Friday, July 17, 2015

அரசின் கொள்கையானது "டாஸ்மாக்" திட்டம்

"குடி குடியை கெடுக்கும்" என்றும் "மது வீட்டுக்கும் நாட்டிற்கும் கேடு"
என்றும் எழுதிவைத்தாலும் சொட்டுகளைக் கூட வீணாக்காமல் குடிக்கும்
தமிழனிடத்தில் அறிவுரை கூறிப் பயனில்லை என்றேச் சொல்லலாம். அனேகமாக
அனைத்து டாஸ்மாக் எனும் மதுபானக் கடைகளுக்கு முன்னால் "இங்கே அறிவுரைகள்
ஏற்கப்பட மாட்டாது,மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்­" எனும் அறிவிப்புப்
பலகை காண நேரிடலாம். அதன் காலமும் வெகுதொலைவில் இல்லை. ஆளும் ஏகாதிபத்திய
குணங்கொண்ட அதிமுக வாக இருக்கட்டும் அதனோடு எப்போதும் மல்லுகட்டும் திமுக
வாக இருக்கட்டும் மதுவிலக்கு கொள்கையிலிருந்து தன்னை விடுவித்துக்
கொள்கிறது. அரசின் வருமானம் டாஸ்மாக்கிலிருந்துதா­ன் பெறப்படுகிறது
என்கிற பொய்ப்பிரச்சாரங்களை இங்கே பரப்பிய வண்ணம் அரசியல் செய்வதில்
அவர்களுக்கு ஆதாயமும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கிடையே ஜெவின்
விசுவாசிகள் "பூச்சி மருந்துகளைக் கூட அரசு விநியோகப்படுத்துகிறத­ு ஆகவே
அதனை வாங்கி குடிக்க வேண்டியதுதானே" என்று கர்வமாக பேசுவதை ஆங்காங்கே காண
முடிகிறது. பூச்சி மருந்துகளில் போதை கிடைக்குமானால் அதையும் வாங்கிக்
குடிப்பான் தமிழன் என்பது நன்றாகவே அவ்விசுவாசிகளுக்கு
தெரிந்திருக்கிறது. அந்த அளவிற்கு தமிழ்ச்சமூகம் மதுவுக்கு அடிமையாகி
சீரழிந்து கொண்டிருப்பதற்கு ஆளும் அதிமுக அரசு அதிதீவிரமாக செயல்பட்டுக்
கொண்டுப்பதற்கு சாட்சியாக தமிழகத்தில் நூலகங்களை விட டாஸ்மாக் கடைகளே
எங்கும் நிறைந்திருப்பதையும் அதில் மதிமயங்கி விழுந்து கிடப்போரையும்
பார்த்துக் கொண்டே நாம் கடந்தும் செல்கின்றோம். தமிழ்ச்
சமூகத்திற்கெதிரான
பெரும்பாலான குற்றங்கள் மதுவினால் நிகழ்த்தப்படுகிறது . மதுவானது
ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும் அடிமை படுத்தி வைத்திருக்கிறது.
இவ்வாறிருக்கையில் மதுவினால் ஏற்படும் தீங்குகளை நன்கு அறிந்தும் சென்னை
உயர்நீதி மன்றமானது திடுக்கிடும் அதிர்ச்சியான தீர்ப்புரையை
வழங்கியிருக்கிறது. என்னவென்றால் "அரசின் மதுக் கொள்கையில் நீதிமன்றம்
தலையிட முடியாது" எனச் சொல்லியிருக்கிறது .
அரசின் மது விற்பனை விநியோகத்தை "கொள்கை" என்றே நீதிமன்றங்கள் கருதும்
அளவுக்கு இங்கே மலிந்து கிடக்கிறது டாஸ்மாக் எனும் மதுக்கடைகள். அவ்வாறு
ஆளும் அதிகார வர்க்கத்தின் அதிவேக விற்பனை மற்றும்
விநியோகத்திலிருக்கும­் டாஸ்மாக்குகள் "கொள்கை" எனில் தேர்தல்
வாக்குறுதிகளில் இனி "டாஸ்மாக்குகள் தாராளமயமாக்கப்படும்"­ என அறிக்கை
வந்தாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை. இதற்கிடையே அதிமுகவின் அரசியலை
நடத்துபவரான "துக்ளக்"ஆசிரியர் சோ ராமசாமி அவர்களும் "மதுவிலக்கு
சாத்தியமில்லை" என்று பல கட்டுரைகளை எழுதித்தள்ளியிருக்கி­றார். அவர்
கூறுவதும் அரசை நடத்துவதற்கு டாஸ்மாக அவசியப்படுகிறது என்கிறார்.
உண்மையில் ஓர் அரசை இயக்குவதற்கு டாஸ்மாக் பேருதவியாக இருக்கிறதா?
என்றால் முற்றிலுமாக இல்லையென்றேச் சொல்லலாம் ஆனால் இவர்கள் ஏன்
பொய்ப்பரப்புரைகள் புரிகிறார்களென்றால்,­ மது மனிதனை சிந்திக்க விடாமல்
செய்கிறது அதன்காரணமாக மக்கள் அடிமைபட்டு முதலாளித்துவத்திற்கு­
துணைபோகிறார்கள். இதுவே இங்கே பிரதான காரணியாக இருக்கின்ற வேளையில் ஆளும்
அதிகார முதலாளித்துவ வர்க்கத்தினர் மதுவை ஓர் ஆயுதமாக்கி தமிச்சமூக
மக்களின் மீது பிரயோகப்படுத்துகிறார­்கள். சிந்திப்பதற்கு வழியில்லாத
மக்கள் மதுவெனும் ஆயுத தாக்குதலில் சிக்கி சீரழிகிறார்கள். இதற்கு
நீதியும் துணைநிற்கிறதா? எனும் சந்தேகம் எழத்தானே செய்யும். மது எனும்
அரக்கன்மீது பயணித்துக்கொண்டு மக்களுக்கு சாட்டையடி கொடுக்கும்
அதிகாரத்தை ஆளும் அரசிற்கு யார் கொடுத்தார்கள் என்றால் மக்களே
கொடுத்திருக்கிறார்கள­். அதுவும் தனிப் பெரும் பெரும்பான்மையாக,,,
அரசின் கொள்கையாகவே மாறியிருக்கும் மதுவுக்கு எதிராக எப்போது புரட்சி
வெடிக்கிறதோ அப்போதுதான் முழு விடுதலையை நம்மால் சுவாசிக்க முடியும் .
தற்போது இடதுசாரியங்கள் இப்புரட்சிக்கான முற்போக்கு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ச்சமூகம் இனியும் விழித்துக்
கொள்ளவில்லையென்றால் எதிர்காலச் சந்ததியினர் நிச்சயம் நம்மை எட்டி
உதைப்பார்கள் என்பதை என்றுமே நாம் மறந்து விடக்கூடாது. மக்கள்
மதுவிலிருந்து தானாக விடுப்பட்டாலொழிய நீதியையும் இங்கே நாம் நிலைநாட்டிட
முடியாது. அதுவரையில் நீதிமன்றங்களுக்கு மது ஒரு கொள்கையாகவே தெரியும்.
"மதுவிலக்கை ஆதரிப்போம் , தமிழகத்தை நல்வழிப்படுத்துவோம்"­ அதற்கு
வாருங்கள் தமிழ்ச்சமூகமே நாமனைவரும் ஒன்றிணைவோம்,,,

2 comments:


  1. "டாஸ்மாக்" திட்டத்தை நீக்கவல்ல
    புதிய தலைவர் தேவை தான்
    ஆனால்...?

    ReplyDelete
  2. ஆனால்...? தோழர்
    சற்று விரிவாக விளக்கவும்,,,

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...