Friday, March 13, 2015

வேடன்

வேடன்


சிலந்தி வலையில்
சிக்குண்ட
நினைவுகளை
மீட்கத்
துடிக்கிறது
மனது

நிகழ்கால
வேடமிட்டு
வேடனொருவன்
அருகில்
வருகிறான்

அவன்
வருகையில்
அலறும்
மனதின் அலார
ஒலியை
அடக்கியாள
முடியவில்லை

முந்திச் செல்கிறது
முழு வேகத்து
முயற்சி
ஒரு வழியாய்
விடுபடுகிறது
சிலந்தி வலையில்
அகப்பட்ட
மனது

சிறகுகளை
விரித்து
வானத்தில்
பறக்க தயாராய் வைத்திருந்த
உடலில்

இப்போது
புது மலர்ச்சி
மனமெங்கும்
விரிந்த
விடுதலை
உணர்வினை
உடலெங்கும்
தட்டிவிட்டது
இதயக்கூடு

தாயாகவும்
தந்தையாகவும் துணைவியாகவும்
துணைகொண்ட
காதலியாகவும்
துயில் கொள்ளும் குழந்தையும்
துடிக்கும் அவள்
மனதை பறிக்க
வேடன்
வருவானேன்
சிலந்தி வலை விரிப்பானேன்

எதற்கும் அவளின்
இதயத் திருடனாக
யாரும் மாறிடும்
முன்னே

தாவிப் பறக்க
எப்போதும்
தயார் நிலையில்
சிறகெனும்
கைகள்
விரிந்தே
கிடக்கிறது

விரைவில்
பறக்கலாகும்,,,

0 comments:

Post a Comment

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...