Friday, March 11, 2016

அதிமுக ஜெயாவை ஆதரிக்கும் பெண்கள் இனத்தின் கவனத்திற்கு,

தமிழ்ச்சமூக கட்டமைப்பில் பெண்ணடிமைத்தனம் தீர்வேதும் பெறாத தொடர்
போக்காகவே இருந்துவருகிறது, ஒரு பெண் சமூகத்தில் அனுபவிக்கும் பெண்ணடிமை
பிரச்சனைகளை விட குடும்பத்திற்குள் அனுபவிக்கும் பெண்ணடிமைத் தனங்களே மிக
அதிகமாக அவளை பாதித்துவிடுகிறது. ஆணாதிக்க மனநிலை கொண்டுள்ள எந்த
வகையறாக்குள்ளும் எளிதாய் அடங்கிப்போகிறாள் பெண், அதி முக்கியமாக
ஆணாதிக்கத்தின் பின்னால் மிகவும் நலிவடைந்து, நசுக்கப்பட்டு தன் வாழ்நாளை
கழிக்கும் பெண்களுக்கு இயல்பாகவே ஓர் ஆளுமை எனும் வட்டத்திற்குள் அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை உள்ளூர ஏற்றுக்கொள்கிறார்கள்­. ஜெயலலிதாவின்
காலடியில் விழுந்து கிடக்கும் அமைச்சர்களையும், கட்சித் தொண்டர்களையும்
வெளிப்படையாக பெண்கள் எதிர்த்தாலும் உள்ளுக்குள் அதனை ரசித்து
போற்றுகிறார்கள் என்பதே எதார்த்தம். இதற்காக பெண்களை இரட்டை நாக்கு
கொண்டவர்கள் எனவும் சொல்லிவிட முடியாது. காரணம் அந்தளவிற்கு அவர்கள்
ஆணாதிக்க சமூகத்தால் "தாம் அடிமை பட்டிருக்கிறோம்" என்பதை
உணர்ந்திருக்கிறார்கள­். ஒரு மாபெரும் கட்சியை நிர்வகித்துக்கொண்டு
தனக்கு கீழான அனைத்து மக்களையும் ஓர் "ஆளுமை" என்கிற தன்மையோடு
ஆட்சிபுரியும் தன் இனத்தை சேர்ந்த "பெண்ணாக" ஜெயலலிதா இருக்கிறார்
என்றால் அதற்காக பெருமை பட்டுக்கொண்டும் பூரித்துக்கொண்டும்,ப­ுகழ்ந்து
கொண்டும் தங்களின் மனதில் ஜெயாவை ஓர் தலைவியாகவும், முன்னுதாரணமாகவும்
ஏற்றுக்கொண்டிருக்கிற­ார்கள் அனேக பெண்கள். ஆனால் பெண்கள் இனம் தங்கள்
மனதில் இருத்திக்கொண்டது போல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தன்
இயல்பில் இல்லை என்பதே உண்மை, அவரை பொருத்தவரையில் "ஆளுமை" என்பதற்கு
அடிமைபடுத்தி வைத்திருத்தல் என்பதாகவே பொருள்கொண்டு "ஆளுமை" என்பதற்கான
சிந்தாந்தத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்கவே முயற்சிக்கிறார் . அதற்காக
ஜெயா அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைதான் தாய்மைக்கு இலக்கணமான "அம்மா"
வாகும், ஒரு போலியான பிம்பத்தை தனக்குள்ளே ஏற்படுத்திக்கொண்டு அதனை
உண்மையென அனைவராலும் நம்பவைக்கவும், ஏமாற்ற முயற்சி செய்துக்
கொண்டிருப்பவர்தான் ஜெயா அவர்கள், நடைமுறை எதார்த்தங்களை உடைத்துக்கொண்டு
"பெண் விடுதலையை நேசிக்கும் எந்த பெண்ணியமும் ஜெயாவை "ஆளுமை" என்கிற
அடையாளத்திற்குள் கொண்டுவரமாட்டார்கள் . அந்த அளவிற்கான அதிகார
துஷ்பரயோகம் செய்திருக்கிறார் ஜெயா அவர்கள் என்பதுதான் உண்மையாக
இருக்கிறது. இனமான பெண்கள் சற்றே சிந்தித்து செயல்படுதல் காலச்
சிறந்ததாகும், எதையும் நம்பி ஏற்று பின் அதன் பின்விளைவுகளை
அனுபவித்தபின் பாதுகாப்பிற்கு புகலிடம் தேடுவதில் எந்தவித பலனுமில்லை,
பெண்கள் இனம் ஜெயாவை உயிருக்கும் மேலான உயரத்தில் வைத்திருக்கிறார்கள்
அது மிகவும் ஆபத்தான ஒன்று. ஜெயா எட்டி உதைத்தால் அவ்வளவு
உயரத்திலிருந்து கிழே விழும் பெண்கள் இனம் நிச்சயமாக திரும்ப
எழுந்திருக்கவே முடியாதென்பதே உண்மை. உங்களுக்கு தெரியுமா?
யாரை நீங்கள் உள்ளத்திலும்,உயிரிலு­ம் ஓர் மிகச் சிறந்த ஆளுமையாக
கற்பனைகளை கொண்டிருக்கிறீர்களோ அவரின் கோரமுகத்தை,,,
"ரீட்டா மேரி" எனும் அப்பாவி தமிழ்ப்பெண்ணின் மீது பொய் வழக்கு போட்டு
சிறையிலேயே காவல்துறையாலும்,சிறை­க்காவலர்களாலும் கற்பழிக்கப்பட்டு
அவளின் வாழ்க்கையை சீரழித்தது அதே ஆளுமை எனும் அடையாள அதிமுக அரசு
காலத்தில்தான்,,,
மூன்று பழங்குடி இனத்துப் பெண்களை வலுக்கட்டாயமாக அவர்களின்
இருப்பிடத்திற்கே சென்று இழுத்துவந்து பொய் வழக்கு போட்டு மூன்று
பழங்குடி பெண்களையும் (ஒருவர் நிறைமாத கர்ப்பிணி) கற்பழித்து குப்பையில்
விசி எறிந்தது காவல்துறை, இதுவும் அதே ஆளுமை எனும் அடையாள அதிமுக அரசு
காலத்தில்தான்,,,
மூன்று மருத்துவக்கல்லூரி மாணவிகளின் உயிரை குடித்து கல்வியை
வியாபாரமாகவும், விபச்சாரமாகவும் மாற்றியது அதே ஆளுமை எனும் அடையாள
அதிமுக அரசு காலத்தில்தான்,,,
இம்மூன்று சம்பவங்களும் விழுப்பரம் மாவட்ட எல்லைக்குள் நிகழ்த்தப்பட்டது
, இவ்வாறு ஒவ்வொரு மாவட்டமாக பெண்கள் இனம் அலசி ஆராய்ந்தால் ஜெயா அரசின்
ஆதிக்க அதிகாரம் வெட்ட வெளிச்சத்திற்கு வரும், இதன் மூலம் மற்ற அரசியல்
கட்சிகளை நியாயப்படுத்துவதாக எண்ணம் கொண்டிருக்க கூடாது, அது
கருத்தியலையே மாற்றிவிடும், தெளிவாக தேர்ந்தெடுங்கள் தங்களுக்கான ஆகச்
சிறந்த உண்மை ஆளுமைகளை, என்பதே கருத்தியலின் உண்மை நோக்கமாகும். நானும்
பெண்,ஜெயாவும் பெண் அதனால் வாக்களிக்கிறோம் ஜெயாவிற்கு,,, என்றில்லாமல்
உண்மையான சமூகப் பெண் போராளிகளை அடையாளப்படுத்த வேண்டிய கடமை பெண்கள்
இனத்திற்கு இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய காலக் கட்டாயத்திற்குள்
அவர்கள் இருக்கிறார்கள். சாதி,மத பேதங்களை உடைத்துக்கொண்டு சமூக அவலங்களை
முன்னின்று எதிர்த்து போராடும் பெண்ணியமும் அதற்கான வாக்கு வங்கியை
கொடுத்து அப்படிபட்டவர்களை அதிகாரத்தில் அமர வைக்கும் பணியை பெண்கள்
சமூகம் செய்தால் உண்மையில் ஜெயா அவர்களே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு
தாமாகவே குற்றவாளிக் கூண்டில் ஏறுவார் என்பதை யாராலும் மறுக்கவும்
முடியாது , இதனை பெண்கள் இனம் சிந்திக்க வேண்டும்.

4 comments:

  1. ஏன் கூடாதேன்பதற்கு பெண் என்பதையும் தாண்டி பல இருக்கிறது...அருமை.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete
  3. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...