ஏகாதிபத்தியம் எப்போதும் தீயச்செயல்கள் செய்கிறதாகையால் அது
நெடுங்காலமாய் நிலைக்காது . அது எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும்
மக்களுக்கு எதிராகவே நிற்கும் பிற்போக்காளர்களை வளர்ப்பதிலும்,
ஆதரிப்பதிலும் விடாப்பிடியாகவே நிற்கும். அந்த ஏகாதிபத்தியமானது பல
காலனிகளையும், அரைக் காலனிகளையும் , பல ராணுவ தளங்களையும் கெட்டியாகவும்
பலவந்தமாகவும் பிடித்துள்ளது. அது சமாதானத்தை , சமத்துவத்தை விரும்பும்
சோஷியலிஸத்தை கம்யூனிஸத்தை அணு யுத்தத்தால் அச்சுறுத்துகிறது. இவ்வாறாக
ஏகாதிபத்தியத்தினால் நிர்பந்திக்கப்பட்ட உலக மக்கள் அனைவரும் நமது
சோஷியலிஸ சீனாவும், ஏகாதிபத்தியத்திற்கெதிராக போராட்டத்தில் எழுச்சி
பெறுகின்றனர் (அ) பெற்றுக்கொண்டிருக்கின்றனர் . ஆயினும்
ஏகாதிபத்தியமானது இன்னும் ஆசிய நாடுகளிலும், மற்ற உலக நாடுகளிலும்
தறிகெட்டு அட்டகாசம் செய்வதை பல நிகழ்வுகள் மூலம் நாமும்
சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். அதன் தலைமை பீட அமெரிக்காவையும்
அது விட்டுவைக்கவில்லை . இந்த நிலைமை மாற வேண்டும். மாற்றத்தை நோக்கி
கம்யூனிஸ பாதையில் நம் நகர்வு இருக்க வேண்டும். ஏகாதிபத்திய முதலாளித்துவ
ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் முடிவு கட்டுவது அனைத்து மனித
சமுதாய மக்களின் ஆகச் சிறந்த பணியாகும். ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
அடிமைபடுத்தும் புத்திக்கு எதிராக கிளர்ந்தெழுபவர்களை ஏகாதிபத்தியம் பல
வகையான சதித் திட்டங்கள் கொண்டு அணு குண்டுகளையும்,ஜலவாயுக்
குண்டுகளையும் , போர்முனை துப்பாக்கிகள் கொண்டும் பிரயோகப்படுத்தினாலும்
சோஷியலிஸ கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் துவண்டு விழக்கூடாது. துவண்டு
போகும் அளவிற்கும் சோஷியலிஸ கம்யூனிஸம் பலகீனமாதுமில்லை. உலகத் தொழிலாளர்
வர்க்கச் சுரண்டலை மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து பொங்கிப்
பாயும் சீற்றத்தை ஒரு மலை முகட்டிலிருந்து மறைந்து பார்த்துக்
கொண்டிருக்கும் "பிற்போக்காளர்கள்" எனும் காகிதப் புலிகளின் பார்வையால்
புரட்சியின் உண்மைகள் மக்களிடையே தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏகபோக
முதலாளித்துவ கோஷ்டிகள் தங்கள் ஆக்கிரமிப்பு , யுத்தக் கொள்கைகளை
திணிப்பதில் பிடிவாதமாக இருந்ததால் அவர்கள் உலகின் அனைத்து மக்களால்
தூக்கிலப்படும் நாள் வந்தே தீரும். நாமதை நெருங்கியும் விட்டோம் .
அதற்கிடையில் இந்த பிற்போக்காளர்களும் சிக்கிக்கொண்டு சீரழிந்து செத்துப்
போவார்கள். ஏகாதிபத்திய முதலாளித்துவ குணங்களை நல்லதாகவும், அது
பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததெனவும் உலக மக்களை நம்ப வைக்கும் தகவல்
பரப்புரை புரியும் எல்ல பிற்போக்காளர்களும் வெறும் காகிதப் புலிகளாகவே
அடையாளப்படுத்தப்படுவர். அவைகள் சீறிப்பாய்வதில்லை, சினங்கொண்ட சோஷியலிஸ
கம்யூனிஸ புரட்சியை விரும்பியதுமில்லை. அவைகள் (பிற்போக்காளர்கள்)
உண்மையில் சக்தி மிக்கவர்கள் அல்ல, அவைகளுக்கு அவ்வப்போது வீசப்படும் மத
, இன , கறித்துண்டுகளே போதுமானதாய் இருக்கிறது . நீண்டகால வரலாற்றுக்
கண்ணோட்டத்தில் பார்த்தால் ஆகப் பெரும் சக்தி மிக்கவர்களாகவும்
முதலாளித்துவர்களாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த பிற்போக்காளர்கள்
மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்
சக்திகொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த மக்களிடத்தில் சகோதரத்துவம்,
சமத்துவம், சோஷியலிஸ கம்யூனிஸம் மட்டுமே பெரும் விருப்பமாக இருக்கிறது.
தங்கள் விருப்பக் கனவுகளை அவர்கள் நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அக்கனவின் ஏக்கங்களை அவர்கள் (மக்கள்) பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷப் பாம்பின் இரட்டை நாக்குகளை போன்று பிற்போக்காளர்கள் செயல்படுவதை மக்களும்
கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த இரட்டை இயல்புகளை
பிற்போக்காளர்கள் தங்கள் தொழிலாகவே செய்துக்கொண்டிருக்கிறார்கள்
முக்கியமாக தொழிற்நுட்ப முறையால் தங்களை செம்மைபடுத்திக் கொண்டு அதன்
மூலமே அவைகள் மக்களிடத்தில் பொய்களை பரப்புகின்றன. ஏகாதிபத்திய
முதலாளித்துவம் அரசு அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு முன்னும் அதன் பின்னும்
, நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள், முதலாளிய வர்க்கம் ஆகியவை
தீவிரமிக்கவையாகவும், புரட்சிகரமானவையாகவும் முற்போக்கானவையாகவும்
தங்களை காட்டிக்கொண்டு உண்மைப் புலிகளை போல இருந்தன. ஆனால் கால கதியால்
இவற்றின் எதிரிடைகளான அடிமைத் தொழிலாளர் வர்க்கம் , விவசாய வர்க்கம் ,
தொழிலாளர் வர்க்கம் ஆகியன படிப்படியாக பலம் பெற்று வளர்ந்து அவ்வுண்மை
புலிகளின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் காட்டியதன் விளைவாக காகிதப்
புலிகளாக அவைகள் இருக்க எதற்கு உண்மைப் புலி முகங்களென தெளிவுபடுத்தியது.
இதனால் ஆளும் வர்க்கம் படிப்படியாக நேரெதிர் தன்மையான "பிற்போக்கு" எனும்
அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொள்ளும் தேவைக்கு தள்ளப்பட்டது.
அவைகள் மக்களால் வீழ்த்தப்பட்டும் விரட்டியடிக்கப்பட்டும் நடந்து
கொண்டிருக்கிறது, இனிமேலும் நடக்கும். அதிதீவிர பிற்போக்காளர்கள்
பெரும்பாலும் சோஷியலிஸ கம்யூனிஸத்திற்கு எதிராக ஆசை வார்த்தைகளையும்,
வெற்று கோட்பாடுகளையும் கட்டவிழ்த்துவிட்டு தங்கள் ஜீவ மரணம் நிகழ்கின்ற
வரையில் சதிவேலைகளையே முகங் கொண்டிருக்கும் . இவ்வாறான பிற்போக்கு
காகிதப் புலிகளின் முற்போக்கு வேஷத்தையும் இரட்டை இயல்பு போக்கையும்
தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் புரட்சி போராட்டங்களை பொசுக்கும் பணியில்
முதலாளித்துவ கைக்கூலியாகவே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். சீனாவில்
ஏகாதியத்தியத்தினதும், நிலப்பிரபுத்துவத்தினதும், அதிகாரத்துவ
முதலாளித்துவத்தினதும் நின்ற பெரும் கொடுங்கொல் ஆட்சியை அழிப்பதற்கு சீன
மக்களுக்கு 1949 ம் ஆண்டின் வெற்றிக்கு முன் நூற்றாண்டு அடிமை வரலாறு
இருந்ததையும், பல உயிர்களை பறிகொடுத்தோம் என்பதையும் மறுக்க முடியாது.
அதன் காலதாமத , உயிரிழப்புகளுக்கு சதித்திட்டங்களை வகுத்ததில்
பெரும்பங்கு இந்த இரட்டை நாக்கு , காகிதப் புலிகளான
பிற்போக்காளர்களுக்கு உண்டென்பது வரலாற்று உண்மை. "கல்லைத் தூக்கி
கடைசியில் தன் கால்களிலேயே போட்டுக் கொள்வது" என்பது பிற்போக்கு
மூடர்களின் செய்கைகளை வர்ணிக்கும் ஒரு சீன முதுமொழி. எல்லா நாடுகளினதும்
பிற்போக்காளர்கள் இந்த வகைகளினான மூடர்களே! என்றுமே இறுதி ஆராய்வில்
அவர்கள் புரட்சிகர மக்களை கொடுமைபடுத்துவது,மக்களின் புரட்சிகளை
துரிதப்படுத்தவிடாமல் தடுப்பது, போன கொடுஞ்செயல்களே மிஞ்சியிருக்கும்.
புரட்சிகர மக்களை ருஷ்ய ஜாரும்,சியாங் கே ஷெக்கும் இந்த வகையிலாற்றிய
பிற்போக்கு முதலாளித்துவ பணி முறைதானே! சர்வதேச நிலைமை இப்போது ஒரு புதிய
திருப்புமுனையை அடைந்துள்ளது என்பது எனது அபிப்ராயம். இன்று உலகில்
கீழைக் காற்றும், மேலைக் காற்றும் உள்ளன. ஒன்றில் கீழைக் காற்று மேலைக்
காற்றை மிஞ்சி வீசும், அல்லது மேலைக் காற்று கீழைக் காற்றை மிஞ்சி
வீசும், என்றொரு சீன பழமொழிக்கேற்ப கீழைக் காற்று மிஞ்சி வீசத்
தொடங்கியிருப்பதை நான் காண்கிறேன். வேறு விதமாக கூறினால் சோஷியலிஸ
சக்திகள் ஏகாதிபத்திய சக்திகளை விடப் பெருமளவு பலத்தால் உயர்ந்து
நிற்கிறது. இனி உயரும்,,, கம்யூனிஸம் தன் தன்பயணத்தை இடைவிடாமல்
தொடர்ந்து மேற்கொள்ளும். என்பதை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
- மாவோ (மா சே துங்)
0 comments:
Post a Comment