Wednesday, November 18, 2015

மிதக்கும் சென்னைக்கு யார் காரணம்? கார்ப்பரேட்டுகளே கல்லெறியாதீர்கள்,,,

தொடர் கனமழை வெள்ளத்தால் மூழ்கிப்போன சென்னையின் இந்நிலைக்கு யார்
காரணமென்று அவரவர் மனசாட்சிகளுக்கே தெரியும், அதையும் தாண்டி தங்களின்
குற்றவுணர்வினை சதூர்த்தியமாக மறைக்க முற்படும் முதலாளித்துவ
நிலபிரபுக்களின் வாதங்கள் காக்கையின் எச்சங்களாய் குடிசைகளை நோக்கி
விழுகிறது. இது சரியான அனுகுமுறைதானா? என்று பரிசோதிக்கவும்
கார்ப்பரேட்டுகளின் மூளை செயல்படாது என்பதும் அறிந்த விஷயமே,,, சென்னை
வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டதற்க­­ு முக்கிய காரணங்களை முன்வைக்கும்
இவ்வகையிலான முதலாளித்துவர்கள் "சென்னை ஆற்றோர குப்பத்து குடிசை
வாசிகளின் ஆக்கிரமிப்பே காரணம்" என கதைக்கிறார்கள். இக்கருத்துக்கள்
இணையம் மற்றும் பொதுவெளியில் அதிகப்படியாக பரப்பப்படுகிறது. உண்மையில்
குடிசை வாசிகள் ஆறுகளை ஆக்கிரமித்துள்ளார்கள­­ா! என்று நிச்சயமாக அவர்கள்
வாழும் சாக்கடை சூழ்ந்த வாழ்க்கைச் சூழலுக்குள் சென்று ஆராய இந்த
கார்ப்பரேட்டுகள் தயாராக இருக்கிறார்களா? சென்னையின் பூர்வக்குடி
வாசிகளான குப்பத்து குடிசைவாசிகளின் நிலங்களை அபகரித்து வெறும்
அஞ்சுக்கும் பத்துக்கும் விலைபேசி ஏமாற்றி அபகரித்தவர்கள் யாரென்று
அவரவர் மனங்களுக்கே நிச்சயமாகத் தெரியும். ஆனால் மனசாட்சிகளை புதைத்து
வாழ்வதுதான் முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளின் முதல்பணியாக இருக்கிறது.
சாதி ஆதிக்கர்களும்,நிலவுட­­மை ஜமீன்தார்களும் அதற்குப்பிறகு ஆங்கேலேய
காலனியாதிக்கத்தால் தங்களின் சொந்த நிலங்களையும்,குடியிர­­ுப்புகளையும்
தொலைத்துவிட்டு ஏதுமற்ற ஓர் சிறைவாசிகளாக குடிசைப்பதிகளில்
நாற்றங்களோடும்,நோய்க­­ளோடும் வாழும் சமூகத்து மக்கள் பெரும்பாலும்
ஒடுக்கப்பட்டவர்களாகவ­­ே இருக்கிறார்கள். அவர்கள் மீது பழி சுமத்தினால்
ஆதிக்கவாதிகளும்,அரசி­­யல்வாதிகளும் தங்களுக்குச் சாதகமாகிவிடுவார்கள்
என்று கணக்குப்போடுகிறது கார்ப்பரேட்டுகள். அதனால் தான் ஏழை எளிய
மக்களின் மீது வீண்பழி சுமத்தும் வேலையை தீவிரமாக செய்துவருகின்றன.
உண்மையில் சென்னையை எவ்வளவு அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்டினாலும் ,
அதன் வாழ்வாதாரச் சூழலுக்கு ஏற்றதுபோல வாழ முடியாதவர்களாக
வறுமைகோட்டுக்கு கீழுள்ளவர்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின்
நலனுக்காவும்,வாழ்வுக­­்காகவும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும்
எடுக்கப்படவில்லையென்­­றே சொல்லலாம். காலனியர்களின் எண்ணங்கள்
நிறைவேறிக்கொண்டிருக்­­கிறது. சென்னை முழுக்க பாதிப்பு இருந்தாலும்
ஹெலிகாப்டர்களும்,உணவ­­ுப் பொட்டளங்களும் , படகுகளும் கல்கூரைகளை
நோக்கியே செல்கிறதே அன்றி கூவம் ஆற்றங்கரையோர குப்பத்து குடிசை வாசிகளின்
பக்கம் திரும்பவேயில்லை . பாதிப்பு என்பதும் இழப்பு என்பதும் வலிகளை
அனுபவிக்கும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கையில் ஏனிந்த பாரபட்சங்கள் .
அதுமட்டுமல்லது பழிச்சொற்களையும் திணிக்கிறார்களே கார்ப்பரேட்டுகள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.100 கோடி செலவில் கூவம் மறுசீரமைப்பு பணிகளை
மேற்கொள்ள திட்டமிட்டு ஆறுகள் மறுசீரமைப்பு கமிட்டி கூட்டம்
மாநகராட்சியில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கூவம் சீரமைப்புக்கான குறுகிய
கால திட்ட பணிகளை உடனடியாக தொடங்க முடிவு செய்யப்பட்டு குப்பத்து குடிசை
வாசிகளுக்கு மாற்று இடங்களை கொடுக்க திட்டமிட்டிருந்தது. திட்டமும்
காணவில்லை ரூ 100 கோடியையும் காணவில்லை. சென்னையின் உயிர்நாடியான புழல்
ஏரி இன்னமும் நிரம்பவில்லை , ஆங்காங்கே ஏரிகளை சுற்றி ஆக்கிரமிப்பாளர்கள்
வளைத்துப் போட்டதால் மழைத் தண்ணீர் தடுக்கப்பட்டுவிட்டது­­­. யார் இங்கே
ஆக்கிரமிப்பாளர்கள்? கார்ப்பரேட் கம்பெனிகள் , பணமுதலாளிகளின் ஆடம்பர
வீடுகள், அரசியலால் கொழுத்தவர்களின் அனைத்து விதமான சொகுசு இருப்பிடங்கள்
என நிரப்பப்பட்ட மேடுகளாய் புழல் ஏரி , சென்னை CMDA அலுவலக ஆவணங்களை மறு
ஆய்வுசெய்தால் நிச்சயமாக சென்னைக்கு சமமான ஓர் பெரும் நிலத்தை
முதலாளித்துவர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள­­­் என்பது வெட்ட வெளிச்சத்தில்
வரும்.மவுலிவாக்க விபத்தையும் அவ்விட ஆக்கிரமிப்பையும் மறந்திருப்பார்கள்
நம்மவர்கள். வேளச்சேரி ஏரிகளை குப்பைகள் கொட்டும்தளமாக
மாற்றியவர்களையும். ஆடம்பர முதலாளிய வணிக நிறுவனமான ஸ்கைவாக் ஆற்றை
திருடி ஆக்கிரமித்துக் கொண்டதையும், போரூர் ஏரியை பட்டாபோட்டு விற்க
முனைந்தவர்களையும், இதுபோலவே பல்வேறு ஏரி குளங்கள் இருந்ததற்கான
தடையங்களே இல்லாமல் செய்தோர்களையும் எதிர்க்கவும்,தவறுகளை­­
சுட்டிக்காட்டவும் முன்வராத கார்ப்பரேட்டுகள் குடிசைகளை குறிவைத்து
தாக்குகிறதென்றால் வேறொன்றுமில்லை கார்ப்பரேட்டுகள் வணிக வளாகங்களின்
அழகையும்,வருமானத்தைய­­ும் சீர்குலைக்கின்றனவாம்­­ குப்பத்து குடிசைகள்.
இதுதான் அவர்கள் முன்வைக்கும் மூலக்காரணம். அதுமட்டுமில்லாது குப்பத்து
குடிசைகளை விரட்டிவிட்டால் அவ்விடங்களில் தங்கள் வணிக வளாகங்களை
விரிவுபடுத்தலாம் என்கிற கீழ்த்தரமான கணக்கினையும் கார்ப்பரேட்டுகள்
போட்டுவைத்திருக்கின்­­றன. கார்ப்பரேட்டுகளே கல் கூரையில் அமர்ந்து
கொண்டு கீற்றோலை குடிசைகள் மீது கல்லெறியாதீர்கள் . அது உங்களுக்கு
நல்லதுமில்லை, உண்மையானதுமில்லை. ஒருநாள் கீற்றோலைக் குடிசைகள்
சிவப்புடையிலும்,கருப­­்புடையிலும்,நீலவுடை­ய­ிலும் கையில் சுத்தி
அரிவாளோடு முட்டி மோதும் போது கல்கூரைகள் தரைமட்டமாகலாம். இது
கார்ப்பரேட்டுகளின் முதலாளித்துவத்திற்கா­­ன அழிவாக இருக்கும் என்பது
உறுதியாக்கப்படும்.

2 comments:

  1. நடந்தவை,
    நடந்ததாகவே இருக்கட்டும்
    இனியும்
    இதுபோல் இடம்பெறாதிருக்க
    ஏது வழி?

    ReplyDelete
  2. திட்டங்கள் தீட்டி அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை சரியான வழியில் பயன்படுத்தினால் எதுவும் சாத்தியம்.
    தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...