Monday, December 31, 2018

கௌசல்யா -சக்தி இதற்கு விளக்கம் கொடுக்காதது ஏன்?

இவையெல்லாம் சட்டப்படி நியாயமில்லாதது , ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையமோ நீதிமன்றதையோ நாடவில்லை என்பது வியப்பாக உள்ளது...கொளத்தூர் மணி அவர்களும் தியாகு அவர்களும் செய்திருப்பது பச்சையான கட்ட பஞ்சாயத்து...முன்னதாக வந்த செய்தி..தியாகு -- கொளத்தூர் மணி அறிக்கைசக்தி- கவுசல்யா தொடர்பாக…1)   சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்தகுற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள்,எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய...

Saturday, December 29, 2018

உலா வரும் தேனீக்கள்

தேனீக்கள் உலாவும் இடத்தில்பூக்களின் நாடித் துடிப்புளை தொட்டு பார்க்கும் மழைச்சாரல்இலைகளின் அசைவுகளில் இனம்புரியாத ஒருபாடல் ...யாரை கேட்டு இசைக்கிறது இந்த காற்று...யாரை கேட்க வேண்டும் நான் இசைக்க மறு பேச்சு....சில்லிட்டு... துள்ளல் கொண்டு... துடித்து... ஆர்ப்பரிக்கும்பருவ மோகனத்தில்இன்னும் இன்னும்தேனை தந்துவிட்டு தாய் மண்ணை முத்தமிடுகிறது அதே  பூஞ்செடியின் வேர்கள்...

Friday, December 28, 2018

மழைக் குருவி

மானுடத்தை கொஞ்சும்ஒரு மழைக்குருவியின்கண்களில் கசியும் மௌனம் காணாதுதிடீரென முளைத்திடும்மின்னலொளி பிசுபிசுப்பில்கீச்சிடும்குரல்களினூடேவெளியேறும் பதற்றத்தை போலொரு காதல்உனக்கும் எனக்கும்....

இந்துமத சாதிகள் அதிர்வுகள்

இந்தியாவில் நிலவும் சாதிய அடுக்குகளில் ஒவ்வொன்றிலும் விஷம் பரவியிருக்கிறது என்பதுதான் உண்மை. இங்கு  ஹிந்து மதம்  மனுசாஸ்த்திர வர்ணாசிரம அடிப்படையில் நால்வர்ணம் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்திய சாதிய அமைப்பு முறைகளில் எந்தவிதமான மாறுதலுமின்றி மூவாயிரம் (தோராயமாக) ஆண்டுகளுக்கு மேலாக   மக்களை அடிமைபடுத்துவதில் இன்று வரையில் தொடர்ந்துகொண்டே செல்கிறதெனில், அது ஒரேயொரு அழுத்தமான மதக்கொள்கையில் மட்டுமே... அது... "தனக்கு கீழாக ஒரு அடிமை...

Thursday, December 06, 2018

அம்பேத்கர் நினைவு தினம்

யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்...அமைதி மதமெனஅஹிம்சை  கொண்டவனைஅப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்....ஆண்டாண்டு கால அடிமை சமூகத்தைநீ அடிமையென அவர்களுக்கே உணரச் செய்தவன்‌...முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி எனும் புனைவுகளுக்குமத்தியில்,அரசமைப்புச் சட்டமெனும் பெருந் தேரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாய் தன்னையே தேராக்கியவன்....விடவில்லை , வீழ்ந்துவிடவுமில்லைமதவாதமோ, சாதியவாதமோ...என் தேரை இழுத்து தெருவில் விடுமானால்அதை தீயிலிட தயங்க...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...