Friday, June 26, 2015

தமிழ்த்தேசியத்தில் எழும் "ஜ"ந்தேகம் ச்ச்சீ! "ச"ந்தேகம்

தமிழ்தேசியத்தின் சிந்தனைகள் அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது . எப்படி
இவர்களிடத்தில் மட்டும் இப்படியான சிந்தனைகள் எழுகின்றது? கேள்விக்கான
விடையை அவர்களாகவே தந்துவிடுகிறார்கள் "நாங்கள் தமிழ்த்தேசியர்களென்ற­­ு"
தமிழ்த்தேசியவாதிகளின­­் முன்னெடுப்பு முறைகளில் கோமாளித்தனங்கள்
நிறைந்திருப்பதை மீண்டும் உறுதியாகியிருக்கிறது­­. தமிழ்ச்சமூகத்தில்
தற்போது அவர்களெடுக்கும் பரப்புரை முன்னெடுப்பு "சாதியத்தை ஒழிக்க
வேண்டுமெனில் "ஜா"தியம் என்பதை "சா"தியம் என்றெழுதினால் போதுமானது
சாதியம் ஒழிந்துவிடும்" வேடிக்கையாகல்லவா! இருக்கிறது இவர்களின் பரப்புரை
கூற்று,,, இந்துத்துவ பார்ப்பானிய வடசொற்களான "கிரந்த"எழுத்துக்களை­­
அழித்தால் உடனே சாதி ஒழிந்து விடுமா? அப்படி பார்த்தால் இதுவரை சாதிய
எதிர்ப்பு பற்றி நான் எழுதுகின்ற போதெல்லாம் "சாதியம்" என்றே எழுதுகிறேன்
எங்கும்,எவ்விடங்களில­­ும் "ஜாதியம்" என்று எழுதியதேயில்லை,
அப்படியிருக்கையில் சாதியம் ஒழிந்துவிட்டதா என்ன? சாதியாதிக்கம்
மெம்மேலும் அதிகரித்துக்கொண்டேதா­­னே இருக்கிறது,வேறுவழியி­ன்றி நான்
சாதியத்தை எதிர்த்தெழுதிவிடுகிற­­ேன் என்ன செய்வது சமூகத்தை
நேசித்துவிட்டேனே எழுதித்தானே ஆகவேண்டும். தமிழ்த்தேசியர்கள் சாதியம்
குறித்த இந்த அணுகுமுறையில் "கிரந்தம்" எழுத்துக்களை அழித்தால் சாதி
அழிந்துவிடுமென்றால் தமிழ்ச்சமூகத்தில் என்றோ சாதி அழிந்திருக்கும்.
காரணம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கிய காலம்தொட்டே கிரந்த
எழுத்துக்களை புறக்கணித்தல் என்பது நடந்துகொண்டுதானிருக்­­கிறது.அதனை
சாதியத்தில் ஒப்பிட்டு வெறும் கிரந்தம் எழுத்துக்களை மாற்றினால் சாதி
ஒழிந்துவிடுமென்றால் தமிழ்த்தேசியத்தின் சிந்தனைகளை கண்டு சிரிப்பதைத்
தவிர வேறெதுவும் தோன்றவில்லை,உண்மையில­் சாதி ஒழிப்புக்கு கிரந்த
எழுத்துக்கள் தடையாக இருக்கின்றவா? என்றால் சாதிக்கும் கிரந்த
எழுத்துக்கும் கொஞ்சம் கூட தொடர்பேயில்லை எனலாம் , காரணம் கிரந்த
எழுத்துக்கள் அழிப்பென்பது மொழி சார்ந்தது , சாதி ஒழிப்பு என்பது
இனத்தோடும் மதத்தோடும்,வர்க்க ஏற்றத்தாழ்வுகளோடும்,­­அடிமை ஆதரிப்போடும்
சேர்ந்து பயணிக்கும் ஒன்று இங்கே மொழிப் பிரச்சனை எழவில்லை மாறாக யார்
யாரை அடிமைபடுத்தி பணியவைத்தல் வேண்டும் என்ற வர்க்க அல்லது வகுப்புப்
பிரிவினை பிரச்சனை. இதில் எல்லா மொழி பேசுவோர்களும் ஒரு
கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறார்கள் அதுதான் சாதிய கட்டுப்பாடு.
தமிழ்த்தேசிய பற்றாளர் திரு சீமானின் "நாம் தமிழர் கட்சி ஆவணம்"
சமீபத்தில் வெளியிட்டேன் முழுமையாய் வாசித்தவர்களுக்குத் தெரியும்
அதிலிருக்கும் சூழ்ச்சமம். சாதியமைப்பு என்பது மேலோட்டமான
மேற்கட்டுமானத்தை கொண்டிருக்கிறது ஆகவே அதன்மீதான எதிர்ப்பு அவசியமற்றது
திராவிடத்தால்தான் நாம் வீழ்ந்தோம் அதுவே அடிகட்டுமானத்தை
கொண்டிருக்கிறது அதனால் திராவிட எதிர்ப்பையே முதன்மையாக எடுத்துச் செல்ல
வேண்டும். என்கிற நடையில் அவ்வாவணம் இருக்கும் . இப்படியான நூல்களை
எழுதுவோரிடம் சாதி எதிர்ப்பு வெறும் கிரந்த மொழியை அழித்துவிடுதல்
மட்டுமே என்பதாக வருவதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை. போலவே தமிழ்த் தேசியப்
பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களும்,
இதே கருத்துகளை பரப்புரை செய்து வருவதை பார்க்க நேரிடுகிறது. இன்னபிற
தமிழ்த்தேசியர்களும் சாதி எதிர்ப்பு அல்லது ஒழிப்பினை மேலோட்டமான
கண்ணோட்டத்திலேயே அனுகுகிறார்கள் அதன் வெளிப்பாடு வெறும் கிரந்த
எழுத்துக்களை ஒழித்தால் சாதி ஒழியும் என்கிறார்கள் . சாதி எதிர்ப்பில்
அவ்வளவாக கவனம் செலுத்தாத கம்யூனிஸ்ட்டுகளே அதன்தேவை கருதி "வர்க்க
முரண்பாடுதான் சாதியமென்பது அதனை எதிர்ப்பது முதல்பணியாக இருக்கிறது"
என்றுணர்ந்து தீண்டாமை எதிர்ப்பு அமைப்புகளை உறுவாக்குவதில் தங்களின்
கவனத்தை திருப்புகிறார்கள் . ஆனால் தமிழ்த்தேசியமோ இன்னமும் மேலோட்டமான
கண்ணோட்டத்தையே சாதி எதிர்ப்பு மீது வைத்திருக்கிறதென்பது­­ வருத்தத்தையே
அளிக்கிறது. எனது சந்தேகம் என்னவெனில் வடமொழி சொற்களான கிரந்தம்
ஒழிந்தால் சாதி ஒழியும் எனில் சாதியானது மொழிநடையிலேயே பிறந்ததா? அவ்வாறு
மொழிநடையில் சாதி பிறந்ததெனில் இன்னமும் ஏன் நமது கிராம அமைப்பு முறையில்
சேரி,ஊரென்ற பிரிவினை காணப்படுகிறது? தமிழ்த்தேசியத்தின் சாயம்
வெளுக்கும் காலம் தொலைவில் இல்லை விரைவிலேயே அதன் தன்மையை தமிழ்ச்சமூகம்
உணரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. சாதி குறித்தான பார்வை
சுறுக்கம் தமிழ்த்தேசியம் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகவும்
அமைந்து விடுகிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...