
என் மௌனங்கள் மென்று தின்னுகிறது வார்த்தைகளை அதற்கு பெயரிடுகிறாய் சம்மதமென்று அமைதியாய் இருந்துவிட்ட காரணத்தால் எனது ஆசாபாசங்களை தொலைத்துவிட்டு தவிக்கிறேன் எவ்வாறாயினும் காகிதமொன்றில் மௌனம் தின்று போட்ட எச்சங்களை எழுத்தாக்கி கடிதமொன்றை வரைகிறேன் எனது கைகளுக்காவது தெம்பிருக்குமா அதை உன்னிடத்தில் தருவிக்கவென்று தெரியாதெனக்கு வலிக்கத்தான் செய்கிறதென் இயலாமையும் தயக்கங்களும் இறுதியில் கோழைத்தனமாய் உன்னை மணமுடிக்கிறேன் மனதை கல்லாக்கி கசக்கத்தானே செய்யும்...