Friday, March 13, 2015

ஈழம் அழித்த இந்தியத்து தேசிய கட்சிகள்

இனவழிப்பு
தமிழர் மீது
வஞ்சம்
தொடரும்
அடக்குமுறை
அனைத்தும்
சாதாரணமாய்
செய்வதில்
சாமார்த்திய சாலிகள்
இவர்கள்

ஒருவரைபோல்
இன்னொருவர்
இவர்களில்
வித்தியாசமில்லை

காவியில் வலம்
வருவார் ஒருவர்
காட்டிக் கொடுத்து
கூட்டிக் கொடுப்பார்
இன்னொருவர்

இவ்விரு தேசிய
அரசியலும்
ஒன்றே
அதற்கு நம்
ஈழம் ஒன்றே சாட்சி


வீதியுலா
வருகிறார்
ஊரையே
விழுங்கியவர்

எங்கள்
இனத்தின்
அடையாளங்கள்
அரக்கர்களின்
கைகளில்

ஈழப்படுகொலை
தாய் வயிற்றை
கிழித்து
பச்சிளம் சிசுவையும்
பதம் பார்த்த
போலி வீரர்களுக்கு
மலர் வீசி
வீரவணக்க
மரியாதையாம்

எங்கள்
அக்காள்
தங்கைகள்
தம்பி
அண்ணல்கள்
தாய்ச்
சொந்தங்கள்
தமிழ்போற்றிய
தந்தைமார்கள்

குருதியில்
மிதந்து
குமுறும்
குரலைகூட
கசிய விடாமல்
குழிதோண்டி
புதைத்தீரே

எது நட்புநாடு
இளிச்ச வாயன்
தமிழன்
என்பதில்
தெளிவாய்தான்
காய் நகர்த்துகிறீர்கள்

தமிழா!
ஈழம் அழியும்
போதும்
ஈழம் காத்த
நம் தலைவன்
உதவி கேட்ட
போதும்
உறங்கிப் போனாயே
உதவும் கரங்களை
உள்ளே இழுத்தாயே!

இன்றே அதற்கு
சாட்சி
இனவழிப்புக்கு
இரு தேசிய
கட்சிகளும்
இருமாப்பில்
வலம்
வருகிறது பார்!

இப்போதேனும்
விழி தமிழா!
ஈழத்து நம்
சகோதரிகளை
மார்பகமறுத்து
பிறப்புறுப்பில்
விளையாடிய
பிறவி
மூடர்கள்தான்
இந்த இந்திய
அமைதிப்படை
வீரர்கள்
புனைவு இல்லை
தமிழா இது
புலம்பெயர்ந்த
நம்
புலிவீரர்கள்
வாய்திறந்து
வாக்குமூலம்
தந்திருக்கிறார்கள்

ஐநா நமக்கொன்றும்
செய்யாது
அறிந்ததே
அவர்களும்
சர்வாதிகளே

பொறு!

உலகமே பார்க்கட்டும்
நம் ஈழச்
சொந்தங்கள்
பட்ட வலிகளை
உலகமே பார்க்கட்டும்
அதற்கேனும்
ஐநா வை துணைக்கழைத்து

அவசரப்படுத்து
விசாரணையை
ஈழம் ஒன்றே
நம் இலக்கு
தமிழா
மீண்டும்
உரைக்கிறேன்
ஈழம் ஒன்றே
நம் இலக்கு!

0 comments:

Post a Comment

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...