Thursday, February 12, 2015

கவிதை "கொடு விடுதலை"

அமைதியை
நாடி
ஆமைநடை
போடுகிறது
அவனது
கால்கள்

ஒதுங்க ஓரிடம்
கிடைத்தது
அவன் மனதே
அவ்விடம்
வேண்டுமென
துடித்திருந்தது

எப்போதும் யாரும்
எவ்வித புகழ்
பெற்றிருந்தாலும்
பூமி கண்டெடுத்த
கடலன்னைக்கு
ஈடாகிடுமா

ஓராயிரம்
சுமைகளை
ஒருநொடியில்
தாங்கி ஒவ்வொரு
முறையும்
வானோங்கி
அடிக்கிறாள்
அலையாகி

யாருக்கும் தெரியாது
அவளழுகை
நிதர்சன
உண்மைகளை
தனக்குள்
புதைத்தே
வைத்திருந்த
அக்கடலன்னை
காலடியில்
தஞ்சம் புகுந்தான்

மணலை தின்னும்
மழலை
நீரோடும் தன் காதல் துணையோடும்
காதல் புரியும்
பருவ மங்கை
துள்ளியாடும்
மீன்களுக்கு
தூண்டிலிடும்
படகுகளின்
பார்வை
இப்படி சுமந்தே
சூன்யமான
இடம் அவ்விடமே
தனிமை
விரும்பியதால்
தனியாக எனக்கான
கால்தடம் மட்டும்
கயிற்றால் கட்டியிருந்தது

முதலெழுந்த குரலில்
தான் மூழுநிலவும்
கரைவதேனோ
ஆழியின்
விழுமியங்கள்
விழுந்தது

அவன் காதுகளில்
கடலன்னையின்
குரல்

ஏ! மனிதா யார் நீ? எங்கிருந்து வந்தாய்?
என்ன
இங்கே தனிமையில்?,,,
ஏதேனும் சோகத்தை
சொல்ல வந்தாயோ?
சொல்லிவிடு
மனதில் என்னலை
போல அனைத்தும்
என்னிடத்தில்
இறக்கிவிடு,,,
சொல்லி
முடித்தாள்
கடலன்னை,,,

கடலன்னையே
சொந்தமென
இருந்திருந்த
ஆறடி
நிலத்தையும் சூழ்ச்சிதனில்
ஒப்படைத்து
சுற்றும் துணிகூட
இல்லாத
சோகமான
மனிதன்
நான்
தமிழெனக்கு
தாய்நாடு
இவ்விடம்தான்
உகந்த இடம்
உயிரை மாய்க்க
ஏற்ற இடம்
தனிமையில்
தவமிருந்து தானாக
உடலிறந்தால்
பசியில்
சாகவில்லை
பக்தியில் இவன் இறந்தானென
பக்குவமாய்
நம்பவைக்க
பாவிமகன்

வந்தேனம்மா
சொல்லி
முடித்தானவன்

பதறவில்லை
கடலன்னை
பார்முழுவதையும் பசியெடுத்தால்
விழுங்கும்
பலகோடி
எரிமலைகளை
தன்கூடவே
பக்குவமாய்
பாதுகாக்கும்
பாக்கியவதி
அவள்

குரலை
எழுப்பினாள் கொஞ்சமும் தடுமாற்றமில்லை
ஏ!!! மனிதா!
போராடும்
குணமில்லாத உனக்கு போற்றிப்புகழ் பாடும்
புராணங்கள் எதற்கு
அதோ,,
எந்தன் மடியில்
தவழ்ந்து
விளையாடும் அக்கினி நண்டுகளை பார்
அவ்வப்போது
குடிபுகும்
குடிலமைக்கும்
குறுக்கே எனை யாரேனும் மிதித்தால் கொடுக்கினை
அவிழ்த்து விட்டு வஞ்சகன் உயிரை குடிக்கும்

எனையே முழுதாய்
ஏற்றதால்
எப்போதும் போராடி
எனை மீட்கிறது
அந்நண்டு

புரிந்ததா! புத்தியை பூமிக்கு விருந்தாக்கு மதிநுட்டம் மானுடவியலை
தாண்டிச்சென்றது கடலன்னைக்கு,

விடிந்தது காலை வீதியெங்கும்
புரட்சி முழக்கங்கள் பக்திக்கு இறந்ததாய் பாசாங்கிட முனைந்த அவ்வுயிர்
இப்போது புரட்சிக்கு
வித்திடுகிறது
பறிபோன
தமிழ்மண்ணை
மீட்டெடுக்கும் போர்முனையில்
பூமி அதிர்கிறது
கொடு நிலத்தை,,
கொடு உரிமையை,,
கொடு
விடுதலையை,,
கொடு பறித்த வாழ்வுகளை,,
கொடு! கொடு! கொடு!
பறித்த தமிழை
தமிழ்நிலத்தை
கொடு!

0 comments:

Post a Comment

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...