Friday, February 06, 2015

அண்ணாவின் இறுதி நாட்கள்

அண்ணாவின் இறுதி நாட்கள்;

தந்தை பெரியார் அவர்கள் தனது 90வது பிறந்த நாள் செய்தியில் தமக்குள்ள
உடல் நலமின்மையை சலிப்பும் சங்கமடமும் கொண்ட மனநிலையில் எழுதிய கட்டுரையை
அண்ணா அவர்கள் அமெரிக்க நியூயர்க் "டவுண்ஸ்டே" மருத்துவமனையில்
படித்தார். பெரியாரின் உருக்கமான கடிதத்தை கண்ட அண்ணா பதிலுரைப்பில்
கவிதை நடையில் தந்தனுப்பினார்.
" தங்கள்
பிறந்த நாள் மலரில்
தாங்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் மனச்சோர்வுடன் துறவியாகி விடுவேனோ
என்னவோ" என்ற எழுத்தைகண்டு
கவலை கொண்டேன்
தங்கள் பணி
மகத்தான விழிப்புணர்ச்சியை சமூகத்தில் கொடுத்திருக்கிறது புதியதோர் பாதை
மக்களுக்கு கிடைத்திருக்கிறது இத்தனை மகத்தான வெற்றி தமிழகம் கண்டிராது
ஆகவே
சலிப்போ
கவலையோ துளியும் கொள்ளத்தேவையில்லை,,,
என்பன போன்ற வரிகள் அடங்கியிருந்தது அமெரிக்காவிலிருந்து அண்ணா
திரும்பினார் நுங்கப்பாக்கம் அவின்யூ சாலையிலிருந்த அண்ணாவின் வீட்டில்
சந்தித்தார் பெரியார். பெரியாரிடம் அண்ணா சட்டையை கழற்றி அறுவைசிகிச்சை
செய்த பகுதிகளையும் தையல் போட்ட பகுதிகளையும் காட்டிய போது பெரியார்
தடவிக்கொடுத்து தழுதழுத்த குரலில் ஆறுதல் கூறினார். பிறகு காலம்
விடவில்லை மீண்டும் உடல் உழைப்பிற்கு உதவாத நிலையில் அடையாறு புற்றுநோய்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அண்ணா நேடியாக பெரியார்
கவனித்துக்கொண்டிருந்ததால் சில நாட்கள் கார் ஷெட்டினை சுத்தப்படுத்தி
பெரியாருக்கு அங்கேயே படுக்கை மற்றும் தங்கும் வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டது. அன்று ஜனவரி 30 அண்ணா உடல்நிலை மிகவும் சீர்கேடடைந்த
நிலையில் மீண்டும் அவர் உயிருக்கு போராடியிருந்தார் 1969 பிப்ரவரி 2ம்
நாள் சுமார் 12 மணியளவில் ஒரே கூச்சல் குழப்பம் அழுகை எல்லாம் அண்ணா
உயிர் நீத்தாரென்ற செய்தி மருத்துவமனை உறுதிசெய்து அறிவித்தது .இயலாத
சூழலில் சக்கர நாற்காலியில் பெரியார் அருகில் துயரமே வடிவான நிலையில்
அண்ணாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். கலைஞரும் , எம்ஜிஆரும்
மற்றவர்களும் வந்து "அய்யா உங்கள் தலைமகன் போய்விட்டாரே! யென்று
கதறினார்கள் ஆறுதல் மொழிச்சொல்ல பெரியாரின் கண்கள்
நீர்த்துளிகளிலிருந்தும் கூட மீளமுடியவில்லை
அந்த நிமிடங்களை மனதால் எண்ணிபார்க்கையில் தமிழகம் கண்ட தலைமகன்களில் ஒரு
பிள்ளையின் மரணத்திற்கு இந்த தமிழ்த்தாய் எப்படி துடித்திருப்பாள் என்ற
எண்ண வோட்டத்தில்
என்னையே மறந்து
அத்தமிழ்த்தாயோடு
பயணிக்க நேரிடுகிறது.

2 comments:

  1. BLOODY RAMASAMY BLOODY ANNA BOTH ARE CURSES OF TAMIL NADU

    ReplyDelete
  2. சந்தையெங்கும்
    எழுந்தன
    சப்தம்
    சாபமிட்டே
    சளைத்து போனது
    -புளியமரங்கள்

    ReplyDelete

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...