Monday, July 27, 2015

புல்வெளிக் கதவுகள்

புல்வெளியில்
என் பாதம் தொட்டு
முத்தமிடுகையில்
முனகிய சப்தங்கள்
சங்கீதமாகின்றன

முற்கள் சீண்டக்கூடாது
இவனையென்று
என் பாதச்சுவடுகளை பச்சைநிறம் பத்திரப்படுத்த
பாதுகாப்பரணாய்
புற்கள்

புற்களிடம்
பேசுகிறேன் பூத்த புன்னகையோடும்
புல்லரித்த
உடம்போடும்

கொஞ்சம் அசட்டுத்தனாய்
ஏதுமறியாத
அழகியலாய்
கேட்கிறது
புற்கள்
என்னிடத்தில்
கேள்விகளை

உனக்கேன் எனை பிடித்திருக்கிறது
எனை ஏன் நீ நேசிக்கிறாய்
முனுமுனுக்கும்
புற்களிடத்தில்

என் பதிலாய்
வாய்திறந்தேன்
வாய்த்திருக்கும்
வாய்ப்புகள் அதுவென
தெரிந்தமையால்


பசுமைக்கு இலக்கணமாய்
உன்
பச்சை நிறமிருக்க
என் தேகத்துயர்
முழுக்க எங்கோ ஒளிந்துகொண்டது
புதியவனாய்
தோற்றமளிக்கிறேன்
நான் உன்னாலே

பாரமில்லை இப்போது
என் மனதில்
எல்லாம் உன்னிடத்தில்
தந்துவிட்டேன்
பல கதைகளாக

புல்வெளிக்கு
பூச்சூடப் போகிறேன்
பூமியே
மேளதாளத்தோடு
நீ முழங்கி வந்து
நானமைத்த மேடையில்
நடனமாடிட இனியும்
ஒருநிமிடம் கூட
தாமதிக்காதே

கூட்டம் கூடி புல்வெளியில் அமர்ந்துகொண்டு
என்னைப்போல்
பல கதைகள்
பேசியோர் பலருண்டு

அக்கதைகளில்
காதலோ
காமமோ இன்பமோ
துன்பமோ
அனுபவித்த சுவையான
வாழ்வோ
இனியும் எதிர்பார்க்கும் எதிர்காலச் சிந்தனைகளோ
எல்லாம் அடங்கியிருக்கும்
நான் நேசிக்கும்
புல்வெளியிடம்

நேரமொதிக்கி
உரையாட
வாருங்கள் எப்போதும்
திறந்தேயிருக்கும்
புல்வெளிக் கதவுகள்

தேர்ந்தெடுத்து
எழுதிடவும்
வாசித்திடவும்
பல வண்ணக்கதை காவியங்கள் கிடைக்கலாம்
நம்
அருமை தமிழ் படைப்பாளிகளுக்கு,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...