலேவை குறிப்பிடுகிறார் . அதுமட்டுமின்றி ஜோதிராவ் பூலே பயன்படுத்திய
"தலித்" (Dalit) எனும் சொல்லை அப்படியே உள்வாங்கிக் கொண்டு "தலித்
விடுதலையே சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தும்" என்கிறார்
அம்பேத்கர்.தன் வாழ்நாள் முழுவதையும் தலித்தின மக்களுக்காவும்,பெண்
விடுதலைக்காகவும், கல்வி மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்தமையால்
காந்தியடிகளிகளுக்கு முன்பாகவே 1888-ல் மும்பையில் மாண்ட்வி எனும்
பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஒடுக்கப்பட்ட தலித்தின மக்கள்
இவருக்கு விழா எடுத்து உலகறிய "மகாத்மா"என்கிற பட்டம் சூட்டினார்கள்.
பார்ப்பன இந்துத்துவர்களுக்கு இது மிகப்பெரும் எரிச்சலாக இருந்தமையால்
அவரின் வரலாற்றுப் பக்கங்கள் முளையிலேயே கிள்ளியெறிப்பட்டது. ஜோதிராவ்
பூலே அவர்கள் இந்துத்துவ பார்ப்பானிய சாதியாதிக்க ஒடுக்குமுறைகளுக்கு
விலக்கானவரில்லை என்பதற்கு அவரின் சொந்த அனுபவமே மிகப்பெரும்
சாட்சியாகவும் ,இந்தியா சாதியின் பெயரால் சந்தித்த அவலநிலைகளுக்கு ஓர்
வரலாற்றுப் பதிவாகவும் இருந்திருக்கிறது. வெளியே தெரிந்தால் எங்கே
சாதிக்கு எதிரான கலகக்குரல்கள் எழுந்துவிடுமோ என்கிற அச்சத்தில் மட்டுமே
ஜோதிராவ் பூலேவை புறக்கணித்தார்கள் நம் இந்துத்துவ வலதுசாரிகள். அவர்தம்
அனுபவத்தை அப்படியே மனதிலேற்றிக் கொள்வது சாதியத்திற்கு விழும்
சவுக்கடியாக இருக்கட்டும் . ஜோதிராவ் பூலேவின் ஆன்மா பேசுகிறது அந்த
நிகழ்வை,,,
1827 ஏப்ரல் 11-ல், மகாராஷ்டிர மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில்
கோவிந்த்ராவ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் ஜோதிராவ் பூலே. குடும்பப்
பொருளாதார பின்னடைவு காரணமாக தொடக்கக் கல்வியுடன் படிப்பை நிறுத்திக்
கொண்டார். அதன் பிறகு பள்ளிப்படிப்பை விட்டாலும் வாசிப்பை விடாத
ஜோதிராவின் அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்த பெரியவர் ஒருவரின்
வேண்டுகோளுக்கிணங்க ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத்
தொடர்ந்தார் ஜோதிராவ் பூலே.

சாதி மறந்து நண்பர்கள் தம்முடன் நட்புப் பாராட்டுவதாக அவர் நம்பினார்
இதற்கேற்றார் போல அவரின் பார்ப்பன நண்பர் ஒருவர் தமது திருமண நிகழ்ச்சி
வரவேற்புக்கு ஜோதிராவ் பூலேவை அழைத்திருந்தார். அதன்படியே மாலை நேரத்தில்
நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மிகச் சாதாரண உடையில் அவர்
சென்றிருக்கிறார். அவரை கீழ்சாதிக்காரரென்று மிகச்சரியாக புரிந்து கொண்ட
பார்ப்பன நண்பனின் தோழர்கள் அவருக்கு அனுமதி மறுத்து தடுத்து
நிறுத்தியிருக்கிறார்­கள். என்னுடைய தோழனின் திருமண நிகழ்ச்சியில் நான்
ஏன் கலந்து கொள்ளக்கூடாதென்று பூலே வாக்குவாதம் செய்ய பெரும் சர்ச்சை
அங்கே எழுந்திருக்கிறது. தகவலறிந்த பார்ப்பன நண்பரும் "உனக்கு அழைப்பு
விடுத்திருக்கக் கூடாது தவறுதலாக அழைத்து விட்டேன் வெளியே போ" என்று
விரட்ட ஜோதிராவ் பூலேவின் மீதான தாக்குதலை தொடங்கினார்கள் பார்ப்பன
நண்பனின் உறவினர்கள். இந்துத்துவ பார்ப்பனர்கள் ஒன்றிணைந்து ஜோதிராவ்
பூலே அவர்களை ஓட ஓட விரட்டி கற்களாலே அடித்துத் துரத்த வலிதாங்க
முடியாமலும் உடல் சக்தி குறைந்தமையாலும் ஓரிடத்தில் சுருண்டு விழுந்தார்
. அப்போதும் தாக்குதலை நிறுத்தாத பார்ப்பானியர்கள் கடைசியாக தெருவோர
சாக்கடையில் வீசியிருக்கிறார்கள்.­ அக்கம் பக்கத்தில் இருந்த மனிதர்கள்
உயிருக்கு போராடும் ஜோதிராவ் பூலேவை மருத்துவனையில்
சேர்த்திருக்கிறார்கள­். பூலேவை மருத்துவமனையில் சேர்த்த ஒருவர் அவரோடு
கடைசிவரையில் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. இந்த நிகழ்வின்
போது ஜோதிராவ் பூலேவுக்கு வயது 21.

இதுதான் இந்துத்துவ பார்ப்பானியம், இதுதான் இந்தியாவின்
அடிமைத்தனத்திற்கான ஆதாரம். சாதியத்தை உயர்த்திப் பிடிக்கும் எவராலும்
தன் சமூகத்தை உயர்த்தி விட முடியாது என்றும் , தலித்தின விடுதலையே
சமத்துவத்திற்கு வழிவகுக்கும் என்றும் தீர்க்கமாக அவர் நம்பினார் அதோடு
சமூகத்தில் செயல்படுத்தியும் காட்டினார். இன்றைய தலித்தியம்
பேசுவோர்களுக்கும்,பெ­ண்ணியம் பேசுவோர்களுக்கும் ஜோதிராவ்
பூலேவையும்,பெண்கல்வி­ புகுத்திய அவரது துணைவி சாவித்திர்பாய் பூலேவையும்
தெரியவில்லையென்றால் அது அறியாமையின் உச்சம். அதில் பார்ப்பானிய
வெற்றியும் அடங்கியிருக்கிறது. மறைக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுப்பதில்
நமக்கான கடமைகள் நிரம்பி இருக்கிறது.

3 comments:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...