Tuesday, February 10, 2015

(AAP)டில்லிக்கு ராஜானாலும் கொடுத்த வாக்கை தட்டாதே!

தற்போதைய நிலவரப்படி டெல்லியில் தனிப்பெரும்பான்மை பெற்று கெஞ்ரிவாலின்
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கப்போவதாக தெரிகிறது இது அவருக்கான இரண்டாவது
வாய்ப்பு இவ்வாய்ப்பினை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரின்
விருப்பமாகும் . சென்ற ஆண்டில் ஐந்து மாத இடைவெளியில் அவர் செய்த தவறுகளை
திருத்திக்கொள்ள வேண்டும் . டெல்லியில் ஆட்சியை நிர்ணயிப்பது தலித்
வாக்குகள் ஆகும் . திரு கெஞ்ரிவால் இதனை நன்குணர்ந்து அம்மக்களின்
அடிப்படைத் தேவைகள் மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகளை உறுதி செய்திட
வேண்டும் . இந்தியாவின் முதல் பெண் IPS என்ற பெருமையை தனதாக்கி அதனை
இந்துத்துவத்திற்கு விற்ற கிரண்பேடி அம்மையார் தனது தோல்வியின் மூலம்
இத்தவறான செயலை உணர்ந்திருப்பார் என நம்புவோம் ,அமீத்ஷா ,மோடி
கூட்டமைப்பு இந்தியாவின் RSS யின் இந்துத்துவ விதைகள் என்பதை டெல்லி
மக்கள் உணர்த்தியிருக்கிறார்­கள் . BJP யின் மோடி அலையென்று ஒன்று
இந்தியாவில் இல்லையென்பதும் ஆட்சியலமர்ந்த ஏழரை மாதங்களில் மக்களின்
மனநிலையில் BJP அதிருப்தி அடைந்திருக்கிறதென்பத­ும் இதன் மூலம்
தெளிவுபடுகிறது . வெறும் புகைப்பட தூய்மை இந்தியா திட்டத்திற்கும்
அவசியம் துடைப்பம் தேவைப்படுகிறது என்பதை அச்சிண்ணத்தின் உரிமையாளரும்
ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கெஞ்ரிவால் உணர்த்தியிருக்கிறார்­ .
மீண்டும் ஒரு முறை அர்விந் கெஞ்ரிவால் இவ்வாய்ப்பினை மிகச்சிறந்த
முறையில் பயன்படுத்த வேண்டும் அதை மீறி காங்ரஸ் பிஜெபி யை போலத்தான் ஆம்
ஆத்மியும் என்று அவர் நினைத்தாரெனில் அதற்கடுத்த மக்களின் கடும்
நடவடிக்கைகளுக்கு ஆளாவார். இதன் மூலம் தமிழகத்தில் வருகின்ற 2016 சட்ட
மன்ற தேர்தலில் மாற்றம் ஏதேனும் நிகழக்கூடும் மேலும் தற்போதைய ஸ்ரீரங்க
இடைத்தேர்தலிலும் BJP யின் கூட்டணியானது மாற்றியமையும் என பல அரசியல்
விமர்சகர்கள் தெரிவித்தாலும் டெல்லியிலெழும் மாற்றம் தமிழுக்கு
பொருந்துமா என்றால் . பெருந்தாது என்பதே எண்ணத் தோன்றுகிறது . ஏனெனில்
தமிழக மாநிலங்களவை தேர்தலில் அணுவுலை போராட்டத் தலைவர் சுப உதயகுமாரும் ,
சட்டசபை இடைத்தேர்தலில் அரசியல் விமர்சகர் ஞானியும் அடைந்த படுதோல்வியும்
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்பில்லை என்றச் சூழலை உறுவாக்கி
வைத்த வடுக்களாக இருக்கிறது . எப்படியானாலும் அர்விந் கெஞ்ரிவால்
அவர்களுக்கு வாழ்த்துக்கள் . அடுத்த நகர்வு 2016 தமிழக சட்டப்பேரவை
தேர்தலை நோக்கி,,,

0 comments:

Post a Comment

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...