வணக்கம் சொல்லிவிட்டு அடுத்த நகர்வை முன்வைக்கிறது ஒரு சக்கரம் அதன் சுழற்சிக்கு அப்பால் சுழலாத உலகத்தை சூழ்ச்சி என்பார்கள் சுட்டெரிக்கும் சூரியனையும் சேர்த்து எதன் மீதும் பாரத்தை ஏற்றி சுவடுகளாக்காமல் பாறைகளுக்கு பஞ்சுமெத்தையாகிறது அச்சக்கரம் போகப் போக முடிவற்ற ஒரு பாதையில் மூச்சிரைக்க ஓடி முன்னேறியதில் முகத்தில் பொலிவிழந்து முந்தைய பயண வரலாற்றை அசைபோகிறது அப்போதும் அசைந்தாடிய படியே நிரந்தர பொழுதென்று எதுவுமற்று எண்ணம் மட்டும் மணல்வெளியில் உழல உச்சத்தின்...