Thursday, February 05, 2015

கவிதை "விடைகொடு அப்பா"

குத்தும்
மீசையில்
குளிர்காய்ந்தேன்
நான்!

அன்னை
மடியிலிறங்கி
அன்னாந்து
வானம் பார்க்க
ஆசையாய்
தோளேணியில்
துள்ளியமர்ந்தேன்
நான்!

உந்தன்
தலைமுடிதான்
தவறிவிழாத
எந்தன் கைபிடி!

வானமளந்து
வரலாற்று
கதைகளில்
வயிற்றில்
உறங்கினேன்
நான்!

ஏறியிறங்கிய
மூச்சுக்காற்றில்
ஏகாந்த
வெளியில்
தாலாட்டாய்
தவழ்ந்தது
இரவு!

கரம்பிடுத்து
கம்பீர
நடைபோட்டு
கேள்விகள்
பல கேட்டு
பள்ளிச்சாலையை
பத்திரப்படுத்தினேன்
நான்!

பருவம் பூத்தது
எனக்கு
பூவுலகின்
புதுச்சதியல்லவா
அது!

உனக்கும்
எனக்குமான இடைவெளியை
இழுத்தே பிடித்தது
பாசக்கயிறு!

பேசவில்லை
நான்
அன்று முதல்
நாவிற்கு
அச்சுறுத்தியது
அருசுவை!

வளர்ந்த பிள்ளை
வாழ்வினை
தொலைத்து
நின்றேன்
அப்போதும்
இப்போதும்
என்னையே
நிந்தித்தாய்
தினம்
தூங்காமல்
சிந்தித்தாய்!

அவசர உலகமிது
அப்பா
அதில் ஆழ்நதிகள்
உறங்காதப்பா!

ஆண்டுகள்
கரைந்தோடின!

அச்சம்
தலைகாட்டியது
அழுகை
அவசரப்பட்டது!

படுக்கையில்
விழுந்தவுன்னை
பத்திரப்படுத்தி
பார்த்திருந்தேன்!

கனவிலும் கானாத
காட்சி
அது
காலத்தின்
வீழ்ச்சியும்
அது!
எப்படி எதிர்கொள்வேனோ!

எங்கும்
அழுகுரலை
சுமக்கும்
இந்த
பினவாடைக்
காற்று
எங்கே
தன் பாரத்தை
இறக்கி வைக்கும்?

அதோ
பறையிசையும்
பறந்தோடி
சுமந்து வந்த
பல்லக்கும்
பாதை
மறந்தோடி!

வீதியெங்கும்
விரிந்த
மலர்கள்
விழிமூடியே
உன்தன்
கல்லறையில்
வீழ்ந்து
துடிக்கிறது!

கடைசியாக
அவ்வாடை
காற்றோடு
வாடிநிற்கிறேன்
அப்பா
வழியனுப்பு!

கொல்லியேந்திய
பிள்ளையும்
குழந்தை சுமந்த
தகப்பானேன்!


ஆம் அப்பா
அடுத்த
தகப்பன்
நான்!

அழியாச்சுடறாய்
அனுதினமும்
எனக்காக
அலைந்து
தேய்ந்தாயே!

இதோ
உனக்காக
உன்னைப்போலவே
உயிரோட்டத்தில்
ஊமையாகிடாத
உண்மை
தந்தையாகவே
வாழ்ந்து
காட்டிடுவேன்
நானும்!

விடைகொடு
அப்பா!

வீழ்வது
மரமானாலும்
வளர்வது விதையாகட்டும்!

விடைகொடு
அப்பா!

0 comments:

Post a Comment

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...