முன்னாள் முதல்வரும்
இன்றைய குற்றவாளியுமான அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும்
ஆட்சி அரியணையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற
வேண்டுதலில் சிலுவையில் தன்னைத்தானே அறைந்திருக்கிறார் அந்த அதிமுக தொண்டன் ஹூசைனி
இந்துத்துவத்தில் படிந்திருக்கும் மூடநம்பிக்கைக்கு நிகரான நாங்களும்
இருக்கின்றோம் என்று சவால் விடுகிறது அவரை சுமந்திருந்த சிலுவை
அன்று ஒரு சரித்திர புரட்சிக்கான விதையாக அமைந்திருந்த அந்தச் சிலுவை
இன்று பல தரித்திரங்களின் கையில் சிக்கி
சின்னாபின்னாமாகிக்கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியாக இச்சம்பவத்தை
எடுத்துக்கொள்ளலாம்
ஏற்கனவே இந்துவமயமாகிப்போன
அதிமுகவின் அழகான அடிமைத் தொண்டர்கள் எடுத்த காவடி முதல் மண்சாதம்
வரையில் மறந்துவிடாது இந்த மனம் அவ்வளவு பெரிய பெரும்பான்மை முட்டாள்களை
வாக்களித்து வக்காளத்து வாங்கி வெற்றிபெறச்செய்தது
நாம்தானே
அதனால் அவர்களை வேடிக்கைப்பார்த்தே
பழகிப்போயிருந்தது
தமிழ்மண்ணிற்கு
புதிதொன்றுமில்லை
அந்த வகையில் இன்றைய ஹூசைனி யின் அதிமுக வின் அடிமைகளாக சிறுபான்மை
கிரிஸ்த்துவர்களும் கயிறாக பிணைந்துள்ளனர் என்பது தெளிவு ஏற்கனவே மாதா
எனும் தொலைக்காட்சி பரிசுத்த ஆவியானவரே என்றழைப்பதற்குப் பதில்
பரிசுத்த அம்மா அவர்களே என்று புகழ்பாடும் வேடிக்கையும் இங்கே
நடந்துக்கொண்டிக்கத்தான் செய்கிறது.
பொதுவாகவே என் கழுத்திலொரு சிலுவை
தொங்கவிடப்பட்டிருப்பேன் . இது இவன் கிருஸ்த்துவ மதத்தான் என்பதை
பறைசாற்றும் விதத்தில்லை . ஏனெனில் மார்க்ஸியமும் பெரியாரிஸமும் போதித்த
கடவுள் மறுப்பினை உள்வாங்கி கொண்டிருக்கிறேன். இருந்தும் இச்சிலுவை
உறுத்தவில்லையா என கேட்கலாம் . உறுத்தவில்லை உங்களின் பார்வையில் அது
கிருஸ்த்துவ அடையாளம் எனது பார்வையில் அதுவொரு கொலைக்கருவி.
நியூட்டனின் ஆப்பிள் வித்தையை அப்படியே உள்வாங்கிக்கொண்டது சிலுவைக்
நிகராக வேறெதையும் சொல்லிவிட முடியாது மனத இனத்தில் ஆர்ப்பரிய அழிவிற்கு
ஆதாராமாய் அவன் கண்டுபிடித்த சக்கரத்தை விட சாதனையை சுமக்கிறது இந்த
சிலுவையெனும் கொலைக்கருவி
உலகில் கொடுமையான கொலைக்கருவிகளில்
முதலிடம் பெற்றிருப்பது இச்சிலுவையெனும்
கொலைக்கருவிதான்
காரணம் இயற்கையின்
புவியீர்ப்பு விசையினை அப்படியே உள்வாங்கி
ஆளைக்கொல்லும் அனிச்சை செயலை சிலுவையைத் தவிர வேறெந்த கொலைகருவியும்
செய்துவிடவில்லை
இப்படியான மனித படைப்பில் கடவுளை போதித்த கடவுளாக்கப்பட்ட இயேசுவிற்கே
மனிதளித்த தண்டனையில் அவனால் தயாரிக்கப்பட்ட கொலைகருவிக்கு ஒரு இடம்
ஒதுக்கியே
வைத்திருக்க வேண்டும்
கடவுளை போதித்த கடவுளாக்கப்பட்ட தூதுவனான இயேசுவின்
தேவன்தானே அந்த
சிலுவையை உறுவாக்கும் சக்தியை மனிதனுக்கு கொடுத்திருப்பான் அப்படியிருக்க
அவனெப்படி கடவுளானான் . அதே கடவுள்தானே சாத்தானை படைத்திருக்கிரான்
சாத்தானின் குணநலன்களை உள்வாங்கி அச்சாத்தனையே உலகிற்கு அர்ப்பணித்த
அவனெப்படி கடவுள் அவனும் சாத்தான் வகையில் இரண்டறக்கலப்பவன் தானே
எனும் கேள்விகளை பறைசாற்றும் விதமாக என் கழுத்தில் எப்போதும் அச்சிலுவையை
தொங்கவிட்டிருப்பேன் .
இப்போது விட்ட இடம்
தொடங்குகிறது அது ஹூசைனி க்கான இடம்
கராத்தே மாஸ்ட்டரென பெயர் வாங்கிய ஹூசைனி க்கு பகுத்தறிவில்லா பச்சை நரம்புகளெதற்கு
நிச்சயம் அச்சிலுவையிலேயே
சாகவேண்டியர்தான்
அவர் . வாக்குமூலம் வேறு வாந்தியெடுக்கிறது
"என்னுடைய மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கப்பதக்கம்
வாங்க வேண்டும் என்றால், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால்தான்
முடியும்" எப்படியான முட்டாள் தனமிது. திறமையிருந்தால்
அம்மாணவர்களனைவரும் சாதனையாளர்களே .ஒரு வேளை வாய்ப்பு
மறுக்கப்படுமேயானால் அது விளையாட்டுத்துறையை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும்
பூணூல் முதலாளிகளையேச் சாரும் . அந்த பூணுல் முதலாளிகளை நியமிப்பதே ஆளும்
அரசுதான் . என்ற அறவுகூட இல்லாத இவர்களால் தங்கப்பதக்கம் வென்றிட
முடியாது மாறாக தங்கப்ப தக்கம் தான் வாங்கிக்குவிப்பார்கள்.
முட்டாள்கள் இருக்கின்ற வரையில் முதலாளிகள் கொழுத்திருப்பார்கள் என்ற
சிந்தனைக்கெதிராக சிலுவையை பலியிட்டிருக்கிறார்கள் இவர்கள்.
முடிவினை எட்டும் போது முழுதாய் சொல்லிவிட வேண்டும்
ஒன்றைப்பற்றி , இந்த சிலுவையில் அறைவதற்காக காவல்துறையிடம் அனுமதி
வாங்கவில்லை அவர்களும் ஹூசைனி யை கைது செய்துவிட மாட்டார்கள் ஏனெனில்
ஆட்சியதிகாரம் அதிமுகவின் பலமாகிபோயிருக்கிறது சர்வாதிகாரம் எப்போது
சர்வாதிகாரத்தை கைது செய்திருக்கிறது . இன்னும் பல வேடிக்கைக்களை பார்த்த
படியை பழகிபோயிருக்கிறான்
தமிழன்.

//கடவுளை போதித்த கடவுளாக்கப்பட்ட தூதுவனான இயேசுவின் தேவன்தானே அந்த சிலுவையை உறுவாக்கும் சக்தியை மனிதனுக்கு கொடுத்திருப்பான் அப்படியிருக்க அவனெப்படி கடவுளானான் // Free will என்பதை கேள்விப்பட்டதில்லையா?
ReplyDelete//Free will என்பதை கேள்விப்பட்டதில்லையா? //
Deleteha .. ha ...!!!
he .. he .. he ...!!!
Deleteகுடல்
ReplyDeleteவேகும்
சிலுவையில்
குருதி ருசித்தானாம்
குரங்கு கூட்டப்
-படைவீரன்
http://dharumi.blogspot.in/2015/02/821.html
ReplyDeleteமனிதர்களின் முட்டாள்தனத்தை சாடும் பதிவாக எழுதியிருக்கலாம். அது நன்றாக இருந்திருக்கும். தேவையில்லாமல் சிலுவை பற்றி உங்களின் கருத்து வெளிப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. கொலைக்கருவி போன்ற சொற்கள் படு மலிவாக இருக்கின்றன. அதைவிட உலகின் முதன்மையான மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று கருதப்படும் சக்கரத்தையும் நீங்கள் அழிவுக் கருவியாக பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. சக்கரம் இல்லாவிட்டால் மனித நாகரீகமே வளர்ந்திருக்காது என்ற உண்மை நாத்திகம் பேசும் உங்களுக்குத் தெரியாதிருப்பது வினோதம்தான்.
ReplyDelete-------கடவுளை போதித்த கடவுளாக்கப்பட்ட தூதுவனான இயேசுவின் தேவன்தானே அந்த சிலுவையை உறுவாக்கும் சக்தியை மனிதனுக்கு கொடுத்திருப்பான் அப்படியிருக்க அவனெப்படி கடவுளானான் . அதே கடவுள்தானே சாத்தானை படைத்திருக்கிரான் சாத்தானின் குணநலன்களை உள்வாங்கி அச்சாத்தனையே உலகிற்கு அர்ப்பணித்த அவனெப்படி கடவுள் ----------
இது ஒரு குருட்டுக் கண்ணோட்டம்.தற்போதைய நாத்திகம் கூட இந்தக் கேள்வியை கேட்பதிலிருந்து தள்ளி நிற்கிறது. நாத்திகம் முன் வைக்கும் இதுபோன்ற கேள்விகள் இன்றைய தேதிக்கு படு குழந்தைத்தனமாக இருக்கின்றன. நானும் மத சங்கதிகளில் அக்கறை காட்டதவன்தான். ஆனால் இதுபோன்று கேட்கமாட்டேன்.
என்னையா பம்முகிறீர், நீங்கள் மதம் பீடித்து உழல்கிறீர்கள் என்பதை அறியாமல் பேசுகிறீர்களே, இதுவரை இந்த உலகத்தில் மதம் மனிதனுக்கு இடையூறு தவிர என்ன கொடுத்திருக்கிறது, இத்தனை மதங்கள் உள்ளன என்பதே அது கற்பனையாய் உண்டாக்கப்பட்டது என்பது உண்மையாகிறதே? இவைகள் உண்டென்றால் ஏன் நீங்கள் வக்காளத்து வாங்க வேண்டிய அளவு தாழ்ந்திருக்குமா?
Delete#கொலைக்கருவி போன்ற சொற்கள் படு மலிவாக இருக்கின்றன.
ReplyDeleteஇன்றையச் சூழலில் அதற்கான தேவை அதிகரித்துள்ளது இல்லையென்றால் தெரேசாவை தேசத்துரோகியென்று
இந்துத்துவவாதிகள்
சூளுரைத்திருக்க மாட்டார்கள் மேலும் ஒரு அரசன் மக்களுக்களிக்களிக்கும் அநீதிக்கு ஆதரவானது தான் சிலவையில் அறைவதென்பது. இயேசுவிற்கு முன்பே சிலுவையில் அறைந்தோர்களை கண்டிருந்தால் அதன் தன்மை அவர்களின் எண்ண ஓட்டத்தில் கொலைகருவியாகத்தானிருக்கும் .
#அதைவிட உலகின் முதன்மையான மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று கருதப்படும் சக்கரத்தையும் நீங்கள் அழிவுக் கருவியாக பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. சக்கரம் இல்லாவிட்டால் மனித நாகரீகமே வளர்ந்திருக்காது என்ற உண்மை நாத்திகம் பேசும் உங்களுக்குத் தெரியாதிருப்பது வினோதம்தான்.
--
#சக்கரம் இங்கே அழிவுக்கருவிக்கான உதாரணமாக காட்டப்படவில்லை (பதிவை நன்றாக படிக்கவும்) அவ்வளவு அறிவியல் கண்டுபிடிப்புக்குள்ளும் இப்படியொரு மூடத்தனம் அவ்வறிவியல் கண்டுபிடிப்பையே அழிக்கவல்லதெனும் பார்வையில் எழுதப்பட்டது .
#இது ஒரு குருட்டுக் கண்ணோட்டம்.தற்போதைய நாத்திகம் கூட இந்தக் கேள்வியை கேட்பதிலிருந்து தள்ளி நிற்கிறது. நாத்திகம் முன் வைக்கும் இதுபோன்ற கேள்விகள் இன்றைய தேதிக்கு படு குழந்தைத்தனமாக இருக்கின்றன.
"மதம் ஒரு அபின்" போன்றது என்கிறார் மார்க்ஸ் அவரின் கண்ணோட்டத்தில் முதலாளித்துவம் முதலெடுக்கும் ஆயுதமாக மதம் இருந்திருக்கிறது இங்கே மதத்தின் பெயரால் முதலாளித்துவ அதிமுக வின் ஆதரவினை கைபற்றும் நோக்கில் "ஒரு இந்துத்துவம் வெற்றியடைய சிறுபான்மையான கிருஸ்துவமும் மூஸ்லீமும் தான் எந்தளவிற்கு அடிமைபட்டுள்ளோம் என்பதை அறியாமல் அவர்களே தூக்கி பிடிக்கிறார்கள் இந்துவத்துவ முதலாளி வர்க்கத்தை
இதன் வீரீயம் அறியாதவர்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும் (ஹுசைனி முஸ்லீம்)
தோழர் தருமி அவர்களே உங்களின் பதிவை படித்தேன் . என்னுடைய பதிவு நீளமானதுதான் அதற்கான தேவையான எனக்கு தோன்றியது . ஏனெனில் ஆளும் அதிமுக முதலாளித்துவ சர்வாதிகார போக்கில் அடிமைகளாக திரியும் மக்களுக்கு அவசியமெனக் கருதினேன் இதுவும் சாதாரணமென்று என்னால் போகமுடியவில்லை ஜெ விற்காக பால்குடம் மண்சாதம் சாப்பிட்ட பட்டியலில் இவருமொருவர் அவர்களை கண்டிக்கும் அதே வீரியத்தை ஹுசைனீ மீதும் காண்பிக்க தோன்றியது எனக்கு (அவர் உங்களின் மாணவனாய் இருந்தாலும் கூட) free will என்கிற கோட்பாட்டளவு மார்க்ஸியத்தை பெரியாரிஸத்தை மிஞ்சியதாக ஒன்றுமில்லை அதைவிட அறிவுத்தனமானதொன்று இவையிரண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கடைகோடி ஒருவன் நான்
ReplyDeleteதற்போது வெளிவந்திருக்கிற தெரேசா தேசத்துரோகியெனும் பட்டத்திற்கும் Free will தான் காரணமாயிருக்குமென
ReplyDeleteகைகொட்டிச் சிரியுங்கள் ராபின் அவர்களே
தற்போது வெளிவந்திருக்கிற தெரேசா தேசத்துரோகியெனும் பட்டத்திற்கு மட்டுமல்ல தெரேசா ஏழைகளுக்கு உதவியதற்கும் Free will தான் காரணம். Free will என்று ஒன்று இல்லையென்றால் இயந்திர மனிதர்கள்போல இருப்போம்.
DeleteFree will பற்றி ஒரு கேள்வி :
Deletehttp://dharumi.blogspot.in/2005/09/53-2.html
தோழர் தருமி அவர்களுக்கு
ReplyDeleteஉங்கள் கட்டுரைத் தொடரை முழுவதுமாக படித்தேன் (முதல் போஸ்ட்டோட லிங்கிலிருந்தே தந்திருக்கலாம். மேலும் 7,8, காண்பிக்க மறுக்கிறது ஏனென்றே தெரியவில்லை ,அதனால் மனம் முழுதாய் படித்த திருப்தியை அடையவில்லை) பல்வேறு நூல்களை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் மிக ஆழமான அனுபவத்தின் வாயிலாக எழுந்த எழுத்துக்கள் அவையென்று உணர்த்தியிருந்தது . Free Will ற்கும் எனது மார்க்ஸிய, லெனினிய, பெரியாரிய சித்தாந்தத்திற்கும் அவ்வளவு பெரிய வேறுபாடுகளில்லை, என்றே எனக்குத் தோன்றுகிறது. பிறப்பால் இன்ன மதத்தினர் என்பதே திணிப்புதான் என்பது என் பார்வை. என் தாய்தந்தையர் செய்த தவறு அது என்றே நான் கருதுகிறேன் . உங்களின் கட்டுரைத் தொடரை படிக்கையில் பல்வேறு கேள்விகளும் மறுமொழிப்பும் எழுந்தது பதிலுரை எழுத மனமில்லை,ஏனெனில் 15 ஆண்டுகளாக 40ஆண்டுகளுக்கு மேல் சுமந்த ஓர் அனுபவத்தை அவ்வளவு எளிதாக விமர்சனமிடுதல் என்பது அனுபவத்தை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை நன்றாக உணர்ந்துள்ளேன் . அந்தத் கட்டுத்தொடரை வாசிக்க வைத்தமைக்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
http://dharumi.blogspot.in/2006/09/175-7.html
ReplyDeletehttp://dharumi.blogspot.in/2005/09/68-8.html -- 7&8 பதிவுகளின் தொடுப்புகள்.
//பல்வேறு கேள்விகளும் மறுமொழிப்பும் எழுந்தது பதிலுரை எழுத மனமில்லை,//
தாராளமாக எழுதுங்கள் - எக்கருத்தாயிருப்பினும்.
//40ஆண்டுகளுக்கு மேல் சுமந்த ஓர் அனுபவத்தை அவ்வளவு எளிதாக விமர்சனமிடுதல் ...// -- எவ்விதத்திலும் உங்கள் விம்ர்சனம் என்னை பாதிக்காது; மேலும் உரமிடும். கட்டாயமாக தாராளமாக உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
வரவேற்கிறேன்.