ஈழத்தமிழ் அகதிகளை அ(ழி)ழைக்காதீர்கள்
தமிழகம் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தாயின் பிள்ளைகளை பிடுங்கும்
நடவடிக்கைகளை ஆளும் பிஜெபி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது இதற்கான
அமைச்சக செயற்குழு கூட்டத்தையும் அது கூட்டியுள்ளது . இந்த நடவடிக்கையினை
கைவிடக்கோரி தமிழக ஆளும் அ.தி.மு.க அரசு
கடிதம் எழுதியும் அதை கொஞ்சம் கூட மதியாமல் நடிவடிக்கையினை
கைவிடப்போவதில்லையென ஆளும் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலின்
ஆட்சிமாற்றத்தில் புதிய அதிபராக மைத்ரிபாலா சிறிசேனா பதவியேற்றது காரணம்.
ஏற்கனவே ஆட்சிசெய்த ராஜபக்ஷேவிற்கும் இவருக்கும் ஒன்றும் வித்தியசமில்லை
இருவருமே ஈழத்தின் தனிநாடு கோரிக்கைக்கு எதிரானவர்கள் என்பதில் ஐயமில்லை
. ஏற்கனவே 1995ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து திருப்பி அழைத்துச்
செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளை வவுனியாவில் இருக்கும்
சிதம்பரபுரம் என்ற இடத்தில் முகாம்களில் தங்கவைத்தார்கள் அவர்களின் நிலை
,பெற்ற வாழ்வாதாரம் இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழக அகதிகளை
விட மிக மோசமான நிலையிலே தான் அவர்கள் வாழ்வினை தொலைத்துள்ளார்கள் .
இன்னும் உயிரோடு உள்ளார்களா என்ற கேள்வியே நம்மில் எழுகிறது. இதற்கிடையே
புதிதாக ஆட்சி அமைத்தவர்கள் புலம்பெயர் நாடுகளில் செயல்படும் ஈழத் தமிழர்
இலக்கியம் மற்றும் அரசியல் அமைப்புகளின் மீது இராஜபக்சே விதித்த தடைகள்
தொடரும் என்று மைத்ரிபாலா தெரிவித்திருக்கிறார். மேலும் ராஜபக்ஷேவால்
கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ முகாம்களையும் ராணுவ ஆக்ரமிப்புகளையும்
புதிய இலங்கை ஆட்சி அகற்றியாதாக தெரியவில்லை, ஈழத்தமிழர்களுக்கான
எந்தவொரு அடிப்படை வசதிகளையும் அவ்வாட்சி செய்ததாக தெளிவுபடுத்தவில்லை
.இந்தியா_ இலங்கை ஒப்பந்த சட்ட நிபந்தனைகளை புதிய ஆட்சி ஏற்றதாகவும்
எங்கும் காணப்பட்டவில்லை. இவ்வாறான சூழலில் தமிழத்தில் பல்வேறு முகாம்
இடங்களில் தங்கவைத்திருக்கும் சுமார் ஒரு லட்சம் ஈழ அகதிகளை இலங்கைக்கு
திருப்பி அனுப்புவதில் பல்வேறு ஆபத்துச் சூழல்கள் ஏற்படும் என்பதை தமிழக
மக்கள் அறிந்து ஈழமக்களுக்காக ஒருமித்த குரலோடு தங்களை எதிர்ப்பினை
தெரிவிக்க கடமைபட்டுள்ளோம் . ஏற்கனவே 2009 இறுதிகட்ட போரின் போது ஒன்றரை
லட்சம் தமீழீழச் சொந்தங்களை தொலைத்து நிற்கின்றோம் என்பதை ஒவ்வொரு
தமிழனும் மறந்துவிடக் கூடாது.

0 comments:
Post a Comment