
நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக துளிர்விட செய்கிறவள்(ன்)
நீ ...
சொட்டும் நீரிதழ் ததும்பும்
முத்த ஏக்கங்களை குழைத்து
என் மேல் பூசும் வாஞ்சையுடன்
உதித்துவிடும் " இச் "
சப்தங்களின் ஊடே
நீரிதழை ஆழ் மனதிற்குள் ஒளித்து வைக்கிறாய் ...
நீ என்னை நேசிப்பதும்
நானுன்னை நேசிப்பதும் தயக்கமின்றி இலகுவாக அடையாளங் கண்டு நயத்தோடு நெளியும் அழகியலின் ஊற்றாக...