Thursday, August 02, 2018

பென்சில் மீன்


சிறு பொறி தட்டும்
சூடேறிய மனதிற்குள்
சூழ்ச்சமங்களை அவிழ்த்துவிட்டு
வீசும் காற்றில் சில்லென்ற...
நதியின் சாரலில் கடந்து
சிலிர்த்தெழும்  அலைகளினூடே
உட்புகுந்து பாதி இரவினை
பல வர்ணங்களால் தீட்டி
மீதி இரவினை உடற்சூட்டால்
தகர்த்து
ஆதி பிறப்பிடம் தேடி
அலையும்
யாரோ ஒருவன் வரைந்துவிட்டுப் போன
பென்சில் மீன் நான்...
சுவாசித்தலுக்கு அவன்
செவுல்களை தீட்ட
மறந்தான்...மறுத்தான்...
சிலுவையில் அறைந்துவிட்டதொரு
உணர்வு...
மீண்டு(ம்) வந்து
கிராபைட் கறுப்பில் கோடிட்டேனும்
சிலுவையில் இருந்தென்னை
மீட்டுவிடு ஒரு மீட்பராய்...
வலைவிரித்தோ
தூண்டிலிட்டோ...
நதியோர காத்திருப்பில்
உனைத் தேடி வந்து
சரணடைவேன்...
ஒரு உயிர்பெற்ற அதே
பென்சில் மீனாக...



2 comments:

  1. ஆஹா அருமையான வரிகள்

    ReplyDelete
  2. மகிழ்ச்சி

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...