Tuesday, March 24, 2015

கருத்துச் சுதந்திரம் கிடைத்து விட்டதா? ஐடி 66ஏ?

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 எ செல்லாது அரசியல் அமைப்பு
சட்டத்திற்கு முரண்பாடாக உள்ளது - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு ... !
இப்படியான நற்செய்தியினை கேட்டு இச்சட்டத்திற்கெதிராக­
முகபுத்தகத்திலும்,ட்­விட்டரிலும் எழுதிவந்தமையால் ஒரு வாழ்த்துப்
பதிவினை போடலாமென்று இரண்டு சமுக வலைதளங்களையும் திறந்தேன் . என்னைப்போலே
பலரும் கருத்துரிமை வென்றதென உச்சநீதிமன்றத்திற்கு­ நன்றி
தெரிவித்திருந்தார்கள­். அந்நன்றியின் விதம் தான் மிகவும் ஆபத்தாக
அமைந்திருக்கிறது.
பெரும்பான்மையான சமூக வலைதள பதிவர்கள் இனி சுதந்திரமாகச் செயல்படலாம் ,
யாரையும் எப்போது வேண்டுமானாலும் வம்பிழுக்கலாம், அவர்களின் மீது
ஆணித்தரமான அவதூறுகளை பரப்பிவிடலாம் என்கிற பானியிலேயே
எழுதியிருக்கிறார்கள்­. வேதனையிலும் ஆச்சர்யமானதொன்று என்னவெனில் அவர்களை
அவர்களே பழித்துக்கொள்ளுதல் எப்படி இவர்களால் செய்யமுடிகிறது என்பதுதான்.

யானை தன்தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளுமாம் அது ஆணவத்தாலோ
கிருக்குத்தனத்தாலோ அல்ல அதன் உடம்பில் வாழ முற்படும் ஒட்டுண்ணிகளை
அழித்திடவே அப்படிச் செய்கிறது . ஆனால் மனிதன் தன் தலையில் தானே
மண்ணள்ளிப் போடுதல் அவனுக்கு அவனே அழிவைத்தேடிக் கொள்கிறான் என்பதாக
பொருள்படும்.

கொஞ்சம் இந்த ஐடி 66ஏ சட்டப்பிரிவானது இந்தியத்திலும்,தமிழக­த்திலும்
ஆட்சியாளர்களால் அவர்களின் கைவசமிருக்கும் காவல்துறைகளால் இரண்டையும்
கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மதக்குருமார்களால் எவ்வாறு
பயன்படுத்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம் . ஒரேயோரு எடுத்துக்காட்டு
இந்தியத்தில் "பால்தாக்கரே காலமானால் ஏன் கடையடைப்பு நடத்துகிறீர்கள் இது
பொதுமக்களுக்கு இடைஞ்சலாகத்தானே இருக்கிறது என்று முகபுத்தகத்தில்
பதிவிட்ட பெண்ணையும் பதிவிற்கு விருப்பம் தெரிவித்த அப்பெண்ணின்
நண்பர்களையும் கைதுசெய்து இந்துத்துவ சர்வாதிகார போக்கிற்காக நாங்களும்
துணைநிற்போமென நிரூபித்துக்காட்டியி­ருந்தார்கள் முதலாளித்துவ
ஏகாதிபத்தியர்கள்.
தமிழகத்தில் இந்தியத்தை போலவே அதிதீவிரிமாக அல்லாமல் ஆங்காங்கே சில
நிகழ்வுகள் நடக்கத்தான் செய்திருந்தது . ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக்
சிதம்பரம் தொடுத்த வழக்கு, பாடகி சின்மயி தொடுத்த வழக்கு ,சில
மாதங்களுக்கு முன்பு தேமுதிக கட்சி தொடுத்த வழக்கென சில வழக்குகளை
குறிப்பிடலாம் . ஆக ஒட்டுமொத்த இந்தியத்திலும் ஐடி 66 ஏ தவறாகவே
பயன்படுத்தப்பட்டிருக­்கிறது என்பது தெளிவு ,
இப்போது முந்தைய ஏகபோக கேலிக்கிண்டலடித்தும்­ இந்தியத்து பெருந்
தலைவர்களுக்கும், அரசியளார்களுக்கும் இவர்களாகவே இழிவானப் பெயர்களைச்
சூடி எழுத வாய்ப்பளிக்கும் நல்ல சமூக வலைதளங்களை
நாறடித்துக்கொண்டிருக­்கும் பதிவர்களுக்கும்,
பிறகான இந்தியத்தில் சர்வாதிகார போக்கினை கையாண்டு தவறாக சட்டத்தை
பயன்படுத்தியவர்களுக்­கும் ஒருதுளிகூட வித்தியாசமில்லை இரண்டுச்
சூழலாளர்களும் ஒரைவரையோருவர் விட்டுக்கொடுக்காத வண்ணம் பிணைந்தே
இருக்கிறார்கள்.

அவ்வாறு இருக்கையில் உச்ச நீதிமன்ற இத்தீர்ப்பானது எப்படி கருத்துச்
சுதந்திரத்திற்கான வெற்றியென நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். மேலும் உச்ச
நீதி மன்றம் சமூக வலைதளங்களை பதிவர்கள் எவ்வாறு எந்தெந்த முறையில்
பயன்படுத்த வேண்டுமெனும் அறிவுரைகளை வழங்கியிருக்கலாம் . ஒவ்வொருநாளும்
ஆண்பதிவர்களை விட பெண்பதிவர்கள் எவ்வாறான சிக்கல்களுக்கும்
வன்முறைகளுக்கும், சீண்டல்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்­ எனும்
கொடுமையை விவரிக்க முடியாது அவ்வளவான கொடுமைகளை
அனுபவத்துக்கொண்டிருக­்கிறார்கள். பெண் என்பதால் நிறைய நட்புசேர்ந்து
பிரபலமாகி விடுகிறார் அதிலென்ன தவறிருக்கிறது என்போருக்காக "அவர் பெண்
என்பதால் நல்ல பதிவெனும் நோக்கம் அழிந்து வேறொரு கண்ணோட்டத்தின்
அடிப்படையிலேயே அவர்களுக்கு நட்பழைப்பும்,பின்தொட­ர்தலும்
கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு முற்போக்குச் சிந்தனையாளரான சமூக வலைதள
பதிவர் "தமிழச்சி" அவர்கள் பதிவுகளின் பின்னூட்டங்களை நேரமிருந்தால்
படித்துப்பாருங்கள். நிச்சயம் அந்த உலகம் நரக வேதனையாக இருக்கும்
உங்களுக்கு . ஆகவே இச்சட்டத்தை செல்லாதென உச்சநீதிமன்றம் அறிவித்தவுடனேயே
தலைகனத்தில் முழுக்கருத்துச் சுதந்திரம் வென்றுவிட்டோன பூரிப்படையாமல் .
மேற்கண்ட சர்வாதிகார போக்கினை கண்டித்தும் இந்தியத்து வளர்ச்சிக்கான
வழிகளை சிந்தித்தும் ,அவதூறு வசைச்சொற்களை பதிவிடாமலும் செயல்படுதல்
என்பதே முழுக்கருத்துச் சுதந்திரமாகும் இதையேதான் நம் அரசமைப்புச்
சட்டமும் வலியுறுத்துகிறது. பல சிந்தைகளின் தகவல்களை பதிவிடுதல் மூலம்
இனியும் இந்தியத்தை வளர்ச்சிப்பாதைக்கு திருப்பிவிடுதல் நமக்கான அவசியமாக
இருக்கிறது.

2 comments:

  1. வணக்கம் நண்பர் செந்தழல் சேது அவர்களே!
    முதலில் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
    இன்றைய இந்த செய்தியை வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறித்து மகிழ வேண்டிய தீர்ப்பை பதிவாகா தந்தமைக்கு.
    இந்த செய்தியைப் படித்ததும் ஒரு பதிவாக போடலாம் என்று சிந்திதேன்.
    நான் சிந்தித்ததை நீங்கள் செயல் படுத்திக் காட்டி விட்டீர்கள்.
    தங்களை போன்றவர்களை குழலின்னிசை போற்றி சிறப்பிக்க விரும்புகிறது.
    தொடரட்டும் உமது சிறப்பு பணி!
    நேரம் வாய்க்குமேயாயின் வருக குழலின்னிசை பக்கமாய்!
    நன்றி நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. நிச்சயம் வருகை தருகிறேன் தோழர்

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...