Wednesday, February 11, 2015

கவிதை "தனிமை இரவு"

இரவில்
எப்போதும்
இமைகள்
மூட
மறுத்து
விடுகிறது

என்னவன்
நினைவோ
நதியிலாட
துடிக்கிறது
எந்தன் விழிகளில் வழிந்தோடும்
கண்ணீரும்
கனவு கான
துடிக்கிறது

எங்கே
தலையணை
எங்கே
தலையணை
தேடும் கைகளில்
தேளொன்று
கொட்டுகிறது

அப்போதைக்கு
ஆறுதல்
மொழி வீசி
காதலின் வலிகளை
கரம்பற்றி இழுக்க தலையணைதான் தாய்மடியாகிறது

அணைந்த விளக்கு
அமைதியான
சூழல்
எங்கும் பரவிய
நிழல்
கருமை நிறம்
கண்ணருகே
பயமுறுத்துகிறது

இதயத்தில்
இறங்கியவனே
இதழ்களில்
விளையாட
மலரிதழ்
சுவைகான
அருகினிலே
நீயில்லாத
நிலமையா
எனக்கு,,

இவ்வானம்
பனிதுளிகளை
பொழிய மறுத்து
கற்களை
வீசுவதுபோல காட்சியளிக்கிறது

இயன்ற வரை
இயல்பினை
அழைத்தையும்
காதல்
இயக்க விதிதான்
இயற்கையை
ரசிக்க மறுக்கிறது

என்ன சுகமோ!
என்ன வலியோ!
என்ன தனிமையோ!
காதலை
கவிஞன்
எழுதுகையில்
ரசிக்கத்தான்
தோன்றியது

அதை சுவாசிக்க நேரிடுகையில்
கசப்புதான்
மிஞ்சுகிறது

உள்ளத்தில்
உனை சுமந்த
இவ்வுடல்
வெளியிடும்
ஆக்ஸிஜன்
காற்று
அனலாகி
விடுகிறது
இந்த நாற்சுவரும்
நரக குழியில்
நடைபழக
அழைக்கிறது

காதலனே
கொல்லாதே
காற்றனலை
வீசாதே

இனியும்
இம்சைகளை
தாங்காது
இந்த மனம்
அது என்றுமே
வற்றிப் போன
காட்டாற்று
வரட்சி நிலம்,,,

0 comments:

Post a Comment

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...