தமிழத்தின் முன்னணி பத்திரிக்கையான விகடன் முழுமையாக வலதுசாரிய ஈடுபாடு
கொண்டிருந்தாலும் , அதன் சமூக அக்கரை கொண்ட கட்டுரைகளும்,கருத்துக்களும்
பாராட்டுதலுக்குரியதாகவே இருக்கும். பல்வேறு தரப்பினர்களின்
வாசிப்புகளுக்கு தேர்ந்த சுவாரஸ்யமான செய்திகளை வெளியிடுவதை கடமையாக
கொண்டிருக்கிறது விகடன் , அந்த வகையில் ஆளும் அதிமுக ஜெயா அரசின்,
அமைச்சர்கள் மீதான அலசல் அறிக்கையின் சிறப்புக் கட்டுரையாக, முதல்வர்
ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து, ''என்ன செய்தார் ஜெயலலிதா?"
என்ற தலைப்பில் நவம்பர் 25 தேதியிட்ட இதழில் வெளியிட்டது. இதில் அதிமுக
அரசின் செயலற்ற மெத்தனப்போக்கினையும், அடிமையாகவே வாழ்ந்து
கொண்டிருக்கும் அமைச்சர்களை பற்றியும், பல்வேறு ஊழல்கள் குறித்தும்,
நான்கரை ஆண்டுகாலத்தில் நடந்த சமூக அவலங்களையும் வெளிச்சமிட்டுக்
காட்டியிருந்தது.
அது முதல் விகடன் பத்திரிக்கையை எதிர்த்து அதிமுக தொண்டர்கள் வரையில்
எதிர்ப்பு வலுத்த நிலையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை
செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்தவிகடன் பத்திரிக்கை மீதும் அதன் ஆசிரியர்,
மற்றும் வெளியிட்டாளர் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த
வழக்கை விகடன் நிறுவனம் சட்டரீதியாக எதிர்கொள்ளும். என்றும் வேண்டுமென்றே
அதிமுக தங்களின் (விகடன்) பேஸ்புக் கணக்கினை முடக்கிவிட்டதென்றும்
மேலும் எத்தகைய இடையூறுகள் வந்தாலும், எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்
என்றும் விகடன் தனது இணையதள பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
பத்திரிக்கைகள் மீதான இவ்வகையான அடக்குமுறைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் உண்மையை உரக்கச் சொன்னால் உடனே வழக்கு போடுவது என்பது ஆளும்
முதலாளித்துவ அதிமுக அரசிற்கு வழக்கமான ஒன்றாகவே இருக்கின்ற வேளையில்
மக்கள் தங்களின் எதிர்ப்பு வினையினை காட்டியே ஆகவேண்டியிருக்கிறது.
இன்னும் ஆறு மாதத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பின்னடைவை
சந்திக்க வாய்ப்பிருப்பதாகவே இவ்வகையான அடக்குமுறை நடவடிக்கைகள்
நமக்குணர்த்துகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment